Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

286. கடவுட் பூசைக்குப் பத்திர புஷ்பங்கள் எடுக்க யோக்கியர் யாவர்?

நான்கு வருணத் துட்பட்டவராய்ச், சிவதீக்ஷை பெற்றவராய், நியமாசாரமுடையவராய் உள்ளவர்.

287. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்?

தாழ்ந்த சாதியார், அதீக்ஷிதர், ஆசெளச முடையவர், நித்திய கருமம் விடுத்தவர், ஸ்நானஞ் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர்.

வேளாளர்கள் சூத்தர வர்ணத்திற்குள் வருவார்கள் என்பதால், சிவதீட்சை பெற்றும், நியமசாரமுடையவராகவும் இருந்தால், நான்கு வர்ணத்தவரும் கோயிலுக்கு பத்திர புஸ்பம் எடுக்கத் தகுதி உள்ளவர்கள் என்றும் சொல்லும் சாதி வெறி பிடித்த ஆறுமுக நாவலர், தாழ்ந்த சாதியினர் பத்திர புஸ்பம் எடுப்பதற்கு தகுதி அற்றவர் என்கிறார்

தாழ்த்தப்பட்ட மக்கள் வேளாளரோடு இணைந்து சமமாக உணவு உண்பதற்கு தகுதி அற்றவர்கள் என்று சொன்ன ஆறுமுக நாவலர், கோயிலுக்கான பூக்களை பறிப்பதற்கும் தகுதி அற்றவர்கள் என்றும் சொல்லி உள்ளார்.

நாலவரைப் பற்றி அறியாது அவர் மீது பற்றுக் கொண்டிருப்பவர்கள் இவைகளை படித்தாவது அவருடைய உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் தொடர்ந்து நாவலருடைய பதிப்புக்களை இணைத்து எமக்கு உதவ வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இதற்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால், வழமை போன்று பெரியாரை திட்டிவிட்டு போங்கள்)

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளாக இருந்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்தது விஞ்ஞானம், உலகம் உருண்டை கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று பல்வேறு பட்ட நம்பிக்கைகளைத் தகர்த்தது விஞ்ஞானம்.அப்படி இருக்க எங்கே விஞ்ஞானம் சொல்கிறது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகளைத் தொடர வேண்டும் என்று? விஞ்ஞானத்தின் அடிப்படையே பல ஆண்டுகளாகக் கூறப்படுவனவற்றை மறுதலித்து புதிய விடயங்களை ஆதாரங்களுடன் கூறுவதே.கடவுள் உண்டு என்று நீங்கள் நிறுவினால் தான் நான் அதனை மறுக்க முடியும், இல்லாத ஒரு விடயத்தை எவ்வாறு மறுக்கமுடியும்?

உலகம் உறுண்டை என்பதைப் பலர் நிறுவிய பின்னர் தான் அதை ஏற்றுக் கொண்டார்கள். வெறுமனே பூமி உறுண்டை. அது தன்னைத் தானே சுற்றுகின்றது என்று சொல்லி விட்டுச் செல்லவில்லை. அது தான் விஞ்ஞானம். அவ்வாறே கடவுள் பற்றிய மறுப்புக் கொள்கை சொல்லுகின்றபோது, அதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைச் சொல்ல வேண்டும்.

நான் கூப்பிட்டால் கடவுள் தோன்றவில்லை. எனவே, கடவுள் இல்லை என்று சொல்வது எல்லாம் பொருத்தமானதல்ல. கடவுள் வேண்டுமனால் பல ஆண்டுகள் தவம் இருக்க பின்னர் தான் தோன்றுவார் என்றால், அதை யாரும் உண்மையோடு செய்து வரவில்லை என்ற பின்னரே, அதை யாரும் மறுக்கலாம். தவத்தில் முனிவர் இருக்கும் ஆசனப்படி இருந்தால் பல ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று சொல்லபப்டுகின்றது. அதை யாராவது செய்து நடக்கவில்லை என்று நிருபித்தால் மட்டுமே, அதை ஒப்புக் கொள்ளமுடியும்.

இப்படியான கொள்கைகளைப் பொய்யாக்கும் செய்கைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, கடவுள் மறுப்பை சரி என்று சொல்லாமே தவிர, இது தான் கடவுள். இது பொய் என்று சொல்வது எல்லாம் விவாதத்துக்கு உதவாது.

விஞ்ஞானம் நம்பிக்கைகளைத் தொடர்ந்து கொண்டு வரவேண்டும் என்று சொன்னதாக நான் சொல்லவில்லை. ஆனால் தொடர்ந்து வரும் ஒரு நம்பிக்கையைத் தவறு என்று சொல்வதற்கு எம்மிடம் ஆதாரங்களும், கோட்பாடுகளும் கொண்டிருக்க வேண்டும் என்கின்றது.

கடவுள் உண்டு என்பதற்கு உலகத்தை நம்மால் கட்டுப்படுத்த, ஏன் இன்று வரைக்கும் இயற்கையை ஒரு துளி கூடக் கட்டுப்படுத்த எங்களால் முடியவில்லையே? மழை, சுனாமி, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, பூகம்பம், எரிமலை, பனிமழை, மரணம் எதை எம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. வரப்போகின்றது என்பதை அறிந்து கொண்டுள்ளோமே தவிர, அதைத் தடுக்க நிறுத்த, என்ன சாதித்து விட்டோம்?

இன்றைக்கு மழை வரக் கூடும் என்று வானிலை அறிக்கை கேட்கின்றோம். கட்டாயம் வரும் என்று இல்லை. வரலாம், வராமல் விடலாம். இதைப் போன்று தான் அக்காலத்தில் புழுக்கமாக இருந்தால் மழை வரும் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். பெரும்பாலும் அப்படியான வேளை இடியோடு கூடிய மழை வரும். இதில் என்ன பெரிய அளவு வேறுபாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்?? மரணத்தைக் கூட மருத்துவம் கொண்டு ஒத்திவைப்பது என்பது, அக்காலத்தில் உள்ள மருத்துவமும் சாதித்தது தான்.

வடிவாக நாங்கள் யோசித்துப் பார்த்தாலே தெரியும். நாங்கள் புதிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கின்றோம் அவ்வளவு மட்டும் தான்.

நான் கூறியவற்றை திருப்பிக் கூற வேண்டி உள்ளது.எனக்குத் தெரியாததை நான் தெரியாது என்று தான் கூறுவேன் .அதற்கு ஒரு வடிவம் குடுத்து அதனை வழி பட மாட்டேன்.இல்லாத ஒன்றை தெரியாத ஒன்றை தெரிந்த தாகப் பாவனை செய்ய மாட்டேன்.தெரியாதது தெரியாத்தாகவே இருந்து விட்டுப்போகட்டும்.அதற்காக புனைவுளை நானே உருவாக்கி அந்தப் புனைவுகளே உண்மை என்று வாதாட மாட்டேன்.புனைவுகள் புனைவுகள் தான் .உண்மை கண்டு பிடிக்கப்படும் வரை பொறுத்திருப்பேன்அவ்வளவே.

உருவவழிபாடு தேவையா இல்லையா என்பது தனிப்பட்ட விவாதம். கடவுளுக்கு நாங்கள் கொடுத்த உருவம் எம்மை ஒரு நிலைப்படுத்துவதற்கே, உருவவழிபாடு இல்லை என்று சொன்ன கிறிஸ்தவர்கள் யேசுவைச் சிலை வடிவாக வணங்குவதும், இசுலாமியர்கள் கஃபாவைத் தொழுவது என்பது எல்லாம் உருவவழிபாடே. ஆனால், முனிவர்கள் என்றைக்குமே இறைவனுக்கு உருவத்தைக் கொடுப்பதில்லை. ஏன் என்றால், அது தான் பக்குவமான நிலை. அதை அடையாதவர்களுக்குத் தான் உருவ வழிபாடும், புராணக்கதைகளும், விழாக்களும் தேவைப்படுகின்றன.

