Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல

Featured Replies

சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல

தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்

நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது.

கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியஸ் சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிறகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1ஃ4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பெப்ரபரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணித்தியாலங்கள், 49 நிமிடங்கள், 12 வினாடிகள் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிறகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் (1582-325)ஃ120ஸ்ரீ10) குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் ( 1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி)

கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

'உவவுமதி' (முழுமதி) நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர் 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் குறிப்பிட்டார்கள். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த இறந்த ஆண்டுபற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்து தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது வடபுலத்து அரசன் சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சி நடந்தபோது அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.

இந்தக் குழப்பத்தை நீக்க தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

வானவியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு தனுசு இராசியில் பட்டு மகர இராசியில் மலர்கிறான்.

தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. தைப் பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் நினைவாக அதற்கு மறு நாளும் அரச விடுமுறை நாட்களாகும்.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்து தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மண் மீட்பு, தமிழின மீட்பு இவற்றோடு நின்றுவிடாமல் பிற பண்பாட்டுப் படையெடுப்பால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட எங்கள் கலை பண்பாட்டையும் நாங்கள் மீட்டெடுக்க வேண்டும்.

தைப் புத்தாண்டில் உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும்.

தமிழ் மண்ணில் அமைதி நிலவட்டும். அடிமை வாழ்வு முடியட்டும். மக்கள் வாழ்வில் தென்றல் வீசி புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் புதிய ஆண்டில் காலடி எடுத்து வைப்போம்

http://ariyaamai.blogspot.com/2007/04/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரை எவ்வளவு தூரம் உண்மையை உரைக்கின்றது என்று தெரியவில்லை. தைப்பொங்கல் குறித்தான எவ்வித விளக்கமும், பழைய அரிச்சுவடி எதிலும் கிடைக்காதபோது, அதைத் தமிழர் புத்தாண்டாக கணித்தது எப்படி என்று தெரியவில்லை.

மற்றும்படி, சித்திரைப் புத்தாண்டு என்பது தமிழர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் மட்டும் தான் கொண்டாடுவதாகக் கூறப்படுகின்றது. இதை விட, சித்திரை மாதம், 14ம் திகதி(தமிழுக்கு 1ம் திகதி) தான், சூரியன் உச்சிக்கு, அதுவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேராக வருகின்றது.

அக்காலத்தில் சூரியனின் ஒரு சுழர்ச்சியை வைத்து, காலத்தைக் கணித்தும் இருக்க கூடும்.

புராணக்கதைகள் என்பன இடையில் வந்த, ஆரியர்களால் உருவாக்கப்பட்டது என்பதாற்காக, எதையும் விட்டு விட்டு நாம் ஓடவேண்டிய தேவையில்லை.

தைபபொங்கல், தை மாதம் 14ம் திகதி வருவதாக, தமிழ் நாட்காட்டியை வைத்துக் கணித்துவிட்டு, சித்திரைப் புத்தாண்டு, மட்டும் தமிழருக்குரியதல்ல என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். தமிழ் புத்தாண்டு சித்திரையில் வருகின்றது என்று விரும்பாத எவரும், தைப்பொங்கலையும் கொண்டாடாதீர்கள். அதுவும், இக்கணிப்பால் வந்த விளைவே!

  • தொடங்கியவர்

அடடடா புலவரே ரொம்பக் காலமா காணாமல் போயிருந்தீர்கள், வரவுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அடடடா புலவரே ரொம்பக் காலமா காணாமல் போயிருந்தீர்கள், வரவுக்கு நன்றிகள்

எங்க ஒதுங்க விட்டால் தானே. ஏதாவது கட்டுரைகளைப் பார்க்க வைத்து, சூடேத்துறியள். :icon_idea::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடா புலவரே ரொம்பக் காலமா காணாமல் போயிருந்தீர்கள், வரவுக்கு நன்றிகள்

யோ.......வானவில்லு சனிக்கிழமை நான் பொங்கிறதா வேண்டாமா? முடிவை சொல்லுய்யா? சொல்லாட்டி இப்பவே பொங்கீடுவன்:angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22029&hl=

இங்கையும் கொஞ்சம் எட்டி பாருங்கோ:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்தூயவன் சூடு ஏறினாத்தான் வருவீங்ககோ?சித்திரை வருடத்துக்கும் ஆப்பு வைக்கப் போகிறீர்கள் போல் இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கப்பா.. தைப்பொங்கல்.. ஆடிப்பிறப்பு.. தீபாவளி..எனி சித்திரை வருடப்பிறப்பு... தமிழர்களுக்கு தங்கட எது என்று நிறுவவும் ஆதாரமில்ல.. நிலைத்து நிற்கவும் திராணியில்ல..இப்ப இது ஒரு புது பஷனா வளர்ந்து வருகுது. இப்படி ஆதாரமில்லாம கற்பனைக்கு ஆளாளுக்கு எழுதிறது முற்போக்கு என்று வேற காட்டப்படுகுது. இது வளர்ந்து வரும் ஒரு மூட நம்பிக்கை..! ஆதாரமற்று எதையும் கற்பனையால சோடிப்பால புனையலால..நிறுவிட முடியாது..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசுகளே, மொழி,கலாச்சாரம்,உடை,உணவு ஆகியவற்றில் வேறுபட்ட இரு இனங்கள் எவ்வாறு சித்திரை வருடபிறப்பை மட்டும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் இதற்கு என்ன காரணமாக இருக்கும்?தயவு செய்து யாரும் அறிய தாங்கோ அதை விட்டு போட்டு அரைத்த மாவை திருப்பி அரைக்காதயுங்கோ

  • தொடங்கியவர்

பெரிசுகளே, மொழி,கலாச்சாரம்,உடை,உணவு ஆகியவற்றில் வேறுபட்ட இரு இனங்கள் எவ்வாறு சித்திரை வருடபிறப்பை மட்டும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் இதற்கு என்ன காரணமாக இருக்கும்?தயவு செய்து யாரும் அறிய தாங்கோ அதை விட்டு போட்டு அரைத்த மாவை திருப்பி அரைக்காதயுங்கோ

2 மொழி மக்களுக்கும் இடையில ஒரு வேவ் ஓடுது கண்ணுக்கு தெரிய அது ஒன்னும் சும்மா இல்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் முன்பு பெளத்த சமயத்தில் இருந்ததினை படித்திருக்கிறோம். சிங்கள தமிழ் புத்தாண்டாக சித்திரை மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுவதற்கு இதுவும் எதாவது ஒரு காரணமாக இருக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஆக்கிரமிப்பு இல்லாத ஒரு விடயத்தைத் தான், நமக்குரியது என்று உரிமைகோரவும் நான் தயாராக இல்லை.

ஆரியமாகட்டும், வடமொழியாகட்டும். எவ்வளவு தூரம் நம்மை ஆக்கிரமித்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவை தமிழரின் எந்த விடயங்களில் ஊடுருவவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம். முடியாது ஏனென்றால் நம்மில் அவ்வளவு தூரம் அது தன் விதையைப் பரப்பியிருந்தது. அப்படியிருக்கின்றபோது, வருடப்பிறப்புத் தொடர்பான கணிப்பில் ஏன் தவறமாட்டோம் என்று புரியவில்லை.

அது நிற்க, தமிழன் 60 ஆண்டு சுழர்ச்சிக் வைத்திருந்தான் என்று சொல்கின்ற கட்டுரையாளர், முடிவில் ஆண்டுகளுக்கு வடமொழிச்சொல் என்பதால் அது தமிழருக்கில்லை என்று முடிக்கின்றார். அவரைப் பொறுத்தவரைக்கும் சித்திரைப் புத்தாண்டைத் தமிழர் புத்தாண்டு இல்லை என்று காட்டுவதற்கு நிறையவே முயற்சித்திருக்கின்றார் என்றே தோன்றுகின்றது.

