Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் குடிநீர் பிரச்சனை காரணமாக கருத்தரிக்கும் வீதம் குறைகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் குடிநீர் பிரச்சனை காரணமாக கருத்தரிக்கும் வீதம் குறைகின்றது

March 27, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

pregnancy.jpg?resize=600%2C336

யாழில் உள்ள குடிநீர் பிரச்சனை காரணமாக பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளூநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,

யாழில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதனாலே நான் ஆளுனராக இருக்கும் இக்கால பகுதிக்குள் அதற்கு ஒரு தீர்வினை பெற வேண்டும் என முழு வீச்சாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

யாழில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. இங்கிருந்து பலர் கருத்தரிப்புக்காக இந்தியாவிற்கு மருத்துவம் செய்வதற்காக செல்கின்றார்கள். இதற்கு குடிநீர் பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் என விநியோகிக்கும் நீர் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. அதனை கண்காணிக்கும் பொறிமுறைகள் இல்லை.

இந்நிலையில் யாழில் உள்ள குடிநீர் பிரச்சனையை போக்குவது தொடர்பில் ஆறு திட்டங்களை பரிசீலிக்கின்றோம். அவற்றில் முதலாவதாகவும் முதன்மையாகவும் வடமராட்சி கிழக்கு கடல் நீரேரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது தொடர்பில் அதிக கவனம் செலுத்து கின்றோம்.

வடமராட்சி நீரேரியில் உள்ள நன்னீரை தேக்கும் முகமாக பாரிய குளம் ஒன்றினை அமைக்க திட்டமிடபட்டு உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் கட்டப்படும் மிக பெரிய குளம் அதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த குளத்தின் சுற்றளவு சுமார் 9 கிலோ மீற்றர் ஆகும். அதன் அணைக்கட்டுக்கள் கொங்கிரீட் போட்டே கட்டப்படவுள்ளன.

அடுத்த திட்டமாக 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆறுமுகம் திட்டத்தை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு ‘அட்வான்ஸ் ஆறுமுக திட்டம்’ என மாற்றி அமைத்து அது தொடர்பிலும் பரிசீலினை செய்கிறோம்.

மூன்றவதாக பாலியாற்று திட்டம் உள்ளது. நான்காவதாக மேல் பறங்கியாறு கீழ் பறங்கியாறு திட்டமும் பரிசீலனையில் உள்ளது. ஐந்தாவதாக மத்திய மற்றும் சப்ரகமுவா மாகாணத்தில் இருந்து குழாய்கள் ஊடாக நீரினை கொண்டுவருவது.

ஆறாவதாகவும் , இறுதியாகவுமே இரணைமடுவில் இருந்து யாழுக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தை பரிசீலனைக்கு எடுக்க உள்ளோம். அந்த திட்டத்தினை தற்போது கிடப்பில் போட்டுள்ளோம் என தெரிவித்தார்

http://globaltamilnews.net/2019/116984/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

யாழில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. இங்கிருந்து பலர் கருத்தரிப்புக்காக இந்தியாவிற்கு மருத்துவம் செய்வதற்காக செல்கின்றார்கள். இதற்கு குடிநீர் பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

குடிக்கிற தண்ணீருக்கும் கருத்தரிப்பு குறைவடைவதற்கும் தொடர்பு இருக்கின்றதா? சும்மா போகின்ற போக்கில் எடுத்துவிட்ட வசனம் மாதிரி இருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய இந்திய வைத்தியர்கள் இலங்கையில் தனியார் வைத்தியசாலை துறந்து உள்ளார்கள்...குறிப்பாய் கருத்தரிப்பு சம்மந்தப்பட்ட வைத்தியசாலைகள்...ஆச்சரியமும்,கவலை தரக் கூடிய விடயம்..அப்படி ஊரில் கருத்தரிப்பு விகிதம் குறைந்து விட்டதா? என்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

நிறைய இந்திய வைத்தியர்கள் இலங்கையில் தனியார் வைத்தியசாலை துறந்து உள்ளார்கள்...குறிப்பாய் கருத்தரிப்பு சம்மந்தப்பட்ட வைத்தியசாலைகள்...ஆச்சரியமும்,கவலை தரக் கூடிய விடயம்..அப்படி ஊரில் கருத்தரிப்பு விகிதம் குறைந்து விட்டதா? என்ன காரணம்?

