Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவந்தாய்யா யோக்கியன் . . .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவந்தாய்யா யோக்கியன் . . .

 
53160532_2549563745115098_3123165437282484224_n.jpg
 
 
அபிநந்தன் பாதுகாப்பாக திரும்பி வந்தது குறித்த ஒரு சங்கியின் ட்விட்டர் பதிவு இது. அபிநந்தனை வைத்து போருக்குப் போகலாம் என்று உசுப்பேத்திக் கொண்டிருந்த மாலன் உள்ளிட்ட  பலர் அவர் திரும்பி வந்ததும்  கள்ள மௌனம் சாதித்தார்கள்.
 
அவர்கள் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசிய இந்த சங்கியின் நேர்மை பாராட்டுக்குரியது.
 
அந்தாள் சொன்னதை தமிழில் சொல்கிறேன்.
 
"அபிநந்தனின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன். எதிரியின் கருணையால் உயிரோடு திரும்புவதைக் காட்டிலும் இறந்து போவதே மேல்.  வருந்துகிறேன் அபிநந்தன், நீங்கள் சக்தி மிக்க தலைவரை தழுவிக் கொண்டு விட்டீர்கள். உங்களை நினைத்து நான் பெருமிதப்படவில்லை"
 
பிகு 1
 
சக்தி மிக்க தலைவரை சங்கடப்படுத்தி விட்டீர்கள் என்றுதான் அந்தாள் எழுத நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். Embarrassed என்று எழுதுவதற்குப் பதிலாக Embraced என்று எழுதியதால் அது தழுவிக் கொண்டதாகி விட்டது.
 
பிகு 2
 
அபிநந்தன் விடுதலைக்கு எதிரியின் கருணைதான் காரணம் என்று ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இம்ரான் கானோ அல்லது பாகிஸ்தானின் அதிகாரிகள் யாருமோ இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. Gesture of Peace,  அமைதியின் சமிஞ்சையாக விடுவிக்கிறோம் என்ற வார்த்தையைத்தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். அப்படி என்றால் ராணுவ வீரர்களை இழிவு படுத்துவது யார்?
 
  • கருத்துக்கள உறவுகள்

us ன் எப்படி தங்கள் விமானம் f 16 விமானம் வீழ்த்தபட்டது என்ற கேள்வியின் அரசியலே இவ்வளவு விரைவான அபிநந்தன் விடுதலை மற்றும்படி மோடியின் ராஜதந்திரமோ இம்ரானின் சானக்கியமோ அல்ல .

யாழில் இந்திய அமைதிபடையின் ரஷ்ய டாங்கி அழிப்பு நடந்தபின் வலிகாமம் பகுதியில் ஒரு நாள் போர் நிறுத்தம் பொழுது ஓரிரு கைதிகள் பரிமாற்றமும் நடந்தது  சினேகபூர்வமாக உரையாடிய இந்திய அதிகாரிகள் அந்த அழிக்கமுடியாத ரஷ்ய டாங்கி எந்த ஆயுதம் மூலம் புலிகள் அழித்தார்கள் என்பதிலேயே குறியாய் இருந்தது .

அந்த டாங்கியை அழித்தவர் ஜேம்ஸ் பின்னாளில் இலங்கை  விமானத்தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் .

1 hour ago, பெருமாள் said:

us ன் எப்படி தங்கள் விமானம் f 16 விமானம் வீழ்த்தபட்டது என்ற கேள்வியின் அரசியலே இவ்வளவு விரைவான அபிநந்தன் விடுதலை மற்றும்படி மோடியின் ராஜதந்திரமோ இம்ரானின் சானக்கியமோ அல்ல .

யாழில் இந்திய அமைதிபடையின் ரஷ்ய டாங்கி அழிப்பு நடந்தபின் வலிகாமம் பகுதியில் ஒரு நாள் போர் நிறுத்தம் பொழுது ஓரிரு கைதிகள் பரிமாற்றமும் நடந்தது  சினேகபூர்வமாக உரையாடிய இந்திய அதிகாரிகள் அந்த அழிக்கமுடியாத ரஷ்ய டாங்கி எந்த ஆயுதம் மூலம் புலிகள் அழித்தார்கள் என்பதிலேயே குறியாய் இருந்தது .

அந்த டாங்கியை அழித்தவர் ஜேம்ஸ் பின்னாளில் இலங்கை  விமானத்தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் .

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

ஓமண்ணா சவப்பெட்டியால(மிக்21) அமெரிக்க F16 விமானத்த சுட்டு விழுத்தினத ஆச்சரியமா பாக்கினம் போல!

