Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் பிரபலமாகும் இலங்கை உணவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_1547779980-dab6b96f54.jpg

2019ம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவுவகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது.

லண்டன் ஹொப்பேர்ஸ், தி கோகனட் ட்ரீ, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் விற்கப் படும் ஆசியா ரேஞ்சு  வகைகளில் அதிகம் விலையாகும் இலங்கை உணவு வகைகள் போன்றவை சிறப்பான வகையில் இலங்கை உணவுகளை முன்னணிக்கு கொண்டுவர உதவி உள்ளன. மேலும், கொத்து லங்கா தரும் தெருவோர உணவான கொத்து ரொட்டி, தேங்காய் சம்பல் போன்றன மிகவும் தரமானவை.

முன்னர் இலங்கை உணவுகள், இந்திய உணவு வகையினுள் முடங்கி இருந்தது. இப்போது, அவ்வாறு இந்திய உணவு ஆக இல்லாமல், தனி அடையாளத்துடன் வீறு நடை போடுகின்றது என்கிறார் 'தி குரோஸ்ர்' பத்திரிகையின், பிரபலமாகும் உணவுகள் பத்தியின் ஆசிரியர் ஏமா வாட்சன். 

From surging health trends to hidden veg and Burmese cuisine, this is going to be another rollercoaster year in how we cook, shop, drink and eat at home and in restaurants.

1. Sri Lankan cuisine

Restaurants such as London’s Hoppers, mini chain The Coconut Tree and the success of the M&S Taste Asia range have put Sri Lankan food on the brink of a breakthrough. Think hoppers (bowl-shaped rice flour pancakes), kottu roti (fried veg, eggs, shredded roti and curry, as sold by street stall Kottu Lanka) and pol sambol coconut relish.

‘Before, Sri Lankan was lumped in with Indian cuisine but now, we’re not having an “Indian” anymore. It’s recognised in its own right,’ says Emma Weinbren, food trends editor at retail magazine The Grocer.

www.bbcgoodfood.com

தகவலுக்கு நன்றி நாதம். இவ் Restaurants களின் உரிமையாளர்கள் தமிழர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் கறி ரெஸ்டூரண்ட்ஸ் உரிமையாளர்களில் 85% பங்களாதேசிகள். இவர்கள் கறி சமையல்காரர்கள் தேவை என்று பலரை இறங்கினார்கள். வந்தவர்கள் இங்கே ட்ரைனிங் வழங்கப்படுகின்றது என்றவுடன் அரசு விசாரணையில் இறங்கி, பார்த்தால், அவர்கள் இங்கே சமைக்கும் கறி எதுவுமே அவர்கள் வரும் நாடுகளில் சமைப்பதோ, உண்பதோ இல்லை என்று அறிந்து விசா இப்போது கொடுப்பதில்லை.

அடுத்தவர்கள் இந்த இந்தியன் கறி. அடுத்த சுத்துமாத்து. பிரிட்டனில் கறி பரவிய அதே காலத்தில் தான் இந்தியாவினிலும் தென் முனை தமிழர்களின் கறி பரவியது.

உங்கள் கேள்வி, தமிழர்களால் தான்இலங்கை கறி பிரிட்டனில் மூலைக்கு மூலை பரவுகிறது ஆயினும், தமிழர்கள் ஏதோ காரணத்தினால் பெரிய சந்தையை இலக்கு வைக்காது, தமிழர்கள் மத்தியில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள்.

மறுபுறம் சிங்களவர்களில் வரும் ஒரு சிலராயினும், சிறப்பான ப்ரோமோஷன் செய்கிறார்கள். மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் சூப்பர்மார்கெட் வலையமைப்பு. இவர்கள் இந்திய உணவு வகைகளில், இலங்கை உணவு என தனியே அறிமுகப்படுத்த அது புகழ் பெற்று விட்டது. இந்தியன் கறி உணவகங்களில் அதிகூடிய விலைக்கு கிடைக்கும் உணவுகளிலும் பார்க்க இந்த ரெடி  டு ஈட் உணவு வகைகள் பிரபலமாகி உள்ளன. 

