Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி *

சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசு!

புட்டபர்த்தி : தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரையிலான 29 கி.மீ., கால்வாய் அமைத்துக் கொடுக்க சாய்பாபா உறுதி கொடுத்துள்ளார்.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நேற்று நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் சாய்பாபா பேசினார். அப்போது, இத்தகவலை தெரிவித்தார்.

தெலுங்கு கங்கை திட்டத்தில், ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணை முதல், தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை ரூ.200 கோடி மதிப்பில், ஏற்கனவே சத்யசாய் மத்திய டிரஸ்ட் மூலம் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீரோ பாயின்ட் முதல், சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் பூண்டி, ரெட்ஹில்ஸ் ஏரி வரை தண்ணீர் வந்து சேரும் வழியில் தற்போது 40 சதவீத இழப்பு ஏற்படுகிறது.கடந்த ஜனவரி 26ம் தேதி சென்னை சிட்டிசன் கான்க்ளேவ் சார்பில், கால்வாய் அமைத்துக் கொடுத்ததற்கு சத்ய சாய்பாபாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் உள்பட 2 முதல்வர்கள், 2 கவர்னர்கள் மற்றும் 3 மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, தெலுங்கு கங்கை திட்டத்தில் மீதமுள்ள துõரத்தை முடித்துக் கொடுத்து, சேதாரமின்றி தண்ணீர் வந்து சேர உதவும்படி சாய்பாபாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று புட்டபர்த்தியில் நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் தமிழக சத்ய சாய்பாபா டிரஸ்ட் கன்வீனர் ஜி.கே.ராமன் பேசும்போது, "ஜீரோ பாயின்ட் முதல் பாண்டி வரையிலான கால்வாயை சாய்பாபா சீரமைத்து சென்னை மக்களுக்கு உதவவேண்டும்' என்றார்.இதன்பின் பேசிய சாய்பாபா கூறியது:

சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், தெலுங்கு கங்கை திட்டத்தை "எல் அண்டு டி' நிறுவனம் மூலம் நிறைவேற்றிக் கொடுத்தேன். இப்போது தமிழக பகுதியையும் முடித்துக் கொடுக்க உறுதி பூண்டுள்ளேன். விரைவில் இன்ஜினியர்களை அனுப்பி திட்டத்தை துவக்க ஏற்பாடு செய்வேன்.

இதற்கு ரூ.50 கோடி செலவாகும். சென்னை மக்கள் குடி தண்ணீர் பிரச்னையை தீர்க்க எவ்வளவு கோடி செலவானாலும் கொடுப்பேன். இனி தண்ணீருக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். கடவுளை வேண்டினால் போதும். இன்று புது வருடம் பிறக்கிறது. இந்த புது வருடத்தின் பெயர் சர்வஜித். சர்வஜித் என்றால் வெற்றி என்று அர்த்தம். விவசாயம், கல்வி என்று அனைத்து துறைகளிலும் மக்கள் வெற்றி பெற வேண்டும். இந்த ஆண்டு வெற்றி வருடம். தெலுங்கு கங்கை திட்டத்தையும் வெற்றிகரமாக முடிப்பேன். குடிதண்ணீருக்காக அரசுகள் சண்டை போடுகின்றன. குடிதண்ணீர் கடவுளுடையது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது யாருடைய சொத்தும் அல்ல. கடவுளின் சொத்து. அதனால் கடவுள் நிறைவேற்றி வைக்கிறார். சத்ய மூர்த்தி சாகர் (பூண்டி) கொடுக்காத தண்ணீரை சாய்பாபா கொடுப்பார். இனி சத்யமூர்த்தி சாகர் முழுமையாக நிறைந்து வழியும். சென்னை மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். சென்னை பிற மாநிலங்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பெறும்.

நேற்று தமிழக மக்களுக்கு புத்தாண்டு. இன்று மலையாளிகளுக்கு புது வருடம். இந்நாளில் எல்லா வெற்றியையும் பெற்று சந்தோஷம், அமைதி, இறையருள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

நிரம்பி வழிந்த "குல்வந்த்' ஹாலில் மக்கள் கரகோஷத்துக்கு இடையே சாய்பாபா இவ்வாறு பேசினார்.

