Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு இலங்கைக்கு செல்லவுள்ளது….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு  இலங்கைக்கு செல்லவுள்ளது….

March 30, 2019

UN-Committee-Against-Torture.png?resize=

சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு இலங்கைக்கு முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி குறித்த குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு செல்லவுள்ள அந்தக் குழு ஏப்பரல்  12ஆம் திகதி வரை இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நான்கு பேர் கொண்ட ஐ.நா. உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள்ளது.

மோல்டோவா நாட்டைச் சேர்ந்த விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், மொறிசியசைச் சேர்ந்த சத்யபூசண் குப்தா டோமா, சைப்ரசைச் சேர்ந்த பெட்ரோஸ் மைக்கலிடேஸ், பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன் லொபீஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கு முன்னர், பிரித்தானியா, காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு, தற்போது மேலதிகமாக இலங்கை, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும்  செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரசியல் கைதிகள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள குறித்த குழு, இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://globaltamilnews.net/2019/117213/

  • கருத்துக்கள உறவுகள்

வேறு மொழி பேசும் இராணுவம் பொலிஸ் இருப்பது ஆக்கிரமிப்பு இல்லையா? வெள்ளிடைமலை போல உண்மை இருக்க சர்வதேசம் ஏன் நாடகம் ஆடுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கன்ஸ் புரியாணி குழு வைத்தால் இவயள்  சேர்வா குழு எண்டு வைப்பார்கள் போல கிடக்கு ..  🤔

1 hour ago, கிருபன் said:

.நா. உபகுழு

இண்டைக்குதான் ஓக்ஸ்போர்ற் ரிஸ்னரியில் இருந்து பேர் கண்டுபிடித்தாற் போல் கிடக்கு .. என்ன குழுவோ போங்கப்பா..🙂

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

அறிக்கை  இப்படித்தான் இருக்கும்....கட‌ந்த கால‌ங்களை விட இன்று சிறிலங்கா சித்திரவதை தடுப்பில் முன்னேரியுள்ளது  இதற்காக சிறிலங்காவை பாராட்டுகின்றோம்...அடுத்த ஐ.நா கூட்டத்தொடரில் அவர்கள் மேலும் முற்றேமடைவார்கள் என்பதில் எமக்கு எந்தவித ஐயப்பாடுமில்லை.....

சிறிலங்கா அரசு சித்திரைவதை செய்யக்காரணம் ....சங்கிலியனும் பண்டாரவன்னியனும் போன்ற‌ அரசர்கள் தான் என "உண்மையை கண்டு அறியும் குழு எமக்கு அறிக்கை சமர்பித்துள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என மும்முரமாக அறிக்கைகள் விட்டவர்கள் இப்போது பம்முவது ஏன்?? இவர்களின் இரட்டை வேடம் வெளிப்படையாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என மும்முரமாக அறிக்கைகள் விட்டவர்கள் இப்போது பம்முவது ஏன்?? இவர்களின் இரட்டை வேடம் வெளிப்படையாக தெரிகிறது.

சிறுவர்களை மத நிறுவனங்களில் சேர்ப்பதை இந்த ஐ.நா கண்டுகொள்வதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.