Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேஷியாவில் கடலில் நொறுங்கிய பயணிகள் விமானம்.. 189 பேரின் நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lion Air passenger plane flying from Jakarta crashes into the sea

இந்தோனேஷியாவில் கடலில் நொறுங்கிய பயணிகள் விமானம்.. 189 பேரின் நிலை என்ன?

இந்தோனேஷியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில் அதில் பயணம் செய்த 189 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது.

அதாவது புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 189 பேர் பயணம் செய்தனர்.

நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிகிறது. அந்த கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் 189 பேரின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/lion-air-passenger-plane-flying-from-jakarta-crashes-into-th-332998.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

download-61.jpg

இந்தோனேசியாவில் விமான விபத்து: 188 பயணிகளுடன் கடலில் மூழ்கியுள்ளது!

லயன் JT-610 விமானமானது, ஜகார்த்தா விமானநிலையத்திருந்து இன்று (திங்கட்கிழமை) காலை புறப்பட்டு 13 நிமிடங்களிலேயே கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த சுமார் 188 பயணிகளுடன் விமானம் நீரில் முழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பயணித்தைத் தொடங்கிய விமானம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பென்கால் பினான்ங் நகருக்கு பயணித்த JT-610 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளாத அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் சுமார் 210 பயணிகள் இருந்திருக்கலாமென ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த விமான விபத்தில் உண்டான இழப்புக்கள் மற்றும் சேதங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

http://athavannews.com/lion-air-crash-indonesian-aircraft-goes-down-after-jakarta-take-off/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

189 passengers and staffs of Lion Air died

இந்தோனேஷியா விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு.


இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 189 பேரும் பலியாகிவிட்டனர்.

லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு நேற்று காலை 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது.

புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் குழந்தைகள் உள்பட 181 பயணிகளும் 8 ஊழியர்களும் என 189 பேர் பயணம் செய்தனர்.

நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

விமானம் விழுந்த பகுதி 30 முதல் 35 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியாகும். இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதை இந்தோனேஷிய மீட்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதி செய்தார்.

இந்த விமானம் கடலில் விழுவதை நேரில் பார்த்ததாக கடலில் விசைப்படகில் இருந்த ஒருவரும் தெரிவித்தார். விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் புத்தகங்கள், செல்போன், பைகள் மற்றும் விமானத்தின் உடைந்த பாகங்கள், இருக்கைகள் சிதறிக் கிடந்தன. அவற்றையும் மீட்புக்குழுவினர் மீட்டனர். இதையடுத்து 189 பேரும் பலியாகிவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/189-passengers-staffs-lion-air-died-333075.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்து நொருங்குவதற்கு என்ன காரணம்- மர்மம் நீடிக்கின்றது

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடலில் விழுந்து நொருங்கிய லயன் எயர் விமானத்தில் பயணம் செய்த 189 பேரினதும் உடல்களை  மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற அதேவேளை விமானவிபத்திற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்தோனேசியாவின் தலைநகரிலிருந்து  பங்காவில் உள்ள  பங்கல் பினாங்கிற்கு புறப்பட்ட விமானம்  சிறிது நேரத்தின் பின்னர் விமானநிலையத்திற்கு திரும்புவதற்கான அழைப்பை விடுத்துள்ளது.

எனினும் அவசர நிலை குறித்து எந்த சமிக்ஞையும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராடர் தரவுகள் விமானம் தனது பயணத்திலிருந்து மீண்டும்  ஜகார்த்தா நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளதை  காண்பித்துள்ளன.

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் விமான நிலைய கட்டுப்பாட்டறை விமானத்துடனான தொடர்பை இழந்துள்ளது.

விமானத்திலிருந்து அவசரநிலை குறித்து சமிக்ஞைகள் எதுவும் வெளியாகதமை சிந்திக்கவேண்டிய விடயம் என அமெரிக்க விமானச்சேவையை சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

lion_air1.jpg

அவர்கள் அவசரநிலை குறித்து எதனையும் தெரிவிக்காமல் நாங்கள் திரும்பி வருகின்றோம்  என மாத்திரம் தெரிவித்தமை  ஆச்சரியமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமானம் மிக வேகமாக தரையை நோக்கி சென்றுள்ளது இதுவும் வித்தியாசமான விடயம் எனஅந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதல்நாளிரவு இந்தோனேசிய தலைநகரிற்கு பயணம் செய்தவேளை  விமானத்தில் கோளாறு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் பொறியியலாளர்கள் விமானத்தை ஆராய்ந்து அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