முன்னதாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் மற்றும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

மூலம் - தினமலர்

Edited by கறுப்பி

நல்ல முயற்சி, சுவாமியார்கள் இப்படி பொது சேவைகள் செய்து, பொதுமக்களின் அவலங்களைப் போக்க முன்வருதல் வரவேற்கத்தக்கது. :unsure:

சாய்பாபா தனது சக்தி மூலம் கர்நாடக தமிழக பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு எப்போதோ தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி 'சொந்தப்' பணத்தைச் செலவழித்து தண்ணி காட்டியிருக்கத் தேவையில்லை.

சாய்பாபா தனது சக்தி மூலம் கர்நாடக தமிழக பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு எப்போதோ தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி 'சொந்தப்' பணத்தைச் செலவழித்து தண்ணி காட்டியிருக்கத் தேவையில்லை.

இது கலிகாலமுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

செய்தாலும் ஒன்டு சொல்றிங்க செய்யாட்டியும் ஒன்டு சொல்றிங்க.. தமிழன்ட இந்து பழக்கத்த முதல விட்டு தொலைங்கப்பா...எத்தனையோ கோடி மதிப்புள்ள இந்த திட்டங்கள செயல் படுத்தும் போது அத பாரட்டா விட்டாலும் நொட்டு நொடுக்கு சொல்லாதிங்க...

ஆகா சுண்டு டென்சன் ஆகிட்டார்,எங்கிருந்து தான் வாறார் என்று தெறியவில்லை பட் கரெக்டா வந்து த்னது உரையை ஆற்றிவிட்டு போறார்

சுண்டு சாய்பாபா ஆள் லீசா அது தான் டென்சன்

:lol::lol:

சாய்பாபா தனது சக்தி மூலம் கர்நாடக தமிழக பிரச்சனைகளை தீர்த்து தமிழகத்திற்கு எப்போதோ தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம். இப்படி 'சொந்தப்' பணத்தைச் செலவழித்து தண்ணி காட்டியிருக்கத் தேவையில்லை.

நல்லது நடந்தால் பாராட்டுங்கள்.. பாரட்ட மனமில்லையென்றால் மெளனமாயிருங்கள்.

சகோதரர்களே..

:lol:

மக்கள் கொடுத்த பணத்தில் மேர்ஸிடஸ் கார்கள், பங்களாக்கள், உல்லாச வாழ்க்கை போன்ற செலவுகள் போக மீதியில் கொஞ்சம் விளம்பரத்துக்காக செய்கிறார் - மற்றைய சாமியார்களுக்கு போட்டியாக. பாராட்டு எதற்கு ?

பணம் செலவழிக்காமல் ஈழத் தமிழர் பிரச்சனையையும் தீர்க்க முடியுமா என்று இவரிடம் கேளுங்கள்.

தூங்காமல் கொள்லாமல் உழைத்த காசு பாருங்கோ. மதத்தை வித்து உழைத்த காசு. பாவவிமோசனத்துக்கு கொஞ்ஞம் கொடுக்கிறார்.

please,,,,,

நல்லது நடந்தால் பாராட்டுங்கள்.. :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் முழுக்க சுரண்டின பிச்சை காசுகள்.. இப்படியாவது புண்ணியம் தேடுவோம் என்றுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் கொடுத்த பணத்தில் மேர்ஸிடஸ் கார்கள், பங்களாக்கள், உல்லாச வாழ்க்கை போன்ற செலவுகள் போக மீதியில் கொஞ்சம் விளம்பரத்துக்காக செய்கிறார் - மற்றைய சாமியார்களுக்கு போட்டியாக. பாராட்டு எதற்கு ?

பணம் செலவழிக்காமல் ஈழத் தமிழர் பிரச்சனையையும் தீர்க்க முடியுமா என்று இவரிடம் கேளுங்கள்.

லீசான்

பணத்தைக் கொடுக்கின்றவனே கவலைப்படவில்லை. உமக்கு முத்திய கதைகள் தேவையா? பாபா எப்படி வாழ்ந்தாலும் உங்களுக்கு என்ன? அது பணங்கொடுப்பவர்கள், கொண்டுள்ள உரிமை. ஏதோ நீர் மூட்டை தூக்கி உழைத்த பணத்தில் தான் அவர் வாழ்வது போலக் கதைக்கின்றீர்.

திரேசாவைப் பற்றிப் பெருமையாகக் கதைத்தால் அது விளம்பரமா? அவருக்கு எங்கிருந்து இத்தனை பணம் வந்தது? அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து யாராவது சந்தேகப்பட்டார்களா?