மனிதன் இறைவனைப் பற்றிச் சிந்தித்ததால் தான் அவனுக்கு மனித வடிவத்தை கொடுத்திருக்கின்றார்கள். நிச்சயமாக உங்களுக்குத் தீ்வு கிடைக்கும் வரை காத்திருங்கள். தப்பே இல்லை. சுவாமி விவேகானந்த அடிகளாருக்கும், இராமகிருஸ்ணனைச் சந்தித்தபின்னர் தான் தெளிவே ஏற்பட்டது.

உங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை,அதற்கான அதிகாரமோ அவாவோ எனக்கு இல்லை.ஆனால் புனைவுகளை புனைவுகள் என்றும் ஏமாற்றுக்களை ஏமாற்றுக்கள் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை.தூயவன் நீ கடவுளை வணங்காதே என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை.ஆனால் கடவுள் என்பது ஒரு புனைவு, என்று கூற எனக்கு உரிமை இருக்கிறது.ஆகவே இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளுங்கள்.இந்து மதத்தை தூயவன் வழி படாதே என்று கூற எனக்கு உரிமை இல்லை.ஆனால் இந்து சமயமோ சைவ சமயமோ கூறும் புனைவுகளையும் கற்பனைகளையும் கட்டுடைப்பதற்கும் அந்தக் கோட்பாடுகளால் சீரழியும் சமூகத்தைச் சிந்திக்க வைப்பதற்குமான கருதுக்களைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது,அதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

கடவுள் புனைவு என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது தான். ஆனால், அதை நீங்கள் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். அது தான் சரியானது. அது இந்து மதம் மட்டும் என்றில்லை. எம் மதத்தை தவறு என்று வலியுறுத்தும்போதும், அதையே செய்தாக வேண்டும். எந்த நீதிமன்றமும் சாட்சி இல்லாமல் எக் குற்றச்சாட்டையும், ஏற்றுக் கொண்டதில்லை.

அவ்வாறே கடவுள் மறுப்புக்கும் உங்களின் சாட்சியங்களைச் சொல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

அடிநிலையில், அறியாமையில் உள்ள மக்களுக்குத்தான் புராணக் கதைகள் என்று தூயவன் சொல்லி உள்ளார்.

இங்கே யாழ் களத்தில் அடிநிலையில் யார் இருக்கிறீர்கள்?

கள உறுப்பினர்களே! மேல்நாடு வந்து கணணியை பாவித்து, அதில் கருத்து எழுதக் கற்ற உங்களுக்கு, இமய மலையில் மாட்டின் மீது புலித் தோல் அணிந்து பார்வதியோடு நான்கு பிள்ளைகள் பெற்ற சிவன் அமர்ந்திருப்பதாக கதை சொல்லித்தான் சைவத்தை கற்றுத் தர வேண்டுமா?

அதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

நான் புராணக்கதைகள் தான் மதங்களின் அடையாளம் என்று என்றைக்கு விவாதிக்கவில்லை. இங்கு புராணத்தை மட்டும் வைத்து மதங்களை விமர்சித்தது நீங்களே. அதனால் தான் அந்த நிலைக்கு நானும் வரவேண்டியதாகிற்று.

இங்கே அடிநிலை விவாதியாக நீங்கள் தான் இருக்கின்றீர்கள். உங்களுக்குப் புராணத்தை மட்டும் வைத்தே பக்தி மட்டும் கதைக்க முடிகின்றதே தவிர, அதற்கு மேலே இம்மியளவும் செல்லவே முடியவில்லை. எனவே புலத்திற்கு வந்தாலும், அடிநிலை, அறியாமை உங்களுக்கே!

இந்த மேல்நாடு, நவீனம் எல்லாம் எப்போது இருந்து பெற்றுக் கொண்டீர்கள்?? சுமார் 150 ஆண்டுகள் கூட வராது. அதிலும் ஓரளவு எழுச்சி என்பது, 1900ம் ஆண்டுக்குப் பின்னர் தானே! மனித வாழ்வின் 13,000ற்கு மேலே என்று சொல்லப்படுகின்ற நிலையில் கேவலம் 100 ஆண்டுகளில் ஏதோ சாதித்து விட்டேன் என்று மார்தட்டுவது எங்கனம்??

அப்படி என்ன சாதித்துவிட்டீர்கள் என்று அறிந்து கொள்ளமுடியுமா? சிவன் இமயமலையில் தான் இருக்க வேண்டுமென்றில்லை. அவர் சுடலையிலும் இருக்கின்றார் என்று சொல்கின்றார்கள். கணனியில் 4 எழுத்துத் தட்டத் தெரிந்தால், அறிவாளி என்று யாரும் கருதியதில்லை.

என்னைப் பொறுத்தவரைக்கும், இறைவழிபாடு இப்படித் தான் என்றில்லை. நான் சைவன் என்பது என் கொள்கை. மற்றவர்கள் எவ்வழியையும் தேடலாம். அதை என்றைக்குமே தப்பு என்று மதப்பெரியார்கள் சொன்னது கிடையாது.

ஆதிசங்கரர் அறுவகை மதங்களையும் ஒன்றாக்கிய சமயத்தில் என்ன கோட்பாட்டை உருவாக்கினார் என்றால், எவ் உருவவழிபாட்டைச் செய்தாலும், அது ஒரே அடிப்படையைத் தான் போதிக்கின்றன என்று. (தமிழரின் வழிபாட்டு முறை சிதைய இது கூட ஒரு வகைக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அன்றைக்கு எல்லோரையும் ஒற்றுமைப்படுத்த ஆதிசங்கரர் தேர்ந்தெடுத்த வழி அப்போது சரியாகத் தான் இருந்தது)

இதே போன்றதொரு உண்மையைத் தான், சுவாமி விவேகானந்தரும் சொன்னார். " எல்லா நதிகளும் கடலில் தான் கலக்கின்றன. அவ்வாறே எந்த மதக் கோட்பாடும், இறைவன் என்ற ஒரு நிலையைத் தான் எடுக்கின்றன என்று"

எனவே, மதங்கள் என்பன ஒருவனை நல்வழிப்படுத்தவே. அவற்றில் களைகள் இருந்தால் அவற்றைக் களைந்து விட்டு நல்லதையே தேடிக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நாரதா! உன்னுடைய கட்டுக்கதைக்கு இந்த கட்டுரை மூலம் முற்று புள்ளி வைக்கப்படும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22942

தம்பி நாரதா! அறியாமை தவறு அல்ல. இந்தக் கட்டுரையை படித்து அறிந்து கொள்.

கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!!

இங்கே ஒருமையில் கருத்து எழுதுவது களவிதிகளுக்கு முரணானது. திருத்திக் கொள்ளுங்கள். மேலும் பதிலளிக்கின்றேன். பதிலளிக்கின்றேன் என்று எழுதிக் கொள்கின்றீர்களே, தவிர எவ்வித பதிலையும் காண முடியவில்லை.

எப்போது பதிலளிக்கப் போகின்றீர்கள்??

தூயவன்! இங்கே "ஆறுமுகநாவலர்" என்ற பெயரில் பதிப்பவர் இணைக்கின்ற விடயங்கள் பெரும்பாலும் புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. சைவ சமயமத்தையும் புராணங்களையும் பிரிக்க முடியாது என்பதைத்தான் அவருடைய விடயங்கள் சொல்கின்றன.

நீங்கள் அந்தப் புராணங்களை வெறும் கதைகள், அடிநிலையில் உள்ள மக்களுக்காக எழுதப்பட்டவைகள் என்கிறீர்கள் இதில் எது உண்மை?

நீங்கள் சொல்வது போன்று சைவத்தை இந்த புராணங்களில் இருந்தும், வட மொழி ஆதிக்கத்தில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இதற்கு நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?

குற்றங்களை நாம் சுட்டிக்காட்டுகின்ற போது, எம்மை திட்டிவிட்ட வேறு வேலை பார்க்கப் போய் விடுகிறீர்கள்.

சைவம் என்னுடைய மதம் அல்ல. அதை சீர்திருத்துவதோ, வளர்ப்பதோ என்னுடைய வேலை அல்ல.

ஆனால் நீங்கள் அதை செய்ய வேண்டும்.

