Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும் - சம்பந்தன்

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும் - சம்பந்தன்

 

 
 

ஜே.வி.பி. கல­வ­ரங்­க­ளிலும், 1983 கல­வ­ரங்க­ளிலும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை பொது மன்­னிப்பில்  விடு­வித்­ததை போன்று  தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என பிர­தமர் - நீதி அமைச்சர் -சட்­டமா அதிபர் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.

 

நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான  ஆர்.சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

இந்த சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலை­வ­ருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர். 

இதன்­போது ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் மீண்டும் பேச்­சு­வார்த்தை நடத்தி  கைதி­களின் விடு­தலை குறித்து தீர்­மானம் எடுக்­கவும் அரச தரப்பு, எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளது. 

http://www.virakesari.lk/article/41238

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகள் விவகாரம் ; விரைவில் நடவடிக்கை - சட்டமா அதிபர்

 

 
 

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதமிருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தமை  மற்றும் கால தாம­தங்கள் குறித்து நான் உட­ன­டி­யாக கவனம் செலுத்­து­கின்றேன் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

anuradapuram.jpg

அதேபோல் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் விவ­காரம் குறித்து இன்னும் இரண்டு அல்­லது மூன்று தினங்­க­ளுக்குள் நட­வ­டிக்கை எடுக்­கின்றேன்.  

யுத்த கால­கட்­டத்தில் கைது­செய்­யப்­பட்ட அர­சியல் கைதிகள் பலர் பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் இப்­போதும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள நபர்கள் பாரிய குற்­றங்­களின் பெயரில் கைது­செய்­யப்­பட்­ட­வர்கள். அவர்­களை விடு­தலை செய்­வது கடி­ன­மா­னது எனவும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இச்  சந்திப்பின்போது சுமந்­திரன் எம்.பி.யிடம் இருந்த அர­சியல் கைதி­களின் விப­ரங்­களையும் அவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41242

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக என்ர கொள்ளு பேரப் பிள்ளையல் அவர்களுடைய விடுதலையை பார்ப்பினம் எண்டு நினைக்கிறன் ?

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகள் விவகாரம் – அரசாங்கத்தின் அனுகுமுறைகள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி

 

sumanthiran-2-720x450.jpg

அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் அனுகுமுறைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் எமது ஆதவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 2ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் இதனை எமது ஆதவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஏதுவாக உள்ள காரணங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/அரசியல்-கைதிகள்-விவகாரம-9/

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம்: திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்களே என்கின்றார் சட்டத்தரணி!

 

 

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கில் அதிகாரம் இருந்தும் சட்டமா திபர் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு மற்றும் அவர்களின் திட்டமிட்ட கால தாமதம் என்பன ஒரு அரசியல் பழிவாங்கல்களே என சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும், அதில் இருக்கும் உள்நோக்கம் தொடர்பிலும் எமது ஆதவன் தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ” அரசியல் கைதிகள் மீது குற்றச்சாட்டினை சுமத்தியவர்கள் என்ற அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு தான் இங்கு அவசியம்.

அந்தவகையில் சட்ட மா அதிபர் திணைக்களம் அவர்களுக்கான தண்டனைகளை குறைத்து அல்லது சிறிய தண்டனையை வழங்கியாவது அவர்களுக்கான புனர்வாழ்வினை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை நடைமுறையில் சாத்தியமில்லை.

மேலும் சட்ட மா அதிபருக்கு அவர்களுக்கன பிணை வழங்கும் அதிகாரம் உள்ளது. இருப்பினும் அந்த அதிகாரத்தை அவர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதே எனது கருத்து.

அத்துடன் இவ்வாறு பல வருடமாக சிறையில் அவர்கள் அடைத்து வைத்திருப்பதானது ஒரு அரசியல் பழிவாங்கலே” என அவர் கூறினார்.

http://athavannews.com/அரசியல்-கைதிகளின்-விடுத-17/

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்க நெருங்க தமிழர் பக்கம் பாடுவினம் வெண்டு பதவி எடுத்தபின் அரசியல்கைதிகள் என்ற ஆட்கள் இருப்பதையே மறந்துவிடுவினம் அப்ப இவ்வளவு நாளும் என்ன செய்துகொண்டு இருந்தவை பேன் பார்த்துகொண்டு இருந்தவையாக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுகாலமும் இந்த தமிழ் கைதிகளை கூட விடுதலை பண்ணத்தெரியாத இந்த சம்பந்தன் சுமத்திரன் கூட்டம்தான் உங்களுக்கு அரசியல் தீர்வு பெற்று தரபோகினமாம் நம்புங்கள் மக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும் - சம்பந்தன்

கோமா கூட்டம் அப்பப்ப புலம்பி கூத்தடிக்கிறதிலையே காலத்தை கடத்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.