Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்!

0a765ae3bb289b44652e0b9938c7e08a?s=26&d=By Admin Last updated Feb 7, 2019
 
 
Share

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

 இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

Picture-620-copy.jpg

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

suresh-300x223.jpgசிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

Picture-619-copy.jpg

அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர். திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

Picture-618-copy.jpg

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது. திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார். அதனால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா. அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

திருச்செல்வத்தின் மகன் அகிலனை நான் நன்கு அறிந்திருந்தேன். அமைதியான சுபாவம் கொண்ட படிப்பு விளையாட்டு என சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவன்.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார். தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான்.

Picture-617-copy.jpg

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத்தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.
அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள் படுகொலைகளை தட்டிக்கேட்டார்.

Picture-616-copy.jpg

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்ய திட்டமிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வணபிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

Picture-615.jpg

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம் அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நன்றி தாரகம்.

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இந்த தொடுப்பு வந்தது இணைக்கலாமோ  யோசித்துவிட்டு விட்டு விட வேண்டி வந்தது இன்னமும் தமிழ்தேசிய கூட்டமைப்பை மட்டகளப்பில் வாங்கிய ஏச்சுக்கள் சம்பந்தபட்ட ஒளி நாடா சொல்லாமல் கொள்ளாமல் தூக்கப்பட்ட பின் இங்கும் சுரேஷ் பிரேமசந்திரன் தற்போதைய அரசியல் வாதிகளுக்கு காந்தி போன்றவரின் உண்மயான சுய ரூபம் வெளிபடுவது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்பதால் இணைக்கவில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, பெருமாள் said:

முகநூலில் இந்த தொடுப்பு வந்தது இணைக்கலாமோ  யோசித்துவிட்டு விட்டு விட வேண்டி வந்தது இன்னமும் தமிழ்தேசிய கூட்டமைப்பை மட்டகளப்பில் வாங்கிய ஏச்சுக்கள் சம்பந்தபட்ட ஒளி நாடா சொல்லாமல் கொள்ளாமல் தூக்கப்பட்ட பின் இங்கும் சுரேஷ் பிரேமசந்திரன் தற்போதைய அரசியல் வாதிகளுக்கு காந்தி போன்றவரின் உண்மயான சுய ரூபம் வெளிபடுவது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்பதால் இணைக்கவில்லை .

நானும் இந்த பதிப்பு வெளியானவுடன் வாசித்தேன்.யாழில் இணைக்கவா விடவா என பல கோணங்களில் யோசித்தேன். நேற்றிரவு வேண்டாம் என முடிவுக்கு வந்து விட்டேன்.

இருந்தும் புலிகளின் சகோதர படுகொலை என்ற திரியை இன்னுமொரு தடவை இன்று வாசித்த பின் முடிவை மாற்றிக்கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு மிக்க நன்றி குமாரசாமி.

முதலமைச்சர் விக்கியரின் மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாதர் சந்திரா அற்புதமான ஒரு மனிதர்...கத்தருக்குள் இளைப்பாறட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஈ. பி ஆர். எல் எவ்வின் இரத்தவெறி தயாராகும் சாட்சிகள்

_18636_1549777249_0EBDA212-875D-4900-9E60-E18D364886FF.jpeg

(மட்டுநேசன்)

 எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் நானும் றிபாயாவும் கடத்தப்பட்டமை, றிபாயா காணாமல் போகச் செய்யப்பட்டமை பற்றி நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த செல்வி சுகுணா. காத்தான்குடியைச் சேர்ந்த றிபாயா தனது தோழி சுகுணாவுடன் சேர்ந்து துவிச்சக்கரவண்டி ஒன்றை வாங்க 1988 இல் மட்டக்களப்பு நகருக்கு சென்றார். அச்சமயம் இரா. துரைரெட்ணத்தால் இவர்கள் இருவரும் விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டனர். தமது வாகனத்தில் வருமாறு இரா. துரைரெட்ணம் பணித்தபோதும் நாங்கள் சைக்கிளில் வருகிறோம் என சுகுணாவும் நிபாயாவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். பணிமணைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தொலைத்தொடர்புக் கருவியொன்றில் 'சுதந்திரப் பறவையைக் கொண்டுவந்துள்ளோம்' என ஒருவர் வேறொருவருக்குகத் தகவல் சொல்வதை இருவரும் கேட்டுள்ளனர். அங்கு நடந்த மிகக் கொடூரமான சித்திரவதைகளின்போது சுகுணா மயங்கி விட்டார். றிபாயாவை நன்கு தெரிந்த சைக்கிள் கடைக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது இந்திய இராணுவ காலமாகையால் அவர்கள் அறிவித்த ஊரடங்கு அமுலில் இருந்தது. எனினும் வண.பிதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தமையால் குறிப்பிட்ட முகாமுக்கு வண.பிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கு மயக்க நிலையில் சுகுணா மட்டும் காணப்பட்டார். றிபாயவைப் பற்றிய தகவல் தெரியவில்லை. 10/10/2017அன்று வட, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் பொன். ராம் ராஜகாரியர் வெளியிட்ட தகவல் ஒன்றின் மூலமே பாலியல் வன்புணர்வின் பின்னர் றிபாயா கொன்று புதைக்கப்பபட்டார் என்பதை அறிய முடிந்தது. 'வந்த பெருநிதியை முக்கியமானவர்கள் தமக்கும் தம் உறவுகளுக்கும் முடக்கியபின் எஞ்சியதை ஏனையவர்க்குப் பகிர்கையில் பலதும் நடந்தது. காத்தான்குடி பெண்ணை இச்சைக்காக சுகித்துப் புலி என மண்ணுள் புதைத்து மாகாண சபைக்கு வந்தவன்"  என முகநூலில் குறிப்பிட்டிருந்தார் ராம். 'பிறின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும்போதே நினைவு மீட்கும் என் பதிவு" என்ற தலைப்பில் இது வெளியாகியிருந்தது. (– ராம் – (rajmali@hotmail.co.uk)

றிபாயா - சுகுணா கைது செய்யப்பட்டமைப பற்றி இந்தியப் படையினரிடம் முறைப்பாடு செய்த வண.பிதா சந்திரா பெர்னாண்டோ 06 ஜூன் 1988 அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்தே இவரைக் கொன்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும் இராணுவ துணைப் படையாக விளங்கிய ராஸிக் குழுவில் அங்கம் வகித்த இரா. துரைரெட்ணம் மட்டக்களப்பு மண்ணில் மீண்டும் கால் பதித்தார். இதனால் சுகுணா மட்டக்களப்பு நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இவர் தனக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமானால் றிபாயாவுக்கு நிகழ்ந்த அவலம் குறித்து நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரங்களுக்குக் காரணமான இரா. துரைரெட்ணம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மாநாட்டில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். இம்மாநாட்டில் வரலாற்றுக் குறிப்பேடு என்று ஒரு சிறுநூலை வெளியிட்டனர். இதில் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாணத்தில் புலிகளின் முகாமுக்குப் பாதுகாப்பாக நின்ற சுரேன் (திருச்சிற்றம்பலம் சுரேந்திரன் - நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்) என்ற போராளியைச் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்த படுகொலைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஈரோஸ் இயக்கத்தவரைக் கொன்றதைக்கூட மறந்து விட்டனர்.

'திம்பு பேச்சுக் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மத்திய குழு உறுப்பினரும் அதன் செயலாளர் நாயகமும் புரட்சி இராணுவக் கமிசன் தலைவருமான தோழர் க.பத்மாநாபா என்று சில இராணுவப் பதக்கங்கள் சூட்டிய படத்துடன் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. 'பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தமும்' என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் 18 ஆம் பக்கத்தில் இந்தியா தனது நலனில் இருந்து எமது போராட்டத்தை அணுகுகிறது எனச் சிலர் எல்லாம் தெரிந்தது மாதிரி சொல்கின்றனர். அப்படியே தனது நலனிலிருந்து இந்தியா இப்போராட்டத்தை அணுகுகிறது என்று வைத்துக் கொள்வோம் அதில் என்ன தவறு?' எனக் கேட்டிருந்தார். தோழர் பத்மநாபா இவ்வாறு ஒரு நூலை வெளியிட்டமை பற்றி இந்த வரலாற்றுக் குறிப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை. அதற்கு நிச்சயம் மறதி காரணமாக இருந்திருக்க முடியாது.

