Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட 4000 மேற்பட்ட தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்

Featured Replies

திங்கள் 09-04-2007 19:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும் தமிழர்களை திரும்பியனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரொக்கட்றோ நிலக்கீழ் புரையிரத நிலையம் மூடப்பட்டு தமிழ் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

சுதந்திரத்திற்காக குரல் தருவது குற்றமில்லை எனும் கண்டன ஒன்றுகூடலில் மக்கள் சிதறிக் காணப்படுவதால் 3000 - 4000 வரையிலான மக்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரஞ்சுக் காவல்துறையினர் இன்றைய ஒன்றுகூடலுக்கு தடைவிதித்த போதும் காவல்துறையினரால் பொதுமக்கள் திருப்பினுப்பிய போதும் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலத்திறகான அனுமதி மறுப்பு மற்றும் காவல்துறையினரின் தடையையும் மீறி தமிழ் மக்கள் தங்கள் நியாயமான போராட்டத்தை நடாத்தி முடித்துள்ளனர் சுமார் நாலாயிரத்திறகும் மேற்பட்ட மக்கள் வந்து சேர்ந்தனர் காவல் துறையினர் அவர்களை அமைதியாக கலைந்து போகும்படி தெடரச்சியான வேண்டுகொள் விடுத்தும் அவர்கள் எங்கள் பக்க நியாயத்தை எடுத்துகூறிய பின்னர் சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் கலைந்து சென்றனர்

தமிழ் மக்கள் பொங்கி எழுந்தால் அது தாகயமாக இருந்தாலும் சரி, புலமாக இருந்தாலும் சரி அவர்களை சும்மா பூச்சாண்டி காட்டுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்று மேற்படி செய்தி மூலம் அறியக்கூடியதாக உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்சு ஊடகங்களில் இச்செய்திகள் வந்ததா?

பிரான்ஸ்: தமிழ் மக்களின் எதிர்ப்பு பேரணி

படங்கள் தமிழ்நெட், நன்றி!

fr_pr_01.jpg

fr_pr_03.jpg

fr_prot_02.jpg

செய்தி மூலம்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21846

தடை வந்தும் குவிந்த மக்களுக்கு நன்றிகள் இதே போல மெல்பேனில் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு இருந்தால் ஈ.காக்கா கூட வந்திருக்காது

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஏமாந்ததையிட்டு மன்னிப்புக்கேட்கின்றேன்

ஊடகங்களின் பிழையான வழிநடத்தலினால் நான் இவ்வொன்று கூடலில் கலந்து கொள்ளவில்லை

எல்லா கூடகங்களுமே அனுமதி கிடைக்கவில்லை

ஆர்ப்பாட்டம் நடைபெறாது என்றே அறிவித்தன.

இதனால் என்னைப்போன்று பல ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஊடகங்கள் தமது தவறை உணர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதிநிதிகள் கைதுக்கு கண்டனம்: பிரான்சில் தடையை உடைத்து நடந்தது "ஒன்றுகூடல்"!

[செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 14:52 ஈழம்] [கி.தவசீலன்]

பிரான்சில் கைது செய்யப்பட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிகளை விடுவிக்க தடையை உடைத்து பாரிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.

பிரான்ஸ் காவல்துறையால் ஒன்றுகூடல் நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் தன்னெழுச்சியாக குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடினர்.

பாரிசில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையில் படும் இடமான ரொக்கார்டோ சதுக்கத்தை நோக்கி தமிழ்மக்கள் திரளத் தொடங்கினர்.

20070410001dg8.jpg

20070410002dg1.jpg

20070410003su4.jpg

பிரான்ஸ் காவல்துறையின் தடையை அமுல்படுத்த ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சதுக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த மக்களை திருப்பி அனுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தனர

செய்திகளை வாசிக்க, படங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது!

அப்படிப்போடு அரிவாளை!

எவ்வளவு காலத்திற்கு தமிழ் மக்களை ஏமாற்ற முடியும்? எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கின்றது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தமிழர்களைப் பார்க்க பெறுமையாக இருக்கிறது. பிரெஜ்சு ஊடகங்களில் இச்செய்தி வந்ததா?

தடைகளைத் தாண்டி ஒன்று கூடிய பிரன்சுத் தமிழர்களுக்குப் பாராட்டுக்கள்.

புலத்தில் தடை செய்யப்பட்டும் ஒன்றுகூடிய முதல் நிகழ்வு இது.மக்களின் அரசியல் வேட்கையை தடைகள் தடுத்தி நிறுத்திவிடாது என்பதை இது காட்டி உள்ளது.புலத்தின் தமிழ் ஊடகங்களுக்கு மக்கள் பாடம் போதித்து உள்ளனர்.

