Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் நிலைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: damn you do and damn you don't.

If you do whatever it is you are going to do then you are in trouble, if you don't act out what you were going to do then you are in trouble another way.

நீங்கள் ஒரு விடயத்தினை செய்ய முனைந்தாலும் பிரச்னை, அந்த விடயத்தினை செய்யாமல் விட்டாலும் பிரச்னை தான். 

இது கூட்டமைப்புக்கு சரியாக பொருந்தும். அதற்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன.

மகிந்தவுக்கு ஆதரவு, ரணிலுக்கு ஆதரவு, நடுநிலை.

இதில் மகிந்தவுக்கு ஆதரவு தந்தாலும் பிரச்சனை, நடுநிலைமை வகித்தாலும், அதுவே மகிந்தவுக்கு சார்பாகி பிரச்சனை. 

ஆகவே மூன்றாவது தெரிவே அவர்கள் முன் இருந்த தவிர்க்க முடியாத தெரிவு ஆக இருந்தது.

மறுபுறம்... சர்வதேச விருப்பு வெறுப்புகள் என்னும் போது, இந்தியா, மேலை நாடுகள் இந்த தெரிவையே கூட்டமைப்பு எடுப்பதை விரும்பின. 

நீண்ட கால நோக்கில் பார்த்தால்.... மைத்திரி- மகிந்த கூட்டு நீண்ட நாட்களுக்கு நிலைக்க முடியாது. ஐ நா வில், உள்ளக விசாரணைக்கு இரண்டு வருட கெடு வாங்கி வந்தது மைத்திரி - ரணில் அரசு.

யார் அந்த விசாரணையின் மைய புள்ளியோ, அவரே மைத்திரியுடன் அரசு அமைப்பதனை  ஐ நா வோ, மேலை நாடுகளோ ஜீரணிக்கப் போவதில்லை.

அடுத்தது இன்னும் 13 மாதங்களில், ஜனவரி 2020ல் ஜனாதிபதி தேர்தல். அந்த தேர்தலில் தான் போட்டியிடவே, மைத்திரி, மகிந்தவை கொண்டு வருகிறார். ஆனாலும் அவர் கொண்டு வந்த விதத்தினால், நாட்டு மக்கள் மத்தியில் வெறுக்கத்தக்க மனிதராகி உள்ளார்.

ஆகவே அடுத்த தேர்தலில், இவர் போட்டி இட்டால் தோல்வி நிச்சயம். 

மறுபுறம் ரணில் ஐ தே க சார்பில் போட்டி இட்டால், வெல்லுவார். இந்த காரணத்தினால் தான், கூட்டமைப்பு மட்டுமல்ல, முஸ்லீம் கடசிகள் கூட ரணில் பக்கம் தான் நிற்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், மகிந்த மீண்டும் ஜனாதிபதி ஆக முடியாத நிலையில்,  எக்காரணம் கொண்டும் கோத்தபாய வருவதை ஆதரிக்க கூடாது என்பதே.

மேலும் மகிந்தவை ஆதரித்து அல்லது நடு நிலை வகித்து, பின்னர், போர்க் குற்ற விசாரணைகள் நடக்கவில்லையே என்று ஜெனீவாவுக்கு கிளப்பிப் போய் முறைப்பாடு சொல்ல தார்மீக ரீதியான உரிமை இல்லாமல் போய் விடும்.

ஆகவே தந்திரோபாய நிலையில் இப்போது ரணில் உடன் நிற்பதை தவிர வேறு தெரிவுகள் இல்லை.

இந்த நிலைப்பாட்டில் ஓரமாக நின்று ஒப்புக்கு சப்பாணியாக முழங்காமல், அதிரடியாக நின்று முழங்குவதே சரி என்று நினைத்து செய்கிறார்கள். ரணில் வென்றால் அதற் குரிய பலனை கேட்டு வாங்கும் கெட்டித்தனம் இருந்தால் சரி தான்.

சுஜ ஆக்கம்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

ஆகவே தந்திரோபாய நிலையில் இப்போது ரணில் உடன் நிற்பதை தவிர வேறு தெரிவுகள் இல்லை.

