Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாபுலவு மக்களுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு தீர்வின்றி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 27, 2019

suren-raghavan.jpg?zoom=0.90249998867511

கேப்பாபுலவு பகுதியில் தமது பூர்விக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கும் வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவனுக்குமிடையில் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு உடனடி தீர்வுகள் ஏதுமின்றி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வட மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் 3 பேரும், கலந்து கொண்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கலந்துரையாடலில் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் ஆளுநர் காணி உரிமையாளர்களும் இராணுவத்தினரும் நேரடியாக சந்தித்து தமது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு மக்கள் மத்தியில் காணி தொடர்பான குழப்பம் உள்ளதால் குழு ஒன்றை அமைத்து அதனூடாக மக்களின் விருப்பங்களை அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கேப்பாபுலவு மக்கள் தமது காணிகள் குறித்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளமையால் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியாத நிலமை காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது காணி விடுவிப்பு தொடர்பில் ஒரு கருத்தினையும் போராடடத்தில் ஈடுபடாத பத்து பேர் அளவில் வேறு ஒரு கருத்தினையும் கூறுவதால் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/114630/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஈடுபடாத அந்த பத்துபேர் யார் என்பதை விளக்கமாக கூறினால் நாங்களும் அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளலாம். அவர்கள் இராணுவத்தின் கைக்கூலிகளா? அல்லது ஆளுனர் இவர்களை வைத்து பேச்சுவார்த்தையை குழப்பியடிக்க முன்னெச்செரிக்கையாக இந்த 10 பேரை தயார்செய்து வைத்தாரா? போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் மட்டுந்தானே பேச்சுவார்த்தை பின் எதற்காக போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் கருத்து இங்கு முக்கியத்துவம் பெறுகிறது?

இந்த ஆளுனர் தோற்றத்தில் சிங்களவர் போல் இருக்கிறார். போதாகுறைக்கு ஜனாதிபதி தன்னிடம் வலுக்கட்டாயமாக வந்து வடக்கின் ஆளுனர்பதவியை பொறுப்பெடுத்துக்கொள்ளும்படி கேட்டு அதன்பின் தான் இந்த பதவியை ஏற்க ஒப்புதல் கொடுத்ததாகவும் சொல்கின்றார். இவர் தமிழ் மக்களின் நன்மைக்காக சேவையாற்றும் ஒரு தமிழராக தெரியவில்லை. ஜனாதிபதிக்கு விசுவாசமான ஒரு அரச ஊழியர் என்றுதான் சொல்லவேண்டும். தமிழர் ஒருவரை அனுப்பும்படி கேட்க ஒரு தமிழ் சிங்களவரை அனுப்பிவைத்திருக்கிறார் ஜனாதிபதி.

10 hours ago, பிழம்பு said:

இதேவேளை கேப்பாபுலவு மக்கள் தமது காணிகள் குறித்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளமையால் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியாத நிலமை காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

சும்மா எதுக்கெடுத்தாலும் 100க்கு 100 ஒத்த கருத்து என்று அரைவேக்காடுகளைப் போல பிதற்றிக் கொண்டிருக்காமல், ஒரு குடும்பம் அல்லது ஒரு தனி மனிதன் தனது சொந்த நிலம் தனக்குத் தேவை என்று கேட்டாலும் அது அவனுக்கு உரிய நட்டஈடுகளுடன் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் முகவர்களின் சதித்திட்டங்களுக்கு இரையாகாமல் சொந்த மூளையை பாவிக்கும் திறமையை அல்லது தனது களிமண் மூளையை சுத்தப்படுத்தி விருத்தி செய்ய சாந்தி சிறிஸ்கந்தராஜா முன்வர வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் தன்னை பணிக்கமர்த்தியவர்களுக்காக பணிபுரிகிறார்.

On 2/27/2019 at 8:05 PM, பிழம்பு said:

இதேவேளை கேப்பாபுலவு மக்கள் தமது காணிகள் குறித்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளமையால் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியாத நிலமை

வடக்கில் பௌத்த மகாநாடு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால் சிங்கள கொலைகார அரசின் முகவரான  சுரேன் உடனடியாக அந்த மகாநாட்டையும் கைவிட வேண்டும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.