Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்பது வயதை நீ தாண்டிவிட்டால்

Featured Replies

நாற்பது வயதை நீ தாண்டிவிட்டால், இதற்கு முன்னாலே விளைவித்த பயிர்களினை அறுவடை செய்ய வேண்டி இருக்கும்.

அந்த நாள் உணவு, ஆட்டபாட்டங்கள் எதிரொலிகள் இப்போது கேட்கத்தொடங்குகின்றன.இதற்கு முன்னால், உனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் இப்போது இன் ஞாபக சக்தியினை மெது மெதுவாக மேகங்கள் மூடுவதை காணுவாய்.

இதற்கு முன்னால் கல்லும் உனக்கு ஜீரணமாகியிருக்கும், இனி அரிசியும் பருப்புபே உண்ணோடு சண்டை போடும்.

இதற்கு முன்னால் எதை சாப்பிடலாம் என்று என்று நீ டாக்டரை கேட்டிருக்கமாட்டாய், இனி கேட்க வேண்டிவரும்.

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பயப்படுத்தாதைங்கோ அண்ணே!!!!

வேணுமென்டால் 39தோட வயதை எப்படி நிப்பாட்டலாம் என்று சொல்லுங்கோ. :lol::rolleyes:

நாற்பது வயதை நீ தாண்டிவிட்டால், இதற்கு முன்னாலே விளைவித்த பயிர்களினை அறுவடை செய்ய வேண்டி இருக்கும்.

அந்த நாள் உணவு, ஆட்டபாட்டங்கள் எதிரொலிகள் இப்போது கேட்கத்தொடங்குகின்றன.இதற்கு முன்னால், உனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் இப்போது இன் ஞாபக சக்தியினை மெது மெதுவாக மேகங்கள் மூடுவதை காணுவாய்.

இதற்கு முன்னால் கல்லும் உனக்கு ஜீரணமாகியிருக்கும், இனி அரிசியும் பருப்புபே உண்ணோடு சண்டை போடும்.

இதற்கு முன்னால் எதை சாப்பிடலாம் என்று என்று நீ டாக்டரை கேட்டிருக்கமாட்டாய், இனி கேட்க வேண்டிவரும்.

தொடரும்...

இன்னும் 15 வருசத்துக்கு உந்த பிரச்சினை இல்லை என்று சொல்லுறீங்கள் நன்றி

:lol:

இன்னும் 15 வருசத்துக்கு உந்த பிரச்சினை இல்லை என்று சொல்லுறீங்கள் நன்றி

:lol:

உக்ன்களுக்கே 15 வருஷத்துக்கு இல்லையெண்டால், எனக்கு இன்னும் 25 வருஷத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

வானவிலுக்கு 35 :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாட்பதை தாண்டினால் நாய் குணம் எண்டு சொல்ல வாரிங்களா

ஒவ்வொரு நாளும் வரும் கந்தப்புவை இன்று காணவில்லை...

சின்னப்புவை நீண்ட காலமாகக் காணவில்லை.....

குறுக்காலபோவானைக் காணவில்லை....

24 மணிநேரமும் ஒன்லைனில் நிற்கும் டைகர் பமிழியின் முக்கிய உறுப்பினர்களைக் காணவில்லை...

இன்னும் பலரைக் காணவில்லை.....

சரியாக சொன்னீர்கள் லீசு, எனக்கு 35 வருசத்துக்கு பிரச்சினை இல்லை, ஆனாலும் 35க்கும் பிறகும் பிரச்சினையில்ல, எனக்கு என்றும் சுவீட் சிக்ஸ் :lol:

உக்ன்களுக்கே 15 வருஷத்துக்கு இல்லையெண்டால், எனக்கு இன்னும் 25 வருஷத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

வானவிலுக்கு 35 :rolleyes:

சரியாக சொன்னீர்கள் லீசு, எனக்கு 35 வருசத்துக்கு பிரச்சினை இல்லை, ஆனாலும் 35க்கும் பிறகும் பிரச்சினையில்ல, எனக்கு என்றும் சுவீட் சிக்ஸ் :rolleyes:

வானவில் நீங்கள் என் சின்னத்தம்பியா?

கிரிக்கெற்ரை இந்த அலசு அலசுறீங்களே ?