விமானம் அவசரநிலையை எதிர்கொள்கின்றது என எங்களிற்கு சமிக்ஞை வந்திருந்தால் நாங்கள் விமானத்தை எங்கு பாதுகாப்பாக தரையிறக்கலாம் என தெரிவித்திருப்போம் என இந்தோனேசிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் விபத்திற்குள்ளானமைக்கு காலநிலை காரணமாகயிருக்காது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் விமானம் அவசரமான ஜகார்த்தாவிற்கு திரும்பவில்லை, இதன் காரணமாக திடீர் என ஏதோ நடந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/43492

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் ஒன்றுதான் விமான பைலட் இந்திய கிந்திவாலா முந்தைய  பறப்பின் பின் தொழில்னுட்பகோளாறு சரி செய்யபடாமல் தொடர்ந்து அஜாக்கிரதையாக பைலட் பறந்து இருக்கிறார் .

Image may contain: 1 person, smiling, sitting and indoor

4 hours ago, பெருமாள் said:

காரணம் ஒன்றுதான் விமான பைலட் இந்திய கிந்திவாலா முந்தைய  பறப்பின் பின் தொழில்னுட்பகோளாறு சரி செய்யபடாமல் தொடர்ந்து அஜாக்கிரதையாக பைலட் பறந்து இருக்கிறார் .

சும்மா நெடுக்கால யோசிக்காமல் கொஞ்சம்  குறுக்கால கிட்னியை பாவித்து வதந்தியை பரப்பவும்.

Piloting the aircraft was Captain Bhavye Suneja, assisted by co-pilot Harvino, who together had a combined total of 11,000 hours flying time, according to a statement by Lion Air.

They were assisted by flight attendants Mery Yulianda, Alviani Hidayatul Solikha, Damayanti Simarmata, Deny Maula, Citra Noivita Anggelia and Shintia Melina.

அப்புறம் 

Lion Air said the plane was delivered on August 15 and had clocked 800 hours of flying time before the disaster.

மூலம் 

https://www.news.com.au/travel/travel-updates/incidents/indonesian-lion-air-passenger-jet-missing/news-story/7d99e07c9092831175fcc3621c5493ce

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

சும்மா நெடுக்கால யோசிக்காமல் கொஞ்சம்  குறுக்கால கிட்னியை பாவித்து வதந்தியை பரப்பவும்.

Piloting the aircraft was Captain Bhavye Suneja, assisted by co-pilot Harvino, who together had a combined total of 11,000 hours flying time, according to a statement by Lion Air.

They were assisted by flight attendants Mery Yulianda, Alviani Hidayatul Solikha, Damayanti Simarmata, Deny Maula, Citra Noivita Anggelia and Shintia Melina.

அப்புறம் 

Lion Air said the plane was delivered on August 15 and had clocked 800 hours of flying time before the disaster.

மூலம் 

https://www.news.com.au/travel/travel-updates/incidents/indonesian-lion-air-passenger-jet-missing/news-story/7d99e07c9092831175fcc3621c5493ce

முன்னுக்கு பின் முரணாக விமான நிறுவனம்தான்  செய்திகளை மாறி மாறி தருகின்றது .

13 minutes ago, பெருமாள் said:

முன்னுக்கு பின் முரணாக விமான நிறுவனம்தான்  செய்திகளை மாறி மாறி தருகின்றது .

தப்பு

பின்னுக்கு முன்னாக இங்குதான் பதிகிறார்கள்

தலைமை விமானி இந்தியன் என்பது உண்மைதான் அதுக்காக அவற்ர தலையில அனைத்தையும் செலுத்துவது தப்பு. 

http://timesofindia.indiatimes.com/articleshow/66410740.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

முன்னுக்கு பின் முரணாக விமான நிறுவனம்தான்  செய்திகளை மாறி மாறி தருகின்றது .