சமீபத்தில் நண்பர் சபேசன், தைபபொங்கல் தமிழர் பண்டிகை என்பதற்கு நிறுவ, அதற்குப் புராணக்கதைகள் இல்லாதது தான் காரணம். ஆகவே அது பரம்பரிய தமிழ்பண்டிகை என்று வெற்றிகரமாக நிறுவியும் முடித்திருந்தார். புராணக்கதை இல்லாவிட்டால், அது எப்படி பாரம்பரியமானது என்று கூற முடியும்? நேற்று வந்த பண்டிகை என்றால் கூடப் புராணக்கதைகள் இருக்காதே?

நூல், மற்றும் எக்கல்வெட்டுக்களிலும் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அவ்வாறே சித்திரைவருடப்பிறப்புக் குறித்தும் கிடைக்கவில்லை. ஆனால் சித்திரை வருடப்பிறப்பு என்பது, நட்சத்தித்தை வைத்துக் கணிக்கப்படுவதால், வானசாத்திரம் தமிழரின் வரலாற்றில் கொண்டிருந்த பங்கினையும், சூரியன் தமிழகத்தின் நேர்உச்சிக்கு அன்று வருகின்ற விதத்தையும் வைத்து அன்று புதுவருடத்தைக் கணித்திருக்க கூடும் என்பதே என் எண்ணம்.

நேற்று வந்தவர்கள், தங்களை தலைவர்களாக எண்ணி, தமிழர் பண்டிகை இது தான் என்று பாதை காட்டினால், அதை நம்பி செம்மறி ஆடுகள் போல, பின்னால் போகின்ற நிலைக்கு என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. மறைமலைஅடிகளார், சைவசித்தந்தத்தில் அளப்பெரும் பங்காற்றியவராக இருந்தபோதும், அவர் சொன்னதற்காக எம் விருப்பங்களை மாற்ற வேண்டிய தேவையில்லை.

ஏன் என்றால் திருவள்ளுவர் ஆண்டு என்று அவர் கணித்த விடயத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.

எப்படி திருவள்ளுவர் யேசுநாதரை விட 31 வயது கூடியவர் என்று எடுகோள் எடுத்தார் என்றோ அல்லது, தைமாதம் தான் தமிழர் புத்தாண்டு என்று கணித்தார் என்றோ, எவ்வித அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. இவர்கள் இது தான் விதி என்று சொன்னவுடன் நாம் அதைப் பி்ன்பற்ற வேண்டிய தேவையுமில்லை.

தமிழ்மாதக் கணிப்பின் அடிப்படையில் தைப்பொங்கலைக் கொண்டாடியபடி, சித்திரை வருடப்பிறப்பு தமிழருக்குரியதில்லை என்று கதைவசனம் எழுதுகின்றார்களாம்.

இப்படி புறப்பட்டவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வது இது தான். தைப்பொங்கல் தமிழர் திருநாள் என்பதற்கு உங்களுக்கு எவ்வித அடிப்படையைக் கொண்டிருக்கின்றீர்களோ, அதை விட வலுவாக சித்திரைப் புத்தாண்டு தமிழர் திருநாள் என்று நியாயப்படுத்த எம்மிடம் காரணிகள் உண்டு. ஆரியம் கலக்க விட்டது தமிழரின் தவறு. ஆனால் பண்டிகைகளின் தவறல்ல.

எவற்றையும் கொண்டாடுவது, கொண்டாடமல் விடுவது உங்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தமிழர் கொண்டாட்டம் எது, எதுவல்ல என்று தத்துவம் பேசினீர்கள் என்றால், அதை நிருபிக்க உங்களிடம் சிறிய ஒட்டுத்துணி கூடக் கிடையாது என்பதை நாம் நிருபிக்கத் தயார்.

எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

---------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

பெரிசுகளே, மொழி,கலாச்சாரம்,உடை,உணவு ஆகியவற்றில் வேறுபட்ட இரு இனங்கள் எவ்வாறு சித்திரை வருடபிறப்பை மட்டும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் இதற்கு என்ன காரணமாக இருக்கும்?தயவு செய்து யாரும் அறிய தாங்கோ அதை விட்டு போட்டு அரைத்த மாவை திருப்பி அரைக்காதயுங்கோ

சிங்களவர்கள், தமிழர்கள் பற்றிச் சொல்கின்றீர்களா? சொல்லப் போனால் இருவருக்கும் ஒரே கலாச்சார அமைவு தான் இருக்கின்றது. ஏனென்றால் இரண்டின் கலாச்சாரங்களுக்கும் பிறப்பிடம் இந்தியா என்றே கருதப்படுகின்றது.

நிற்க, சிங்கள இராசதானிகள் சிங்களவர்களால் மட்டும் ஆளப்படவில்லை. முக்கியமாகப் பொலநறுவை இராசதானியின் பின்னர், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆளுமை சிங்கள இராட்சியங்களில் இறுதி வரை இருந்தது. எனவே, தமிழர்களிடம் இருந்து ஒரு நிகழ்வை அவர்கள் உள்வாங்கியிருப்பார்கள் என்றே கருதவேண்டும்.

கலை என்ற விடயங்களில் சிங்களவர்கள் ஓரளவு எம்மை விட பேணும் பழக்கமும், பின்பற்றும் பழக்கமும் உள்ளவர்கள். தங்களின் கலாச்சாரச் சீரழிவாகக் கருதப்பட்ட, கலைகளுக்கு தேவையற்றதைத் தவிர்க்க விட்டு, புதுப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போது பல பல்கலைக்கழகங்களில், பரதக்கலை சிங்கள மொழியூடாகப் பழகுகின்றார்கள்.

உண்மையில் இனரீதியான அவர்களின் எம்மீதான ஆக்கிரமிப்பு வெறுப்பளித்தாலும், கலைகளுக்கு உயிரூட்டமும், தாங்களின் தனித்துவத்தை பிறகலைகளையும் உள்வாங்கி, தமக்குரியதாக மாற்றுகின்ற பாங்கு பாராட்டத்தக்கது.

ஆனால் நம்மவர்கள், முந்தி அசிங்கமாக இருந்தது, எனவே, பழகுவதில்லை என்று எல்லாவற்றையும் துறந்து, தமிழனைச் சன்னியாசியாக்கப் பார்க்கின்றார்கள்.

Edited by தூயவன்

சித்திரைப் புத்தாண்டு தமிழ் புத்தாண்டு அல்ல" என்று கட்டுரையாளர் மிக அழகாகவும், ஆழமாகவும் விளக்கி இருக்கிறார். கட்டுரையாளர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு பாராட்டுக்கள்.

இப்பொழுது பிறக்க இருப்பது "சர்வஜித்" புத்தாண்டாம். இதற்கு முன் பிறந்தது "விஜ" புத்தாண்டாம். அதற்கு முன் பிறந்தது "பார்த்திப" ஆண்டாம். அதற்கு முன் "தராண" அதற்கு முன் "சுபானு".......

எப்பொழுது "தமிழ்" புத்தாண்டு பிறந்தது?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட, சித்திரை மாதம், 14ம் திகதி(தமிழுக்கு 1ம் திகதி) தான், சூரியன் உச்சிக்கு, அதுவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேராக வருகின்றது.

அப்படியா?

உச்சிக்கு வருவது பங்குனியிலும் புரட்டாசியிலும் என்றல்லவா அறிந்த ஞாபகமிருக்கிறது?

ஏற்கனவே வலைப்பதிவுகளிலும் மாலனின் திசைகள் இதழிலும் இதுபற்றிய வாதங்கள் நடந்திருக்கின்றன. சித்திரையை வருடப்பிறப்பாகக் கொள்ள அறிவியல் ரீதியில் எந்தக் காரணமும் இல்லையென்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. (தைப்பொங்கலுக்கும் இதுவே பொருந்தக்கூடும்.)

_____________________________

நிற்க, சிங்கள - தமிழ் சண்டையை பண்பாட்டு எதிரிகள் என்ற ரீதியில் அணுக முடியாது. வேறெவரையும்விட ஈழத்தமிழருக்கு பண்பாட்டு ரீதியில் நெருக்கமானவர்கள் சிங்களவர் என்றுதான் பலரும் சொல்கிறார்கள். தமிழகத்தாரும், தமக்கும் சிங்களவருக்கும் இருந்த மிகமிக நெருங்கிய உறவை - குறிப்பாக திருமண உறவுகளைக் குறிப்பிடுகிறார்கள்.