:lol:

  • தொடங்கியவர்

முந்திய மனிதர் சொன்னவைகற்கமைய கீழ்க்கண்ட விசயங்களை நீ கவனித்து வந்திருந்தால் இந்தப்பருவமுமே உனக்கு இளமைப்பருவமே!

1. கைகள் இரண்டையும் வீசியபடி முடிந்த வரை நடந்தல்

2. வாயுப்பதார்த்தங்களை நீ அதிகம் சாப்பிடாமல் தவிர்த்தல்

3. மதுபாணம், சிகரட், தொடர்ச்சியாக பாவிகாது இருத்தல்

4. கடலை மாவு, கடலை எண்ணை ஆகியவற்றை அதிகம் பாவிக்காது இருத்தல்

5. தவறான உறவுகள் கொள்ளாதிருத்தல் அதிலும் ஒரு ஒழுங்கு முறை வைத்தல்

6. சுமிங்க் பூலில் நீச்சல் அடித்தல்

7. இனம் அறிந்து சேருதல்

8. இருதயங்களுக்கு துன்பம் கொடுக்கக் கூடிய தொல்லைகளில் இருந்து முடிந்தளவு மட்டும் மாட்டிக்கொள்ளாது இருத்தல்

9. எதையும் அளவோடு வைத்திருத்தல்.

நாற்பது வயது வரை இவற்றினை ஒருவன் கடைப்பிடித்து வந்தால் இப்போது அவனை பார்க்கிறவர்கள், ' உங்களுக்கு இருபத்து ஐந்து வயதா என்று கேட்ட்பார்கள்'

ஆயுள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது நம் கையில் இல்லை, ஆனால் ஆயுள் முழுவதும் ஓடியாடிக்கொண்டிருக்கும் வித்தையில் நம்முடைய திறமையும், கடும் முயற்ச்சியும் கூட அடங்கிக்கிடக்கிறது என்ற அப்பட்டமான உண்மை கூட எமக்கு விளங்குவதே இல்லை.

தசரதன் அறுபத்தினாயிரம் மனைவியரை மணந்தது உண்மையோ இல்லையோ. அவனது வரலாற்றையும், அவன் அப்படி ஆண்மை வீரியம் காத்ததையும் படிக்கும் போது ஒரு ஆயிரம் மனைவியரை ஆவது திருப்திப்படுத்திற சக்தி அவனுக்கு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது.

மனதறிந்து, புராணங்களிலோ, இதிகாசத்திலோ நல்ல பாத்திரங்கள் துன்பத்தினை வரவழித்துக்கொள்ளவில்லை. தானே வரும் துன்பங்களை அவன் அவன் பூர்வபுண்ணிய பாவ கர்மா என்று கூறுகிறார்கள்.

கடவுள் அவதாரங்களுக்கே அவற்றை தவிர்கமுடியவில்லையாம்.

மீண்டும் எப்படி எப்படி எல்லாமோ விஞ்ஞான அதீத வளர்ச்சியில் சிக்கித்தவித்துவிட்டு இப்போ மீண்டும், இராமயணத்தினையும், மகாபாரதத்தினையும் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய ஒரு முச்சந்திக்கு வந்திருக்கிறோம்.

ஆகவே 40 வயதை ஒரு எல்லைக்கல்லாக என்றும் வைத்து நீ வாழ்க்கையினை சரியாக நடத்தவேண்டும்.

நாற்பது வயது வரை ஒலி எழுப்பிய நரம்பு வீனைகள், நாற்பது வயதுக்கு பிறகு தான் எதிரொலிகளினை எழுப்பத்தொடங்குகினறன.

செயத நன்மை, தீமைகளின் எதிரொலிகளும் இப்போது தான் கேட்டகத்தொடங்குகினறன. இதுவரை அதை அலட்ச்சியப்படுத்தக்கூடிய இரத்தம் இருந்தது, இப்போது இரத்தினை விட எதிரொலி அதிக சக்தி வாய்ந்த தாக் தொழில்பட ஆரம்பிக்கிறது. எனக்கு இப்போது 41 தாண்டிவிட்டது ஆகவே கொமன்டறி எழுதுகிறேன் என் அனுபவத்தினையும் கவிஞர் கண்ணதாசன் சொல்லியவைகளிலினையும் இணைத்து.

