Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்!

18.jpg

- ஜெ.வி.பிரவீன்குமார்

இந்திய மனங்களில் இன்று புரையோடிப் போயிருக்கும் சாதிய, மதவாத, பெண்ணடிமைத்தனப் போக்குகளை ஊக்குவித்ததிலும் அந்தக் கொடிய கட்டமைப்பு உடைபடாது காத்ததிலும் வழிவழி வந்த பல புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அவற்றின் நீட்சியாகப் பல புராண நாடகங்களும் அதையே வலியுறுத்தின. அவற்றை அடியொற்றி உருவான சினிமா மட்டும் சும்மா இருந்துவிடுமா? சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் படங்கள் அரிதினும் அரிதாக மட்டுமே வெளியாகும் சூழலில், சுய சாதியைப் போற்றும், பிற சாதிகளைக் கீழ்மைப்படுத்தும் படங்களைக் கணக்கில்லாமல் வெளியிட்டுத்தள்ளும் வேலையை ஒருபுறம் செவ்வனே செய்துதான் வருகிறது தமிழ் சினிமா. ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பேட்ட’ படமும் இதற்கு விலக்கல்ல.

உறவு அமைப்பில் தந்தைவழிச் சமூகத்துக்கும், சமூக வெளியில் ஆண் மையச் சிந்தனைகளுக்கும், நீதி போதனைகளில் உயர் சாதியினரின் நாட்டாமைத்தனத்துக்கும் காலங்காலமாகப் பழக்கப்பட்டுவிட்டதாலேயோ என்னவோ, சினிமாக்களில் இழிவுபடுத்தப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாகவுமே இன்றும் தொடர்கின்றனர். இந்தக் கீழ்த்தரமான வேலையைச் சில படங்கள் தெரிந்தே நேரடியாகச் செய்கின்றன. சில படங்கள் தெரியாமல் செய்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ இதில் எந்த ரகம் என்பதை வாசகர் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.

‘பேட்ட’ செய்த பிழை என்ன?

18a.jpg

படத்தில் ஸ்டைலிஷான ஹாஸ்டல் வார்டனாக வலம்வரும் ரஜினிகாந்த், ‘சிங்கம்’ சூர்யாவின் மீசையைக் கடன்வாங்கியதுபோல் ஃப்ளாஷ்பேக் சீன் ஒன்றில் சசிகுமாருடன் இணைந்து தோன்றுகிறார். அக்காட்சியில் ஊரில் ஆற்று மணல் எடுப்பவர்களைக் கண்டிக்கும் ரஜினி, சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்து ‘நாதாரிங்களா’ எனப் போகிறபோக்கில் திட்டிவிட்டுச் செல்கிறார். அதற்குப் பார்வையாளர்கள் கைதட்டுகிறார்கள். மீண்டும் ஓர் இடத்தில் அதே வார்த்தையைச் சொல்லி ரஜினி திட்ட, அதற்கும் கைதட்டுகிறார்கள். அதோடு விடவில்லை; தான் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்து ‘ஓட்டுக் கேட்டியாடா நாதாரி’ என மீண்டும் ஒருமுறை அதே வார்த்தையைச் சொல்லித் திட்டுகிறார் ரஜினி. பார்வையாளர்களின் கைதட்டலோ இம்முறை இன்னும் அதிகமாகவே வந்து விழுகிறது.

‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ எனும் பாரதியாரின் புகழ்பெற்ற சொல்லைத் தனது துவக்க ‘பஞ்ச்’ வசனமாகப் பேசி ‘பேட்ட’யில் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் என்ட்ரியில் அதைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள ரஜினி, அதே பாரதியார் சொன்ன ‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ எனும் வரிகளைப் படத்தின் பின்பகுதியில் தனது கவனத்தில் இறுத்திக்கொள்ள மறந்தது ஏன் எனத் தெரியவில்லை.

காரணம், ‘நாதாரி’ என்பது பன்றி மேய்க்கும் போயர் சமூக மக்களைக் குறிக்கும் ஒரு சொல்லாக அறியப்பட்டு வருகிறது. ஆனால், படத்திலோ அது தவறு செய்பவர்களை வசைபாடுவதற்கான ஒரு சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அரங்கு நிறைந்த கைதட்டல்களும் விசில்களும் பெருவாரியாகப் பறக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தவறென்றே தெரியாத அளவுக்கு அந்த வார்த்தை பொதுவெளியில் சகஜப்படுத்தப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்?