ஈழத்தமிழர் மீதான அடக்குமுறைக்கு புத்தமதம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதை விடுத்துப் பார்த்தால் ஈழத்தமிழருக்கும் புத்த மதத்துக்கும் இருந்த உறவு மிக நெருங்கியது. குறிப்பாக யாணப்பாணத்தவர்களுக்கும் புத்தத்துக்கு இருந்த உறவு அலாதியானது.

இதற்குரிய மிகவலுவான தொல்லியற்சான்றுகள் யாழ்ப்பாணத்துள்ளேயே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு காரணமும் இல்லாமல், வெறுமனே சித்திரைப் புத்தாண்டைத் தெரிவு செய்ய எம் முன்னோர்கள் முட்டாள் அல்ல என்பது தான் என் கருத்து. உங்களுக்கு எவ்வித காரணமும் தெரியாவில்லை என்பதற்காக, முன்னோர்களை முட்டாள்கள் என்று கதைக்க முடியாது.

நிற்க, விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவது அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது. இன்று கிறிஸ்தவர்கள் ஒளிவிழா என்று கொண்டாடுகின்றார்கள். அது உண்மையில் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ் பண்டிகை. தமிழர் பண்டிகை.

தைப்பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும். அது ஏன் கொண்டாடுகின்றார்கள், எப்போதிலிருந்து கொண்டாடுகின்றார்கள் என்பதற்கான காரணத்தை அறிய முடியாது. அதற்கான பதிவுகள் நம்மிடம் இம்மியளவும் கிடையாது.

1.சிலர் சொல்கின்றார்கள். ஆரியர் புகுத்தி விட்ட பண்டிகை தான் இது என்று. அப்படியாக இருப்பின், ஏன் ஆரியர் இருக்கின்ற மற்றய இடங்களில் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை?

2. இன்றைக்கு புலத்தில் நம்மவர்கள் வைக்கின்ற பெயர்களைப் பாருங்கள்.(சாத்திரியார் அவலத்தில் நக்கல் வேறு அடிக்கின்றார்) நம்மவர்களுக்குள் இப்போது, சகானா, அஸ்வின், சபேசன், அலேசியஸ், ஜெரிண்டன், ஷியான்,.................................... இதை எல்லாம் உங்களுக்கு ஆரியர்களா வைக்கச் சொல்லி ஊட்டினார்கள். நீங்களாகப் பிழை விட்டுக் கொண்டு, எதற்கெடுத்தாலும் ஆரியரைத் திட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் திருந்தப்பாருங்கள். இவ்வாறு தான், தமிழர் ஆண்டுகளும், பெயர் மாற்றத்தை ஏற்படுத்தியது நீங்களாகக் கூட இருக்கலாம்.

--------------------------------------------------

யாழ்பாணத்தமிழர்களுக்கும், சித்திரைப் புத்தாண்டு பற்றிய தலைப்போடு என்ன சம்பந்தம்? இங்கே, ஈழத்தமிழர் மட்டும் வருடப்பிறப்பு கொண்டாடியிருந்தால் மட்டும், சிங்களவர்களுக்கும் - ஈழத்தமிழர்களுக்குமுள்ள நெருக்கத்தைப் பற்றிக் கதைக்கலாம்.

சிங்களவர்களைப் பொறுத்தவரைக்கும், பாண்டியர்களுடன் தான் நெருக்கம் வைத்திருந்தார்கள். அப்படிப் பார்க்கப் போனால், ஒட்டுமொத்த தமிழ்மக்களிடம் எவ்வாறு வருடப்பிறப்பு பரவியது?

தமிழர்கள் தாரளமாக இந்த புத்தாண்டையும் கொண்டாடலாம்.

ஜனவரி1 அன்றும் புத்தாண்டு கொண்டாடினோம். தைத் திருநாளிலும் தமிழர் புத்தாண்டு கொண்டாடினோம்.

அப்படியே இந்த "சர்வஜித்" புத்தாண்டையும் கொண்டாடுவோம். இதில் தவறு ஒன்றும் இல்லை.

அனைவருக்கும் "சர்வஜித்" புத்தாண்டு வாழ்த்துக்கள்

கிருஸ்ணனும் நாரதரும் கலவி செய்து பிறந்த பிள்ளையாகிய சர்வஜித்திற்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • தொடங்கியவர்

ஆக்கம்: சபேசன்-மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா

தமிழ்ப்புத்தாண்டா. . .?

"..சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?... பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு முறை’ குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும்... அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?... தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்...‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.”

சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா? பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுள்ள தமிழினத்தின் புத்தாண்டு சித்திரை மாதத்தில் தான் வருகின்றதா? இந்த ஆண்டுப் பிறப்பு உண்மையில் தமிழர்களின் ஆண்டுப் பிறப்புத்தானா?

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சற்றே அடங்கியுள்ள இவ்வேளையில் வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக்கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.

இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள் பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூட தமிழ்ப் பெயர் இல்லை.

இந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப் பட்டது என்று கூறுவோரும் உண்டு.

பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்;பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்கவழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச்சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன் பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களை காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார்.

கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி அறுபது குமாரர்களை பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.” (அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)

தமிழனும் தன்னை மறந்ததால் ஆண்டு ‘வருடமாகி’ விட்டது. வடமொழியில் ‘வர்ஷா’ என்றால் பருவகாலம், மழைக்காலம் என்று அர்த்தம். உலகெல்லாம் வாழுகின்ற இனத்தவர்கள் தத்தமக்குரிய ஆண்டுப் பிறப்பில் தான் நற்பணிகளை தொடக்குகிறார்கள். ஆனால் இந்த சித்திரைப்; பிறப்பில் தமிழர்கள் திருமணம், தொழில் தொடக்கம் போன்ற எதையுமே செய்வதில்லை. என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு முறை’ குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும்.

தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். மழை, வெயில், குளிர், பனி, தென்றல,; வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் மனிதனை ஆண்டு வந்ததால் இக்காலச் சேர்வையை தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான், என்று திரு வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார்.

தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும்பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையை கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர். என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் அவர்களைத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக்; கணித்ததைச் சுருக்கமாக பார்ப்போம்.

தமிழர்கள் ஒரு ஆண்டை மட்டும் பகுத்ததோடு நின்று விடவில்லை. ஒரு நாளையும் ஆறு சிறுபொழுதாகப் பகுத்தார்கள். ‘வைகறை, காலை நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள். ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் என்று கணக்கிட்டுள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் கொண்டதாகும். ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக வகுத்தார்கள். தமிழர்களோ தமது ஆண்டை அந்த ஆண்டுக்குரிய வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்தார்கள்.

1. இளவேனில் - (தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி-சித்திரை)

3. கார் - (வைகாசி-ஆனி)

4. கூதிர் - (ஆடி-ஆவணி)

5. முன்பனி - (புரட்டாதி-ஐப்பசி)

6. பின்பனி - (கார்த்திகை-மார்கழி)

காலத்தை நாழிகையாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் வகுத்த பழம் தமிழன். தனது வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்குகின்றான். அதனால் இளவேனிற் காலத்தையே தனது புதிய ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டான். தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என பலகோடி இன மக்கள் இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றார்கள். இடையில் தமிழன் மட்டும் மாறிவிட்டான். தன்பெருமை மறந்தான். மற்றைய இனத்தவர்கள் மாறவில்லை. அதனால் தமக்கேயுரிய பண்பாட்டுடன் பெருமையாக வாழ்கின்றார்கள்.

அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?

தமிழனுக்கு ‘வருடம்’ ‘பிறப்பதில்லை.’

‘புத்தாண்டு ஆரம்பமாகின்றது.’

அந்தத் தினம் தான் எது?

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெருந் திருநாள் ஆகும்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்;’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது-போகியது-போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனை போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் குழுNமுயுசுயு - குழுNமுயுசுயு – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘ர்ழுNபுயு-ர்ழுNபுயு’ என்றே பாடுகிறார்கள்.

