Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்திக பத்திரன கிளிநொச்சியில் – பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை எழுச்சி பெறுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 12, 2019

PUTHIGA1.jpg?zoom=1.440000057220459&resi
பரந்தனில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையில், இரசாயன தொழிற்சாலையை மீளவும் ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் இரண்டுமணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு சென்று, அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பற்றிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி உள்ளார். அத்துடன் ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தையும் பார்வையிட்டுள்ளார். இதன் பின் கருத்து வெளியிட்ட அவர், ஐந்து மாடிகளை கொண்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏக்கர் காணி வனாந்தரமாகக் காட்சியளிக்கிறது.

எனவே, இங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலான இரசாயன தொழிற்துறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முதலீட்டாளர்களை இணைத்து இந்நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசித்துள்ளதாகவும் குறிப்பட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கிலுள்ள தொழிற்துறையாளர்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தடைகள் மற்றும் அவர்களுக்கான ஊக்குவிப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த பயணத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PUTHIGA3.jpg?zoom=1.440000057220459&resiPUTHIGA2.jpg?zoom=1.440000057220459&resi

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தா?!
எனது மாமனார் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். பின்பு அமெரிக்காவில் வசித்து வநதவர், 2009 ஆம் ஆண்டளவில் நுரையீரற் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
பணிபுரிந்து நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் வந்ததனால் அதன் காரணமாக என்று கருதமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆபத்தா?!
எனது மாமனார் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். பின்பு அமெரிக்காவில் வசித்து வநதவர், 2009 ஆம் ஆண்டளவில் நுரையீரற் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
பணிபுரிந்து நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் வந்ததனால் அதன் காரணமாக என்று கருதமுடியுமா?

என்ன வயதில் இறந்து போனார் தோழரே...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆபத்தா?!
எனது மாமனார் பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். பின்பு அமெரிக்காவில் வசித்து வநதவர், 2009 ஆம் ஆண்டளவில் நுரையீரற் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
பணிபுரிந்து நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் வந்ததனால் அதன் காரணமாக என்று கருதமுடியுமா?

புலி  வளர்ந்த  இடமல்லவா  அது.

எனது  மைத்துணர்  ஒருவரும் 70  கடைசிகளிலிருந்து 80  தொடக்கம் வரை  அங்கு வேலை  செய்தார்

தற்பொழுது  பலவகை  நோய்களால்  அவதிப்படகிறார்

அது தான் காரணமா  என்று  தெரியவில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மியாவ் said:

என்ன வயதில் இறந்து போனார் தோழரே...

72 வயதில் இறந்தார்.

10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

72 வயதில் இறந்தார்.

10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.

அப்படி என்றால் தங்கள் மாமனாரின் நுரையீரல் சாமானிய மனிதனைவிட சற்று குறைவான ஆற்றலே பெற்றிருந்தது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்...

நகர புறத்தில் வாழும் மனிதன் எந்தவித தீய பழக்கங்கள் இல்லாமலேயே தினசரி இரண்டு சிகரெட் புகைப்பதற்க்கு ஈடாக சுவாசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன...

Edited by மியாவ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.