படத்தில் அந்த வசனம் இடம்பெறும் கதைக்களம் மதுரை. அந்தக் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சசிகுமாரும் மதுரை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஊரும் மதுரை என்றே அறியப்படுகிறது. இப்படியிருக்க அதே மதுரைப் பகுதியையொட்டிய பன்றி மேய்க்கும் மக்களுக்குத்தான் குறிப்பிட்ட அந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது இவ்விஷயத்தில் கூடுதல் கொடுமை.

18b.jpg

ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை?

நாதாரி மட்டுமல்ல சண்டாளர், பண்டாரம், பண்டி, கேப்மாரி, லம்பாடி என சினிமாக்களிலும் பொதுவெளியிலும் இழிவாகச் சித்திரிக்கப்படும் சாதிகள் பல. “நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்...”, “அட சாண்டாளப் பாவிங்களா...”, “பெரிய லம்பாடி பொம்பளையா இருக்கும்போல...” என சினிமாவில் வடிவேலு உள்ளிட்ட காமெடியன்களால் மேற்கண்ட வசனங்கள் உச்சரிக்கப்படும்போது அவை கதாபாத்திரங்களுக்கு இடையேயான சகஜமான உரையாடலென்பதைத் தாண்டி, நிஜ உலகில் சில சாதிகளையும் இழிவுபடுத்துகின்றன என்பதைப் பலரும் உணருவதில்லை அல்லது தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.

இப்படியாக அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது லம்பாடி என்பது ஒடுக்கப்பட்ட இனமென்றோ, சண்டாளர் என்பது பார்ப்பனப் பெண்ணாக அறியப்படும் ஒருவருக்கும், சூத்திர ஆணாக அறியப்படும் ஒருவருக்கும் பிறந்தவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தையாகப் பொதுச்சமூகம் கட்டமைத்து வைத்துள்ளதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு பலருக்கும் இல்லாமல் போகிறது. இந்தச் சொற்கள் உருவான பின்புலம் சமூக இழிவைக் குறிக்கிறது. இச்சொற்களை வசைச் சொற்களாகத் திரைப்படங்கள் இயல்பாகப் பயன்படுத்துவதன் மூலம் அந்த இழிவு பொதுப் புத்தியில் வலுப்படுகிறது. ஒரு சமூகத்தை ஒரு படத்தில் குறிப்பிடுவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பொதுப்படுத்தி இழிவாகச் சித்திரிக்கும்பட்சத்தில் அது ஏற்கத்தக்கதல்ல.

பேட்டயிலும் தொடரும் ‘பீப்’ சாங்க்

18c.jpg

சாதியை இழிவுப்படுத்துவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறமோ பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்திரிக்கும் பாடலையும் தன்னகத்தே கொண்டுள்ளது பேட்ட.

‘கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் கடந்து வர்றான் .... த்தா வெடியை ஒண்ணு போடு தில்லால...’

இந்தப் படத்தில் ரஜினி நடனமாடும் தொடக்க பாடலில் இடம்பெறும் வரிகள் இவை. பாடல் வெளியானபோதே குறிப்பிட்ட அந்த வரிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், படக்குழு அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஆடியோவிலோ, ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியீட்டின்போதோ தவறான வரிகள் இருக்கின்றன எனச் சுட்டப்பட்டபின் குறிப்பிட்ட வரிகளை நீக்கி வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பல. ஆனால், படமே ரிலீஸான போதும் அந்த வார்த்தையை நீக்கவில்லை என்றால் U/A சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை எப்படி எடுத்துக்கொள்வது?