அன்புக்குரிய நேயர்களே! நேரம் கருதி சில விடயங்களை மட்டும் இங்கே உதாரணத்துக்கு காட்டினோம். தமிழனின் புத்தாண்டு தைப்பொங்கல் தினம்தான். ஆனால் தற்போதைய நிலைமை என்ன?

அன்யை தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்பு மிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது. அந்த மண் நமக்குரியதாக இன்று இல்லாததால் நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது.

இதற்கு ஓர் உதாரணமாக இந்தச் சித்திரை வருடப் பிறப்பை சுட்டிக் காட்டலாம்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவர்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும். என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய நேயர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டி தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாக சொல்லட்டும் தமிழனை வென்ற, ஆரியப் புது வருடப் பிறப்பு

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும,; ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும். சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள்.

http://www.tamilnation.org/forum/sabesan/050421sabesan.htm

  • தொடங்கியவர்

புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா

விரைவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புது வருடம் பிறக்கப் போகிறது. தமிழ் புத்தாண்டு என்பது காலம் காலமாகத் தமிழர்களால் சித்திரை மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பண்பாடுகளில் புது வருடம் கொண்டாடப்படும் முறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நோக்குவதன் மூலம் நாம் கொண்டாடும் புது வருடம் பற்றி இன்று சிறிது விளங்கிக் கொள்ளலாம்.

வருடப் பிறப்பென்றதும் இலங்கையில் போருக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு பல இனிய நினைவுகள் வரலாம். புதுவருடத்துக்குரிய சாதாரண அம்சங்களுடன் சில வேடிக்கை விளையாட்டுகளும் அந்தக் காலத்தில் இடம்பெற்றிருந்தன. போர்த் தேங்காய் உடைத்தல், வண்டிற் சவாரி போன்ற போட்டிகள் மிக அமர்க்களமாக நடைபெற்றன. அவற்றுடன் இணைந்த ஆராவாரமும் மகிழ்ச்சியும் கொஞ்சமல்ல. ஆனால் தமிழரது பிரச்சினைகள் ஆரம்பித்த பின்னர் இந்த போட்டிகள் ஒன்றொன்றாக நலிந்து மறைந்ததுடன் ஒவ்வொரு புதுவருடமும் தமிழருக்கு நீதி, உரிமையுடன் கூடிய சமாதானத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஆரம்பமாகி பின் அவை கிடைக்காமலேயே மடிந்து போனது. இப்படிப் பல வருடங்கள் பிறந்து பிறந்து விடிவின்றி முடிந்து போயின. ஆனால் முன்னரைப் போலன்றி இந்த வருடம் தமிழரது அபிலாஷைகள் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்ற மனப்பூர்வமான பிரார்த்தனையுடன் எமது கட்டுரையை ஆரம்பிப்போம்

தமிழ் புது வருடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பிறக்கவுள்ள வருடத்தின் பெயர் தாரண என்பதாகும். இது 60 வருடங்களில் 18ஆவது என்கிறது பஞ்சாங்கம். வருடங்களின் அறுபது பெயர்களும் மாறி மாறி சுழற்சியில் வருவன. அதாவது அறுபது வருடங்களின் பின் இந்த அறுபது பெயர்களும் அதே ஒழுங்கில் மீண்டும் வருவன. துரதிஷ்டவசமாக இவை தமிழ் பெயர்களல்ல. அனைத்தும் வடமொழிப் பெயர்களே. வழமை போல இப் பெயர்களுக்கும் ஒரு புராணக் கதையுண்டு. நாரதருக்கும் பெண் வடிவெடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த 60 பிள்ளைகளின் பெயர்களே இந்த வருடங்களின் பெயர்கள் என்று கூறப்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையில் இந்த வருடப் பெயர்களுக்கு எதுவித அர்த்தமும் கிடையாது.

பொதுவாக உலகத்திலுள்ள அனைவருக்கும் ஜனவரி முதலாம் தேதியே லெளகிக காரியங்களுக்கான புதுவருடம் ஆரம்பமாகிறது. அதனால் பொதுவாக பலரும் அந்த நாளைக் கொண்டாடும் முறை இருந்த போதும் ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனத் தனியாகப் புதுவருடக் கணிப்பு முறையையும் கொண்டாட்டங்களையும் கொண்டுள்ளது. ஜனவரி முதலாம் தேதி கொண்டாடப்படும் புதுவருடத்திற்கு சோதிட அல்லது விவசாய முக்கியத்துவம் கிடையாது. பல்வேறு இனங்கள் தத்தமக்குரிய முறைகளில் கொண்டாடும் புதுவருட கொண்டாட்டத்திற்கு ஏதோ ஒரு கருத்துண்டு.

புதுவருடம் கொண்டாடப்படுவதென்பது மிகப் மிகப் பழமையானது. சுமார் நாலாயிரம் வருடங்களின் முன்னர் அதாவது கிமு இரண்டாயிரம் ஆண்டளவில் பபிலோனியாவில் புதுவருடம் வசந்த கால முதல் அமாவாசையில் கொண்டாடப்பட்டது. வசந்த காலம் என்பது மறுமலர்ச்சிக்குரிய பருவம். புதிய பயிர்களை நடுதல், மரங்கள் மலர்தல் ஆகியன இப்பருவ காலத்திற்குரியன. பபிலோனிய புதுவருட கொண்டாட்டங்கள் 11 தினங்கள் நீடித்தன. ஒவ்வொரு நாள் கொண்டாட்டமும் தனக்கெனத் தனியான சிறப்புக் கொண்டமைந்தது.

ரோமர்கள் தொடர்ந்தும் மார்ச் மாத பிற்பகுதியில் புது வருடத்தைக் கொண்டாடி வந்தனர். ஆனால் அவர்களது நாட்காட்டிகள் தொடர்ந்து பல்வேறு உரோம சக்கரவர்த்திகளால் மாற்றப்பட்டு வந்ததால் அது சூரியனது போக்கை அடிப்படையாகக் கொண்டமையும் நிலை மாறியது. நாட்காட்டியை முறைப்படுத்தும் நோக்கத்துடன் கிமு 153ல் ரோம செனட் ஜனவரி முதலாம் தேதியை வருடப்பிறப்பாக பிரகடனப்படுத்தியது. ஆனாலும் கிமு 46ம் ஆண்டு ஜூலியன் கலெண்டர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நாட்காட்டியை ஜூலிய சீஸர் (Julius Caesar) உருவாக்கி நிலைநிறுத்தும் வரை மாற்றங்கள் தொடர்ந்தன. அது மீண்டும் ஜனவரி முதலாம் தேதியை வருடப் பிறப்பாகக் கொண்டது. ஆனால் அந்த நாளை சூரியனின் போக்குடன் தொடர்புபடுத்துவதற்காக அதற்கு முந்திய வருடத்தை அந்த அரசன் 445 நாட்கள் வரை நீடிக்கவேண்டி நேர்ந்தது. கிபி முதல் நூற்றாண்டு வரை ரோமர்கள் தொடர்ந்து புதுவருடத்தைக் கொண்டாடி வந்த போதும் ஆரம்ப கத்தோலிக்க பிரிவினர் அந்த கொண்டாட்டங்களை பண்டைய சமயத்திற்குரியன என்று கண்டித்தன. ஆயினும் கிறீத்தவம் நன்கு பரவ ஆரம்பித்ததும் பண்டைய சமயத்துக்குரிய கொண்டாட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் இணைத்து தனக்கென சமயக் கொண்டாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டது. மத்திய காலம் வரை ஜனவரி முதலாம் தேதி புதுவருடம் கொண்டாடுவதை கிறீஸ்தவம் எதிர்த்தே வந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளாகவே மேற்கத்தைய நாடுகள் இந்த நாளை புதுவருட விடுமுறையாக ஏற்றுள்ளன.