M&S SL Prawn Curry.

Image result for m&s sri lankan prawn curry

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

உங்கள் கேள்வி, தமிழர்களால் தான்இலங்கை கறி பிரிட்டனில் மூலைக்கு மூலை பரவுகிறது ஆயினும், தமிழர்கள் ஏதோ காரணத்தினால் பெரிய சந்தையை இலக்கு வைக்காது, தமிழர்கள் மத்தியில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள்.

மிகப்பெரிய உண்மை யானைக்கு தன் பலம் தெரியாது என்பது போல் நம்மவர்களின் நிலை ஒரு சில மாற்றம்களுடன் முக்கியம் சுத்தம் ஆக இருந்தால் பாரிய சந்தை மிக அருகில் உள்ளது! ஆனால் நம்மாட்கள் தவற விடுகிறார்கள் .

நண்பன் ஒருவன் வடமராட்சி சுத்தி பார்க்கபோய் எதேச்சையாய் விடிகாலையில் வல்வை பெற்றோல் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள அப்பக்கடையில் அப்பத்துக்கு வரிசையில் நிக்கும் சிங்களவர்கள் படம் அனுப்பி வைத்தான் (அங்கு கொண்டிரக் வேலை காரணமாக வரும் சிங்களவர்கள் தட்டுட்டன் வரிசையில் நிக்கிறா ர்கள் ) ஒரு வயதான அம்மா அப்பம் சுடும் காட்சி என்னடா இப்படி வரிசையில் நிக்கிறார்கள் என கேட்க்க ? அப்பம் அவ்வளவு ருசி மச்சான் அதான் இப்படி நிக்கிறார்கள் என பதில் . மறுபுறம் இங்கு புலத்தில் சாமத்திய வீடு கல்யான ஹோல்களில் நடு சாப்பாடாக அப்பம் சுடுபவர்கள் அநேகர் சிங்கள நோனாக்கள் அவர்களுக்கு மட்டும் அப்பம் சுடத்தெரியும் எனும் மனநிலை .

 லண்டனில் உள்ள ஒரு சைனிஸ் சாப்பாடுகடையிலே சைனிஸ் சாப்பாடு வேண்டுவதை நான் பார்த்தது இல்லை  அல்லது கெபாப் கடையிலே ஒரு அரபுக்காரன் கெபாப் வேண்டுவதில்லை இதை அவர்களிடம் கேட்டால் சிரித்து மழுப்பி கொண்டு நிப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ம கொத்துரொட்டி பேமஸ் இல்லையாப்பா :)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இதென்ன இப்படி சொல்கிறீர்கள்? என்ட பக்கம் முழுக்க துருக்கிக்காரர்கள்...அவர்கள் எந்த நேரம் பார்த்தாலும் அவங்கட உணவகத்தில் தான் சாப்பிடுகிறார்கள்.

சம்பல் போன்ற உணவகங்கள் மூலம் தான் எமது உணவினை வெளி நாட்டினர் அறிந்து கொண்டனர்...ஆனால் சம்பலோ சரி வேறு தமிழ்க் கடை,உணவகங்களோ வாடிக்கையாளருடன் எப்படி கதைப்பது என்று தெரியாது...குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதால் இருக்கும் 😶
 
1 hour ago, ரதி said:

சம்பல் மட்டுமல்ல, தாயகம் என்ற கடையிலுள்ளவர்களுக்கும் கதைக்கப் பேசவே தெரியாது.

மணித்தியாலத்திற்கு £3.50 என்றால், அவர்களின் கதையும் அப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இதென்ன இப்படி சொல்கிறீர்கள்? என்ட பக்கம் முழுக்க துருக்கிக்காரர்கள்...அவர்கள் எந்த நேரம் பார்த்தாலும் அவங்கட உணவகத்தில் தான் சாப்பிடுகிறார்கள்.