தணிக்கைத் துறையின் போதாமை

திரைப்படம் ஒருவரின் எண்ணங்களையும் செயல்களையும் பெரிதும் ஊக்குவிக்கக் கூடியது; எனவே, திரைப்படத் தணிக்கை என்பது அவசியமாகிறது. ஒரு விஷயத்தைப் படிப்பதனால் ஏற்படும் தாக்கத்தைவிடப் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு. இருண்ட திரையரங்குகளில் கவனச் சிதறலுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு; இத்தருணங்களில் நடிப்பும், வசனங்களும் மக்கள் மனதில் மிக ஆழமாய்ப் பதியும் திறன் வாய்ந்தவை. ஒரு திரைப்படம் நன்மைகள் கற்பிக்கும் அதே அளவுக்குத் தீய கருத்துகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் வலிமையுடையது; எனவே இவற்றை மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட இனத்தையோ, மதத்தையோ, பிரிவையோ காட்சியின் வழியாகவோ, வார்த்தையின் வழியாகவோ தவறாகச் சித்திரிப்பது ஏற்புடையதல்ல. இவையெல்லாம் திரைப்படத் தணிக்கைத் துறை கவனிக்க வேண்டிய அம்சங்கள். ஆனால், அவையெல்லாம் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைத் தணிக்கைத் துறையினரும் திரைத் துறையினரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

https://minnambalam.com/k/2019/01/17/18

நாதாரி என்றது ஒரு சாதியைக் குறிக்கும் சொல் என்று இப்பதான் அறிகின்றேன். இந்த சொல்லை அடிக்கடி எழுத்தில் கூட பாவித்துள்ளேன். அதே மாதிரி சண்டாளர் என்ற சொல்லை கலைஞர் கருணாநிதி கூட பயன்படுத்தி இருக்கின்றார்.
 
இப்படியான கட்டுரைகள் சாதி பற்றிய பிரக்ஞை இன்றி பாவிக்கின்றவர்களுக்கு கூட சாதிய சாயத்தை போட்டு பார்த்து சாதியத்தை வளர்க்க உதவுகின்றனவா என சந்தேகம் எனக்கு வருவதுண்டு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

உங்களுக்கும்,எனக்கும் தெரியாத மாரிரி ரஜனிக்கும் தெரியாமல் இருக்கும்....இதை எல்லாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு 😟

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

தவறு செய்பவர்களை வசைபாடுவதற்கான ஒரு சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் அரங்கு நிறைந்த கைதட்டல்களும் விசில்களும் பெருவாரியாகப் பறக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தவறென்றே தெரியாத அளவுக்கு அந்த வார்த்தை பொதுவெளியில் சகஜப்படுத்தப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்?

வார்தைகளின் அர்த்தம் தெரியாமல் சகஜமாகப் பாவிக்கப்படுவதால் வரும் பிரச்சினை. ஆங்கிலத்திலும் f word வசைபாடவும், பாராட்டவும், சுயநிந்தனைக்கும் பாவிக்கப்படுகின்றது. ஆனால் பண்பில்லாத வார்த்தை என்று பொதுவாக தவிர்க்கப்படுகின்றது.

4 minutes ago, ரதி said:

உங்களுக்கும்,எனக்கும் தெரியாத மாரிரி ரஜனிக்கும் தெரியாமல் இருக்கும்....இதை எல்லாம் தூக்கிப் பிடித்துக் கொண்டு 😟

நிழலிக்கும் யாழ் கள விதிகள் மறந்துபோய்விட்டது!🤪

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

வார்தைகளின் அர்த்தம் தெரியாமல் சகஜமாகப் பாவிக்கப்படுவதால் வரும் பிரச்சினை. ஆங்கிலத்திலும் f word வசைபாடவும், பாராட்டவும், சுயநிந்தனைக்கும் பாவிக்கப்படுகின்றது. ஆனால் பண்பில்லாத வார்த்தை என்று பொதுவாக தவிர்க்கப்படுகின்றது.

நிழலிக்கும் யாழ் கள விதிகள் மறந்துபோய்விட்டது!🤪

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்

உதை நான் இப்ப தான் வாசிக்கிறேன்...இன்னும் கொஞ்ச நாளில் மறந்து போய் விடுவேன்...நன்றி இணைப்பிற்கு  

38 minutes ago, கிருபன் said:

வார்தைகளின் அர்த்தம் தெரியாமல் சகஜமாகப் பாவிக்கப்படுவதால் வரும் பிரச்சினை. ஆங்கிலத்திலும் f word வசைபாடவும், பாராட்டவும், சுயநிந்தனைக்கும் பாவிக்கப்படுகின்றது. ஆனால் பண்பில்லாத வார்த்தை என்று பொதுவாக தவிர்க்கப்படுகின்றது.

