Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

 

ferry-300x199.jpgபொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் அங்கு புதிய முனையம் அமைக்கப்படும்.

அங்குள்ள பழைய சீமெந்து தொழிற்சாலை அகற்றப்படும். அங்கு புதிய முனையம் அமைக்கப்படும்.

மன்னார்- வவுனியா- திருகோணமலை இடையிலான நெடுஞ்சாலைக்கும் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இந்த தாங்கிகள் எமது தேவைக்கும் அதிகமானவை. எனவே இந்தியாவின் தேவைக்கான எண்ணெயையும் இங்கு களஞ்சியப்படுத்தப்படும்.

வடக்கில் தென்னைகளைப் பயிரிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இங்கு காணிகளை வாங்கி தென்னைகளை பயிரிட பாரிய தோட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

சிறிய காணிகளை உரிமையாளர்களிடம் இருந்து அவர்கள் குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். கூட்டு முயற்சி நிறுவனங்களையும் இயக்கலாம்.

அதுபோல பனைமரங்களை பயிரிடும் திட்டமும் விரிவுபடுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/02/19/news/36489

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கப்பல் சேவையினால் தென்னிந்திய குப்பைகள் இலங்கைக்கு வராமல் இருக்க வேண்டும்

1 hour ago, colomban said:

இந்த கப்பல் சேவையினால் தென்னிந்திய குப்பைகள் இலங்கைக்கு வராமல் இருக்க வேண்டும்

 தென்னிந்திய குப்பைகளை நுகராத தமிழினம், இலங்கையில்  இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இந்த கப்பல் சேவையினால் தென்னிந்திய குப்பைகள் இலங்கைக்கு வராமல் இருக்க வேண்டும்

கடுமையான கண்டனங்களை  தெரிவிக்கின்றேன்

முதலில்  உங்களை துடையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ரணில் வெறும் பிரதமர் மட்டுந்தான்  என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். இந்தத்திட்டங்களால் பயன்படப்போவது உள்ளுர் மக்களா அல்லது இந்தியாவா சிறிலங்காவா? முதலில் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு  அமைய அவர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும். தமிழ் பிரதேசங்களிலிருந்து  இராணுவம் திரும்பப் பெறப்பட்டு காடையர் வாள்வெட்டுக்குழு என்பன அடக்கப்படவே ண்டும். இவை நடைமுறைப்படுத்தப்படாவிடின் எந்தத்திட்டங்களும் தமிழருக்கு உதவாத திட்டங்கள்தான். எமது மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ ஆவன செய்துகொடுக்கப்படவேண்டும்.

ரணில் சொல்வது  வெறும் திட்டங்கள் மட்டுந்தானா  அல்லது திரைமறைவில் போடப்படும் சதிவலையா? மகிந்த  ரணிலின் அரசைக் கவிழ்க்க சதிப்புரட்சி செய்தபோது  பரிதாபகரமாக அலரிமாளிகையில் ஒழிந்திருந்த ரணில் தமிழ் பிரதேசங்களில் புதிய திட்டங்கள் பற்றி பேச புறப்பட்டிருக்கிறார்.  இவை நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வரப்போவதை கட்டியங்கூறுகிறது.

இந்தியா இதுவரை சிறிய படகில் தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்த போதைப்பொருட்கள் இனிமேல் பொதுமக்களின் பாவனைக்கென்று விடப்படும் பெரியகப்பல்களில்  கொள்கலன்களில் ஏற்றப்பட்டு இலங்கை இந்திய அரசுகளின் முழு ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைக்கப்படும். அவற்றை முஸ்லிம் அரசியல்வாதிகளும் இராணுவ காடையர்ககளும் தமிழ் பிரதேசங்களில் விற்று எமது இளைய சமுதாயத்தைச் சீரழிப்பார்கள்.

ஆமாம் வடக்கில் எல்லா இடத்திலும் தென்னையை பயிரிடுங்கள் அதைவைத்து தமிழ் சமுதாயம் தலைமுறை தலைமுறையாக தேங்காயில் நார் புடுங்கி வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு ரணில் புதிய வழியொன்றைச்சொல்கிறார். பாரிய தோட்ட நிறுவனங்களில்  வகைதொகையின்றி சிங்களைவர்கள் வேலைக்கமர்த்தப்படுவார்கள்.  எமது தமிழ் அரசியல் வாதிகளுக்கோ சிங்கள அரசின்  கபடத்தனமான நிகழ்ச்சிநிரலுக்கெதிராக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட திராணியில்லை.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.