பபிலோனியரும் தற்போதுள்ளது போல புதுவருட தீர்மானங்களை எடுத்தனர். அவர்களது முக்கியமான தீர்மானம் கடன் வாங்கிய விவசாய கருவியைத் திருப்பிக் கொடுப்பதே. ரோமர்கள் புதுவருடக் கொண்டாட்டத்தின் போது நடத்திய தேர்ப் போட்டிகள் போல 1916ல் கால்பந்து விளையாட்டு புதுவருட முக்கிய விளையாட்டாகியது. புதுவருடத்தைக் குறிக்க ஒரு குழந்தையை உபயோகிக்கும் மரபு கிமு 600இல் கிரேக்க நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வதன் மூலம் திராட்சை ரசத்தின் கடவுளான Dionysus ஐக் கொண்டாடும் ஒரு மரபைக் கொண்டிருந்தனர். அது வளத் தெய்வமாக அக் கடவுள் மறுபிறப்பெடுப்பதை உருவகமாகக் குறித்தது. புது வருடத்தின் மறுபிறப்பை உருவகமாக குறிக்க எகிப்தியர்கள் குழந்தையைப் பயன்படுத்தினர். கிறீத்தவர்கள் முதலில் இந்த மரபை எடுக்க விரும்பாத போதும் குழந்தை யேசுவைக் குறிக்கும் வகையில் புதுவருடத்தில் ஒரு குழந்தையைப் பயன்படுத்த பின்னர் ஒப்புக்கொண்டனர். 14ம் நூற்றாண்டு தொடக்கம் புதுவருடத்தை குழந்தை உருவகமாகக் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வந்த ஜேர்மானியர் அதைப் பின்னர் அமெரிக்காவில் பரப்பினர்.

வருடம் பிறந்ததும் உண்ணும் முதல் உணவு முழுவருடமும் அதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற மரபு பல்வேறு பண்பாடுகளில் காணப்படுகிறது. சில பண்பாடுகளில் மோதிர வடிவில் அதாவது வட்ட வடிவில் அமைந்த உணவு அதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வட்டம் என்பது வருடத்தின் முழு வட்டத்தை குறிக்கிறது. இதனாலேயே புது வருடத்தில் வட்ட வடிவில் அமைந்த donuts ஐ உண்பதால் வருடம் முழுவதும் தமக்கு அதிஷ்டம் வரும் என்று டச்சுக்காரர் நம்புகின்றனர்.

பண்டைய நாட்களில் மக்கள் அறுவடையுடன் தமது புதுவருடத்தைக் கொண்டாடினர். பழையதை மறந்து புதுவருடத்திற்கு தம்மை தூய்மையாக்கும் வகையில் கிரியைகளைச் செய்தனர். உதாரணமாகத் தாம் உபயோகித்து வந்த பழைய நெருப்பை அணைத்துவிட்டு புதுவருடத்தில் புதிதாகத் தீ வளர்த்தனர். பண்டைய ரோமர்கள் வசந்த காலத்தில் புதிதாகத் துளிர்க்கப் பெற்ற புனித மரங்களின் கிளைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கினர். பின் இது பொன் முலாம் பூசப்பட்ட கொட்டைகள் அல்லது ஜானுஸின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கொடுத்து வாங்குவதாக மாறியது. ஜானுஸ் என்பது வாசல், கதவுகள், ஆரம்பம் ஆகியவற்றின் தெய்வமாகும். அதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று முற்பக்கத்தை பார்ப்பது மற்றது பிற்பக்கத்தை நோக்குவது. ஜனவரி மாதம் இத் தெய்வத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே உருவாகியது. ரோமர்கள் தமது சக்கரவர்த்திகளுக்கு புதுவருட பரிசுகள் வழங்கினர். பின்னர் அவர்கள் மக்கள் தமக்கு கட்டாயம் பரிசுகள் தரவேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பிக்கவே கிபி 567ல் கிறீத்தவ தேவாலயம் இந்த முறையையும் ஏனைய பண்டைய முறைகளையும் ஒழித்தது. ஆயினும் 1200 அளவில் இங்கிலாந்தில் ஆங்கில அரசர்கள் மக்களிடம் புதுவருட பரிசுகளை வற்புறுத்திக் கேட்டனர். சாதாரணமாக பரிசுகள் பொன் அல்லது நகையாக அமைந்தன. முதலாம் எலிஸபெத் அரசி அழகான பூவேலைப்பாடு செய்யப்பட்ட அல்லது பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கையுறைகளைப் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் மத்தியிலும் புதுவருட பரிசுகள் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் காணப்பட்டது. கணவன்மார் தத்தமது மனைவியருக்கு ஊசி போன்ற பொருட்களை வாங்க பணம் கொடுத்தனர். அந்த முறை பின்னர் மறைந்தாலும் pin money என்ற சொல்வழக்கு இன்றும் குறைவாகச் செலவழிப்பதற்கு வழங்கப்படும் அற்ப தொகையைக் குறிக்கிறது. பண்டைய பேர்ஷியர் முட்டைகளை உற்பத்தியின் அடையாளமாக புதுவருடத்தில் பரிசளித்தனர்.

சீனருக்கும் தமிழருக்கு உள்ளது போல 60 வருட சுழற்சி முறை உண்டு. ஆயினும் 12 வருடங்களுக்கு ஒரு தடவை அவை குறிப்பிடும் மிருகங்கள் மீண்டும் வரும். zi (எலி), chou (எருது), yin (புலி), mao (முயல்), chen (dragon), si (பாம்பு), wu (குதிரை), wei (ஆடு), shen (குரங்கு), you (கோழி), xu (நாய்), hai (பன்றி). அந்தந்த வருடத்தில் வரும் மிருகத்திற்கு ஏற்ப வருட பலன் கூறுவார்கள். சீனருக்கு இப்போது குரங்கு வருடம் பிறந்திருக்கின்றதை நீங்கள் செய்திகளில் கேட்டிருப்பீர்கள். தற்போதைய 60 வருட சுழற்சி 1984 February 2ம் தேதி ஆரம்பமாகியது. இதன் ஆரம்பத்திற்கு கிறீஸ்து பிறப்பு போல வரலாற்று நிகழ்வு என்று எதுவும் கிடையாது. ஆயினும் வரலாற்று பதிவுகளில் அரசாண்ட அரச குலங்களின் ஆட்சியின் படி வருடங்களை எண்ணும் முறை ஒன்று காணப்படுகிறது. சீன புதுவருடம் குளிர் பருவம் முடிந்த பின்னர் வரும் இரண்டாவது அமாவாசையில் வருவதாகும். அது பொதுவாக ஜனவரி நடுப் பகுதிக்கும் பெப்பிரவரி நடுப்பகுதிக்கும் இடையில் ஆரம்பித்து 15 நாட்கள் நீடிப்பதாகும். புது வருடம் நெருங்க சீன மக்கள் புது வருடத்தில் தூரதிஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக தமது வீடுகளைத் துப்பரவு செய்ய ஆரம்பிப்பார்கள். புதுவருடத்திற்கு முந்திய நாள் குடும்பங்கள் ஒன்று கூடி விருந்துண்பதுடன் இரவு நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். இவ்வாறு விழித்திருப்பது தமது முதியவரின் வாழ்நானை நீடிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. கெட்ட ஆவிகள் புதுவருட காலத்தில் உலவுவதாக நம்புவதால் சீனவெடிகள் கொழுத்தி அவைகளை விரட்டுகிறார்கள். அத்துடன் இந்த தீய ஆவிகள் வராதிருக்க தமது வீட்டுக் கதவுகள் யன்னல்களை நன்கு இடைவெளியின்றி காகிதத்தால் ஒட்டுகிறார்கள். புதுவருடத்தன்று தம்மிடமுள்ள சிறந்த ஆடைகளை அணிந்து தம்முள் ஒருவருக்கொருவர் சிறு பரிசுகளைப் பரிமாறிக் கொள்வார்கள். உலகம் முழுவதிலுமுள்ள சீனர்கள் முதலாவது பூரணைக்கு Festival of Lanterns என்றழைக்கப்படும் ஒளி விழாவன்று வண்ண ஊர்வலங்கள் நடத்துவார்கள். மிக பிரமாண்டமாகச் செய்யப்பட்ட dragon இன் பின்னால் lanterns ஐ ஏந்திய வண்ணம் மக்கள் ஊர்வலமாகச் செல்வார்கள். புது வருடத்திற்கான வழியை இவ்விளக்குகள் ஒளியூட்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