உங்களால் ஒரு மண்ணும் புடுங்கத் தெரியாது. ஆனால் செய்கின்றவர்களில் புரணி காண்பதில் அப்படி ஒரு இன்பம். ஏன் நீங்கள் அடித்த கடன்அட்டையில் மக்களுக்கு கொடுத்து உதவுவது தானே?

பணத்துக்கு கடவுளை விற்பார்கள். வேணுமென்றால் அவர்களிடம் போய்க் கை ஏந்திக் கொண்டு நில்லுங்கள். இப்படிப்பட்டவர்கள் தானே உங்களின் மதவியாபாரத்துக்கு தடையாக நிற்கின்றார்கள். அது தான் உடனே சுள் என்று கோபம் வருகின்றது போல.

சிகரட் குடிப்பதால் கான்சர் வருகிறது. இதனால் சிகரட் கொம்பனிகள் கான்சர் ரிசேச் இற்கு (ஆராட்சி) பெருமளவு பணத்தை தருகின்றன. மனச்சாட்சிக்கக இதை அவை செய்கின்றன (ethics).

மக்டொனால்ட் உணவு உண்பதால் உடல் நலம் கெடுகின்றது. இதனால் அவை விளையாட்டுத் துறைக்கு பல உதவிகள் செய்கின்றன .

இந்தியா முழுவதும் மூட நம்பிக்கையை விதைத்து அதை கோடி கோடியாக அறுவடை செய்யும் பாபா போன்ற பாதகர்கள் அந்த மூட நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவிக்க என்ன செய்தார்கள்?. இன்னும் இன்னும் தங்களது பிசினசை பெருக்கும் வழிதான் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பண்டிதர்

இங்கே லீசன் என்பவர் கதைத்த விதம் ஒரு குரோதம் கொண்ட, ஒரு கருத்தாக இருந்தமையால் தான் பதிலளித்தேன். ஏற்கனவே தமிழ்நாடு வந்து போன சம்பவத்திலும், அது குறித்து இவர் இவ்வாறன வன்புணர்ச்சியோடு கருத்தெழுதியிருந்தார்.

இப்போது கூட, சாய்பாபா தமிழ்நாட்டு கால்வாய்த் திட்டத்துக்கு உதவுவது என்பது கூட, ஒரு நல்ல விடயம் தானே. அவர்் உதவாமல் இருந்திருந்தால் இப்படி திட்டியிருப்பாரா? ஆக,பாபா உதவுகின்றார் என்பது இவருக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்பது தானே அர்த்தம்.

நிற்க, அவர் வளர்ப்பது மூட நம்பிக்கையா இல்லையா என்று முடிவெடுக்கின்ற உரிமை உங்களிடம் கிடையாது. சொல்லப் போனால் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும், ஜனாதிபதியுமாகிய அப்துல்கலாம் கூட, இந்திய அனைத்து தலைவர்களும் கூட அவரிடம் ஆசி பெற்றிருக்கின்றனர். அது அவர் கொண்டிருந்த சக்தி என்பதல்ல.

மக்களை ஒரு வழிப்படுத்துகின்ற சக்தி அது. திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிக் கதவு திறந்தார் என்றோ, அல்லது யேசுநாதர் அப்பத்தைத் தருவித்தார் என்பதல்ல முக்கியம். மக்களின் மனங்களில் உள்ள குறைகளையும், சோகங்களையும் போக்க வழி செய்கின்றனர் என்பதே முக்கியம். அது ஏமாற்றுவேலையாகக் கூட இருக்கலாம்.

உங்களின் வீட்டில் ஒரு சோகம் நடக்கின்றது. 2, 3 நாள் அழுவீர்கள். ஆனால், அதற்காக வருடம் முழுக்க அழுவீர்களா? இல்லையே. அவ்வாறு தான் மனிதனின் 70 வருட சராசரி வாழ்க்கையில் சோகங்கள் துன்பங்கள், விரக்திகள் ஏற்படுகின்ற போது, நிச்சயம் அவனின் மனதுக்கு சாந்தி தருபவன இவ்வாறன ஒன்றே.