பாகிஸ்தான் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா ஒப்பந்தத்தில சொல்லியிருக்காம், பாகிஸ்தான் வலிந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விமானத்தை வித்ததற்கு அப்புறம் அதை தற்பாதுகாப்புக்கு பயன்படுத்து , ஓடிவாறத்துக்கு பயன்படுத்து என்று சொல்ல முடியுமா,மணம் முடித்து குடுத்த பெண்ணை, இவளை சமைக்க பயன்படுத்து சலவை செய்ய பயன்படுத்து என்று சொல்லுறது போல இருக்கு. நிஜமாய் தெரியவில்லை அதுதான் கேட்கிறேன்.....!   🤨

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

ஒரு விமானத்தை வித்ததற்கு அப்புறம் அதை தற்பாதுகாப்புக்கு பயன்படுத்து , ஓடிவாறத்துக்கு பயன்படுத்து என்று சொல்ல முடியுமா

ஒப்பந்தம் போட்டே விற்கப்படும். ஆனாலும், ஒப்பந்தத்தை இருபகுதியும் தூசி தட்டுவதத்திற்கு பாவிக்கும்.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம்,அதுவும் 5-வரசுக்கள் கையெழுத்து வைத்த ஒப்பந்தம் என்ன நடந்தது.

இதில் பாகிஸ்தான் தனது தேசத்தின் பாதுகாப்பு பணியில், offensive ஆகவே பாவிக்கப்பட்டது என்றால், அதுவும் எல்லை தாண்டி,   US வாயை மூடிக் கொண்டு போகவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

யாழில் இந்திய அமைதிபடையின் ரஷ்ய டாங்கி அழிப்பு நடந்தபின் வலிகாமம் பகுதியில் ஒரு நாள் போர் நிறுத்தம் பொழுது ஓரிரு கைதிகள் பரிமாற்றமும் நடந்தது  சினேகபூர்வமாக உரையாடிய இந்திய அதிகாரிகள் அந்த அழிக்கமுடியாத ரஷ்ய டாங்கி எந்த ஆயுதம் மூலம் புலிகள் அழித்தார்கள் என்பதிலேயே குறியாய் இருந்தது .

ஹிந்தியா சொறி சிங்கள கூட்டால் புலிகளை முடக்கமுடியாமால் போனதிதிற்கான அடிப்படை மூலோபாயக் குறைபாடு, US இந்த கூட்டில் ஓர் பங்காளராக சேரும் வரையில்.

உண்மையில், இந்த பிராந்தியத்தில் optimum force எனும் கோட்பாட்டை நடத்தி காட்டியவர்கள் புலிகளே.

ஓர் யுத்தம் வருமாயின், கிந்தியர்கள் மிகவும் வருந்த வேண்டி வரும். ஏனெனில், சீனா, பாகிஸ்தான் optimum-maximum force எனும் கோட்பாட்டில் உள்ளன.

சீனாவின் J-10C , J-11, US இன் F-16 இற்கு ஒப்பானது.

 

 

 

1 hour ago, நிழலி said:

பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

இதற்கு ஆதாரம் உண்டா?

US சத்தம் போடாமல் இருக்கிறது, பாகிஸ்தான் சீனாவின் ஜே-10, 11 ஐ பாவித்ததோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

ஏனெனில், US F-16 இந்த மவுசு குறைந்து, சீனாவின் F-16 இனிலும் வலை குறைந்த J-10, 11, 17 களின் மவுசு கூடி விடும்.

https://www.scmp.com/news/china/military/article/2188196/did-pakistan-use-its-chinese-jf-17-jets-shoot-down-indian-planes

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

F 16 அமெரிக்க தயாரிப்பு  Mig 21 ரசிய தயாரிப்பால்  F 16 விழுத்தியதுடன் அரசியல் சதுரங்கம் தொடங்கியது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2019 at 5:18 PM, நிழலி said:

அபிநந்தன் செலுத்தியதும் சுட்டு வீழ்த்தப்பட்டதும் Mig 21 அல்லவா? பாகிஸ்தான் தானே F16 பயன்படுத்தியது

பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை: அமெரிக்க சஞ்சிகை

5 Apr 2019
Paki%20plane.JPG?itok=2fO-HRs-

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் எஃப்-16 போர்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியதில் உண்மை இல்லாததுபோல் தோன்றுவதாக ‘ஃபாரின் பாலசி’ என்ற சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. அடையாளம் வெளியிடப்படாத இரண்டு அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகளை சஞ்சிகையின் கட்டுரை மேற்கோள் காட்டியது.

பாகிஸ்தானின் எஃப்-16 போர்விமானங்கள் எதுவும் காணாமல் போகவில்லை என்று அமெரிக்கா நடத்திய கணக்கெடுப்பு வழி தெரிய வந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக ‘ஃபாரின் பாலசி’ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானின் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியிருந்ததை இந்தப் புதிய தகவல் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பகுதியின் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றநிலை அதிகரித்தது. இதில் இந்திய விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய பிறகு அதன் விமானி பிடிபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்த கேள்விகளுக்கான பதிலை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் உடனடியாக வெளியிடவில்லை. பாகிஸ்தானின் எஃ-16 வீழ்த்தப்பட்டதற்கான நேரடி சாட்சிகளும் மின்னியல் ஆதாரங்களும் இந்தியாவிடம் இருப்பதாக திரு குமார் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

https://www.tamilmurasu.com.sg/world/story20190405-26560.html?fbclid=IwAR35_GCl_yaUXrMiPEuPyxCHCPWszx35yDs8_z-VVSEbbuBZ8xW8uhBBRPo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.