Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன்

 

நேற்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது.

புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்புலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தது.

  ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றன. இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துள்ளனர்.

இவ்வாறான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதுடன் தினமும் வேதனையால் வாடிக்கொண்டிருக்கின்றன.

அது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.

இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

இந்த சபையிலே முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, குமார வெல்கம ஆகியோர் இருக்கின்றனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் இருக்கின்றேன்.

 வர்த்தகத் துறை சார்ந்த அமைச்சராக இருக்கின்றவர்களை வர்த்தகர்கள் தமது பிரச்சினைகள் பற்றி கூற வந்து சந்திப்பது வழமை. அவ்வாறான சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் தந்தை ஒருவரை பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளது. வர்த்தகர்களின் சந்திப்பில் கலந்து கொண்ட இவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு என்னையும் தொடர்புபடுத்தி பழி சுமத்துகின்றனர்.

இப்றாஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சினைகள் தொடர்பாக என்னை சந்தித்தனர்.

அந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போதான புகைப்படத்தை வைத்துக்கொண்டு இந்த பயங்கரவாத கூட்டத்தை நான் வழிநடாத்துவதாக கூறுவார்களாயின் அவர்களை விட மிக மோசமான கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது.  நானும் இதில் சம்பந்தப்பட்டதாக விமல் வீரவன்ச எம் பி யும் இந்த சபையிலே நா கூசாமல் கூறியிருக்கின்றார்.

இந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையிலிருக்கின்றோம். வெட்கப்படுகின்றோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற செயற்படுகின்ற, தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை இந்த பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன்.

ஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக் கேட்கின்றேன்.

பயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடல் வழியாக வந்த ஒரு இலட்சம் அகதிகளில் நானும் அடங்குபவன், அவர்களுடன் அகதி முகாமில் வாழ்ந்தவன், அதிலிருந்து அரசியலை ஆரம்பித்தவன். நாடு இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும்.

நாளைய எமது எதிர்கால சந்ததியினரை வழிகாட்ட முடியும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கயவர்களை அழிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் நடந்த சம்பவங்கள் இப்போது இலங்கையில் தலையெடுத்துள்ளது.

வணாத்தவில்லுவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன, அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுவிக்க செய்ய அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன்.

இது தொடர்பில் இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று பொலிசாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசியது என்று  இந்த சபையில் தெரியப்படுத்த வேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதனை விடுத்து இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.

அது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா பல ஊடக சந்திப்புக்களை நடத்தியது.

 எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன எனவும் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/119292/

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201707

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தற்கொலை குண்டுதாரியின் தந்தையுடன் உள்ள புகைப்படம்: அமைச்சர் றிசாட் கூறுவது என்ன?

 
றிசாட் பதியுதீன் Image caption றிசாட் பதியுதீன்

நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது கைது செய்யப்பட்ட நபரொருவர் காணப்படும் படத்தில், தானும் இருப்பதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறு பூசுவதாக, இலங்கையின் கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத கூட்டத்தை நான்தான் வழிநடத்துவதாக, ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, யாராவது கூறுவார்களாயின் அவர்களை விடவும் மோசமான, கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

"கைத்தொழில் வர்த்தக அமைச்சராக தற்போது நான் பதவி வகிக்கின்றேன். வர்த்தகத் துறை அமைச்சரை வர்த்தகர்கள் வந்து சந்திப்பதும், அவர்களின் பிரச்சினைகள் பற்றி கூறுவதும் வழமையாகும். அவ்வாறானதொரு சந்திப்பொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்துக் கொண்டுதான், என் மீது சேறு பூசுகின்றார்கள்" எனவும் அவர் விவரித்தார்.

தன்னை ஒரு தடவை வர்த்தகர்கள் குழுவொன்று சந்தித்ததாகவும், அந்தக் குழுவில் எடுக்கப்பட்ட படத்தில் காணப்படும் இப்ராஹிம் எனும் நபர் ஒருவரை, பாதுகாப்பு தரப்பு தற்போது கைது செய்துள்ளதாகவும், நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டார் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் தந்தைதான் மேற்படி நபர் எனவும் இதன்போது கூறிய அமைச்சர்; அதனை வைத்தே, தன்மீது மீது சேறு பூசப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

"இப்ராஹிம் என்பவர் வர்த்தகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவரும் அவர் தலைமை தாங்கும் வியாபார சங்க உறுப்பினர்களும் தமது வியாபார பிரச்சனைகள் தொடர்பாக என்னை சந்தித்தனர்" என்றார் அவர்.

"அந்த சந்திப்பில் எனது அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட பபடத்தை வைத்துக்கொண்டு, இந்த பயங்கரவாத கூட்டத்தை, நான் வழிநடத்துவதாக கூறுவார்களாயின் அவர்களை விட மிக மோசமான கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது".