கொறியாவில் சந்திர வருடத்தின் முதல் நாள் சொல்-நல் என்றழைக்கப்படுகிறது. இது குடும்பங்கள் தமது உறவுகளைப் புதுப்பிப்பதற்கும் புதுவருடத்திற்கு ஆயத்தம் செய்வதற்குமுரிய நாளாகும். புதுவருடம் பிறக்கும் வரை கெட்ட சக்திகள் உட்புகாதவாறு மக்கள் தமது வாசல் கதவுகளையும் சுவர்களையும் வைக்கோல் போன்றவற்றால் மூடிப் பாதுகாப்பார்கள். மறுநாள் புதிய ஆரம்பத்தைக் குறிக்கும் முகமாக புத்தாடை அணிந்து குடும்பத்தில் மூத்த ஆணின் வீட்டில் குழுமுவார்கள். இறந்த முன்னோரை நினைவு கூடும் கிரியைகளை நடத்திய பின்னர் குடும்பத்திலுள்ள இளையவர்கள் முதியவர்களை வணங்குவார்கள். முதியவர்கள் பதிலுக்கு புதுவருடத்தில் நல்லாரோக்கியமும் செழிப்பும் அவர்களுக்கு ஏற்படவேண்டும் என்று வாழ்த்தி பணம் அல்லது பரிசு வழங்குவார்கள். பின்னர் அனைவரும் அரிசியால் தயாரிக்கப்பட்ட ஒருவித கூழை அருந்துவார்கள். இக்கூழை அருந்துவதன் மூலம் இன்னொரு வருடம் அதிகம் வாழலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். அனைவரது வயதும் புதுவருடப் பிறப்பிலிருந்தே கணிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொருவரது வயதும் புதுவருடத்திலிருந்து ஒரு வருடம் அதிகரிக்கிறது.

ஜப்பானியரது புதுவருடமாகிய ஒஷொகற்ஸு (Oshogatsu) ஜனவரி மாதம் முதலாம் தேதி கொண்டாடப்படுகிறது. அது மேற்கு நாட்டு புதுவருட நாளில் இடம் பெற்ற போதும் அவர்களது ஷின்ரோ மத நம்பிக்கைகளுக்கு ஏற்பவே கொண்டாடப்படுகின்றது. சில கிராமப்புறங்களில் பண்டைய முறைப்படி ஜனவரி 20ம் தேதி தொடக்கம் மாசி 19ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வேறுபட்ட நாட்களில் வசந்தத்தை வரவேற்கும் மரபைத் தொடரும் வகையில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சிக்கும் நல்லதிஷ்டத்திற்குமாக தமது வீடுகளின் முன் அவர்கள் வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு கயிற்றைத் தொங்க விடுகின்றனர். அது தீய சக்திகளையும் அகற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. சடங்கு ரீதியாக வீட்டைத் துப்பரவு செய்தல், விசேட உணவருந்துதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பன புதுவருடத்தின் போது அனுஷ்டிக்கப்படுகின்றன. புதுவருடம் பிறந்ததும் ஜப்பானியர் சிரிக்க ஆரம்பிப்பர். அது வருடம் முழுவதும் நல்லதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

தாய்லாந்தில் ஏப்பிரல் மாதம் 13ம் தேதி தொடக்கம் 15ம் தேதி வரை சொங்கிறன் (Songkran) என்று அழைக்கப்படும் புத்தாண்டு மூன்று தினங்களுக்கு கொண்டாடப்படுகிறது. அப்போது சகல புத்த சிலைகளும் வடிவங்களும் கழுவித் துப்பரவு செய்யப்படுகின்றன. ஒருவர் மேல் ஒருவர் நீர் தெளிப்பதால் வருடம் முழுவதும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் அவர்களிடையே உண்டு. பர்ணசாலைக்குச் சென்று வணங்குவதுடன் பிக்குகளுக்கு அரிசி, பழம், மற்றும் வேறு இனிப்புகளையும் வழங்குவார்கள். மீன்களை உயிருடன் மீண்டும் கடலில் வீடுவதும் பறவைகளை கூடுகளிலிருந்து சுதந்திரமாகப் பறக்கவிடுவதும் நல்லதிஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

ஜனவரி 21 ம் தேதி தொடக்கம் பெப்ருவரி 19ம் தேதிக்கிடையில் வருடம்தோறும் மாறி மாறி வரும் வியற்நாமிய புதுவருடம் அவர்களது பல நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது. புது வருடத்தில் வீட்டிற்குள் நுழையும் முதல் மனிதன் அதிஷ்டத்தையோ துரதிஷ்டத்தையோ கொண்டு வரலாம் என்பது வியற்நாமியர்களது பொதுவான நம்பிக்கை. அத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் குடியிருக்கிறார் அவர் புத்தாண்டு தினத்தில் மேலுலகத்திற்கு பயணமாகிறார் என்பதும் அவர்களது நம்பிக்கை. அத்துடன் மேலுலகத்தில் கடவுள் கடந்த வருடத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்துவார் என்றும் நம்புகிறார்கள். எனவே புதுவருடம் என்பது கடந்த காலத்தின் குறை நிறைகளை ஆராய்ந்து எதிர்காலத்தை நிறைவுடன் அமைப்பதாகும். கடவுள் கயல் மீனின் மேலேறி மேலுலகத்திற்குச் செல்வதாக அவர்கள் நம்புவதால் புத்தாண்டன்று ஒரு உயிருள்ள கயல் மீனை வாங்கி அதனை உயிருடன் கடலில் மீண்டும் விடுவார்கள்.

கம்போடிய மக்கள் தமது புதுவருட ஆரம்பத்தை இந்திய பஞ்சாங்கத்தின் படியே கணித்து ஏப்பிரல் மாதம் 12 தொடக்கம் 14ம் தேதி வரை 3 நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். வீடுகளை நன்கு துப்பரவு செய்து அன்று வீடுகளுக்கு வருவதாக நம்பப்படும் புதுவருட தெய்வத்தை வரவேற்பதற்கேற்ப அவற்றை நன்கு அலங்கரிப்பர். புத்தரின் சிலையொன்றை வைத்து பூ, மெழுகுதிரி, சந்தனக்குச்சி, ஒரு பாத்திரத்தில் வாசனையூட்டப்பட்ட நீர், உணவு, பானம், வாழையிலையில் வெட்டப்பட்ட பல வடிவங்கள் ஆகியவற்றை தமது வீட்டின் வழிபாட்டிடத்தில் வைப்பார்கள். முதல் நாள் பர்ணசாலைக்குச் சென்று பிக்குகளுக்கு உணவளிப்பார்கள். அன்று பர்ணசாலையில் மணல்மேடை அமைக்கப்பட்டு ஐந்துவித கொடிகள் அதில் செருகப்படும். அங்கு மூன்று நாட்களும் கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுகள் இடம்பெறும். இரண்டாம் நாள் உறவினர்கள் ஒன்று கூடி விருந்துண்டு பரிசுகள் பரிமாறிக் கொள்வதுடன் பர்ணசாலைக்குச் சென்று தமது முன்னோருக்காக பிரார்த்தனைகள் நடத்துவார்கள். மூன்றாம் நாள் மழை வளம் வேண்டி வீடுகளிலும் பர்ணசாலைகளிலும் உள்ள புத்த சிலைகளை நீரால் தூய்மைப்படுத்துவார்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு மரியாதை செலுத்துமுகமாக அவர்களது பாதங்களைக் கழுவுவார்கள்.

ஜூதர்களுடைய ரொஷ் ஹுஷனா (Rosh Hashanah) எனப்படும் புதுவருடம் செப்ரெம்பர் ஒக்ரோபர் மாதங்களில் அதாவது ஜூதர்களின் பஞ்சாங்கத்தின் படி ஏழாவது மாதத்தில் வருகிறது. அவர்களது கொண்டாட்டங்கள் முதல்நாள் மாலை சூரியன் மறைவதுடன் ஆரம்பமாகும். வழிபாட்டிடங்களில் சமய ஆராதனைகள் நடைபெறும். அப்போது ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட வாத்தியமொன்று மரபுரீதியாக இசைக்கப்படும். பிள்ளைகளுக்கு புத்தாடை வழங்குவதும் அப்போது நிகழும். அறுவடையை நினைவு கூரும் முகமாக கோதுமைப் பண்டங்களும் பழங்களும் உண்ணப்படும். அத்துடன் கடந்த வருடத்தில் செய்த தவறுகளை நினைத்து எதிர்காலத்தில் அவற்றைச் செய்யாது வாழ்க்கையை நல்லமுறையில் அமைக்க புதுவருட நாளில் எண்ணுவார்கள்.

