Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜீவ் காந்தி கொலையில் எமக்கு எந்தவிதத் தொடர்புமில்லை - விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ் காந்தி கொலையில் எமக்கு எந்தவிதத் தொடர்புமில்லை - விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்ப் பீடம் எனும் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையில் 1991 ரஜீவ் கொலைக்கும் தமக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று கோரியிருக்கிறார்கள்.

அரசியத் துறையின் பொறுப்பாளர் குருபரன் குருஸ்வாமி மற்றும் சட்டத்துறை பொறுப்பாளர் லதன் சந்திரலிங்கம் ஆகியோர் இந்த அறிக்கையில் ஒப்பமிட்டிருக்கிறார்கள்.

மக்களால், மக்களுக்கு மக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட தமது அமைப்பு ஒருபோதுமே ரஜீவ் கொலையில் சம்பந்தப்படிருக்கவில்லை என்பதை பலமுறை தகுந்த சாட்சியங்களூடு நிரூபித்திருந்தாலும்கூட, தம்மேலான அவப்பெயர் இன்னும் மறையவில்லை என்று இவ்வறிக்கை ஆதங்கப்பட்டிருக்கிறது.

இப்படியான பொய்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இதுவரை தமிழருக்கு எதிராக நடைபெற்றுவரும் அநீதிகள் சொல்லில் அடங்காதவை என்பது மட்டுமல்லாமல் 150,000 அப்பாவித் தமிழர்கள் இறந்தாலும்கூட ரஜீவ் எனும் தனி மனிதரின் இழப்பிற்கு அவை ஈடாகாது என்று இன்றுவரை பலர் கூறிக்கொண்டிருக்கவும் இப்பழி காரணமாக அமைந்திருக்கிறது.

நாங்கள் இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது இந்தியாவின் எந்தத் தலைவருக்கு எதிராகவோ எந்தவொரு ஆயுதத் தாக்குதல்களையும் நடத்தவில்லை. இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளிற்குமிடையிலான உறவைச் சிதைப்பதற்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

ஆகவே, இந்தக் கொலை தொடர்பாக புலிகளின் மேல் அநியாயமாகச் சுமத்தப்பட்டிருக்கும் அவப்பெயர் உடனடியாக நீக்கப்படவேண்டும். இதன்மூலம் சர்வதேச ரீதியில் புலிகள்மேல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவப்பெயர் நீங்குவதோடு, தடைகள் அகற்றப்பட்டு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க எம் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கட்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மூலம் : http://www.sify.com/news/no-link-to-rajiv-gandhi-s-assassination-claims-ltte-news-national-smdgdUfgdicaa.html

 

அறிக்கையின் முழு வடிவத்தையும் பார்வையிட http://colombogazette.com/wp-content/uploads/2018/12/Rajivi-Gandhi-ENG.pdf

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை விட்டவர்கள் சுவிஸில் உள்ளவர்கள்.   புலிகள் முன்னர் கூறியவற்றையே மேற்கோள் காட்டியுள்ளனர். தாமாக எதையும் புதிதாகச் சொல்லவில்லை.

 

 

https://allsitedata.s3-eu-west-1.amazonaws.com/docs/others/2018/12/ltt_ee001.pdf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வறிக்கை இப்போது வரவேண்டிய அவசியம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

 -

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அறிக்கை விட்டவர்கள் சுவிஸில் உள்ளவர்கள்.   புலிகள் முன்னர் கூறியவற்றையே மேற்கோள் காட்டியுள்ளனர். தாமாக எதையும் புதிதாகச் சொல்லவில்லை.

வேறு ஏதும் இருக்காது என நான் நினைக்கிறன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.