இதைக்கண்டு பிரன்சு அரசு யோசிக்கும், இதற்கான பிரதிபலன் நிச்சயமாக இனி இருக்கும்.

மற்றைய புலத்தவருக்கும் இது ஒரு முன் உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால், மனித உரிமைக்காகப் போராடும், இனவிடுதலைக்காகப் போராடும் அனைவருமே பயங்கரவாதிகள்

- பண்டார வன்னியன் வுரநளனயலஇ 10 யுpசடை 2007 17:02

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆண்களும் பெண்களுமாக விடுதலைப் புலிகள் அமைப்பில்இணைந்து போராடுகிறார்களே அல்லாமல் இலங்கைக்கு வெளியே எந்த வன்முறைகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடுவதில்லை. எமது நெருங்கிய உறவுகள் கூட விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரைநீத்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால், மனிதஉரிமைக்காகப் போராடும், இன விடுதலைக்காகப் போராடும் அனைவருமே பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டும்.

20070410francerw01cm7.jpg

சங்கதி

பிரான்ஸ் மக்களை பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்,இதில் எங்கள் லீசன் அண்ணாவும் நிற்பார் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களின் எழுச்சி பெருமிதமளிக்கின்றது. துரோக்கும்பல்கள் இதைத் தடுக்க முனைந்தபோதிலும், நம்மவர்கள் காட்டிய எழுச்சி நிச்சயம் பிரான்சு அரசைச் சிந்திக்க வைக்கும். இன்னுமொரு வகையில் இந்த மக்கள் போராட்டம் உதவும் என்னவென்றால், மக்களிடம் கட்டாய பணவசூலிப்பு என்று அவர்கள் தாக்கல் செய்த வழக்கு இவ்வாற மக்கள் எழுச்சி மூலம் தோற்றுப் போகும்.

திரு. மேத்தா சொன்னது போன்று, நிதியுதவி மக்களால் தான் அளிக்கப்படுகின்றதே தவிர, எவரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதை இதன் மூலம் அவர்கள் உணர்ந்திருப்பார்கள். இப்படியான நிலை வரும் என்று தான் துரோகக்கும்பல்கள் இதைத் தடுக்க முயற்சி செய்தார்கள்.

பிற நாடுகளில் வாழ்கின்ற மக்களும், இவ்வாறன ஆர்ப்பாட்டங்களைச் செய்து, உண்மையை உலகிற்கு காட்ட விருப்பமுறுவதைக் காணமுடிகின்றது. ஒவ்வொரு நாட்டிலும், பிரான்ஸ் தூரதரங்கள் முன்பு, எங்களின் உணர்வினைக் காட்ட முடியும். அல்லது கையெழுத்து சேர்த்து அனுப்பி வைக்க முடியும்.

பிரான்ச் தமிழ் மக்களின் ஒரு புரட்சி என்று சொல்லலா. எமது விடுதலை வரலாற்றில் ஒரு பொன் எழுத்தாக

அமைந்துள்ளது. எமது பாராட்டுகள்....

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலத்திறகான காவல்துறையினரின் தடை நிகழ்வுநடைபெறாது என்று தமிழ்ஊடகங்களிலும் அறிவிக்கபட்டபின்னரும் ஏன் ஊர்வலம் நடைபெறாது என்று அதை ஒழுங்கு படுத்திய சில அமைப்புக்களே அறிவித்திருந்த நிலையிலும் (இதற்கான வேறு காரணங்கள் இருக்கின்றது) தாங்களாக ஒன்று கூடிய மக்களை வழிப்படுத்தி எங்கள் எதிர்ப்பினை பிரெஞ்சு அரசிற்கு எடுத்து கூறிய இளைய தலைமுறையினரையும் மற்றும் இளையோர் அமைப்பு உறுப்பினர்களையும் பாராட்டுவதுடன் இனி வருங்காலங்களில் மற்றைய நாடுகளிலும் இப்படியான சந்தர்பங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று முன் உதாரணமாக பிரான்ஸ் இளையோர் நடாத்தி காட்டியிருக்கின்றார்கள் அவர்களிற்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் :rolleyes:

பிரான்ஸ் தவிர பிற ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் ஈழ மக்களும் இவ்வாறு போராட முன்வர வேண்டும் அப்பொழுது தான் புலிகள் பற்றிய சிங்கள அரசின் பொய் பிரசாரங்கள் பிசுபிசுத்துப்போகும்.அதுவே பிறக்கபோகும் புதிய தமிழர் தாயகத்திற்கு அங்கீகாரம் பெறவும் வழி வகுக்கும்.

பிரான்ஸ் தமிழர்களின் தமிழ் உணர்விற்கு தமிழகத்தமிழர்கள் தலை வணங்குகிறோம்

Edited by வேலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.