ஈரானில் இயற்கையின் மறு மலர்ச்சிக்கு அமைவாக எப்போதும் வசந்த கால தொடக்கமே வருடத் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதனால் மார்ச் மாதத்தில் அவர்கள் Noruz என்ற புதுவருடத்தைக் கொண்டாடுவார்கள். புதுப்பித்தலைக் குறிக்கும் வண்ணம் வீட்டை புது முறையில் ஒழுங்கு செய்து, புத்தாடைகள் தைத்து, புதுவருடம் நெருங்க கோதுமை அல்லது பார்லியை சிறு பாத்திரத்திலிட்டு நீர் தெளித்து வைப்பார்கள். புதுவருடத்தன்று, முளைத்த தானியங்கள் வசந்தத்தின் வரவையும் செழுமை நிறைந்த புதுவருடத்தையும் நினைவு படுத்தும். புதுவருட கொண்டாட்டத்திற்கு The Book of Kings என்ற ஈரானிய இதிகாசத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. Jamshid என்ற அரசன் அசுரர்களை வென்று அவர்களது பொக்கிஷத்தை கவர்ந்து கொண்டான். மேலுலகையும் வெல்ல எண்ணி தான் வென்ற பொன் வைரம் போன்றவற்றைக் கொண்டு தனது சிம்மாசனத்தை அமைத்து அதில் அமர்ந்து அசுரர்களை அதை விண்ணுக்கு தூக்கி உயர்த்தும்படி கட்டளையிட்டான். அவ்வாறு உயர்த்திய போது சூரிய ஒளி பட்டு வைரங்களும் ரத்தினங்களும் விண் முழுவதையும் வர்ண மயமாக்கின. அந்த நாளே புதுவருடமாகக் கொண்டாடப்படுவதாக ஈரானியர் நம்புகின்றனர்.

பகாய் மக்களது நாட்காட்டி 19 நாட்கள் உள்ள 19 மாதங்களைக் கொண்டது. ஆயினும் அவர்கள் வசந்த காலத்தின் வருகையின் போதே புதுவருடம் கொண்டாடுகிறார்கள். எகிப்தில் புதுவருடம் எப்போது வருகிறது என்று தெரிந்தாலும் பிறையைக் கண்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே அது கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளியின் போது புதுவருடம் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள இந்துக்கள் வசந்த காலத்தின் வருகையுடன் தமது புது வருடத்தை அமைத்துள்ளனர். கேரளத்தில் ஏப்பிரல் 14ம் தேதி சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளில் விஷு எனப்படும் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. விடியலில் கோயிலுக்குச் சென்று விஷுகணி எனப்படும் மங்கள காட்சியை காண்பதுடன் அவர்களது கொண்டாட்டம் ஆரம்பிக்கின்றது. பின்னர் விஷு கைநீதம் எனப்படும் கிரியையில் வறியவர்களுக்கு நாணயங்கள் வழங்குவார்கள். மக்கள் புத்தாடை அணிந்து குடும்ப அங்கத்தவர்களுடனும் நண்பர்களுடனும் விருந்துண்பார்கள்.

ஆந்தரபிரதேசத்தில் உகடி என்றழைக்கப்படும் புதுவருட கொண்டாட்டம் ஏப்பிரல் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகளை துப்பரவு செய்தல், புத்தாடை தரித்தல், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கஸ்ரவணம் எனப்படும் புதுவருட பஞ்சாங்கத்தின் விளக்கங்களைக் கேட்டல் ஆகியன அவர்களது முக்கிய கொண்டாட்டங்களாக அமைகின்றன. அதே நாளில் பெங்காலியர், அஸாமியர், சீக்கியர் ஆகியோரும் தத்தமது புது வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றனர். அதே நேரம் கஷ்மீரியர் மார்ச் 10ம் தேதியும் நேபாளியர் மார்ச் 21ம் தேதியும் புது வருடத்தை ஆரம்பிக்கின்றனர்.

பெளத்த கலண்டரும் இந்துக்களுடையதைப் போன்றதே. ஆயினும் பெளத்தம் பல இடங்களில் பரவியுள்ளதால் அந்தந்த இடத்திற்குத் தக அவர்கள் தமது புது வருடத்தைக் கணித்துக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். இலங்கையில் உள்ள தேரவாத பெளத்தர் ஏப்பிரல் 14ம் தேதி வருடப்பிறப்பைக் கொண்டாடுவதை நாமறிவோம்.

சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே எமது புதுவருடம் கணிக்கப்படுகிறது. பூமி சூரியனை வலம் வரும் ஒரு வருடத்தில் சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக இரண்டு தடவைகள் வருகிறது. ஒன்று பங்குனி சித்திரைக் காலத்தில், மற்றது புரட்டாசி ஐப்பசிக் காலத்தில். இரண்டாவது காலகட்டம் மழை காலத்தின் ஆரம்பமாகையால் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் சித்திரையைத் தமது புத்தாண்டாகக் கொண்டுள்ளனர். இக்காலத்தில் குளிர் நீங்கி சூரியனது கதிர்கள் நேராக பூமியில் படிய ஆரம்பிக்கின்றன. அத்துடன் வஸந்தகாலமும் அதன் காரணமாக தாவர உலகில் புது உயிர்ப்பும் ஏற்படுகின்றத். அதாவது இலைகளை உதிர்த்து நின்ற தாவரங்கள் புது துளிர் வந்து மலர ஆரம்பிக்கின்றன. இது ஒரு புது ஆரம்பமாகக் கொள்ளப்பட்டது. மனிதரும் இக்காலத்தில் புதுக்கால கட்டத்தில் நுழைவதாகக் கருதியதால் புது வருடம் அப்போது ஆரம்பிப்பதாகக் கொண்டனர். அத்துடன் அக்கால கட்டத்தில் பகலும் இரவும் சமமாக வரும் இக்காலமே விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது.

மேற்குலக சோதிடப்படியும், இந்திய சோதிட முறையிலும் இப்பிரபஞ்சம் ஒரு மனிதனாகக் கருதப்படுகிறது. அதன்படி ராசி மண்டலம் புருஷனின் உடல் அம்சங்களாகக் கொள்ளப்படுகிறது. முதலாவது ராசியான மேஷம் அவனது தலையாகவும் கடைசி ராசியான மீனம் அவனது பாதங்களாகவும் சொல்லப்படுகிறது. இடையில் உள்ள ஏனைய ராசிகள் அவனது ஏனைய அங்கங்களாக உள்ளன. இதன்படி தலையான மேட ராசியில் காலத்தைக் கணிக்க ஆதாரமாகவுள்ள சூரியன் வரும் காலத்தில் வருடம் பிறப்பதாக நமது முன்னோர் கணித்திருக்கலாம்.

தமிழ் இந்துப் புதுவருடக் கொண்டாட்டங்களில் வீடுகளைத் தூய்மைப்படுத்துதலும், ஆலய வழிபாடும், விசேட உணவும் முதலில் வீட்டுப் பெரியவரிடமிருந்து நல்ல நேரத்தில் பணம் பெறுதலும் அதாவது கை விசேஷமும், நல்ல நாளில் உறவினர் வீடுகளுக்குச் செல்லுதலும் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இலங்கையில் புதுவருடத்தை ஒட்டி பல விளையாட்டுகள் நடைபெறுவதும் வழக்கம். இலங்கைப் பெளத்தர்கள் மத்தியில் மிக அதிகமான விளையாட்டுகள் காணப்படுவதை நாம் அறிவோம்.

