Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஒரு ஜனநாயக விரோதி: சம்பந்தன் சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

opposition-leader-R.Sampanthan-2-720x450.jpg

மஹிந்த ஒரு ஜனநாயக விரோதி: சம்பந்தன் சாடல்

மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் ஜனநாயக விரோதியாக கருதப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சாடியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ”கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதிலிருந்தே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஜனநாயக கடமையை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவருக்கு வழங்கப்பட்ட பதவி மீதும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்றத்தில் இன்றுடன் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் மாத்திரமின்றி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பதவி விலக வேண்டும். அவர்களுக்கு அப்பதவிகளில் நீடிக்க இனியும் உரிமை இல்லை. அவர்கள் பதவி விலகாவிடின் ஜனநாயக விரோதிகளாக கருதப்படுவர்” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/மஹிந்த-ஒரு-ஜனநாயக-விரோதி/

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி தலைவர் பதவியை சனநாயக விரோதமாக தக்க வைச்சிருக்கும் தாங்கள்.. சொந்த இனத்தைப் படுகொலை செய்ய உதவி நின்ற.. மைத்திரியை நல்லாட்சியின் பிதாமகன் என்று புலம்பித் திரிந்த தாங்கள்.. சொந்த மக்களின் விருப்புக்கு எதிராக சொறீலங்கா சிங்கள சுதந்திர தினம்.. தமிழர் இனப்படுகொலை வெற்றிக் கொண்டாட்டங்களில் குந்தி இருந்து கொட்டாவி விட்ட தாங்கள்.... தமிழர் நிலத்தில்... சொந்த இனத்துக்காக வீழ்ந்தவர்களை நினைவு கூற முடியாமல்.. சிங்கள .. ஹிந்திய எஜமானர்களிடம்.. நல்ல பெயர் வாங்க விலகி நின்ற தங்களின் தமிழ் மக்கள் துரோகச் செயல்களுக்காக.. தங்களை எப்படி அழைக்கலாம்.. மிஸ்டர் சம்பந்தன். அதனையும் சொல்லி விடவும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் என்றாே தன் மக்களுக்காக முரசறைய வேண்டிய இந்தக் குரல், இன்று முனகுகிறது தனது சுயநலத்திற்காக, காலம் பிந்திப்பாேச்சுது. (It's too late).

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான் இலங்கையில் முதலாவது முறையாக ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது என்பது போல் தமிழ் மக்களின் தலைவராம் சம்பந்தரும், சுமந்திரனும் துள்ளி குதிப்பது இவர்களின் சுயநலத்தையே காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.