மனிதனின் வாழ்க்கையில் சோகம், துக்கம், விரக்தி, வெறுப்பு என்று வருகின்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்ற வரை மதம் என்பதோ, மதப்பற்று என்பதோ என்றுமே மாறப்போவதில்லை. இன்றைக்கு புலத்தில் இருந்து சுகமாக வாழ்வதால் நாங்கள் கடவுள் பொய் என்றும், நாத்திகம் கதைத்தும் உலாவுகின்றோம். ஆனால், இதே நாங்கள் குண்டுமழையின் மத்தியில் வாழ்ந்திருந்தால் எதிரி குண்டு தலையில் போடக் கூடாது என்று கந்தபுராணத்தையும், பைபிளையும் நிமிடத்துக்கு ஒரு தடவை படித்தும், அதைத் தலையில் மீதும் வைத்தும் படுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு புலத்தில் இருந்து சுகமாக வாழ்வதால் நாங்கள் கடவுள் பொய் என்றும், நாத்திகம் கதைத்தும் உலாவுகின்றோம்.

புலத்தில் எங்களைவிட சுகமாக வாழும் மேற்கத்தையர் எங்களைவிட (தாயகத்திலும் சரி புலத்திலும் சரி) அபரிமிதமான கடவுள்பக்தி கொண்டிருக்கின்றனர். பாப்பரசரை தரிசிக்க பல மில்லியன் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். ஆனால் அவர்கள் மூடநம்பிக்கைகளற்ற விதத்திலேயே சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அளவாகப்பாவித்தால் மது கூட எமது கவலைகளைப் போக்கவல்லது. அதற்காக மது அருந்துவதை ஊக்குவிக்கலாமா?

நிற்க, அவர் வளர்ப்பது மூட நம்பிக்கையா இல்லையா என்று முடிவெடுக்கின்ற உரிமை உங்களிடம் கிடையாது.

நானும் விரும்பினால் சாயிபாபாவின் மதத்தைப் பின்பற்றமுடியும் என்றால் எனக்கு அதை விமர்சிக்கவும் தகுதியுண்டு தானே?

இனி, சிந்திக்கின்ற ஒவ்வொரு மக்களும் இதே கேள்வியைக் கேட்கத் தொடங்கியிருப்பது கண்கூடு. மக்களின் கல்வியறிவு மட்டம் உயர உயர இதேபோல கேள்விகேட்பவர்களின் விகிதமும் அதிகரிக்கும். ஒருநாள் சாயிபாபாவின் கண்மூடித்தனமான பக்தர்கள் கண்காணாத அளவிலான சிறுபான்மையினராக மட்டும் இருப்பர்.

சாயிபாபா ஒரு சிறந்த ஞானியாக இருக்கலாம். ஆனால் அவர் காலத்திற்கேற்ப தமது போதனை வழிமுறைகளை மாற்றாதவரை இதே போன்ற விமர்சனங்கள் எழுவது தவிர்க்கமுடியாது.

Edited by பண்டிதர்

...

திரேசாவைப் பற்றிப் பெருமையாகக் கதைத்தால் அது விளம்பரமா? அவருக்கு எங்கிருந்து இத்தனை பணம் வந்தது? அவர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து யாராவது சந்தேகப்பட்டார்களா?

...

அன்னை திரேசாவை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி. அன்னை திரேசாவுடன் சாய்பாபாவை எந்த ஒரு விடயத்திலும் ஒப்பிட முடியாது.

மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் நல்லகாரியம் ஒன்றை செய்துவிட்டால், எல்லாவற்றையும் மறந்து அவரை தலையில் தூக்கிவைத்து கொண்ணாட முடியுமா ?

இது மக்களின் பணம், இதை மக்களுக்காகவே செலவழிக்கிறேன் என்று அவர் ஒரு வார்தை கூறியிருக்கலாமே ?

அப்துல் கலாமுக்கு மட்டும் அவர் அருள்புரியவில்லை, இந்திய முதன்மை அரசியல்வாதிகளுக்கும் கேடிகளுக்கும் புட்டபார்த்திதான் புகலிடம்.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா .........அட விடுங்கப்பா .......ஆக வேண்டிய காரியங்களை பார்ப்போம்[/color]