உங்கடை பக்கம் என்று லண்டனில் எந்த பக்கத்தை குறிப்பிடுகிறிர்கள்  நான் சொல்வது வெம்பிளி ,ஹரோ ,tooting ,மிச்சம் ,croydon ,லூசியம் இடையில் சவுத்தோல் ? ஒருவேளை இல்பேர்ட் லேன் ஆக இருந்தால் நீங்கள் சொல்வது சரியாகும் எங்கள் பார்வையில் மொட்டாக்கு எல்லாம் முஸ்லிம்தானே .

4 hours ago, thulasie said:

சம்பல் மட்டுமல்ல, தாயகம் என்ற கடையிலுள்ளவர்களுக்கும் கதைக்கப் பேசவே தெரியாது.

மணித்தியாலத்திற்கு £3.50 என்றால், அவர்களின் கதையும் அப்படித்தான் இருக்கும்.

தாயகத்தில் உணவு வாங்க ஒருமுறை போனேன் சன்பிளவர் எண்ணையின் புளுண்டல் வாசத்தை மூக்கு மணந்த பின் தப்பினேன் பிழைத்தேன் எஸ்கேப் . நம்ம நெடுக்கரின் அப்பக்கடை கொஞ்சம் தள்ளித்தான்   .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

உங்கடை பக்கம் என்று லண்டனில் எந்த பக்கத்தை குறிப்பிடுகிறிர்கள்  நான் சொல்வது வெம்பிளி ,ஹரோ ,tooting ,மிச்சம் ,croydon ,லூசியம் இடையில் சவுத்தோல் ? ஒருவேளை இல்பேர்ட் லேன் ஆக இருந்தால் நீங்கள் சொல்வது சரியாகும் எங்கள் பார்வையில் மொட்டாக்கு எல்லாம் முஸ்லிம்தானே .

தாயகத்தில் உணவு வாங்க ஒருமுறை போனேன் சன்பிளவர் எண்ணையின் புளுண்டல் வாசத்தை மூக்கு மணந்த பின் தப்பினேன் பிழைத்தேன் எஸ்கேப் . நம்ம நெடுக்கரின் அப்பக்கடை கொஞ்சம் தள்ளித்தான்   .

என்பீல்ட் பக்கம் பெருமாள்...நான் தாயகத்திற்கு ஒரு நாளும் போயில்லை 

20 hours ago, பெருமாள் said:

நம்ம நெடுக்கரின் அப்பக்கடை கொஞ்சம் தள்ளித்தான்   .

நெடுக்கர் அப்பக் கடையும் வைத்து இருக்கின்றாரா. லண்டன் பக்கம் வரும்போது நாலு அப்பம் சாப்பிடத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நெடுக்கர் அப்பக் கடையும் வைத்து இருக்கின்றாரா. லண்டன் பக்கம் வரும்போது நாலு அப்பம் சாப்பிடத்தான் வேண்டும்.

நெடுக்கரின் அப்பக்கடை என்று வந்துவிட்டது உண்மையிலை அவர் அப்பம் சாப்பிட்டு நொந்த கதை இங்கு கருத்துகளத்தில் பெரிதாய் போனது அதை நினைவு புடுத்த அப்படி போட்டன் நிழலி .

1 hour ago, ரதி said:

என்பீல்ட் பக்கம் பெருமாள்...நான் தாயகத்திற்கு ஒரு நாளும் போயில்லை 

லண்டனில் மற்ற எந்த பக்கம் போனாலும் தண்ணி வேண்டிக்கொண்டு இந்த அரபுகளின் கெபாப் கடைகள் போனால் ஐஸ் முதல் சகலதும் பிரியாய் வரும் உங்கடை பக்கம் நண்பனின் பெரியம்மாவை நாகபூசணி கோயிலில் இறக்கி விட்டு நாங்கள் கெபாப் ரெஸ்ட் டொராண்ட் க்குள் போக நண்பன் கொண்டு வந்த  தண்ணி போத்தலை கண்டவுடன் கலைத்து விட்டவன் . அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களும் முக்காடுகள் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.