ரணிலுக்காக இவ்வளவு கூத்தாடுகினம்.ஆனாலும் நாளையே தமிழருக்கு எதிராக ஒரு பிரோரணை என்று வந்தால் கட்சி பேதமில்லாமல் சிங்கள வர்க்கம் சேர்ந்தே கை தூக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ரணிலுக்காக இவ்வளவு கூத்தாடுகினம்.ஆனாலும் நாளையே தமிழருக்கு எதிராக ஒரு பிரோரணை என்று வந்தால் கட்சி பேதமில்லாமல் சிங்கள வர்க்கம் சேர்ந்தே கை தூக்கும்.

பிரபாகரன், நாட்டின் சுமூக நிலைக்கு எதிரானவர் என்று அரசுக்கு ஆதரவு தந்தவர்கள், நாறிப்போய், பாராளுமன்றின் கலரியில் இருந்து கை தட்டி ரசிப்பதை பார்த்தீர்களா?

அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, இலங்கை தமிழர் பிரச்சனைக்கும் மூக்கினை நுழைத்து விட்டார்கள்.

இனி தமிழர்களுக்கு பதில் தந்தாக வேண்டும். 

ஓடமும், வண்டியில் ஏறும்.... ஒரு நாள் எமக்கான தீர்வு வந்தே தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

 

இனி தமிழர்களுக்கு பதில் தந்தாக வேண்டும். 

ஓடமும், வண்டியில் ஏறும்.... ஒரு நாள் எமக்கான தீர்வு வந்தே தீரும்.

இங்கே நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் கலரிக்காரருக்கு ஏற்ற அரசு இருந்தால் தமிழர் பிரச்சனை எடுபடப் போவதில்லை.அவர்களுக்கு மாறான ஒரு அரசிருந்தால்த் தான் தமிழர் பிரச்சனை கையில் எடுப்பார்கள் .அவர்கள் மூக்கை நுழைக்க இது ஒன்றே வழி.
இதற்கு உதாரணம் கடந்த மூன்றான்று கால அரசு.நுhறுநாள் திட்டத்தில் தமிழருக்காக செய்தது என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கே நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் கலரிக்காரருக்கு ஏற்ற அரசு இருந்தால் தமிழர் பிரச்சனை எடுபடப் போவதில்லை.அவர்களுக்கு மாறான ஒரு அரசிருந்தால்த் தான் தமிழர் பிரச்சனை கையில் எடுப்பார்கள் .அவர்கள் மூக்கை நுழைக்க இது ஒன்றே வழி.
இதற்கு உதாரணம் கடந்த மூன்றான்று கால அரசு.நுhறுநாள் திட்டத்தில் தமிழருக்காக செய்தது என்ன?

கொங்கோ, சிரியா, இரண்டு நாடுகளுமே, பிரிந்து சிதறுண்டு சின்னாபின்னமானத்துக்கு காரணம், தலைமைத்துவ  மோதல்களும், அதனால் உள்ளழைக்கப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே.

சூடான் மேலுமொரு உதாரணம். இலங்கைத்தீவில் வெளிநாட்டு சக்திகள் புகுந்து கத்தியை தீட்டிக் கொடுக்கின்றன.

இதன் விளைவு, முழு ஆயுத பலத்துடன் உள்ள ராணுவத்தினை, பதவியில் அமர்த்தக் கூடும். அதுவே எமக்கு நன்மையாக முடியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இதன் விளைவு, முழு ஆயுத பலத்துடன் உள்ள ராணுவத்தினை, பதவியில் அமர்த்தக் கூடும். அதுவே எமக்கு நன்மையாக முடியலாம்.