இதுவரை சைவத்தை வடமொழியில் இருந்தும், புராணங்களில் இருந்தும், பிற்போக்கு வாதங்களிலும் இருந்தும் மீட்பதற்கு நீங்கள் எவ்வகையான பரப்புரைகளை செய்திருக்கிறீர்கள்?

பகுத்தறிவாளர்கள் பலர் மதுரை ஆதினத்தத்தின் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். காரணம் அவர் சைவத்தை தமிழோடு கலக்க செய்து வரும் பணிகள்.

நீங்கள் மதுரை ஆதினமாக இருக்கப் போகிறீர்களா? சங்கராச்சிரியாராக இருக்கப் போகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி அன்று விட்ட தவறை இன்றும் தொடரச் சொல்கிறீர்களா?

அன்று விட்ட தவறு வடமொழியை உள்வாங்கியது. தவறு தான் ஒத்துக் கொள்கின்றேன். அதை நியாயமான விதத்தில் நீக்குவதில் எனக்கு எவ்விதமான மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், இப்போது ஆங்கிலம் அதீனமாக, மொழி சிதையும் அளவிற்கு உள்வாங்கப்படுகின்றனவே, அதை்த தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள்.

வடமொழி உள்வாங்கப்பட்ட காலத்தில் கூட, வடமொழியைப் படித்த தமிழர்கள், தமிழ்மொழியும் படித்திருந்தனர். ஆனால் இன்று ஆங்கிலம் படிக்கின்ற தமிழர்கள் தமிழை 2ம் மொழியாக்க கூட எடுத்துக் கொள்வதில்லை! எந்த நிலை ஆபத்தானது? இப்படியான நிலையையும் ஏன் எதிர்க்கவில்லை என்பதே வினா?

பெரும்பாலனான வடசொற்கள் தமிழ் கூடக் கலந்து பல புதுச் சொற்களைத் தோற்றுவித்திருக்கின்றன. அவற்றை நீக்குவது என்பது மிகமிகக் கடினம். தவிரவும், தமிழ் ஒலிவடிவத்தினுள் பொருந்துகின்ற அளவு கூட, ஆங்கிலச் சொற்கள் பொருந்தவில்லை.

அப்படியிருக்க தமிழைக் காப்பற்றப் போகின்றோம் என்று புறப்பட்டால், ஏன் பாரபட்சமான செயற்பாடு?

இன்று என்னை இந்த மொழியைப் படி என்று எவரும் பயமுறுத்தவில்லை, திணிக்கவில்லை.( ஆனால் சிரிலங்காவில் வாழ்ந்தால் சிங்களம் படி என்று திணிக்கப்படதால் தான் நாம் போராட வேண்டி வந்தது என்பது வேறு விடயம்) மொழிகளை சுயமாகப் படிப்பதில் எந்தத் தவறும் இல்லை.இன்னொரு மொழியைப் படிக்கும் போது அதில் உள்ள பல விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.ஆகவே இங்கு இன்னொரு மொழியைப் படிப்பது அல்ல விடயம்.தமிழை வட மொழி ஆக்கினால் தமிழ் இல்லாது போய் விடும் எங்கிற ஆபாயம் உண்டு என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா.

வடமொழி என்பது இன்றைக்குப் பேசுகின்றவர்கள் என்று யாரும் கிடையாது. அதனால் தமிழில் உள்வாங்கப்பட்ட சொற்களை உரிமை கோர யாரும் கிடையாது. மேலும், வடமொழியால் மட்டும் தமிழ் அழிந்து போகப் போவதில்லை. மேலே சொன்னது போன்று, ஆங்கில, ஐரோப்பிய மொழிகளின் உள்வாங்கலும் தமிழின் அழிவுக்கு காரணங்களாக அமையும்.

மேலும், இப்படியான பதிலீட்டு முறைகள் மட்டும் மொழியைக் காப்பாற்றி விடாது.

1. தமிழ் மொழியில் வேலைவாய்ப்பு உருவாக்குதல்

2. புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்குதல்

3. பிறமொழியாக்கங்களை தமிழ் மொழிக்கு மாற்றுதல்

4. கவிஞர்களையும், மொழி வல்லுனர்களையும் ஊக்கப்படுத்துதல். இப்படி பல செற்பாடுகள் மூலம் தான் தமிழைக் காப்பாற்ற முடியுமே தவிர, வடமொழி எதிர்ப்பு மட்டும், தமிழை வளப்படுத்தி விடாது.

தமிழ் தமிழாக இருக்கட்டும் ஆங்கிலம் ஆங்கிலமாக இருக்கட்டும்.வட மொழி வட மொழியாக இருக்கட்டும்.வேண்டியவர்கள் வட மொழியையும் ஆங்கிலத்தையும் படிக்கட்டும்.அனக்கு ஆங்கில மொழி படிப்பதால் பல விடயங்கள் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் வட மொழி படிப்பதால் எதுவித பிரயோசனும் இல்லை என்று சொன்னேன்.ஒரு செத்த மொழியைப் படிப்பதில் என்ன பிரயோசனம் இருக்க முடியும்?

அது செத்த மொழியாகவே இருக்கட்டும். இங்கே வடமொழி ஆதிக்கம் ஏன் வந்தது என்பதை விளங்கப்படுத்தவே அதைச் சொன்னேன். அன்று வடமொழி பிரியர்களின் ஆதிக்கம் தமிழரின் மீது இருந்தது. அதனால் தமிழில் வடமொழி செல்வாக்குச் செலுத்தியது. அதனால் இன்ற வடமொழிக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றோம். ஆனால் இன்று ஆங்கிலம் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆனால் அதன் ஆதிக்கம் குறித்து நாம் எவ்வித கவலையையும் கொள்ளவில்லை. அதற்கு பிற்காலத்தில் ஒரு எதிர்குரல் தேவைப்படுகின்றது.

நாளைக்குத் தமிழைக் காப்பாற்ற என்னுமொரு வடமொழி எதிர்ப்புப் போல, ஆங்கில எதிர்ப்புத் தேவைப்படுமா?? நாங்களாக விரும்பி ஆங்கிலத்தைப் படித்து விட்டு, மொழிச் சிதைவுக்கு ஆங்கிலேயர் தான் பொறுப்பு என்று திட்டிக் கொள்வோமா?

நாங்கள் சரியாக இருந்தால், மற்றவர்களை வெறியர்கள் என்று திட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது?

தூயவன் இந்து மத்தைக் கடைப்பிடிக்காதே கடவுளை வழி படாதே , கோவிலுக்குச் செல்லாதே என்று நான் சொல்ல வில்லையே.ஏன் எனக்கு இந்து மத்தைப் பிடிக்காது ஏன் எனக்கு மதங்களையே பிடிக்காது ஏன் நான் கடவுள் என்னும் புனைவை நம்புவதில்லை என்று தானே சொல்லி வருகிறேன்.அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாரதர் பேரை மாற்று என்பதற்கும் , ஏன் நான் இந்து வல்ல என்பதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்குப் புலப்படவில்லையா?

இங்கே நாரதர் என்ற பெயரைப் பற்றி நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு எவ்வாறு அந்த வடமொழிச் சொல் பிடித்திருக்கின்றதோ, அவ்வாறே நம் தமிழர்கள் பலர் அதே போன்றதான வடமொழித் தவறைச் செய்கின்றார்கள்.

ஈழத்தைப் பொறுத்தவரைக்கும் கோவில்கள் எம் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கின்றன. ஆனால் கோவில் நிர்வாகம் வடமொழியில் ஆராதனை செய்வதை விரும்புகின்ற போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்! இங்கே "ஆறுமுகநாவலர்" என்ற பெயரில் பதிப்பவர் இணைக்கின்ற விடயங்கள் பெரும்பாலும் புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. சைவ சமயமத்தையும் புராணங்களையும் பிரிக்க முடியாது என்பதைத்தான் அவருடைய விடயங்கள் சொல்கின்றன.

நீங்கள் அந்தப் புராணங்களை வெறும் கதைகள், அடிநிலையில் உள்ள மக்களுக்காக எழுதப்பட்டவைகள் என்கிறீர்கள் இதில் எது உண்மை?

