Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் சமமான குடிகள் என்பதை 32 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி உணர்த்தியுள்ளார் ஆளுநர் சுரேன்ராகவன் தெரிவிப்பு

Featured Replies

இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உணர்த்தியிருப்பதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 
 
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் இது தொடரபாக கருத்து தெரிவிக்கையில்;, 
 
முப்பத்திரெண்டு ஆண்டுகள் கடந்து ஒரு தமிழனான என்னை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பதன் மூலம் இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிமக்கள் என்பதனை ஜனாதிபதி உணர்த்தியிருக்கிறார். நாம் ஒன்றுபட்டு விழுந்த எம் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். 
 
அதற்கு நாம் எமது கல்வித்துறையினை வளர்க்க வேண்டும். எமது கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு செய்யும் உதவிகளை நாம் நன்றிக்கடனுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் கல்வித் திணைக்களத்திடம் ஓர்கோரிக்கை விடுகிறேன். 
 
மாணவர்களைக் கஷ்டப்படுத்தாதீர்கள். எங்கள் வருகைக்காக மாணவர்கள், ஆசிரியர்களை வெயிலில் நிறுத்தாதீர்கள். நாங்கள் தான் மாணவர்களை மதிக்க வேண்டும். அடுத்த முறை நான் பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் வாழ்ந்து முடிந்தாகிவிட்டது.
 
வருங்கால உலகம் மாணவர்கள் கையில் உள்ளது. 21ஆம் நூற்றாண்டின் முக்கிய பகுதிகளை இன்றைய மாணவர்கள் தோளில் சுமக்கவுள்ளனர். உங்களுக்குள் இருக்கின்ற ஒருவன்  (மாணவன்) நாளைய நாயகனாக வேண்டும். அவன் பிரச்சினைகளை தீர்க்க வல்லவனாக இருக்க வேண்டும். வெறும் கட்டடங்களால் ஒரு உலகை உருவாக்க முடியாது. அந்த கட்டடத்தில் உள்ள புத்திக்கூர்மை உடையவர்களே நாளைய உலகை உருவாக்குவார்கள். 
 
மாணவர்களாகிய நீங்கள் வீறுகொண்டு எழ வேண்டும். உலகம் உங்கள் வசப்பட வேண்டும். அத்துடன் காலமும் அரசியலும் என் உற்ற நண்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை பறித்து விட்டது. அவர் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். காலம் சில வடுக்களை எம் மத்தியில் விட்டுச் சென்றுள்ளது. முழுச் சுதந்திர மக்களாக ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த பதவிக்கு, ரொம்பவே கூவுறார். 

நேற்று டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த கோசிப்  பத்தியில்.... ஒரு பச்சை அரசியல் பார்ட்டியும்  ஒரு நீல அரசியல் அரசியல் பார்ட்டியும் சந்தித்துக் கொண்டார்கள், தண்ணி அடித்துக் கொண்டே, மிக அண்மை வரை சீனியர் அமைச்சராக இருந்த அவரோ, மைத்திரி தான் மீண்டும் போட்டி போட, நம்மை பதவி எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே, வாக்குகள் வரும் என, ஒன்றுக்குமே உதவாத ஒரு சிலரை ஆளுனர் ஆக ஆக்கியுள்ளார். அதுகளுக்கு தலை கால் தெரியவில்லை என்று சொல்ல, அடுத்தவரோ, மறுக்காமல் சிரித்தாராம்.

முக்கியமாக கிழக்கு, வடக்கு ஆளுனரகளை தான் சொன்னார்களாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபாதாசன் said:
 
முப்பத்திரெண்டு ஆண்டுகள் கடந்து ஒரு தமிழனான என்னை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பதன் மூலம் இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிமக்கள் என்பதனை ஜனாதிபதி உணர்த்தியிருக்கிறார். நாம் ஒன்றுபட்டு விழுந்த எம் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். 
 

'சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாதாம்.' தமிழர்கள் தற்போது சூடுகண்டவர்களாக உள்ளனர். சிங்களம் நியமிக்கும் எவரையும் தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை. நாங்கள் அறிந்துகொண்ட கதிர்காமர் தொடங்கி இன்றைய கருணாவரையில் அனைவரையும் தமிழர் என்றுதான் சிங்களம் சொல்லிவருகிறது.

2 hours ago, பிரபாதாசன் said:

இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உணர்த்தியிருப்பதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

பசுத் தோல் போர்த்திய ஓநாயின் சாயம் வெளுக்கிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.