Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் - சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் - சித்தார்த்தன்

 

தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

sitharthan.jpg

தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம். ஆகவே மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.

ஏனென்றால் இருக்கின்ற இந்த நிலையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்போம் பேசிக் கொண்டிருப்போம் என்று கூறி கடந்த எழுபது வருடமாக நாங்கள்  பேசிக் கொண்டிருந்ததைப் போன்று இனியும் நாங்கள் பேசிக் கொண்டிருக்க முடியாது.

அப்படி சென்று கொண்டிருப்பது இனத்திற்கும் நல்லதல்ல. இதை இப்படியே பேசிப் பேசி கொண்டிருக்க முடியாது. ஆனால் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதையே சிங்களத் தலைமைகள் சில வேளை விரும்பலாம்.

ஏனென்றால் கடந்த 70 வருடத்திற்கு முன்னராக இருந்தே பேசிக் கொண்டு வருகின்றோம். அவ்வாறு நாங்கள் பேசத் தொடங்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமிடையே எவ்வளவோ நாங்கள் பலவீனமாகி விட்டோம் குறிப்பாக ஆயதப் போராட்ட காலத்திற்கும் இப்ப இருக்கின்ற காலத்திற்கும் இடையிலே கூட நாங்கள் மிகவும் பலவீனமாகவே உள்ளோம்.

ஆகவே இந்த நிலைமையை தொடர தொடர்ந்தும் விட்டுக் கொண்டிருப்போமேயானால் இன்னும் பலவீனமாகவே நாம் இருப்போம். ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு நியாயயமான தீர்வு வேண்டும். அதாவது எங்களுடைய பகுதிகளிலே நாங்களே எங்கள் அலுவல்களைப் பார்க்கக் கூடியதாக கொடுத்த அதிகாரங்களை மிளப் பறிக்க முடியாதவாறான நிலையில் ஒரு தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் அப்படியானதொரு தீர்வுவருமமா என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால் 87 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மாகாண சபை முறைமையை எல்லாம் எதிர்த்தோம். இன்று நாங்கள் அதற்காக எங்களுக்குள்ளேயே அதன் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார் என்று போட்டி போடுகின்றோம். ஆகவே பலர் சொல்வது அன்றே அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டு இன்னும் பலப்படுத்தியிருக்கலாம். அதனை ராஜீவ் காந்தி இருந்த காலத்தில் செய்திருக்கலாம்.

 

http://www.virakesari.lk/article/47419

4 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களுக்கு நியாயமான திர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம்.

எது நியாயமான தீர்வு என்று இதுவரை இவருக்கு சொல்ல துப்பில்லை.
முதுகெலும்பில்லாத இவங்களுக்கெல்லாம் எதுக்கு அரசியலும் ஒரு கட்சியும்?

 

4 hours ago, கிருபன் said:

இனியும் நாங்கள் பேசிக் கொண்டிருக்க முடியாது.

அப்ப என்னதான் செய்யப் போறீங்கள் என்டு சொல்ல துப்பில்லை.

முதுகெலும்பில்லாத இவங்களுக்கெல்லாம் எதுக்கு அரசியலும் ஒரு கட்சியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, கிருபன் said:

நியாயமான தீர்வாக இருந்தால் ஆதரிப்போம் இல்லாவிடில் எதிர்ப்போம் - சித்தார்த்தன்

இதெல்லாம் ஒரு அரசியல் கட்சியாம் இதுக்கு வக்காலத்து வாங்க  ஒரு கூட்டம் பின்னாலை.........:grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் ஒரு அரசியல் கட்சியாம் இதுக்கு வக்காலத்து வாங்க  ஒரு கூட்டம் பின்னாலை.........:grin:

தாங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்கள்  இலங்கையில்??

முந்தய நாட்களில் பலர் ஈழம் பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்டனர் அவர்கள், அவர்கள் தொடங்கிய இயக்கம் , கட்சிக்கு இன்னமும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வாளி தூக்கியே ஆவார் கள்:grin:

On 1/3/2019 at 12:18 PM, கிருபன் said:

ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு நியாயயமான தீர்வு வேண்டும். அதாவது எங்களுடைய பகுதிகளிலே நாங்களே எங்கள் அலுவல்களைப் பார்க்கக் கூடியதாக கொடுத்த அதிகாரங்களை மிளப் பறிக்க முடியாதவாறான நிலையில் ஒரு தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தாங்கள் காலம் காலமாக நடத்திய கொலை செய்யும் அதிகாரத்தையா அல்லது சோற்றுப் பார்சல் அலுவல்கள் அதிகாரத்தையா இவர் கேட்கிறார்?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்கள்  இலங்கையில்??

சம்பந்தன் சுமந்திரன் மாவை  ஆணண்ட சங்கறி போன்ற உதவாக்கரைகளை அரசியலிலிருந்து விலகச்சொல்லுங்கள்.  பல சூரியன்கள் பிரகாசிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 6:17 AM, குமாரசாமி said:

சம்பந்தன் சுமந்திரன் மாவை  ஆணண்ட சங்கறி போன்ற உதவாக்கரைகளை அரசியலிலிருந்து விலகச்சொல்லுங்கள்.  பல சூரியன்கள் பிரகாசிக்கும்.

கர்ணா, பிள்ளையான் என்ன மாதிரி அண்ண :34_rolling_eyes::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.