Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் மூடிமறைத்த உண்மைகள் நீதிமன்ற தீர்ப்பில் வெளிவந்ததுள்ளது- சி.தவராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் மற்றும்  விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

 

thavarasa.jpg

 

யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் ஒயில் தங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதி நிலத்தடி நீரில் ஒயில் மாசு கலந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அந்த அனல் மின்நிலைய நிறுவனமான நொதேன் பவர் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் போராட்டத்தை முடக்க தாம் ஆய்வு செய்வதாக கூறி அதற்கு பெருமளவான நிதியையும் செலவழித்தனர்.

அதன் பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசுக்கள் எவையுமே இல்லை என அறிக்கையையும் வெளியிட்டார். அவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கை பொய்யானது அதிலும் ஊழல் நடந்துள்ளது என நான் மாகாணசபையில் பல இடங்களிலும் கூறியிருந்தேன் என அவர் குறத்த சந்திப்பில் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/53451

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

அவர்கள் வெளியிட்ட அறிக்கை பொய்யானது அதிலும் ஊழல் நடந்துள்ளது என நான் மாகாணசபையில் பல இடங்களிலும் கூறியிருந்தேன்

எதிர்க்கட்சி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். எவராக இருந்தாலும் துணிவுடனும், தைரியத்துடனும் எதிர்க்கவேண்டும். சம், சுங் இவரிடம் படிக்க நிறையவே உண்டு. 🤔 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

எதிர்க்கட்சி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். எவராக இருந்தாலும் துணிவுடனும், தைரியத்துடனும் எதிர்க்கவேண்டும். சம், சுங் இவரிடம் படிக்க நிறையவே உண்டு. 🤔 

Ãhnliches Foto

எதிர்க் கட்சி தலைவர் என்றவுடன்... 
எனக்கு உடனே... சம்பந்தனின் நினைவு தான் வந்தது. 

தவராசாவின்... அரசியல் அனுபவித்திற்கும், 
சம்பந்தன்... நடத்திய, பேய்க்காட்டு சாணக்கிய அரசியல் அனுபவித்திற்கும் உள்ள வித்தியாசம் ஏராளம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

பதவியில இருந்தபோது ஒரு சத்தம் சந்தடி இல்லாத ஆள் பதவி போனபின் சவுண்டு போடுது .

ஐங்கரநேசனுடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் இதற்குள் சம்பந்தப்படாத முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இழுப்பதன் மூலம் ஈபிடிபி கும்பலின் உறுப்பினராக காலம் காலமாக தான் பின்பற்றிய தனது அடிவருடி புத்தியை வெளிப்படுத்தியுள்ளார் தவராசா! முன்னாள் முதலமைச்சரின் விரோதிகளிடம் பெற்ற அனுகூலங்களுக்காக தவராசா சில வருடங்களாகவே இவ்வாறு புலம்புவது வழமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.