இன்று முன்னாள் எம்.பி. பசீர் சேகுதாவூத் றிபாயா குடும்பத்தவரைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது முகநூலில் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். பசீர் சேகுதாவூத் முயற்சியெடுத்து றிபாயாவின் பெற்றோர் மூலம் இநதக் கொலை பற்றி விசாரிக்கப்படுமானால் தான் சாட்சியமளிக்கத் தயார் என சுகுணா தெரிவித்துள்ளார். சூளைமேடு படுகொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் சாட்சியமளித்துள்ளார். அதன் மூலம் நீதிமன்று வீடியோ கொன்பிரன்ஸ் சாட்சியத்தை ஏற்றுக் கொள்கிறது என்பது தெளிவாகிறது. றிபாயா குடும்பத்தினரும் பசீர் சேகுதாவூத்தும் இணைந்து முயற்சித்தால் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படக்கூடும். (சுகுணா புலம்பெயர் நாடொன்றில் வசிக்கிறார்)

றிபாயா மட்டுமல்லாது வண.பிதா சந்திர பெர்னாண்டோ, இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் வனசிங்கா (31.03.1989), அதிபர் கனகரத்தினம் (13,05,1988) அதிபர் கணபதிப்பிள்ளை (ஆரையம்பதி), கிராம சேவை அலுவலர் தேவிசுதன் (கொம்மாந்துறை) ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை பற்றி எந்த விசாரணையும் நடந்ததாகத் தெரியவில்லை. களுதாவளையில் முத்துலிங்கம் என்பவரைக் கொன்றுவிட்டு அவரது சடலைத்தை வாகனத்தில் கட்டியிழுத்தனர்.

இதேபோல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட 'தம்பி கொழும்பில்' நாடகத்தின் இயக்குநரும் பிரபல நடிகரும் சிரித்திரன் முதலான பத்திரிகைகளில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியவருமான குமார், தனபால் முதலானோர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டமை பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியில் மிக நீண்டது. இதில் அசோகா ஹோட்டல் படுகொலைகளும் குறிப்பிடத்தக்கவை. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கண்ணன் (குலசேகரம் நாகேந்திரன் - கணேசபுரம், கிளிநொச்சி), ராசா (சிறாம்பியடி, யாழ்ப்பாணம்) முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்சிற்றம்பலத்தின் ஒரே மகன் அகிலன், பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணா ஆகியோரின் படுகொலைகளும் யாழ். கல்வி சமூகத்தை அதிர வைத்தது.

இவையனைத்தையும் 'வரலாற்றுக் குறிப்பேடு' என புகைப்படங்களுடன் விபரமாக வெளியிட்டால் முன்னாள் முதலமைச்சர் அதனைக் கையில் வைத்திருக்க முடியாது தடுமாறி  விழுந்து விடுவார். அரசியலுக்குப் புதியவரான முன்னாள் முதல்வர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டமை ஏமாற்றமளிக்கிறது. ஒரு கட்சியின் மாநாடு என்று அழைக்கப்பட்டால் அதற்குரிய அளவில் மட்டுமே அவரது பங்குபற்றுதல் இருந்திருக்க வேண்டும். தமக்கு வெள்ளையடிக்க முன்னாள் முதல்வரை பகடைக் காயாக்கியது சரியான செயலன்று.

றிபாயா - சுகுணா சித்திரவதைக்குள்ளான வாவிக்கரை முகாம் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியகமாக மாறியது. மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பணிமனையாக இப்போது காட்சியளிக்கிறது. இந்த

முகாமில்தான் கடந்த வருடம் மே தின நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயலர் கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டார். மே நாள் தொழிலாளருக்கானது அதில் கட்சி பேதமின்றி கலந்து கொள்வது தவறல்ல எனினும் இந்த இடத்தில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு, சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றை நினைத்திருந்தால் இந்நிகழ்வை வேறு இடத்தில் நடத்துமாறு கட்சிச் செயலர் கோரியிருக்கலாம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இரத்தவெறிக்கு மட்டக்களப்பில் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் விவரம்:

வீரவேங்கை :நரேஸ்(ஏபிராகாம்லிங்கன், விஜயசுதன், பாஷையூர், யாழ்ப்பாணம்.) 24.12.1986

வீரவேங்கை லத்தீப் முகமது (அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு)24.12.1986

மேஜர் பிரான்சிஸ் (இராசையா சடாட்சரபவன், கோட்டைக்கல்லாறு) 31.10.1988

லெப்.அனிதா (சித்திராதேவி தம்பிராசா, ஆரையம்பதி, மட்டக்களப்பு) 28.01.1988

வீரவேங்கை பாண்டியன் (அருள் டேவிட், தாழங்குடா) 20.02.1988

வீரவேங்கை றிஸ்வான் (மாமாங்கம் தெட்சணாமூர்த்தி, திருப்பழுகாமம்) 17.03.1988

வீரவேங்கை யூலி யூலியன் (புத்தூர்) 20.03.1988.