இதற்கு ஆறுமுகநாவலர் காலத்தை நீங்கள் நோக்க வேண்டும்.

ஆறுமுகநாவலர் அன்றைக்கு கிறிஸ்தவ போதனைக்கு எதிர்த்துப் போராட்டம் செய்தார். எனவே கிறிஸ்தவ போதனைகளைத் தாண்டி, மக்களுக்கு ஒரு கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டுமனால் அவர்களுக்குப் பிடித்தமான விதத்தில் அவை அமைய வேண்டும். அதனால் அவருக்குப் புராணக்கதைகள் தேவைப்பட்டன.

எனவே, மதங்களில் இருந்த புராணக்கதைகளைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அதில் என்றுமே அசிங்கங்கள் சேர்க்கப்படவில்லையே! அது தான் மிகமிகக் கவனிக்கப்பட வேண்டியது. மற்றும்படி காலத்துக்கு காலம் செவிவழிக்கதைகள் திரிபடைந்து தான் ஆகும்.

ராமகிருஸ்ணரும் மதப் போதனைகளை கதைகள் முலமே வெளிப்படுத்தி வந்தார். அவரின் கதைகள் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால் திரிவற்று காலத்திற்குப் பொருத்தமானவையாக இருப்பதை அவதானியுங்கள்.

அவ்வாறே அன்று அவர் சைவம் என்று கூட்டுச் சேர்ந்தது, வடஇந்தியர்களோடு. அப்படி ஒரு குழுவை இணைத்துத் தான் பிரச்சாரத்தைச் செய்தார். எனவே, சாதி, வடமொழி, உற்பட்ட அவர்களின் கோட்பாடுகளையும் அவர் பிரதிபலித்தார்.

இன்றைக்குப் பாருங்கள். இந்தியாவோடு கூட்டுச் சேர்ந்த ஈழத்து விடுதலை அமைப்புக்கள் இந்தியாவின் எண்ணங்களுக்கு இசைவாகச் செயற்பட வேண்டி வந்தது. பல அவ்வாறு தான் இப்போதும் செயற்படுகின்றன. இந்தியா கூட ஒன்றிணைந்து இருந்த காலத்தில், ராஜிவின் கோரிக்கைக்கு ஏற்ப, ஆயுதங்களைக் களைய வேண்டி ஏற்பட்டிருந்தது. எனவே இன்னுமொரு கூட்டணி சேருகின்றபோது, அவர்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண் ஏற்படுகின்றது.

நாவலருக்கு அப்போது துணையாக நின்றது அவர்கள். எனவே அவர்களின் சிந்தனையையும் பிரதிபலித்தார். அது சரியானது என்று சொல்லவரவில்லை. அக்காலத்தில் அப்படியான முடிவுகளைத் தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

புவிக்காந்தப்புல அறிவியல் வளர முதலே புராதன தேவாயலங்களும் வழிபாட்டிடங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டது குறித்துப் பல குறிப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்..அவற

  • கருத்துக்கள உறவுகள்

புவிக்காந்தப்புல அறிவியல் வளர முதலே புராதன தேவாயலங்களும் வழிபாட்டிடங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டது குறித்துப் பல குறிப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்..அவற

  • தொடங்கியவர்

சைவ சரபம் மா.பட்டமுத்துவின் வடதிருமுல்லைவாயில் அருளுரை

பகுதி -1

http://www.megaupload.com/?d=BEZTHIGS "AVSEQ01.DAT" (514.78 MB)

பகுதி -2

http://www.megaupload.com/?d=Z35PS533 "AVSEQ01.DAT" (385.07 MB)

பகுதி -3

http://www.megaupload.com/?d=37ER6EPD

இந்தச் சொற்பொழிவு மூலம் சைவத்தின் அடிப்படை அணைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

13. குருசங்கம சேவையியல்

334. குரு என்றது யாரை?

தீஷாகுரு, வித்தியாகுரு, போதககுரு முதலாயினோர் குரு. ஆசாரியன், தேசிகன், பட்டாரகன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

335. சங்கமம் என்றது என்னை?

நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் முத்திறத்துச் சிவபத்தர்களை.

336. குருவையுஞ் சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?

மனிதர் எனக் கருதாது, சிவபெருமானெனவே கருதி, மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலுஞ் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும், சிவதீக்ஷை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்குஞ் சிவபத்தரை மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும் அவமதிப்பவருந் தப்பாது நரகத்தில் வீழ்வர்.

337. சிவபத்தர்கள் சிவபெருமான் எனக் கருதப்படுதற்குக் காரணம் என்ன?

சிவபெருமான் வேறற அதிட்டித்து நிற்கப்பெறுவன வாய்க் கண்டவுடனே சிவபெருமானை நினைப்பிப்பனவாய் உள்ள திருவேடங்களை யுடைமையும், நாடோறும் ஸ்ரீகண்டநியாசம், பிஞ்சப்பிரம ஷடங்கநியாசம், அஷ்டத்திரிம்சத்கலாநியாசங்க

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

350. குரு முன்னுஞ் சிவனடியார் முன்னும் எப்படி விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்?

வஸ்திரத்தை ஒதுக்கிச், சரீரத்தைச் சற்றே வளைத்து, வாய் புதைத்து நின்று, அவரை "சுவாமீ" என்பது முதலிய சொற்களினாலே உயர்த்தியும், தன்னை "அடியேன்" என்பது முதலிய சொற்களினாலே தாழ்த்தியும், மெல்ல விண்ணப்பஞ் செய்தல் வேண்டும்.

351. கடவுளையும் குருவையுஞ் சிவனடியாரையுந் தாய் தந்தை முதலாயினரையும் நமஸ்கரிக்கும்போது கால் நீட்டத் தக்க திக்குகள் யாவை?

மேற்குந் தெற்குமாம். கிழக்கினும் வடக்கினுங் கால் நீட்டி நமஸ்கரிக்க லாகாது.

352. குருவையுஞ் சிவனடியார் முதலாயினாரையும் நமஸ்கரிக்கலாகாத காலங்களும் உண்டா?

உண்டு, அவர் கிடக்கும் போதும், வழி நடக்கும் போதும், பத்திர புஷ்பம் எடுக்கும்போதும், வெற்றிலை பாக்கு உண்ணும்போதும், ஸ்நானம், சந்தியாவந்தனம், பூசை, ஓமம், சிரார்த்தம், போசனம் முதலியன பண்ணும் போதும், இராச சபையிலே போய் இருக்கும்போதும் அவரை நமஸ்கரிக்கலாகாது.

353. தீக்ஷாகுரு, வித்யாகுரு முதலாயினார் திருமுகம் விடுத்தருளின், அதை யாது செய்தல் வேண்டும்?

பீடத்தின் மீது எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து, இரண்டு கைகளாலும் எடுத்து, இரண்டு கண்களிலும் ஒற்றிச், சிரசின்மேல் வைத்துப், பின்பு திருக்காப்பு நீக்கி வாசித்தல் வேண்டும்.

354. தான் வழிபட்டு வந்த ஆசாரியன் பெரும் பாவங்களைச் செய்வானாயின் அவனை யாது செய்தல் வேண்டும்?

தானே பூசித்து வந்த சிவலிங்கம் அக்கினியினாலே பழுதுபடின், அதனை இகழாது மனம்நொந்து கைவிட்டு வேறொரு சிவலிங்கத்தைக் கைக்கொள்வது போலத், தான் வழிபட்டு வந்த் ஆசாரியன் சிவநிந்தை, சிவத்திரவியாபகாரம் முதலிய பெருங் கொடும் பாதகங்கள் செய்து கெடுவானாயின், அவனை இகழாது மனம் நொந்து கைவிட்டு வேறோராசாரியனை அடைந்து வழிபடல் வேண்டும்.

355. குருவினிடத்தே சிவசாத்திரம் எப்படிப் படித்தல் வேண்டும்?