நிழலிக்கும் யாழ் கள விதிகள் மறந்துபோய்விட்டது!🤪

. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்

நாதாரி என்ற வார்த்தை வசவுச் சொல் அல்லது நக்கலடிக்க சொல் என்று தெரியும். பல தடவை நண்பர்களுக்கும் கதைக்கும் போதும் சொல்லியிருக்கின்றேன். ஆனால் சாதி என்று தெரியாது.

யாழில் நாதாரி என்று யாரையும் நான் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இவ்வளவு காலமும்  வடிவேலு இன்னும் பல நடிக நடிகைகள் நாதாரி நாதாரி என திட்டி பகிடியாயோ இல்லை சீரியஸ்சாயோ  கதைக்கேக்கை மின்னம்பல ஆசிரியர் என்ன கோமாவைலையே இருந்தவர்?  :grin:

ஒரு பொழுதுபோக்கிற்கான திரைப்படத்தைப் பற்றி எப்படியெல்லாம் கருத்துச் சொல்கிறார்கள். தூண்டி விடுகிறது என்பது இதைத்தானோ? 🤔

இவ்வாறான வார்த்தைகள் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துகின்றது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியமானது. இப்படி ஒருவர் எழுதாமல் விட்டிருந்தால் எமக்கு இது தெரியவாய்பில்லாமல் போயிருக்கும். முடிந்தவரை இவ்வார்த்தையை எதிர்காலத்தில் தவிரக்க உதவும். 

12 hours ago, கிருபன் said:

‘கெத்தா நடந்து வர்றான் கேட்டையெல்லாம் கடந்து வர்றான் .... த்தா வெடியை ஒண்ணு போடு தில்லால

இதே அனிருத்தும் சிம்புவும் பீப் பாடல் போட்டபோது சென்னையின் வெள்ள அவலத்தையும் மீறி கலாச்சாரப் போராட்டங்கள் நடந்தது. அதேபோல் ஒரே ஒரு எழுத்தை மெளனமாக்கி இந்தப்பாடல் உள்ளது ஆனால் இப்போது இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. காரணம் ரஜனிகாந் என்ற பிரபலம். 

இவ்வாறான சினிமா சொல்லாடல்கள் எப்படி இளைய சமூகத்தை பாதிக்கின்றது என்பதை  அறியவேண்டுமானல் த்தா டப்மாஸ் என்று ஆங்கிலத்தில் யுரிபில் தட்டினால் பார்க்கலாம். 

எமக்கு சினிமா பொழுதுபோக்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்பொழுதுபோக்குதான் அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றது. 

சினிமா நிச்சயமாக பொழுதுபோக்கு மட்டுமாக  இருப்பதில்லை. 

7 hours ago, சண்டமாருதன் said:

இவ்வாறான வார்த்தைகள் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்துகின்றது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியமானது. இப்படி ஒருவர் எழுதாமல் விட்டிருந்தால் எமக்கு இது தெரியவாய்பில்லாமல் போயிருக்கும். முடிந்தவரை இவ்வார்த்தையை எதிர்காலத்தில் தவிரக்க உதவும். 

இருந்தாலும் கூட இக்கட்டுரையாளர் சொல்வது போல சாதியத்தைக் கீழ்மைப்படுத்தும் விதத்தில் இத்திரைப்படத்தில் காட்சிகள் இல்லை. படத்தில் இடம்பெறும் ஒரு சில வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்படும் இப்படியான கட்டுரைகளே சாதியத்தை தூண்டிவிடுபவை. இவ்வாறு ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் கற்பித்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வார்த்தைகளைத் தணிக்கை செய்யவேண்டிவரும். அதாவது குறிப்பிட்ட சாதியைத் தாண்டி அவை பேச்சு வழக்கில் கலந்துவிட்டன. இது மொழிப்பயன்பாட்டில் இயல்பான ஒன்று. இனியும் அவற்றை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் வரையறை செய்தலே சாதியத்தை ஊக்குவிக்கும் செயலாகும். சாதியத்தை எதிர்க்க / ஒழிக்கப் பல வழிகள் உண்டு. இவ்வாறான 'ஊதிப் பெருப்பித்தல்கள்' அல்ல. 