இது முழுக்க முழுக்க கேப்டனின் தவறு ஆகத்தான் இருக்க கூடும் 
விமான நிறுவனத்தின் லோக்-புக்கில் என்ன பழுது இருந்தது என்பது 
பதிவாகி இருக்கும். அதை அசட்டை செய்துவிட்டே இவர் பறந்திருக்க வாய்ப்பு உண்டு.
அதை மூடி மறைக்க வேண்டிய தேவை விமான நிறுவனத்துக்கு உண்டு 
ஏற்கனவே இவர்களின் இன்னொரு விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது 

கோளாறு வந்தவுடனேயே தொடர்புகொண்டிருக்க வேண்டும் 
தன்னுடைய தவறை மறைக்க எதோ முயற்சி நடந்து இருக்கிறது.

எனது தனிப்பட்ட எண்ணங்களின் புள்ளிகளை வைத்து 
ஒரு கோடு கீறினால் ........... இன்னொரு விடயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்ன நடந்திருக்கும்?
என்ற பாரிய குழப்பம் கொண்ட விமான விபத்து எல்லாம் 
போஜிங் தயாரிப்பு விமானங்களில்தான் நடக்கிறது இவை அமெரிக்காவில் தயாரிக்க படுகின்றன.

கடலில் வீழ்ந்த மலேசிய விமானத்தில் எல்லாம் இருந்தது 
ஆனால் கறுப்பு  பெட்டியை காணவில்லை 

பின்பு  அதே நிறுவனத்தின் எம் எச் 370 எங்கு என்று தெரியாது காணாமல் போனது 

அதன் முன்பு அதே நிறுவனத்தின் போயிங் 777 உக்ரைனின் வான் பரப்பில் வைத்து 
சுட்டு வீழ்த்தபட்டது  யாரும் உரிமை கூறவில்லை ... மாறி மாறி கை காட்டுகிறார்கள். 

9/11 இரட்டை கோபுர தாக்குதல் அன்று பெட்டி வெட்டும் பெலெட் கத்தியை காட்டி 
விமானப்படையில் பயிற்சி பெற்ற விமானிகளிடம் இருந்து தீவிரவாதிகளால் கடத்தபட்ட 4 விமானங்களும் போஜிங் தயாரிப்பு விமானங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இது முழுக்க முழுக்க கேப்டனின் தவறு ஆகத்தான் இருக்க கூடும் 
விமான நிறுவனத்தின் லோக்-புக்கில் என்ன பழுது இருந்தது என்பது 
பதிவாகி இருக்கும். அதை அசட்டை செய்துவிட்டே இவர் பறந்திருக்க வாய்ப்பு உண்டு.
அதை மூடி மறைக்க வேண்டிய தேவை விமான நிறுவனத்துக்கு உண்டு 
ஏற்கனவே இவர்களின் இன்னொரு விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது 

விமானி தன் நண்பர்களுக்கு விருந்து கொண்டாட்டம் குறிப்பிட்ட திகதியில் இருந்து மாற்ற வேண்டாம் தான் கட்டாயம் கலந்து கொள்வன் எனும் செய்தியை அனுப்பி இருக்கார் இது ஆங்கில இணையங்களில் இருந்தது. நம்மாட்களுக்கு இவ்வளவு ராஜவிசுவாசம் இந்தியாவுக்கு இருக்கும்  என்று கனவிலும்  எனக்கு தெரியாமல் போயிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

விமானி தன் நண்பர்களுக்கு விருந்து கொண்டாட்டம் குறிப்பிட்ட திகதியில் இருந்து மாற்ற வேண்டாம் தான் கட்டாயம் கலந்து கொள்வன் எனும் செய்தியை அனுப்பி இருக்கார் இது ஆங்கில இணையங்களில் இருந்தது. நம்மாட்களுக்கு இவ்வளவு ராஜவிசுவாசம் இந்தியாவுக்கு இருக்கும்  என்று கனவிலும்  எனக்கு தெரியாமல் போயிட்டுது .

அத்துடன்....அவுஸ்திரேலிய செய்திகளின் படி.....குறைந்த முதலீடுகளுடன் இயங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள்...விமானிகளுக்குப் போதிய பயிற்சி அளிப்பதில்லை எனவும், flight simulator மூலம் மட்டுமே...பயிற்சியளிப்பதாகவும் கூறப் பட்டது!

மூன்றடி உயரத்தில் பறந்தாலே......மூவாயிரம் அடி உயரத்தில் பறந்ததாக....resume யில் போடும் இந்தியர்கள்...மக்களின் உயிர்களுடன் விளையாடுவது....நிச்சயம் தவிர்க்கப் பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

அத்துடன்....அவுஸ்திரேலிய செய்திகளின் படி.....குறைந்த முதலீடுகளுடன் இயங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள்...விமானிகளுக்குப் போதிய பயிற்சி அளிப்பதில்லை எனவும், flight simulator மூலம் மட்டுமே...பயிற்சியளிப்பதாகவும் கூறப் பட்டது!