நாடோறும் ஸ்நானம் முதலிய நியதிகளை முடித்துக் கொண்டு, கோமயத்தினாலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே பீடத்தை வைத்து, அதன் மீது பட்டுப் பரிவட்டத்தை விரித்து, அதன் மீது சிவசாத்திரத் திருமுறையை எழுந்தருளப் பண்ணிப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்துப் பின்பு ஆசாரியருடைய திருவடிகளையும் அருச்சித்து, நமஸ்கரித்து, அவர் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருக்க, அவருக்கு எதிர்முகமாக இருந்து படித்தல் வேண்டும். படித்து முடிக்கும் பொழுதும் அப்படியே நமஸ்கரித்தல் வேண்டும். இப்படிச் செய்யாது படித்தவர், படித்ததனால் ஆகிய பயனை இழப்பர்; அம்மட்டோ! நரகத்திலும் விழுந்து வருந்துவர்.

356. சிவசாத்திரம் படிக்கலாகாத காலங்கள் எவை?

பிரதமை, அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, உத்தராயணம், தக்ஷிணாயனம், சித்திரை விஷு, ஐப்பசி விஷு, சந்தியா காலம், ஆசெளச காலம், மகோற்சவ காலம் என்பவைகளாம்.

357. எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின் யாது செய்தல் வேண்டும்?

சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும் வித்தியாகுருவுக்கும் விசேஷ பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தக்ஷிணை முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையுந் தீக்ஷா குருவையும் மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது செய்வித்தல் வேண்டும்.

358. சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப் படிப்பிக்கலாமா?

அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும் படிப்பிக்கலாகாது. நல்லொழுக்கமுங் குருலிங்கசங்கம பத்தியும் உடைய நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல் வேண்டும். அவர்கள் விரும்பித் தருந் தக்ஷிணையைத் தாஞ் செய்த உதவிக்கு கைம்மானெறக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யுந் திறங் கருதிக் கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

359. மாணாக்கர்கள் தாங்கள் குருவுக்குக் கொடுக்குந் தக்ஷிணையை அவர் செய்த உதவிக்குக் கைம்மாறெனக் கருதலாமா?

தாங்கள் குருவுக்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும், தங்களை அவருக்கு அடிமையாக ஒப்பித்து விடுதல் ஒன்றையே யன்றி, அப்பொருளை கைம்மாறெனக் கருதிவிட லாகாது.

360. தீக்ஷா குரு, வித்தியா குரு முதலாயினார் சிவபதமடைந்து விடின், யாது செய்தல் வேண்டும்?

வருஷந்தோறுந் அவர் சிவபதமடைந்த மாச நக்ஷத்திரத்திலாயினும் திதியிலாயினும் அவரைக் குறித்துக் குருபூசை செய்துகொண்டு வரல் வேண்டும்.

361. இன்னும் எவ்வெவருக்குக் குருபூசை செய்வது ஆவசியகம்?

பல அற்புதங்களைச் செய்து தமிழ் வேதத்தைத் திருவாய் மலர்ந்தருளியுஞ் சைவ சமயத்தைத் தாபித்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயக்குரவர் நால்வருக்கும்; அறுபத்து மூன்று நாயன்மாருடைய மெய்யன்பையும் அவ்வன்புக்கு எளிவந்தருளிய சிவபெருமானுடைய பேரருளையும் அறிவித்து அவரிடத்தே அன்புதிக்கச் செய்யும் பெரியபுராணத்தைத் திருவாய் மலர்ந்தருளிய சேக்கிழார் நாயனாருக்கும்; பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் இலக்கணங்களை அறிவிக்குஞ் சைவ சித்தாந்த நூலுணர்ச்சியை வளர்த்தருளிய மெய்கண்டதேவர் முதலிய சந்தான குரவர் நால்வருக்கும்; தமிழ் வழங்கும் நிலமெங்கும் நல்லறிவுச்சுடர் கொளுத்தியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாருக்கும் இயன்றமட்டுங் குருபூசை செய்து கொண்டே வருவது ஆவசியகம்.

362. இந்நாயன்மார்களுடைய குருபூசைத் தினங்கள் எவை?

1. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்...............வைகாசி - மூலம்

2. திருநாவுக்கரசு நாயனார்.......................................சித்தி

  • தொடங்கியவர்

முதலாவது

தில்லைவாழந்தணர் சருக்கம்

அமர்நீதிநாயனார் புராணம்

பழையாறை வணிகாமர் நீதி யார்பாற்

பரவுசிறு முனிவடிவாய்ப் பயிலு நல்லூர்க்

குழைகாதர் வந்தொருகோ வணத்தை வைத்துக்

கொடுத்ததனை யெடுந்தொளித்துக குளித்து வந்து

தொழிலாரு மதுவேண்டி வெகுண்டு நீர்த்

துலையிலிடுங் கோவணநேர் தூக்கு மென்ன

வெழிலாரும் பொன்மனைவி யிளஞ்சே யேற்றி

யேறினார்வா னுலகுதொழ வேறி னாரே.

சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.

இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல; பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார். அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று அவர்கையிலே கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம்பண்ணுதற்குப் போக; அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.

ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியானவர் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார். அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார். அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார். அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார். அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார். பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார். அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார். அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது. அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார். அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது. அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.

  • தொடங்கியவர்

அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார். ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன. அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;

rvsslide0.jpg

தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள்.

திருச்சிற்றம்பலம்

தில்லைவாழ்ந்தணர் சருக்கம் முற்றுப்பெற்றது.

  • தொடங்கியவர்

14. மாகேசுர பூசையியல்

366. மாகேசுர பூசையாவது யாது?

ஆசாரியர், நிருவாண தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், சமய தீக்ஷிதர் என்னும் நால்வகை மாகேசுரர்களையும் விதிப்படி பூசித்துத் திருவமுது செய்வித்தலாம் (மாகேசுரர் = மகேசுரனை வழிபடுவோர்)

367. மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?

ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமுஞ், சமய தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் பதினாயிரம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், விசேஷ தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லக்ஷம் பேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், நிருவாண தீக்ஷிதர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு அன்னதானஞ் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும்.

368. மாகேசுர பூசைக்குப் பாகஞ் செய்பவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

சம சாதியார்களாய்ச், சிவதீக்ஷை பெற்றவர்களாய், நித்தியகருமந் தவறாது முடிப்பவர்களாய், சுசியுடையர்களாய், மாகேசுர பூசைக்கு உபயோகப்படுமவைகளை மாகேசுர பூசை நிறைவேறுமுன் புசிக்க நினைத்தலுஞ் செய்யாதவர்களாய் இருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதவர்களாலே சமைக்கப்பட்டவை தேவப்பிரீதியாகா, இராக்ஷதப் பிரீதியாகும்.

369. மாகேசுர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை?

உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றாங்காய், அத்திக்காய், வெண்கத்தரிக்காய், பசளை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம்.

370. மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

மாகேசுரர்களைத் தூரத்தே கண்டவுடனே, சிரசின் மீது அஞ்சலி செய்து, விரைந்தெதிர் கொண்டு அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளைத் தீர்த்தத்தினால் விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, அவர்களைப் பந்தியாக இருத்தி, ஓதுவார்கள் தேவாரம் பண்ணுடன் ஓத, அன்னங்கறி முதலியவற்றைப் படைத்து, பத்திரபுஷ்பங்களால் அருச்சனை செய்து, தூப தீபங் கொடுத்து, அவர்களெதிரே பூக்களைத் தூவி, நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, ஆசிர்வாதம் முற்றிய பின் திருவமுது செய்வித்தல் வேண்டும். அவர்கள் திருவமுது செய்து கரசுத்தி செய்து கொண்டபின், அவர்களெதிரே இயன்ற தக்ஷிணை வைத்து நமஸ்காரஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, மீட்டும் நமஸ்காரஞ் செய்து, சேஷம் புசித்தல் வேண்டும்.