நீங்கள் மேலே சொன்ன நாடுகளுக்கும் இலங்கைக்கும் பெரிய வித்தியாசம் இலங்கை ஒரு தனித் தீவாக இருப்பதே.மற்றைய நாடுகளுக்கு பக்கத்து நாடுகள் உபத்திரமாகவோ உதவியாகவோ இருக்கின்றன.அதுவும் பக்கத்தில் இந்தியா எனும் பெரிய சாத்தான்.இந்தியாவை மீறி சீனாவைத் தவிர வேறு நாடுகள் தன்னிச்சையாக எதுவும் செய்யாது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சி வந்தால் பட்டினிச் சாவு தான்.
இன்றைய பிரச்சனையை எவரும் ஜனாதிபதி கொலை முயற்சியுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்களே இல்லை.இந்தப் பிரச்சனை வெளி வந்தால் இதன் சூத்திரதாரிகள் யாரென்று அறியலாம்.

எப்படியும் இந்தக் கிழமைக்குள் ஒரு முடிவு வரலாம் பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் மேலே சொன்ன நாடுகளுக்கும் இலங்கைக்கும் பெரிய வித்தியாசம் இலங்கை ஒரு தனித் தீவாக இருப்பதே.மற்றைய நாடுகளுக்கு பக்கத்து நாடுகள் உபத்திரமாகவோ உதவியாகவோ இருக்கின்றன.அதுவும் பக்கத்தில் இந்தியா எனும் பெரிய சாத்தான்.இந்தியாவை மீறி சீனாவைத் தவிர வேறு நாடுகள் தன்னிச்சையாக எதுவும் செய்யாது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சி வந்தால் பட்டினிச் சாவு தான்.
இன்றைய பிரச்சனையை எவரும் ஜனாதிபதி கொலை முயற்சியுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்களே இல்லை.இந்தப் பிரச்சனை வெளி வந்தால் இதன் சூத்திரதாரிகள் யாரென்று அறியலாம்.

எப்படியும் இந்தக் கிழமைக்குள் ஒரு முடிவு வரலாம் பார்ப்போம்.

இந்தியா பக்கத்தில் இருந்த சிறிய நாடு பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா புகுந்து ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது. இந்தியா பிரித்துக் கொடுத்த பங்களாதேஷினுள் என்ன நடந்தது?

இந்தியாவின் ஆளுமைக்குள் இருந்த மாலைதீவு கை விட்டுப் போய், இப்போது தான், சீன சார்பு அரசினை, அமரிக்கா பெரு முயல்வில் அகற்றி உள்ளது.

இலங்கையில் இந்தியா செய்ய ஒன்றும் இல்லை. தீவு முழுவதும் யாருமே அதனை நம்ப போவதில்லை.

ஆகவே, இந்தியா, மேலை நாடுகள் செய்வதை பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. காரணம் டெல்லி வாலாக்களுக்கு, நாட்டினை விட, டொலர் கையில் வைத்தால், வாயினை பிளக்கும் ஊழல் தான் சாபக்கேடு.

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரணிலுக்காக இவ்வளவு கூத்தாடுகினம்.ஆனாலும் நாளையே தமிழருக்கு எதிராக ஒரு பிரோரணை என்று வந்தால் கட்சி பேதமில்லாமல் சிங்கள வர்க்கம் சேர்ந்தே கை தூக்கும்.

அதுதான் நடக்கும். இந்தியாவுக்கும் அதுதான் வேண்டும்.

சர்வதேசமும் இந்தியாவை மீறி ஈழத்தமிழர்  மீது  அக்கறை எடுக்காது.
இன்றைய அமெரிக்காவின் சீன எதிர்ப்பு அரசியல் நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை.

ஆனால்  ஈழத்தின் மீதான சகுனி இந்தியாவின் கொள்கை அப்படியேதான் இருக்கும்.

அவர்கள் ஈழத்தமிழருக்கு நல்லது செய்ய விரும்பியிருந்தால்  2009 மே மாதத்திற்கு பின் நிறையவே செய்திருப்பார்கள். செய்திருக்கலாம்.

அவர்கள் நோக்கம் அதுவல்ல. அவர்களின் நோக்கம் வேறு......