லெப். அரசன் இராம்குமார் (தாமரைக்கேணி)25.03.1988

வீரவேங்கை ஈஸ்வரன் (தம்பிராசா ஆழ்வார்போடி, புதுக்குடியிருப்பு) 13.04.1988

வீரவேங்கை மகேஸ்(பாலகிருஸ்ணன் மகேஸ்வரன், கோட்டைக்கல்லாறு) 02.06.1988

வீரவேங்கை உதயன் (ச.இன்பராஜ் மாமாங்கம், மட்டக்களப்பு) 24.06.1988

வீரவேங்கை குரு (சித்திரவேல் சத்தியநாதன் 37 ஆம் கிராமம்) 28.06.1988

வீரவேங்கை நோபேட் (நல்லையா சிறீபாலன் ஆரையம்பதி) 03.07.1988

வீரவேங்கை காளி (ஞானசேகரம் சின்னத்தம்பி பழுகாமம்) 06.07.1988

வீரவேங்கை குருசாமி (கா.இரத்தினசிங்கம் களுதாவளை) 14.08.1988

வீரவேங்கை வினோபா (க.ஜெகதீஸ்வரன் களுவாஞ்சிக்குடி)14.08.1988

வீரவேங்கை முரளி (பீதாம்பரம் நந்தகுமார் ஆரையம்பதி) 12.1988

2ம் லெப். மேகன் (சீனித்தம்பி தயானந்தன் கல்குடா, வாழைச்சேனை) 22.03.1989

வீரவேங்கை தயாளன் (கணபதிப்பிள்ளை கோபாலரத்தினம் துறைநீலாவணை) 16.07.1989

வீரவேங்கை சீராகரன் (நீலாவணை) 16.07.1989

வீரவேங்கை ஈஸ்வரன் (ஆரையம்பதி, மட்டக்களப்பு) 16.07.1989

வீரவேங்கை நந்தன் (சின்னத்தம்பி நந்தகுமார், 38ஆம் கிராமம்)14.08.1989

வீரவேங்கை கண்ணன் (பெரியபோரதீவு)14.08.1989

வீரவேங்கை மகாராஜன் (வே.தட்சிணாமூர்த்தி )15.08.1989

2ம் லெப். அசோகன் (க.ஜீவராசா 40ம் கிராமம்) 11.09.1989

வீரவேங்கை முகிலன் (இராசமாணிக்கம் ஜீவராசா கோட்டைக்கல்லாறு) 05.11.1989

கப்டன் ஜோன்சன் (சுந்தரலிங்கம் நிசாந்தன் சந்திவெளி) 05.11.1989

கப்டன் காதர் (வைத்தியபிள்ளை கீர்த்திசீலன் கோயில்போரதீவு) 05.11.1989

வீரவேங்கை சங்கர் (வக்கர்) (அந்தோனிப்பிள்ளை ஜெயலிங்கம் மட்டக்கழி) 05.11.1989

வீரவேங்கை நேசன் (தில்லையம்பலம் ராஜூ புல்லுமலை) 05.11.1989

வீரவேங்கை வேணு (குஞ்சித்தம்பி தயாளன் கொம்மாந்துறை) 06.12.1989

வீரவேங்கை கோத்திரன் (சமுத்திரன்)( தவநாயகம் சந்திவெளி) 11.12.1989

வீரவேங்கை பிரசாத் (அமரசிங்கம் பேரின்பராசா எருவில், களுவாஞ்சிக்குடி)19.12.1989

வீரவேங்கை தாமு (அண்ணாச்சி) (சின்னத்தம்பி ரணசிங்கம் ஒல்லிக்குளம்) 23.12.1989

 

http://www.battinaatham.net/description.php?art=18636

 

  • கருத்துக்கள உறவுகள்

பாதர் சந்திரா பெர்ணாந்து கொல்லப்பட்ட சில நிமிடங்களில் நானும் இன்னும் சில மாணவர்களும் அவரைப் போய்ப் பார்த்தோம். இங்கே கூறப்பட்டிருப்பதுபோன்று அவர் மாதா கோயிலுக்குள் சுட்டுக் கொல்லப்படவில்லை. மாறாக, மாதா கோயிலுக்கு அருகிலுள்ள அவரது வதிவிடத்தில், அவரது அலுவலக அறையில், கதிரையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார், அவரது முகத்தில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருந்ததாக நினைவு. அந்த அறையெல்லாம் ரத்தக்கறை. 

உடனே வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லக்கூட எவரும் இருக்கவில்லை.

நான் மிகவும் அருகாமையில் பார்த்த கொலைகளில் இதுவும் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.