முன்னர் இந்த மருத்துவங்களை எடுத்துக் கொள்ள நிறையச் செலவு செய்து இந்தியா செல்ல வேண்டும். இப்போது அந்தச் செலவு குறைவாக இலங்கையிலேயே பிள்ளைச் செல்வம் தரும்  மருத்துவம் கிடைப்பது நல்லது தானே? எங்கள் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதா, அதற்கு நீர் காரணமா என்பது தெரியாது! ஆனால், சாதாரணமாக 85% ஆன தம்பதிகளுக்கு மருத்துவ உதவி இன்றியே பிள்ளை வரம் கிடைத்து விடும், மிகுதி 15% பேர் மருத்துவருடன் பேச வேண்டியிருக்கும். அதிலும் ஒரு பிரிவினருக்கு செயற்கையாக விந்தூட்டல், செயற்கையாக உடலுக்கு வெளியே கருக்கட்டல் போன்ற நுட்பங்கள் பயன் படுத்த வேண்டிய தேவையேற்படும்! இது சாதாரணமான நிலை. இதை விட எங்கள் நிலை மோசமா என்பது தெரியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

யாழில் குடிநீர் பிரச்சனை காரணமாக கருத்தரிக்கும் வீதம் குறைகின்றது

பொயிலை பிரச்சனை எண்டாங்கள்......

இப்ப குடிதண்ணியாலை  கரு பிரச்சனை எண்டுறாங்கள்......

போற போக்கிலை பனைமரமும் பிரச்சனை எண்டுவாங்கள். ....

கடைசியிலை யாழ்மாவட்டத்திலை இருக்கிற சனமே பிரச்சனை எண்டும் சொல்லுவங்கள்.

3 hours ago, ரதி said:

அப்படி ஊரில் கருத்தரிப்பு விகிதம் குறைந்து விட்டதா? என்ன காரணம்?

வெகுவாக குறைந்துள்ளது!

மிக முக்கிய காரணம், காலதாமதமாக கல்யாணம் செய்வது. பெரும்பாலும் 27 - 29 வயதின் பின்னரே கல்யாணம் நடக்கிறது.  பெண்கள் 25 வயதின் பின்னர் கல்யாணம் செய்தால் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறைவதுடன் பிள்ளை பெறுவதிலும் சிக்கல் தன்மை அதிகரிக்கிறது.

இரண்டாவது முக்கிய காரணம், காலதாமதமாக கல்யாணம் செய்வதோடு நின்றுவிடாமல், முதலாவது பிள்ளை பெறுவதை 3, 4 வருடங்களுக்கு தள்ளி வைப்பது. இதற்காக எடுக்கும் மாத்திரைகளும் பல பின்விளைவுகளை கொடுப்பவை.

இவை இரண்டும் விஞ்ஞான, மருத்துவ காரணங்கள் என்று துறைசார் நிபுணர்கள் பலதரம் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.   