துன்பத்தின் பரிபூரண சக்தியும், இப்போது தலையைச்சுற்றி வட்டமிடத்தொடங்கி விட்டன. மனைவி, மக்கள், பொறுப்பு, வேலையில் ஏற்படும் வேலைப்பழு, பொருளாதார நிலை அனைத்தும் பற்றிய கவலை இந்தப்பருவத்தில் லேசாக ஆரம்பிக்கும்.

இது வரை வாழ்க்கையில் ஒழுங்காக வாழாதவனை அவை சுற்றி வழி மறித்து அவை பேய் போல நின்று கூத்தடிக்கும்.

ஐயோ தாங்க முடியலையே என்ற ஓலம் இப்போது உங்களின் இதயத்தில் இருந்து மெதுவாக கேட்க ஆரம்பமாகும்......தொடரும்

  • தொடங்கியவர்

இதுவரை எப்படியோ வாழ்ந்து விட்டேன். தெரிந்தோ தெரியாமலோ மந்த புத்தியால் அப்படி ஆக வேண்டியதாகப்போய்விட்டது. மன்னித்துக்கொள் இறைவா! என துன்பங்களுக்கு ஒரு வழியே இல்லையா, ஏதாவது எனக்கு கூறமாட்டாயா என்று போய் கோவிலிலோ, தனிமையிலோ நின்று அலறத்தோன்றும் இப்போ உனக்கு.

பாவங்களுக்கு மன்னிப்பு தருகிற பாதிரியார் அல்ல இறைவன், ஆனாளும் ஓரளவு பரிகாரம் காணக்கூடிய அளவு சில முறைகளினை இவவுலகத்திலே முன்னோர்களினால் ஆராயப்பட்டு போதிக்கப்பட்டு இவ்வுலகத்தினை விட்டு போக படைத்துள்ளார். அவைகளே இப்போது உனக்கு உதவக்கூடிய மருந்துகள்.

நாற்பது வயது ஞானம் பிறக்கும் வயது. மீண்டும் நானே இதனை எழுதுவதால், வாழ்க்கையில் யாரும் அடையமுடியாத வாழ்க்கை அனுபவங்களினை அனுபவத்தில் கணடபடியால், கண்ணதாசன் சொற்படி என் வாழ்க்கையினை வரையறுத்து கடந்த 25 வருடங்கள் அவருடன் வாழ்ந்து வருபவன்.

ஆகவே அவரே உதாரண்மாக தன் அனுபவங்களினை சொல்கிறார்.நானும் வாழ்க்கையில் அவர் சொல்லி விட்டுப்போனவை அத்தனையும் எமக்கு தேவையானவையே என்று ஏற்றுக்கொண்டு உங்களுடன் பகிறுகிறேன்.

" என்ன நீ பெரிய மேதையா! உன்னையே உதாரணமாக்கிக் கொண்டு போகிறாயா? என்று கேட்ட்கிறீர்களா? நான் பன்னிறண்டு வயதில் இருந்தே உலகத்தினைப்பார்த்திருக்கிற

வானவில் நீங்கள் என் சின்னத்தம்பியா?

கிரிக்கெற்ரை இந்த அலசு அலசுறீங்களே ?

:icon_idea:

அப்போ நீங்க என் பெரியண்ணாவா...........? இல்ல பெரிய தாத்தாவா.......? :icon_idea:

கிரிக்கட்ட எல்லாம் அலச கூடாது விளையாடனும் :P

அப்போ நீங்க என் பெரியண்ணாவா...........? இல்ல பெரிய தாத்தாவா.......? :icon_idea:

கிரிக்கட்ட எல்லாம் அலச கூடாது விளையாடனும் :P

எப்படி

:icon_idea:

அப்படித்தான் :angry:

  • கருத்துக்கள உறவுகள்

புலி 40 ல் தத்துவம் கூறுகிறார்.

பொன்னி, வில், யம்முவெல்லாம் கிரிக்கட் ஆடுகிறார்கள்.

கடைசியில் வேறுயாராவது வந்து இரண்டையும் கலந்து கொமன்ரி குடுப்பார்களோ தெரியவில்லை?. :icon_idea::icon_idea:

அப்படித்தான் :angry:

அது தான் எப்படி

:icon_idea:

புலி 40 ல் தத்துவம் கூறுகிறார்.

பொன்னி, வில், யம்முவெல்லாம் கிரிக்கட் ஆடுகிறார்கள்.