Quote

வடிவேலு தமிழில் புகழ்பெறச்செய்த கெட்டவார்த்தைகள் பல. நாதாரி என்றால் மதுரைப்பக்கம் பன்றிமேய்க்கும் போயர்களைக்குறிக்கும் சொல். அவர்கள் புகார்செய்ததை அடுத்து அதை தணிக்கைத்துறை தடைசெய்தது. எடுபட்ட பயல் என்றால் பேதிநோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.

மேலும் வாசிக்க https://www.jeyamohan.in/2196#.XEKFF9JKjIU

மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009

12 hours ago, மல்லிகை வாசம் said:

இருந்தாலும் கூட இக்கட்டுரையாளர் சொல்வது போல சாதியத்தைக் கீழ்மைப்படுத்தும் விதத்தில் இத்திரைப்படத்தில் காட்சிகள் இல்லை. படத்தில் இடம்பெறும் ஒரு சில வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்படும் இப்படியான கட்டுரைகளே சாதியத்தை தூண்டிவிடுபவை. இவ்வாறு ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் கற்பித்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வார்த்தைகளைத் தணிக்கை செய்யவேண்டிவரும். அதாவது குறிப்பிட்ட சாதியைத் தாண்டி அவை பேச்சு வழக்கில் கலந்துவிட்டன. இது மொழிப்பயன்பாட்டில் இயல்பான ஒன்று. இனியும் அவற்றை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் வரையறை செய்தலே சாதியத்தை ஊக்குவிக்கும் செயலாகும். சாதியத்தை எதிர்க்க / ஒழிக்கப் பல வழிகள் உண்டு. இவ்வாறான 'ஊதிப் பெருப்பித்தல்கள்' அல்ல. 

ஒரு சமூகம் தம்மை நிந்திப்பதாக பல வருடங்களுக்கு முன்பு முறைப்பாடு செய்து தடைசெய்யப்பட்ட வார்த்தையை பிரயோகிப்பதும் அதை நியாயப்படுத்துவதும்  ஆரோக்கியமாக தென்படவில்லை. மேலும் இவ்வாரத்தை குறித்து அறியக்கூடியதாவது : அடிப்படையில் ஒருவரை பழிப்பதற்கோ அவமானப்படுத்துவதற்கோ சாதியில் தாழ்ந்தவர்களை சுட்டிக்காட்டுவதுபோல் இவ்வாரத்தை வடிவேலுசார்ந்த மதுரைப்பக்கம் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. அது பொதுவெளியில் நகைச்சுவையோடு கலந்து வெளிப்படும்போது ஏனையவர்களால் இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரிந்துகொள்ளப்படவில்லை. புரிந்துகொள்ளாமல் இவ்வார்த்தையை அதிகமானவர்கள் பொதுவெளியில் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட சமூகம் வேதனைக்கு உட்படுகின்றது.  இதன் பிரகாரம்  குறிப்பிட்ட சமூகம் இதை ஏற்கனவே முறைப்பாடு செய்து தடைசெய்துள்ளது.

On 1/17/2019 at 10:39 AM, கிருபன் said:

படத்தில் அந்த வசனம் இடம்பெறும் கதைக்களம் மதுரை. அந்தக் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சசிகுமாரும் மதுரை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஊரும் மதுரை என்றே அறியப்படுகிறது. இப்படியிருக்க அதே மதுரைப் பகுதியையொட்டிய பன்றி மேய்க்கும் மக்களுக்குத்தான் குறிப்பிட்ட அந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது இவ்விஷயத்தில் கூடுதல் கொடுமை.

மேலும் எமக்கு இந்திய சாதியக் கட்டமைப்புகளும் அதன் உட்பிரிவுகளும் பரிட்சயம் இல்லை. அதனால் இதை மேற்கொண்டு அணுகுவதும் சரிபிழை கருத்தாடடிலில் ஈடுபடுவதும் பொருத்தமற்றது எனக் கருதுகின்றேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.