Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” - முஸ்லிம்கள் ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” - முஸ்லிம்கள் ஆதங்கம்

விக்கினேஸ்வரன் கஜீபன்பிபிசி தமிழுக்காக
விடுதலை புலிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள்.

கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமட் தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார்.

விடுதலை புலிகளும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும்

வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.
Image captionவணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர்.

தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தில் வெல்வதற்கு சில வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ் மாவட்டத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றினாலும் விடுதலைப்புலிகள் எமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிடவில்லை.

முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் விடுதலைப் புலிகள் தடை போட்டதில்லை என்கிறார் முகமட் தாகீர். ஆனால் தற்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.

வடக்கிலே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த காலத்தில் விடுதலை புலிகள் மற்ற மக்களுடன் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறு முஸ்லிம் மக்களுடனும் நடந்து கொண்டனர். அதனால் எங்களை வெளியேற்றியமைக்காக அவர்களை மனவருத்ததுடன் மன்னித்துள்ளோம் எனக் கூறும் முகமட் தாகீர், 1997க்கு பிறகு நாம் இந்த பூமியில் காலடி வைக்கும்போது முதன்முதலில் வந்தவன் என்ற வகையில் எங்களை யாழ். பேருந்து நிலையம் முன் இரு கைகூப்பி வரவேற்ற காட்சி இன்னமும் என் கண்களில் உள்ளது என்று கூறியவர், அவர்கள் கொண்டு வந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது அவர்களின் பாசம் எனவும் கூறுகிறார்.

விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர்.

இன்று என்ன நடக்கிறது?

விடுதலை புலிகள்

யாரோ ஒரு பயங்கரவாதிகள் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த இலங்கையில் உள்ள முஸ்லிம்களை வதைப்பதும், பள்ளிவாசல் மீது கல்லெறிவதும், தீ வைப்பதும், வீதியில் செல்கையில் ஏளனமாக பார்பதும் முஸ்லிம் மக்களின் இன்றைய நிலையாகிவிட்டதாக முகமட் தாகீர் கூறுகிறார்.

சில இடங்களில் வியாபார நடவடிக்கையினை தடுப்பதுமாக செயற்படுகின்றனர். இவ்வாறு ஒரு கீழ்தரமான செயலை தமிழ் மக்கள் எமக்கு செய்யவில்லை என்கிறார் முகமட் தாகீர்.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் மக்களுடன் இணைந்து தொழில் செய்து பொருளாதாரத்தை விஸ்தரித்துள்ளோம். அவர்களும் தமது புரிந்துணர்வுடன் தமது அன்பை வெளிப்படுத்துகின்றனர் எனக்கூறும் அவர், எம்மீதான விடுதலை புலிகளின் செயற்பாட்டுக்காக சில கல்விமான்களும் மன்னிப்பு கேட்டதும் நம் மனதில் நிற்கின்றது. நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரை தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்போம் எதிராக செயற்படமாட்டோம் என உறுதிபட கூறுகிறார் முகமட் தாகீர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்களின் நிலை

முஸ்லிம்கள்

முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாத சமூகம் என்பது கவலை அளிக்கிறது எனவும், பெண்கள் அணியும் முகத்திரையினை தடை செய்தவர்கள் ஒன்றை விளங்கிகொள்ள வேண்டும். ஒருசிலர் செய்த இந்த தாக்குதலுக்கு அதன் ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்கும் செயற்பாடுதான் இடம்பெற்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்த அவர், இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் சிறுபாண்மையினரால்தான் தாங்கள் தோற்றுள்ளோம் என்பதனால் இவ்வாறு செயற்பட்டு சிறுபான்மையினரை தம்வசம் திருப்புப முயற்சிக்கின்றனர் என குற்றஞ்சாட்டுகிறார்.

அதைதான் கிறிஸ்தவ பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கூறியுள்ளதாகவும் அவருக்கு பின்னால் முஸ்லிம் மக்கள் எமது ஆதரவை கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.

பெண்கள் முகத்திரை தொடர்பில் நம் மத தலைவர்கள் தமது தலைமை போட்டி காரணமாக இவ்வாறு செய்திருக்கின்றனர் என கூறிய முகமட் தாகீர், இது தனக்கு மிகவும் கவலையாகவும் மனவருத்தமாக உள்ளதாகவும் கூறிகிறார்.