371. மாகேசுர பூசைப் பந்திக்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

சிவநிந்தகர், குருநித்தகர், சங்கமநிந்தகர், சிவசாத்திரநிந்தகர், சிவத்திரவியாபகாரிகள், அதீக்ஷிதர், நித்தியகருமம் விடுத்தவர் முதலாயினர்.

372. மாகேசுர பூசையிலே மாகேசுரரை யாராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்?

மாகேசுர பூசை எந்தத் தேவரைக் குறித்துச் செய்யப் படுகின்றதோ, அந்தத் தேவராகப் பாவித்துப் பூசித்தல் வேண்டும்.

373. பூசை செய்யப்படும்போது மாகேசுரர்கள் யாது செய்தல் வேண்டும்?

பூசிப்பவன் எத்தேவரைக் குறித்துப் பூசிக்கின்றானோ அத்தேவரைத் தாம் இடையறாது மெய்யன்போடு தியானித்துக் கொண்டிருந்து அப்பூசையை அவருக்கு ஒப்பித்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

naamarni_i.jpg

naamarni.gif

http://www.shaivam.org/naamarni.html - ஆங்கிலத்தில் இச்சரித்திரம் பார்க்க.

  • தொடங்கியவர்

374. பந்தி வஞ்சனை செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர்?

கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்; நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு சிறிதும் இன்றி எல்லாருக்குஞ் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும். பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும் இராக்ஷதர்களுக்கும் அசுரர்களுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா.

375. மாகேசுர பூசா காலத்திலே மாகேசுர ரல்லாதவரின், யாது செய்தல் வேண்டும்?

குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர் என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து, அவர்களுக்கும் அன்னங் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை; செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதற் பொருட்டுக் கடன் கொடுத்தல் போலும்.

376. மாகேசுர பூசை ஆவசியமாக எவ்வெக் காலங்களிலே செய்தல் வேண்டும்?

தீக்ஷை பெற்றுக்கொண்ட பொழுதும், சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்ட பொழுதும், விரதம் அநுட்டிக்கும் பொழுதும், உபவாசஞ் செய்து பாரணம் பண்ணும் பொழுதும், சிவசாத்திர சிவபுராணங்கள் படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும், புண்ணிய ஸ்தல யாத்திரைக்குப் புறப்படும் பொழுதும் புண்ணியஸ்தலத்தை அடைந்த பொழுதும், யாத்திரை செய்து திரும்பி வீடு சேர்ந்த பொழுதும், திருக்கோயிலிலே பிரதிட்டை, சம்புரோக்ஷணம், மகோற்சவம் முதலியவை நடக்கும் பொழுதும், வியாதியினாலே பீடிக்கப்பட்டு மருந்து உட்கொள்ளத் தொடங்கும் பொழுதும், வியாதி நீங்கிய பொழுதும், மாகேசுர பூசை ஆவசியமாகச் செய்தல் வேண்டும். (பாரணம் - உபவாசத்துக்குப்பின் செய்யும் போசனம்)

377. அவ்விசேஷ தினங்களின் மாகேசுர பூசை செய்பவர்களும், மாகேசுர பூசையிலே அருச்சனையேற்று அமுது செய்யப்புகும் மாகேசுரர்களும் அத்தினத்திலே எப்படிப் பட்டவர்களாய் இருத்தல் வேண்டும்?

மாகேசுர பூசைக்கு முன்னே யாதொன்றும் புசிக்கலாகாது. அன்றிரவிலே பசித்ததாயின், அன்னம் புசியாது பால், பழம் முதலியவற்றுள் இயன்றது உட்கொண்டு சுத்தர்களாகிச் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நித்திரை செய்தல் வேண்டும். முதனாளி ராத்திரியும் அப்படியே செய்தல் வேண்டும்.

378. முன் செய்த பாவங்களினால் வந்த மகாரோகங்களினாலே பீடிக்கப்படுவோர் மாகேசுர பூசை எப்படிச் செய்தல் வேண்டும்?

ஒரு மண்டலமாயினும், பாதி மண்டலமாயினும், விதிப்படி சிரத்தையோடு புண்ணிய ஸ்தலத்திலே புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ் செய்து, சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷ பூசை செய்வித்து, மாகேசுர பூசை பண்ணிச் சேஷம் புசித்துக் கொண்டு வரல் வேண்டும். அதன் பின்னரே மருந்து உட்கொள்ளல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

  • தொடங்கியவர்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

எறிபத்தநாயனார் புராணம்

திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்

சிவகாமி யார்மலரைச் சிறந்த யானை

யானெறியோ நெறிபத்தர் பாக ரோடு

மறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று

புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்

புரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்

கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்

கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.

கொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவாபத்துக்குக் காரணராயிருந்தவர்களை மழுவினால் வெட்டுகின்றவருமாகிய எறிபத்தநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

240px-Karur.Pasupatheeswara.jpg

அவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவரும் தினந்தோறும் புஷ்பங்கொய்து திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார். ஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்து போய், ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, திருநந்தவனத்துக்குப் போய், புஷ்பங்களை அலருஞ்சமயத்திலே கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அந்நகரிலிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனாருடைய பட்டவர்த்தனயானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மேலேறிய பாகர்களோடும் ஒருவீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின்றொடர்ந்தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது, அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக; சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகாகதி கொண்டு சென்றது சிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவராகி தவறிவிழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதிதுக்கங் கொண்டு "தேவரீருக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா" என்று சொல்லி ஓலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி "உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது" என்று கேட்க, அவர் "சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது" என்றார். உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு அதிசீக்கிரம் ஓடிப் போய் யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.

அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, "பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று போட்டார்கள்; இதை மகாராஜாவுக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்" என்று சொன்னார்கள். உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடந்தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, "யானையைக் கொன்றவர்யாவர்" என்று கேட்டார். பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, "மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்" என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் "இவர் சிவபத்தராகையால் அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ்செய்ததுபோலும்" என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, "இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினாலே இவருக்கு யாதொரு அபாயம் சம்பவியாமல் இருக்கும்படி பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ" என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்" என்றார். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, "சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்" என்றார். புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, "சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது. அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று" என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, 'இதினாலே கொன்றருளும்" என்று நீட்டினார். எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. "இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்" என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, "பட்டவர்த்தனயானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே" என்று எண்ணி "முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு" என்று நினைத்து, அந்தவாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.

அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, "அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்" என்று ஓரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுந்தது. உடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். புகழ்ச்சோழநாயனாரும் அந்தவாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார், பாகர்கள் பட்டவர்த்தனயானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, "அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்" என்று விண்ணப்பஞ்செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவராயினார்.

திருச்சிற்றம்பலம்

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

naeripat_i.jpg

naeripat.gif

http://www.shaivam.org/naeripat.html - இந்நாயனாரின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் காண்க

  • தொடங்கியவர்

இரண்டாவது

இலைமலிந்த சருக்கம்

ஏனாதிநாதநாயனார் புராணம்

ஈழக் குலச்சான்றா ரெயின னூர்வா

ழேனாதி நாதனா ரிறைவ னீற்றைத்

தாழத் தொழுமரபார் படைக ளாற்றுந்

தன்மைபெறா வதிசூரன் சமரிற் றோற்று

வாழத் திருநீறு சாத்தக் கண்டு

மருண்டார்தெ ருண்டார்கை வாள்வி டார்நேர்

வீழக் களிப்பார்போ னின்றே யாக்கை

விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.