மூன்றடி உயரத்தில் பறந்தாலே......மூவாயிரம் அடி உயரத்தில் பறந்ததாக....resume யில் போடும் இந்தியர்கள்...மக்களின் உயிர்களுடன் விளையாடுவது....நிச்சயம் தவிர்க்கப் பட வேண்டும்!

எந்த ஒரு செய்தியையும் பல பக்கமாய் ஆராயணும் கிந்தியர்கள் ஒன்றுமே தெரியாமல் ஆனால் ஒரு விடயத்தை  பற்றி அடி முதல் நுனி வரை  தெரிந்தது மாதிரி காட்டிக்கொள்வதில் வல்லவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில்....முதலில் அனுபவமில்லாமல்..வேலை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்!

நாங்களும்...ஆரம்ப காலத்தில் கொஞ்சம் அனுபவத்தைக் கூட்டிக் குறைச்சுச் சொல்லிறது வழக்கம் தானே!

இருந்தாலும் சில தொழில்களில்...இவ்வாறான விளையாட்டுக்களை நாம் செய்வது இல்லை! எங்கள் வளர்ப்பு...சில விடயங்களில் பொய் சொல்வதை...இன்னும் நியாயப்படுத்திகின்றது இல்லை!

நான் சொல்லும் துறைகள் சில...!

மருத்துவம்....(இந்திய மருத்துவர்கள்....குறிப்பாக ஒரு பட்டேல்...குயீன்ஸ்லாந்தில்..பலியெடுத்த உயிர்களுக்கு இன்னும் கணக்கெடுப்பு முடியவில்லை)

விமானப் பொறியியல், விமானமோட்டுதல்!

மின்சார ரயில்கள் ஒட்டுதல்...( இந்தத் துறையில்...இந்தியர்கள்..அதிகம் உள்ளார்கள்! ரயில்கள்...தானியங்கி முறையில் இயங்குவதால்...ஒரு மாதிரிச் சனம் தப்பிப் பிழைக்குது)

வயது முதிர்ந்தோர் காப்பகங்கள்......! ( கிட்டடியில...ஒரு வயதானவருக்குச் செருப்பால சாத்தி...அது கமராவில பிடி பட்டுப்...ஊரெல்லாம் கொஞ்ச நாள்.. இந்தியரைக் கண்டாலே...ஒரு முறைப்பாக இருந்தது)

மேலுள்ளவை...எனது அனுமானங்கள் மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2018 at 3:40 PM, ஜீவன் சிவா said:

சும்மா நெடுக்கால யோசிக்காமல் கொஞ்சம்  குறுக்கால கிட்னியை பாவித்து வதந்தியை பரப்பவும்.

ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது கடலில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இந்தோனீசிய விமானத்தின் கருவிகளில் கோளாறு ஏற்பட்டிருந்ததாக பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த முதன்மை தகவல்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தின் தொழில்நுட்பம் குறித்த அந்த தகவலில் கருவி ஒன்று "நம்பமுடியாத நிலையில்" இருப்பதாகவும், விமானி அதனை இணை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்த அந்த விமானம் 189 பேருடன் கடலில் விழுந்தது.

ஜகார்தாவிலிருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறிகள் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான விமானம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் லயன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமானது. விமான சேவை நிறுவனத்திடம் பிபிசியால் இந்த விபத்து குறித்து கருத்தை பெற முடியவில்லை.

 

https://www.bbc.com/tamil/global-46027822?ocid=socialflow_facebook

 

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுப்பு!

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டி இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய ஜகார்தா விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சுமாத்திரா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான விமானத்திற்கு நேர்ந்த உண்மைகளைப் பற்றி அறிவதற்கான ஆதரமான கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட புதிய லயன் விமானமானது, கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு 13 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளாகியது.

குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில், பயணம் செய்த 189 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற தினத்திலிருந்து இன்று வரை சுமாத்திரா கடற்பரப்பில் இராணுவ வீரர்களினாலும் சுழியோடிகளினாலும் மீட்புப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில், இன்று விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

http://athavannews.com/black-box-from-crashed-indonesian-jet-retrieved/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.