புத்தர் சிரிக்கிறார்

buddha funny gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Edited by குமாரசாமி
மீது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அதுவும் பக்கத்தில் இந்தியா எனும் பெரிய சாத்தான்.இந்தியாவை மீறி சீனாவைத் தவிர வேறு நாடுகள் தன்னிச்சையாக எதுவும் செய்யாது.

தமிழீழம் அல்லது சமஸ்டி என்று தீர்வு ஒன்றை அடைந்துவிட்டால் அதை "மேற்கொள்" காட்டியே தங்களுக்கும் வேண்டும் என்று தமிழ் நாட்டு சனம் கேட்பினம் என்பதுதானே அவையளின்ர முக்கிய கருதுகோள் ..போக சனம் கொஞ்சம் யோசித்து  போட்டால் தமிழ் நாட்டில் பொதிந்து கிடக்கும்  இயற்கை கனிம மற்றும் மலிவாக கிடைக்கும்  மனித , காய்கறி வளம் இவற்றை எல்லாம் ரெல்லி வாலாக்களுக்கு எவன் கொடுப்பது ? குறிப்பாக மல்லுக்களுக்கு வேறு நாதி ஏது ? குறிப்பாக கேரளா வாயும்  அதில் உள்ளீழுத்து விடுவார்கள்  எண்டு பயம் .. அதனால் தான் "அகண்ட தமிழீழம் "அது ..இது எண்டு சவுத்து பிளாக்கில் கோர்த்து விடுவது .. போக இந்த திராவிட கோஸ்ரியலும் அவையளுக்கு ஏற்றா போல் " திராவிட நாடு " ,"சுடு காடு", "சுயாட்சி" ,"கூட்டாட்சி", எனறு மேடையில் கத்திவிட்டு சரக்கடித்து  முட்டு சந்தில் போய் படுத்தவை .. ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழீழம் அல்லது சமஸ்டி என்று தீர்வு ஒன்றை அடைந்துவிட்டால் அதை "மேற்கொள்" காட்டியே தங்களுக்கும் வேண்டும் என்று தமிழ் நாட்டு சனம் கேட்பினம் என்பதுதானே அவையளின்ர முக்கிய கருதுகோள் ..

பங்களாதேசைப் பிரிக்கும் போது இதைப்பற்றிய கவலையே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

பங்களாதேசைப் பிரிக்கும் போது இதைப்பற்றிய கவலையே இல்லை.

மொழி , இனம் கடந்து அவை முஸ்லீம் அல்லோ ..?

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை,

ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கிறது. தமிழர் பிரச்சினை தொடர்பாகவோ அல்லது போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாகவோ மேற்குலகிற்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதா என்பது. ஏனென்றால் போர்க்குற்றங்கள் நடைபெற்றபொழுது மேற்குலகு நன்கு தெரிந்திருந்தும், எதுவுமே செய்யாமல் பேசாமல்த்தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதோ ஒரு விதத்தில் மேற்குலகும் ஐ. நா வும்கூட துணைபோயிருந்தன என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே, அவர்களுக்கு எமது பிரச்சினை என்பது தொடர்பாக உண்மையான அக்கறை என்பதைக் காட்டிலும், அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறதென்பதே அவர்களின் உண்மையான நோக்கமாக இருக்கும்.

கூட்டமைப்பின் இன்றைய தெரிவுகள் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதுதான். மகிந்தவுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலமை வகிப்பதோ மகிந்தவை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிவிடும் என்பது உண்மை. ஆகவே, கூட்டமைப்பிற்கு உள்ள ஒரே தெரிவு, ரணிலை ஆதரிப்பதுதான். இன்றுவரை அவர்கள் ரணிலை ஆதரிப்பதுகூட, தப்பித் தவறியும் தம்மால் மகிந்த ஆட்சிக்கு வரக்கூடாதென்கிற நிலைப்பாடுதான்.