சோழமண்டலத்திலே, எயினனூரிலே, சான்றார்குலத்திலே விபூதியில் மகாபத்தியுடையவராகிய ஏனாதிநாதர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசர்களுக்கு வாள் வித்தையைப் பயிற்றி, அதனால் வந்த வளங்கள் எல்லாவற்றையும் சிவனடியார்களுக்கு நாடோறும் கொடுத்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்தில், வாள்வித்தை பயிற்றலிலே அவரோடு தாயபாகம் பெற்ற அதிசூரன் வாள்வித்தை பயிற்றுதலினால்வரும் ஊதியம் நாடோறும் தனக்குக் குறை தலையும் ஏனாதி நாதநாயனாருக்கு வளர்தலையுங் கண்டு, பொறாமையுற்று, அவரோடு போர்செய்யக் கருதி, வீரர் கூட்டத்தோடும் போய். அவர் வீட்டுத் தலைக்கடையில் நின்று, போர்செய்தற்கு வரும்படி அழைக்க, ஏனாதிநாத நாயனார் யுத்தசந்நத்தராகிப் புறப்பட்டார். அப்பொழுது அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணாக்கர்களும் யுத்தத்திலே சமர்த்தர்களாகிய அவர்பந்துக்களும் அதைக் கேள்வியுற்று, விரைந்து வந்து, அவருக்கு இரண்டு பக்கத்திலும் சூழ்ந்தார்கள். போருக்கு அறைகூவிய அதிசூரன் ஏனாதிநாதநாயனாரை நோக்கி, "நாம் இருவரும் இதற்குச் சமீபமாகிய வெளியிலே சேனைகளை அணிவகுத்து யுத்தஞ் செய்வோம். யுத்தத்திலே வெற்றிகொள்பவர் எவரோ அவரே வாள்வித்தை பயிற்றும் உரிமையைப் பெறல் வேண்டும்" என்று சொல்ல; ஏனாதிநாதநாயனாரும் அதற்கு உடன்பட்டார். இருவரும் தங்கள் தங்கள் சேனைகளோடு அவ்வெளியிலே போய், கலந்து யுத்தஞ்செய்தார்கள். யுத்தத்திலே அதிசூரன் ஏனாதிநாதநாயனாருக்குத் தோற்று, எஞ்சிய சில சேனைகளோடும் புறங்காட்டியோடினான்.

அன்றிரவு முழுதும் அவன் தன்னுடைய தெளர்பலியத்தை நினைந்து, நித்திரையின்றித் துக்கித்துக்கொண்டிருந்து, ஏனாதிநாதநாயனாரை வெல்லுதற்கேற்ற உபாயத்தை ஆலோசித்து, வஞ்சனையினாலே ஐயிக்கும்படி துணிந்து, விடியற்காலத்திலே "நமக்கு உதவியாக நம்முடையவூரவர்களை அழைத்துக் கொள்ளாமல் நாம் இருவரும் வேறோரிடத்திலே போர் செய்வோம், வாரும்" என்று ஏனாதிநாதநாயனாருக்குத் தெரிவிக்கும்படி ஒருவனை அனுப்பினான். ஏனாதிநாதநாயனார் அதைக் கேட்டு, அதற்கு உடன்பட்டுத் தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளையும் பரிசையையும் எடுத்துக் கொண்டு, தனியே புறப்பட்டு; அவ்வதிசூரன், குறித்த யுத்த களத்திலே சென்று, அவனுடைய வரவை எதிர்பார்த்து நின்றார். முன்னொருபொழுதும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனாதிநாதநாயனார் எவ்விடத்திலும் துன்பஞ் செய்யார் என்பதை அறிந்து, நெற்றியிலே விபூதியைப்பூசி, வாளையும் பரிசையையும், எடுத்துக்கொண்டு, தான் குறித்த யுத்தகளத்திற்சென்று, அங்கு நின்ற ஏனாதிநாதநாயனாரைக் கண்டு, அவர் சமீபத்திலே போம்வரைக்கும் நெற்றியைப் பரிசையினால் மறைத்துக்கொண்டு; அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனாதிநாதநாயனார் அவ்வதி சூரனைக் கொல்லுதற்குச் சமயந்தெரிந்துகொண்டு அடிபெயர்த்தார். அப்பொழுது அதிசூரன் தன்முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையைப் புறத்திலே எடுக்க; ஏனாதிநாதநாயனார் அவனுடைய நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதியைக் கண்டார். கண்டபொழுதே "ஆ கெட்டேன்! முன் ஒருபொழுதும் இவர் நெற்றியிலே காணாத விபூதியை இன்றைக்குக் கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை! இவர் பரமசிவனுக்கு அடியவராய் விட்டார். ஆதலால் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன்" என்று திருவுள்ளத்திலே நினைந்து, வாளையும் பரிசையையும் விடக் கருதி, பின்பு "நிராயுதரைக் கொன்ற தோஷம் இவரை அடையாதிருக்க வேண்டும்" என்று எண்ணி, அவைகளை விடாமல் எதிர்ப்பவர் போல நேராக நிற்க; பாதகனாகிய அதிசூரன் அவரைக் கொன்றான். அப்பொழுது பரமசிவன் அவருக்குத் தோன்றி அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.

Shiv.gif

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

தட்சிணாமூர்த்தி

Guru1.jpg

"கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்

சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்"

- பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம்.

சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத்தண்மையை அருளுகின்றனர். ஞானமே வடிவமாக விளங்குவது சிவம்.

அவரை ஞானத்தாலேயே தொழ வேண்டும். ஆலமர் செல்வனாக அருந்தவர் நால்வருக்கும் மெளனமாயிருந்து சொல்லாமற் சொல்லி - உபதேசிக்கும் ஞானமூர்த்தியே தட்சிணாமூர்த்தி. இவர் ஆசாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். சிவத்தினிடம் சக்தி அடங்கிய வடிவம் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி வடிவைச் சிவாலயங்கள் அனைத்திலும் காணலாம். கருவறையின் தென் சுவரில் வெளிப்புறம் தெற்கு நோக்கி இவர் எழுந்தருளி நம்மை எல்லாம் தன் மோனத்தால் அழைத்து சிவஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றனர். இவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது

  • தொடங்கியவர்

god2.jpg

திருமேனி:

பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.

வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்:

அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.

திருக்கரத்திலுள்ள நூல்:

இது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.

திருக்கரத்தில் உருத்திராக்கமாலை:

36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.

இடக்கரத்தில் அமிர்தகலசம்:

அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.

சின்முத்திரை:

ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.

புலித்தோல்:

தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்

தாமரை மலர்மீது அமர்தல்:

அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.

நெற்றிக்கண்:

காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

ஆலமரமும் அதன் நிழலும்:

மாயையும் அதன் காரியமாகிய உலகமும்

தென்முகம்:

அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.

அணிந்துள்ள பாம்பு:

குண்டலினி சக்தியைக் குறிப்பது.

வெள்விடை:

தருமம்

சூழ்ந்துள்ள விலங்குகள் :

பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.

முயலகன்:

முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு.

"மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்

அம்மலர்த் தாணிழல் அடங்கும் உண்மையை

மைகம்மலர் காட்சியிற் கதுவ நல்கிய

செம்மலை யலதுளஞ் சிந்தியா தரோ."

போதில் மாதவா குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற்கீழ் அறம் பகர்ந்து, நல்லறமுரைந்து ஞானமோடு பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனைப் பணிந்து பேரின்பம் எய்துவோம்.

திருச்சிற்றம்பலம்.

thakshinamurthi.jpg

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

மெயப்பொருணாயனார் புராண சூசனம்

1.சிவாலயங்களை விதி வழுவாது நடாத்தல்

சிவாலயங்களிலே நித்தியமாகிய பூசையும் நைகித்திகமாகிய திருவிழாவும் தவறாது நடத்தற்கு வேண்டும். நிபந்தங்கள் அமைத்து, அவைகளைச் சைவாகமவிதிப்படி சிறிதாயினும் வழுவாது நடத்துவித்தல் அரசனுக்குக் கடனாம். அவ்வாறு செய்யாது ஒழிவனாயின்; அவனுக்கும் அவனால் ஆளப்படும் உலகத்துக்கும் பெருங்கேடு விளையும். இதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "ஆற்றரு நோய்மிகுமவனி மழைகுன்றும் - போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் - கூற்றுதைத் தான்றிருக் கோயில்களானவை - சாற்றிய பூசைக டப்பிடிற் றானே." எ-ம். "முன்னவனார்கோயிற் பூசைகண் முட்டிடின் - மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங் - கன்னங் களவு - மிகுத்திடுங் காசினிக் - கென்னரு ணந்தி யெடுத்துரைத்தானே", எ-ம் வரும். இச்சிவபுண்ணியத்தைச் சிறிதாயினும் தவறாது நடாத்தினவர் இம்மெய்ப்பொருணாயனார் என்பது, இங்கே "மங்கையைப் பாகமாக வைத்தவர் மன்னுங்கோயி - லெங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல் - பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.