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை திரேசாவை ஏன் மதிக்கிறீர்கள்? சாயிபாபாவை ஏன் வெறுக்கிறீர்கள்? எல்லோரும் நல்லதைத்தானே செய்கிறார்கள். அன்னை திரேசா பைபிளையும் ஆதாம் ஏவாள் கதைகளையும் ஏற்றுக் கொண்டவர். மனித குலத்தின் ரட்சிப்புக்கு இயேசுக் கிறிஸ்துதைத் தவிர வேறு வழியே இல்லலையென்று நம்பியவர். சாயிபாபா எல்லா மதங்களிலும் உண்மையும் நன்மையுமுண்டு, நான் கடவுள் அதுபோல் நீங்களெல்லோரும் கடவுள்களே, என்னை எனக்குத் தெரியும் நீங்களும் உங்களை முயற்சியினால் புரிந்து கொள்ளுங்கள் என்று ஒரு அத்வைத வேதாந்த நிiயில் நின்று அதே வேளை சித்தாந்தக் கருத்துகளுக்கும் மதிப்பளித்து பலருக்கும் மன அமைதி கிடைக்க உழைக்கிறார். அவரது பிரசாந்தி நிலையத்தில் சில்லறை சேர்ப்பதற்காக ஒரு சிறு உண்டியல்தானும் இல்லை. யாராவது அன்பளிப்பு வழங்கவேண்டுமென்றால்கூட எங்கே கொடுப்பதென்று தெரியாது. இது நான் நேரில் கண்ட உண்மை. இத்தனைக்கும் நான் அவரை வணங்க அங்கு போகவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. சும்மா புதினம் பார்க்கப்போனன். தற்போதுள்ள மனவருத்தமான விடயமென்னவென்றால் பலர் சமயங்களை அல்லது சமயாதிகளைக் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றுவது போன்றே மேலும் பலர் பகுத்தறிவு வாதத்தையும் எவ்வித ஆராய்வோ புத்திஜீவித்தனமோ இன்றிப் பின்பற்றுகிறாகள். மொத்தத்தில் எல்லாமே முட்டாள்களின் விடயமாகவே போய்விட்டது. ஒன்றுக்கொன்று இரண்டும் எதுவிதத்திலும் குறைந்ததில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் ஒரு பிரச்சனையா .........அட விடுங்கப்பா .......ஆக வேண்டிய காரியங்களை பார்ப்போம்

அட ஆமா ... அதுவும் சரிதான் :D :D

Edited by பண்டிதர்

உங்களால் ஒரு மண்ணும் புடுங்கத் தெரியாது. ஆனால் செய்கின்றவர்களில் புரணி காண்பதில் அப்படி ஒரு இன்பம். ஏன் நீங்கள் அடித்த கடன்அட்டையில் மக்களுக்கு கொடுத்து உதவுவது தானே?

புரியவில்லை, இதற்கு என்ன விளக்கம் என்று ஒற்றன் சொல்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் சாய்பாபா கடவுளோ, மனிதரோ அல்லது எமாற்றுகிறாரோ இல்லையோ என்பதை விட, மக்களுக்கு குறிப்பாக அந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெழுங்கு நதித்திட்டத்தின் மூலம் பலருக்கு குடிப்பதற்கு குடி நீர் கிடைக்க வழி செய்தவர். தமிழகப்பகுதிக்கும் உதவி செய்ய முயல்வதினால் அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஓ நல்லா பாராட்டுவீங்க தானே பர்சுகுள்ள படம் இருக்குது எனக்கு தெறியாது தானே

:angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அக்கா எமக்கு பிடிக்காதவர்கள் ஆனாலும் நல்ல காரியம் செய்தால் நாம் பாராட்ட தான் வேண்டும்

ஜம்மு அக்கா எமக்கு பிடிக்காதவர்கள் ஆனாலும் நல்ல காரியம் செய்தால் நாம் பாராட்ட தான் வேண்டும்

நேவர் தங்கா நாளைக்கு மகிந்த நல்லகாரியம் செய்தாலும் இதுகள் அதையும் புகழ்ந்து கொண்டிருக்குங்கள் நம்மன்ட சனம் தான் வீணா அழியும் சோ தங்கா நாம் யாரையும் வாழ்த்தும் போதும் குறிப்பறிந்து வாழ்த்த வேண்டும்

:D

தன்நம்மிக்கை இழந்தபோது, சாயிபாபா(சாத்தான்) கடவுள் ஆகிறான். அரசியல்வாதி என்றால் தங்க மோதிரம், ஏழை என்றால் திருனூறு கொடுக்கும் பித்தல்லாட்க்காரன். கோடி பெரியார் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கும்வரைக்கும் பாபா உமக்கு நேரம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.