நானும் இதில் சம்பந்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் இந்த சபையிலே நா கூசாமல் கூறியிருக்கின்றார். இந்த குரூரச் சம்பவம் நடந்ததன் பின்னர் - நானும் எனது சமூகமும் சொல்ல முடியாத வேதனையிலிருக்கின்றோம், வெட்கப்படுகின்றோம். கிறிஸ்தவ மக்களிடம் எமது மன்னிப்பைக் கோருகின்றோம். பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது அனுதாபத்தையும் வேதனையையும் தெரிவித்து மன்னிப்புக் கோரினோம்" என்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அங்கு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியும் அப்பாவி மக்களைக் காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும், "இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்கவேண்டும்" எனவும், அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

"புனித ஈஸ்டர் தினத்தை - கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதைவிட கேவலமான ஒன்றும் இருக்க முடியாது.

புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய கரும்புலிகளுக்கே, இவ்வாறாவற்றினைச் செய்ய சுமார் 20 வருடங்கள் எடுத்தது. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒருகுறிப்பிட்ட நேரத்தில் இந்த ஈனச்செயலை மேற்கொண்டு, ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றனர். இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி,எதிர்கால சந்ததியினரின் வாழ்வையும் சீரழித்துள்ளனர்.

இவ்வாறான செயலை நினைத்து நினைத்து இலங்கையிலுள்ள சுமார் 20 லட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவினரும் பெரும் கவலைகொண்டிருப்பதுடன் வேதப்படுகின்றனர்.

அமைச்சர்படத்தின் காப்புரிமை ANADOLU AGENCY

அது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரின் புகைப்படத்தையும் ஆவணங்களையும்பாதுகாப்பு தரப்பினரிடம் கடந்த காலத்தில் சமர்ப்பித்தும், பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காமை குறித்து, ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன்இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.

இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறியமுழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற, செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை, இவ்வாறானபயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகத்தை வழங்க வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன்.

ஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக்கேட்கின்றேன்.

பயங்கரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கடல் வழியாக வந்த ஒரு லட்சம் அகதிகளில் நானும் ஒருவன். அவர்களுடன் அகதி முகாமில் வாழ்ந்தவன், அதிலிருந்து அரசியலைஆரம்பித்தவன். நாடு இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும். நாளைய எமது எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்ட முடியும். எனவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த கயவர்களைஅழிக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் நடந்த சம்பவங்கள் இப்போது இலங்கையில் தலையெடுத்துள்ளது.

வணாத்தவில்லு பிரதேசத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட போதும், அவர்களை விடுவிப்பதற்கு அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன். இந்த விடயத்தை இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று போலீஸாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசினார் என்று இந்த சபையில் தெரியப்படுத்தவேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து, இல்லாத பொல்லாதவிடயங்களைக் கூறி - இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.

அது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து, பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா - பலஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன" எனவும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48047962

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இந்த பயங்கரவாத கூட்டத்தை நான்தான் வழிநடத்துவதாக, ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு, யாராவது கூறுவார்களாயின் அவர்களை விடவும் மோசமான, கேவலமான அரசியல்வாதிகள் எங்கும் இருக்க முடியாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

 

உங்களது வாயால் நீங்கள் வெட்டுவோம் குத்துவோம் இளைஞர்அணி இருக்கு தேவை என்றால் ஆயுதம் தூக்குவோம் என்று சொன்னதை நினைவு படுத்துகிறார்கள்.
அப்ப யோசிக்காமல் இப்ப யோசித்து என்ன பயன்.

இதைப் போலவே தமிழ் தலைவர்களும் சும்மா இருந்த இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள்.
தமிழனுக்கு வந்தா இரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளியா என்ன?

குண்டுவெடிப்புகளுடன் அமைச்சர் றிசாட்டுக்கு நெருங்கிய தொடர்பு!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் மொஹமட் இப்ராஹிம் பாரிய வணிகர் ஆவார். அவருடன் ரிஷாட் பதியுதினின் தம்பி இணைந்து வணிக நடவடிக்கைககள் பலவற்றை முன்னெடுத்துள்ளார்.

முன்னான் ஜனாதிபதி சந்திரிகா மீதான குண்டு தாக்குதல் முயற்சியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரொருவர் இவரது உறவினராவார்.

அத்தோடு மன்னார் பிரதேசத்தில் சுமார் 3000 ஏக்கர் காணி ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாசல்களை புனரமைப்பதற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதி கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் மீது முறைப்பாடுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/118653

 

இது ஆரம்பந்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.