தமிழரைப் பொறுத்தவரை, சனத்தொகை வீழ்ச்சி அடைவது தமிழினத்தின் முதலாவது பலவீனமாக கருதப்பட வேண்டும். இது மூன்று வழிகளில் தற்போது நடக்கிறது.
(1) நான் மேலே குறிப்பிட்ட காரணம்
(2) ஒரு பிள்ளையுடன் நிறுத்திக்கொள்ளும் பிற்போக்கு மனநிலை
(3) தற்போதும் பிறந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் மிகமிகக் கேவலமான மனநிலை

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

முன்னர் இந்த மருத்துவங்களை எடுத்துக் கொள்ள நிறையச் செலவு செய்து இந்தியா செல்ல வேண்டும். இப்போது அந்தச் செலவு குறைவாக இலங்கையிலேயே பிள்ளைச் செல்வம் தரும்  மருத்துவம் கிடைப்பது நல்லது தானே? எங்கள் பிறப்பு விகிதம் குறைந்து விட்டதா, அதற்கு நீர் காரணமா என்பது தெரியாது! ஆனால், சாதாரணமாக 85% ஆன தம்பதிகளுக்கு மருத்துவ உதவி இன்றியே பிள்ளை வரம் கிடைத்து விடும், மிகுதி 15% பேர் மருத்துவருடன் பேச வேண்டியிருக்கும். அதிலும் ஒரு பிரிவினருக்கு செயற்கையாக விந்தூட்டல், செயற்கையாக உடலுக்கு வெளியே கருக்கட்டல் போன்ற நுட்பங்கள் பயன் படுத்த வேண்டிய தேவையேற்படும்! இது சாதாரணமான நிலை. இதை விட எங்கள் நிலை மோசமா என்பது தெரியவில்லை!

இந்தியாவிற்கு கான்சர் போன்ற வருத்தங்களுக்கு போய் வைத்தியம் பார்த்தது தெரியும்...இப்படியானவற்றுக்கு போனதாய் கேள்விப் படவில்லை.

18 hours ago, போல் said:

வெகுவாக குறைந்துள்ளது!

மிக முக்கிய காரணம், காலதாமதமாக கல்யாணம் செய்வது. பெரும்பாலும் 27 - 29 வயதின் பின்னரே கல்யாணம் நடக்கிறது.  பெண்கள் 25 வயதின் பின்னர் கல்யாணம் செய்தால் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறைவதுடன் பிள்ளை பெறுவதிலும் சிக்கல் தன்மை அதிகரிக்கிறது.

இரண்டாவது முக்கிய காரணம், காலதாமதமாக கல்யாணம் செய்வதோடு நின்றுவிடாமல், முதலாவது பிள்ளை பெறுவதை 3, 4 வருடங்களுக்கு தள்ளி வைப்பது. இதற்காக எடுக்கும் மாத்திரைகளும் பல பின்விளைவுகளை கொடுப்பவை.

இவை இரண்டும் விஞ்ஞான, மருத்துவ காரணங்கள் என்று துறைசார் நிபுணர்கள் பலதரம் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.   

தமிழரைப் பொறுத்தவரை, சனத்தொகை வீழ்ச்சி அடைவது தமிழினத்தின் முதலாவது பலவீனமாக கருதப்பட வேண்டும். இது மூன்று வழிகளில் தற்போது நடக்கிறது.
(1) நான் மேலே குறிப்பிட்ட காரணம்
(2) ஒரு பிள்ளையுடன் நிறுத்திக்கொள்ளும் பிற்போக்கு மனநிலை
(3) தற்போதும் பிறந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் மிகமிகக் கேவலமான மனநிலை

நானும் நீங்கள் சொன்னதைத் தான் நினைத்தேன்..கவலைக்குரிய விசயம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 8:42 AM, குமாரசாமி said:

கடைசியிலை யாழ்மாவட்டத்திலை இருக்கிற சனமே பிரச்சனை எண்டும் சொல்லுவங்கள்.

அண்ணோய் அதை அவன்கள் சிறிலங்கா என்ற தேசம் உருவான உடனே தெரிந்து வைச்சிட்டாங்கள்   ....இப்ப மெல்ல மெல்ல அவிட்டுவிடுறாங்கள்

ஒரு காலகட்டத்தில் இரட்டை இலக்கத்தை(10,9) அடையும் வரை போராடி பிள்ளை பெத்த இனம் இன்று ஒற்றை இலக்கத்தை அடையவே பஞ்சிபடுகின்றது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.