உலகின் ஒவ்வொரு பகுதியும் வேறுபட்ட கணிப்பு முறைகளைப் பயன்படுத்துவதாலேயே புதுவருடம் வேறுபட்ட தினங்களில் கொண்டாடப்படுகிறது. ஒன்றில் சூரியனது அல்லது சந்திரனது அல்லது இரண்டினதும் போக்கைக் கருத்தில் கொண்டு காலம் கணிக்கப்படுகிறது. ஆனாலும் புதுவருட மரபுகள் பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடுகின்றன. பபிலோனியாவில் ஏறக்குறைய நாலாயிரம் வருடங்களின் முன்னர் கொண்டாடப்பட்ட புதுவருடம் வசந்தத்தின் வருகையையும் அப்போது நடப்படும் பயிர்களையும் அதனால் புது நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக நம்பப்பட்டது. அது இன்று வரை மாறவில்லை.

நாம் இதுவரை புதுவருடத்தின் வரவையொட்டி உலகெங்கும் கொண்டாடப்படும் சமய, சமூக விழாக்கள் பற்றிப் பார்த்தோம். அத்துடன் மிகப் பெரும்பான்மையான பண்பாடுகளில் புதுவருடம் வஸந்த காலத்தில் பிறப்பதாகக் கொள்ளப்படும் மரபையும் கவனித்தோம். குளிரில் உறைந்து கிடந்த இயற்கை வஸந்த காலத்தில் புதுமலர்ச்சி பெறுவதைக் கவனித்த மனிதன் தனக்கும் அக் காலத்தில் ஒருவித மீளமைப்பு இடம் பெறுவதாகக் நினைத்து அக்காலத்தில் புதுவருடம் பிறப்பதாகக் கொண்டான். அதாவது ஒரு சுழற்சியின் ஆரம்பமாக அதனைக் கருதினான். பிறப்பு வளர்தல் இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியில் பிறப்பான வஸந்த காலத்தை மனிதன் வருடத்தின் தொடக்கமாகக் கொண்டதில் நியாயமுண்டு.

ஒரு வருடத்தின் ஓட்டத்தில் களைப்படைந்த மனிதர்களுக்கு உள்ளத்தைப் புதுப்பித்தல் அவசியமானது. அதனையே புதுவருடக் கொண்டாட்டங்கள் செய்கின்றன. தன்னடக்கத்தை ஊக்குவித்தல், வினைகளைத் தூய்மைப்படுத்துதல், உயிர்ப்பூட்டுதல், வாழ்வின் புதுப்பித்தலையிட்டு மகிழ்ச்சி கொள்ளுதல், ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிரியைகளையும் சடங்குகளையும் இப்புதுவருட விழாக்கள் உள்ளடக்கியுள்ளன. சமய சமூக கலை ரீதியாகவும் இம்மீளப் புதுப்பித்தல் நடைபெறுகிறது. இவ்வாறு மீளப் புதுப்பித்தலே புதுவருடக் கொண்டாட்டங்களின் சாராம்சமாகும். அத்துடன் இக்கொண்டாட்டங்களின் மூலம் சமூகத்தை ஒன்றுபடுத்தி உறுதிப்படுத்துவதும், தோல்விகளாலும் கஷ்டங்களாலும் நலிந்தவர்களுக்கு வாழ்வில் புது நம்பிக்கை ஏற்படுத்துவதும் புதுவருடத்தின் முக்கியமான குறிக்கோள்களாகும்

புலம் பெயர்ந்த நாடுகளில், சிறப்பாக அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் உள்ள நாம் இதனை இலங்கையில் கொண்டாடப்படும் அதே தினத்தில் கொண்டாடுவதில் ஏதும் அர்த்தம் இருக்கிறதோ தெரியவில்லை. இலங்கையில் வசந்த கால ஆரம்பத்தில் கொண்டாடப்படும் இதனை இங்கு இலையுதிர் காலத்தில் கொண்டாடுவதில் அர்த்தம் ஏதும் உண்டா ? இந்தக் கேள்வியுடன் உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

***

http://www.thinnai.com/?module=displaystor...mp;format=print

தமிழ் புத்தாண்டால் மூத்த பிள்ளைகளுக்கு ( ஆண்) ஆபத்து கோயில் முன் பரிகாரம்

புத்தாண்டு சனிகிழமை பிறப்பதனால் மூத்த ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என்று இந்தியாவின் புதுசேரியில் வதந்தி பரவியதால் நேற்று நள்ளிரவு தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தனர். மூத்த ஆண் பிள்ளையை கோயிலுக்கு அழைத்து சென்று அவர்க்ளை கோயில் முன் நிற்க வைத்து தேங்காயில் கற்பூரம் வைத்து திருஸ்டி சுத்தி , உச்சி முதல் உள்ளங்கால் வரை மூன்று முறை சுற்றி தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தனர்.

தகவல்- தினமலர்

பி.கு- யாழ்கள நண்பர்களே நீங்கள் யாராவது மூத்த ஆண் பிள்ளையாக இருந்தால் உடனடியாக பரிகாரம் செய்யுங்கள்.

தமிழ் புத்தாண்டால் மூத்த பிள்ளைகளுக்கு ( ஆண்) ஆபத்து கோயில் முன் பரிகாரம்

புத்தாண்டு சனிகிழமை பிறப்பதனால் மூத்த ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என்று இந்தியாவின் புதுசேரியில் வதந்தி பரவியதால் நேற்று நள்ளிரவு தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தனர். மூத்த ஆண் பிள்ளையை கோயிலுக்கு அழைத்து சென்று அவர்க்ளை கோயில் முன் நிற்க வைத்து தேங்காயில் கற்பூரம் வைத்து திருஸ்டி சுத்தி , உச்சி முதல் உள்ளங்கால் வரை மூன்று முறை சுற்றி தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தனர்.

தகவல்- தினமலர்

பி.கு- யாழ்கள நண்பர்களே நீங்கள் யாராவது மூத்த ஆண் பிள்ளையாக இருந்தால் உடனடியாக பரிகாரம் செய்யுங்கள்.

யாழ்கள மூத்த உறுப்பின்பர்களும் அப்ப இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்,எங்கே அந்த மூத உறுப்பினர்கள்

:mellow::blink:

  • தொடங்கியவர்

தமிழ் புத்தாண்டால் மூத்த பிள்ளைகளுக்கு ( ஆண்) ஆபத்து கோயில் முன் பரிகாரம்

புத்தாண்டு சனிகிழமை பிறப்பதனால் மூத்த ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என்று இந்தியாவின் புதுசேரியில் வதந்தி பரவியதால் நேற்று நள்ளிரவு தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தனர். மூத்த ஆண் பிள்ளையை கோயிலுக்கு அழைத்து சென்று அவர்க்ளை கோயில் முன் நிற்க வைத்து தேங்காயில் கற்பூரம் வைத்து திருஸ்டி சுத்தி , உச்சி முதல் உள்ளங்கால் வரை மூன்று முறை சுற்றி தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தனர்.

தகவல்- தினமலர்

பி.கு- யாழ்கள நண்பர்களே நீங்கள் யாராவது மூத்த ஆண் பிள்ளையாக இருந்தால் உடனடியாக பரிகாரம் செய்யுங்கள்.

ஐயய்யோ என்க்காக யாரச்சும் போய் பரிகாரம் பண்ணி விடுங்க :mellow:

ஐயய்யோ என்க்காக யாரச்சும் போய் பரிகாரம் பண்ணி விடுங்க :blink:

உமக்காக புத்து பண்ணுவார்

:mellow:

  • தொடங்கியவர்

தூயவன் எங்கே போய்விட்டார், தைதான் முதல் மாதம் என்று நான் 2 கட்டுரை ஆதாரத்துடன் இணைத்துள்ளேன், எங்கே உமது பதில் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடையத்தில் சிலர் குழப்பமடைந்திருக்கலாம் ஆனாலும் தீவிரமான தேடல் தெளிவான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும்.

-தற்போது நான் சில வினாக்களை விவாதத்துக்காக முன்வைக்கிறேன்.

-இந்துக்களுக்கு எது புத்தாண்டு?

-அப்படி ஒன்றில்லையாயின் ஏன்?

-உலகெங்கிலும் வாழும் இந்துக்களெல்லோரும் கொண்டாடும் பொது நிகழ்வுகள் எவை?

-புலம்பெயர்ந்த சூழலில் வாழும் நாம் பல்லின பல மதப்பிரிவுகளுடன் சேர்ந்தே வாழுகிறோம் இதனால் நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க முடியாதல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.