கடைசியில் வேறுயாராவது வந்து இரண்டையும் கலந்து கொமன்ரி குடுப்பார்களோ தெரியவில்லை?. :icon_idea::)

அது நம்ம டங்கு தான்,அது சரி நீங்க இதிக் எந்த அணி பக்கம்

:o

புலி 40 ல் தத்துவம் கூறுகிறார்.

பொன்னி, வில், யம்முவெல்லாம் கிரிக்கட் ஆடுகிறார்கள்.

கடைசியில் வேறுயாராவது வந்து இரண்டையும் கலந்து கொமன்ரி குடுப்பார்களோ தெரியவில்லை?. :lol::lol:

புலி அறுபதில தண்ணியடிச்சுட்டு 40அ பற்றி சொல்லுது, நாம கிரிக்கட் விளையடுரோம்

  • தொடங்கியவர்

வானவில் வார்த்தைகளை அளந்து பேசும் நான் சொல்லவில்லை கண்ணதாசன் சொல்வதை நான் யாபிக்கிறேன். ஒரே தொந்தரவாய்ப்போச்சு உம்மால் :angry:

வானவில் வார்த்தைகளை அளந்து பேசும் நான் சொல்லவில்லை கண்ணதாசன் சொல்வதை நான் யாபிக்கிறேன். ஒரே தொந்தரவாய்ப்போச்சு உம்மால் :angry:

புலி மாமா பன்னிக்கவும்

புலி மாமா பன்னிக்கவும்

தலை புலிமாமாவை டென்சன் ஆகாதயும்

:lol:

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

புலி 40 ல் தத்துவம் கூறுகிறார்.

பொன்னி, வில், யம்முவெல்லாம் கிரிக்கட் ஆடுகிறார்கள்.

கடைசியில் வேறுயாராவது வந்து இரண்டையும் கலந்து கொமன்ரி குடுப்பார்களோ தெரியவில்லை?. :mellow::lol:

புலி 40 ல் தத்துவம் கூறுவார்

60 ல் வேதாந்தம் கூறுவார்

தவறான அபிப்பிராயம்,இரண்டாயிரம் ஆண்டில் இருந்து மாற்றிவிட்டார்கள்நாற்பதில் இருந்து 65தாக்கியுள்ளார்கள்.இதைவிட மேலதிகமாகத்தேவையாயின் www.lifeExtended.com

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் இருப்பவனுக்கும் பல்லக்கு தூக்குபவனுக்கும் தத்துவம் ஒத்துவராது தாயே!!!! நான் இரண்டாவது.

:mellow::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் இருப்பவனுக்கும் பல்லக்கு தூக்குபவனுக்கும் தத்துவம் ஒத்துவராது தாயே!!!! நான் இரண்டாவது.

:mellow::lol:

1000 தில் ஒரு வார்த்தை சொன்னீங்கள்..............இப்பவும் பென்ஸ் காரில போய் கொண்டு ஆசையை துற என்று தத்துவம் கூறுபவர்கள் உலகத்தில ரொம்ப பேர் இருக்கிறாங்க அவங்களை தெய்வமாக கும்பிடுறவங்கள் ரொம்ப பேர்

1000 தில் ஒரு வார்த்தை சொன்னீங்கள்..............இப்பவும் பென்ஸ் காரில போய் கொண்டு ஆசையை துற என்று தத்துவம் கூறுபவர்கள் உலகத்தில ரொம்ப பேர் இருக்கிறாங்க அவங்களை தெய்வமாக கும்பிடுறவங்கள் ரொம்ப பேர்

ஆசையைத் துற என்று மட்டும் கூறியுருந்தால் பரவாயில்லை, வாய்க்குள் இருந்து தங்க நகை வேறு எடுத்துக் கொடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வ குற்றம் ஆக போகுது கன்னத்தில் 2தரம் தட்டி கொள்ளவும்,

இங்கே களத்தில் உள்ள சில மேதைகள் வந்து சொல்வீனம் இது ஜனநாயக உரிமை அவர் அவர் விருப்பம் என்று திட்டுவீனம்

  • தொடங்கியவர்

பொதுவாக பெயர் சொல்லாது சொல்லுகிறேன். உங்களின் வேலை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான். அவரின் சரித்திரத்தினை வாசிக்கிறவன், பாபா பஜன்களுக்கு சென்று ஆனால் இப்போது வீட்டில் இருந்து தனிய நானே என்னை ஒரு மாகானாக மாற்ற முயற்ச்சி செய்கிறேன். அப்படி ஒரு தன்னிலை அறிதல் வரும் வரை நீ கோவிலுக்கும் போகலாம். சேர்ச்சுக்கும் போகலாம். ஆனால் தன்னிலை அறியும் போது நீங்கள் எல்லாம் ஒரு கடவுளின் அவதாரங்கள் என்ற உண்மையை என்னால் கண்டு உணரவேண்டும்.