ஆனால், இந்த நிலைப்பாடு, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் போதுமானதா? தமிழர்களை அழித்தவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாதென்கிற நோக்கம் சரியாகப் பட்டாலும் கூட, ரணிலை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருப்பதால் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்கிற உத்தரவாதம் இதுவரையில் கிடைக்கவில்லை என்பதுதானே உண்மை. நல்லிணக்க அரசின் சனாதிபதியாக இருந்த மைத்திரி கூட வடக்குக் கிழக்கு இணைப்பென்பதை உயிருள்ளவரை நடக்க அனுமதிக்கப்போவதில்லை, சமஷ்ட்டி என்கிற பேச்சிற்கே இடமில்லை என்றுதான் இன்றும் கூறிவருகிறார். இன்று ரணில், மைத்திரியைக் காரணம் காட்டி தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று தப்பித்துக்கொண்டாலும், ரணிலிடம் எமக்குத் தருவதற்கு எதுவுமேயில்லை என்பதுதானே உண்மை.

மேற்குலகினைப் பொறுத்தவரைக்கும், தமக்குச் சார்பான அரசொன்று ஆட்சியில் இருந்தால்ப் போதும் என்கிற நிலைப்பாடுதான் இருக்கிறது. மகிந்தவின் சீனச் சார்பு நிலைப்பாடுதான் இன்றுவரை அவரின் மீதான போர்க்குற்ற விசாரணைகள், ஏனைய நெருக்குவாரங்கள் தொடர்பாக மேற்குலகினைப் பேச வைக்கிறது. 

ஆகவே ரணில் மீண்டும் ஆட்சிக்கு வருவது, தமிழரின் பிரச்சினைகள் தொடர்பான முயற்சிகளைக் கிடப்பில் போடும் ஒரு நிலையினை உருவாக்கி விடாதா? தமக்குச் சார்பான அரசொன்றின் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க வேண்டிய தேவை மேற்குலகிற்கு இருக்கிறதா? இன்று விழுந்தடித்துக்கொண்டு வரிச்சலுகை, நாணய நிதிய உதவிகள் ஆகியவற்றை நிறுத்தப்போகிறோம் என்று பயமுறுத்தும் மேற்குலகு மைத்திரி - ரணில் நல்லிணக்க அரசு பதவியிலிருக்கும் காலத்தில் இதைச் செய்யவில்லையே? தமிழருக்கு நடந்த அக்கிரமங்களைத் தீர்த்து வையுங்கள், அல்லது இவற்றைச் செய்வோம் என்று ரணிலையோ அல்லது மைத்திரியையோ பயமுறுத்தவில்லையே? மகிந்த ஆட்சியில் இருப்பதால்த்தான் இவையெல்லாம் நடக்கிறது?

ஆகவே, கூட்டமைப்பினருக்கு  வேறு தெரிவில்லை. மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்தால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். அதேவேளை, ரணில் ஆட்சியிலிருந்தால், தீர்மானங்களும் காலக்கெடுக்களுமே தமிழருக்குத் தீர்வுகளாக அமையப் போகின்றன. 

அதேபோல, ராணுவ ஆட்சியென்பது தமிழருக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை. ராணுவ நலன்களே முன்னிறுத்தப்படும். 2009 மே வரைக்கும் ராணுவம் தமிழருடன் நடந்துகொண்ட விதம் முன்னேற்றமடையும் என்று எண்ணுவதற்கும் எந்தக் காரணமும்  இல்லை. போர்க்குற்றங்களில் ஈடுபட்ட தனது ராணுவ வீரர்களை எப்படியும் காப்பதில்த்தான் ராணுவம் ஈடுபடும். இவ்வாறான நிலமை மகிந்த ஆட்சிக்கு வருவதைக் காட்டிலும் மோசமாக அமையலாம்.

ரணிலின் ஆட்சியில் தமிழர்கள் ஒப்பீட்டளவில் நிம்மதியாக வாழ்கிறார்கள். மகிந்த ஆட்சியிலோ அல்லது ராணுவ ஆட்சியிலோ மீண்டும் அழுத்தங்கள் தமிழர்மேல் கட்டவிழ்த்து விடப்படும். ஆனால், இதில் உள்ள ஒரேயொரு நண்மை, மேற்குலகு போர்க்குற்றம்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.