siva2b.jpg

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

காலாந்தகர்

KalaSamharaMurtne.gif

தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்

வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன்

பாடுதான் சொல்ல அஞ்சிப் பாதமே சரணம் என்னச்

சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே"

- திருநாவுக்கரசர்

கவுசிக முனிவரின் புதல்வராக விளங்கிய மிருகண்டு முனிவர் தம்மனைவி மருத்துவதியோடு இல்லறம் இயற்றிவரும் நாளில், ஆண்மகவு வேண்டி அருந்தவம் இயற்றிட அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு என்பது பிரமன் வகுத்த கணக்கு! மார்க்கண்டேயன் மனம் சிவபெருமானைப் பற்றியிருந்தது. நாளும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். வயது பதினாறு அடைந்தார். மார்க்கண்டேயனைக் கவர்ந்து செல்ல யமன் வந்துவிட்டான். அப்போது மார்க்கண்டேயனைக் கவர்ந்து செல்ல யமன் வந்துவிட்டான். அப்போது மார்க்கண்டேயன் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். யமனைக் கண்ட அவர் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டுவிட்டார். யமன் விடுவதாயில்லை சிவலிங்கத்துடன் மார்க்கண்டேயனையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுத்தான். சிவபெருமான் தோன்றினார். காலனை உதைத்தார். காலன் வீழ்ந்தான். மார்க்கண்டேயன் "என்றும் பதினாறு" என்னும் பெருவரம் பெற்றுய்ந்தார்.

"காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன்

படக்கடைக் கணித்தவன் அல்லாய்

பேய் மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்

தொண்டனேன், பெரும்பற்றப் புலியூர்ச்

சேமநற்றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட

செல்வச்சிற்றம் பலக் கூத்த!

பூமலர் அடிக்கீழ்ப் புராண பூதங்கள்

பொறுப்பர் என் புன்சொலின் பொருளே"

மன்மதனை, யமனை, தக்கனை, தவ வலிமைமிக்க எச்சனை அழியும்படி செய்து பின்பு அவர்களுக்குத் திருவருள் பாலித்தவனாகிய சிவபெருமானே உன்னை அல்லாத பேய்த்தன்மை உடையவர்களை மனத்தினாலும் நினைக்காமல் நீங்கி நின்ற தவத்தினால் மேம்பட்ட சிவத்தொண்டர்களுக்குத் தொண்டனாகிய என்னை, பெரும்பற்றப்புலியூராகிய காவல் பொருந்திய நல்ல தில்லைப்பதியைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அங்கே ஆட்கொண்ட திருவருட்செல்வம் நிறைந்த சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே!

எனது அற்புதமான துதிச் சொற்களின் பொருளை உனது அழகிய தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் உள்ள பழைமையான பூதகணங்கள் பொறுத்தருளுவர் அன்றோ? என்று திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா பாடலில் பரவுகின்றார்.

தாயுமான அடிகள் மார்க்கண்டேயன் வரலாற்றைக் குறிப்பிடும் போது இனி அன்பர்கள் மரணத்தைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தெளிவுறுத்துகிறார்.

"மார்க்கண்டர்காக அன்று மறவிபட்ட பாட்டை உன்னிப்

பார்க்கில் அன்பர்க்கு என்ன பயங்காண் பராபரமே!"

காலகாலமூர்த்தியாகச் சிவபெருமான் அருள்புரிந்த தலம் தஞ்சை மாவட்டம் - மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள திருக்கடவூர் சிவத்தலம் ஆகும். இது மிகவும் தொன்மையான தலம். ஊழிக்காலத்தையும் கடந்து விளங்கும் தலமாதலின் அது கடவூர். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான அங்கே, காலசம்ஹார மூர்த்தியின் அற்புதத் திருவுருவம் நமக்கு மரணத்தில் இருந்து காப்பளிக்கின்றது.

அம்சுமத் பேதாகமத்தில் காலசம்ஹார மூர்த்தியின் வடிவம் விளக்கப்பட்டுள்ளது. இவ்வடிவில் பெருமான் மூன்று கண்களும் நான்கு அல்லது எட்டுத் திருக்கரங்களும், பக்கப்பற்களும் கொண்டு திகழ்கிறார். எட்டுத்திருக்கரங்கள் இருப்பின், வலக்கரங்கள் நான்கிலும் முறையே சூலம், பரசு, வஜ்ஜிரம், கட்கமும், இடக்கரங்கள் இரண்டிலும் கேடகமும் பாசமும் கொண்டு திகழ்வார். எஞ்சிய இரு இடக்கரங்களும் விஸ்மய, சூசி முத்திரைகளைக் காட்டும், அனைத்து அணிகலன்களையும் பூண்டு விளங்கும் இம்மூர்த்தி பவளச்செம்மேனியுடையராய் விளங்குவார்.

இயமன் அச்சத்துடன் நடுங்கி நிற்கிறான். இடக்கரங்களுடன் பக்கப்பற்கள் தெரியுமாறு கரண்ட மகுடத்துடன் அவன் விளங்குகிறான். அவனது ஒருகரத்தில் பாசத்துடன் இருகரங்களையும் கூப்பி இறைவன் கருணைக்கு ஏங்கி வணங்கி நிற்கிறான்

காமிகாகமத்தின்படி, சிவபெருமானுடைய இடது பாதம் யமனை உதைப்பதாகவும், வலது பாதம் பூமியில் ஊன்றியதாகவும் அமைந்திருக்கும். அவரது இருவலக்கரங்களிலும் சூலமும் பரசும் விளங்கும். ஒரு இடக்கரம் நாகபாசம் கொண்டதாயும் மற்றொரு இடக்கரம் சூசிஹஸ்தமாயும் அமைந்திருக்கும். சிவபெருமானுடைய சூலம் யமனது கழுத்தில் குத்திச்செல்வதாக அமைந்திருக்கும். யமன் மயங்கிக் கீழே விழுந்து கிடப்பான். மார்க்கண்டேயர் வழிபடும் இலிங்கத்தினின்றும் பெருமான் தோன்றுவதாகவும் இம்மூர்த்தி அமைந்திருக்கலாம். இவ்வடிவில் இலிங்கமும் சிவபெருமான் வடிவமும் இலிங்கோற்பவ மூர்த்தி அமைப்பில் இருக்கும். சிவலிங்கத்தின் அருகே மார்க்கண்டேயர் பூசை புரிந்து கொண்டிருப்பர்

திருமுறைகள் காலகாலனைப் பலவாறு துதிக்கின்றன. திருஞானசம்பந்தர் "மாணிதன்னுயிர் மதித்துணவந்த அக்காலனை உதை செய்தார்" எனப் போற்றுவார். சுந்தரரோ, "அந்தணாளன் உன் அடைக்கலம் புகுந்த அவனைக் காப்பது காரணமாக, வந்த காலந்தன் ஆருயிரதனை வவ்வினாய்" எனப் போற்றுகிறார். "காலனைக் காய்ந்த செய்ய காலனார்" எனச் சேக்கிழார் போற்றுகிறார்

உயிர்களுக்கெல்லாம் அந்தகனாம் யமனுக்கும் ஒரு அந்தகனாகத் திகழ்கிறார் சிவபெருமான், அவர் காலாந்தகர், காலாரி, காலசம்ஹாரமூர்த்தி என்றெல்லாம் போற்றப் பெறுகிறார். இக்கோலம் அடியவர்களுக்காக எதையும் செய்யவல்ல சிவபெருமானது பராக்கிரமத்தை விளக்கிக் காட்டுகின்றது. காலனிடமிருந்து நம்மைக் காப்பவராகக் காலகாலமூர்த்தி திகழ்கிறார்.

makala2.jpg

திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி

Edited by ArumugaNavalar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.