இல்லை நான் தான் மகான் நீ அப்படி வரமுடியாது என்று பலர் இங்கே தாங்கள் பாபா வின் விசேட தூதுவர்கள் என்று நினைப்பதால் தான் பாபாவின் மகிமை சில நேரங்களில் உங்களால் உணஎஅமுடிவதில்லை.

என்னைப்பொருத்து ரஜினி கொட் தட் பவர் அஸ் வெல்.

சோ உங்கலுக்குள்ளும் அந்த பவர் உண்டு. அது தான் உங்களை இப்படி தற்போது வைத்திருக்கிறது. அதை விருத்தி செய்தால் நீங்களும் பென்ஸ் கார் ஓடலாம். துறவி என்பதன் உண்மையான பொருள் விளங்காததால் தான் நீங்கள் இப்படி கதைக்கிறீர்கள்.

என்னுடைய அப்பா கோடி கோடி யாக உழைத்தார். அனால் அவர் வியாபாரத்துக்கு போவதோ ஒரு பழைய சைக்கிளில், வைத்திருந்ததோ 3 வெள்ளை வேட்டி. அவரிடம் இன்றும் பணம் உள்ளது. அனால் நான் அப்படி வளரவில்லை. ஏன் நாகரீகம். வரட்டு நாகரீகம். தூக்குக்கயிற்றின் முன்னால் ஒரு கட்டத்தில் கொண்டு போய் விடக்கூடிய வறட்டுக்கவுரவம். பாங்குகளில் கடன்கள் வேண்டி உன்னாலும் இங்கால எதுவும் செய்யலாம். அனா அப்படி அப்படி செய்ய செய்ய அடிக்டட் ஆகி கடைசியில் உன்னை கெதியில பாடையில போக வைப்பதுதான் இந்த வாழ்க்கை.

அப்படியல்ல வாழுவது நீ உழை, கட்டுடங்கள், வீடுகள் வாங்கு, பென்ஸ் காரிலே ஓடு, நல்ல வேலையில் இரு, இது எல்லாம் உன்னால், அதாவது உனது ஈகோ எனப்படும் வெளி அகந்தையினால் செய்தது என்று நினைப்பாயானால், நீ பெற்ற இதுகள் ஒவ்வொன்றாக உன்னை விட்டு போக வெளிக்கிடும்.

ஆகவே அதை தொடர்ந்து வைக்கவேன்டும் என்றால், சமூகத்தொண்டுகள் செய்து மற்றவர்களுக்கும் அதன் பலன் சிறிதளவாவது போக நீ ஏதாவது செய்யவேண்டும். உன்னுடையது என்ற அந்த பதத்தினை எடுத்து விட்டு அதில் பற்று வைக்காது ஆனால் அதை ஆடூகள் போல மேய்த்து ஒரு ஆட்டுக்கார இடையனைப்போல இருக்கப்பார்.

இப்போது நீயும் இந்த உலகத்தினை ஆளலாம்.

என்னாடா இந்த காட்டுக்கத்தல் கத்திரவன் இப்படி எல்லாம் கதைக்கக்கற்றுக்கொண்டு விட்டான் என்று நினைக்காதீர்கள்.

நான் என்ன சொல்ல வாரன் ஏபடி சொல்லப்போறன் என்பதினை எனித்தான் நீங்க எல்லோரும் பார்க்கப்போகிறீங்க.

பிற்குறிப்பு:

தயவு செய்து இந்த முத்தத்தில கிறிக்கட் பந்து அடிக்காதீங்க. ஜுமுனா அன்ட் வடிவேலு. அப்படியும் நீங்க மீறினா இங்கால பந்து வந்தா எடுத்துவைச்சுப்போட்டு தரமாட்டன். கண்ணாடிகளை உடைச்சுப்போடும்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.