முகத்தை மூடும் ஆடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அண்மையில் கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம் பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது அவர்களை இறங்கும்படி அரசு படை கூறியுள்ளது என்ற தகவலை தெரிவித்த முகமட் தாகீர், ஊடகங்களும் முஸ்லிம் சமூகம் என்று கூறி எம்மை பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

"என்னதான் நடந்தாலும் நாம் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தை ஆதரித்து அவர்களை ஆட்சியில் ஏற்றுவோம் என கனவில் கூட நினைக்க வேண்டாம். நாம் வாக்களிக்கமாட்டோம்" என உறுதிபட பேசினார் முகமட் தாகீர்.

நோன்பு காலத்தில் நாம் பெரும் இன்னல்களை சந்திக்கின்றோம் எனவும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குண்டுதாரிகளின் சரியான பின்னணி கண்டறியப்படாவிட்டால் இந்த நாடு பயங்கரவாதத்தினால் முற்றாக அழிந்து போகும் என்பதை திட்டவட்டமாக கூறினார் முகமட் தாகீர்.

தவுஹீத் ஜமாத் அமைப்பு

தவுஹீத் ஜமாத் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை உருவாக்கி இருக்கின்றனர் என கூறும் இவர், இலங்கையில் ஜம்மியத் உலமா என்ற சபை உள்ளதாகவும், இதுதான் முஸ்லிம்களின் மிக உயர்ந்த சபை அந்த சபையில் தவுஹீத் ஜமாத், ஜபிலிக் ஜமாத், ஹரிகா என்ற அங்கங்ளை கொண்டதுதான் இந்த அமைப்பு என்றார்.

ஆகவே தவுஹீத் ஜமாத் அமைப்பை மட்டும் தடை செய்து அவர்களை மட்டும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது தலைவர்கள் தமக்குள் உள்ள போட்டியை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை பழிவாங்கும் செயலாக உள்ளதாகவும், இதை ஒரு சூழ்ச்சியாகவே பார்பதாகவும் முகமட் தாகீர் தெரிவித்தார்.

காவல்துறையினர் பாதுகாப்பு

ஜம்மியத் உலமா சபை சரியான முறையில் நடந்துகொள்ளாததால்தான் தவுஹீத் ஜமாத் அமைப்பின் விடயங்களை இவர்கள் பெரிதுபடுத்தி கிழக்கில் முஸ்லிம்களை பழிவாங்கிகொண்டு இருக்கின்றனர் என்றார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு ஒரு நேர்வழிகாட்டும் அமைப்பு. பயங்கரவாதிகள் இல்லை என்கிறார் அவர்.

"இங்கு ஆயுதங்களுடன் பிடிக்கபட்டவர்களை பயங்கரவாதிகளாக தண்டிக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டால் அது விடுதலை புலிகள் என்று கூறுபவர்கள் ஏன் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எங்களை மட்டும் ஒட்டுமொத்த முஸ்லிம்களாக பறைசாற்றுகின்றனர்" எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

அவர்களின் நோக்கமே இலங்கையில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி உயர்ந்த இடங்களுக்கு வரவிடாமல் தடுப்பதும்தான் என குற்றஞ்சாட்டும் இவர், பொருளாதாரத்தை இல்லாமல் செய்வதே இவர்களின் முக்கிய விடயம் என்கின்றார்.

முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள் எனவும் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பயங்கரவாதத்தை முற்றாக எதிர்கின்றோம். இஸ்லாமில் பயங்கரவாத்திற்கு இடமில்லை எனவும் கூறும் முகமட் தாகீர், தற்கொலைக்கும் இடமில்லை; அவ்வாறு தற்கொலை செய்பவர்களை முஸ்லிம் என நாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் உறுதியாக தெரித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48162037?ocid=socialflow_facebook&fbclid=IwAR2PglVgGW57ZLO08xi6KpRHrl9G98jOffZy4ctZm38_3PTzOTwcWA78MqI

இவர் இப்படி கூறுகிறார். ஆனால் முகங்களை மறைக்கும் ஆடைகளை அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடை செய்த அன்று பல சிங்களவர்கள் அதை வரவேற்று கருத்தெழுதிய பொழுது சில முஸ்லிம்கள் தாம் நாட்டில் பயங்கரவாத்தை அழிக்க சிங்கள அரசுக்கு உதவியதாகவும் இன்று சிங்களவர்கள் தமக்கெதிராக எழுதுகிறார்கள் என்றும் கவலையுடன் பதிலளித்தார்கள்.

புலிகள் மற்றும் தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்டியவர்களுக்கு இன்று தம்மை மற்றவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்க வெளிக்கிட்டதும் அதை பொறுக்க முடியவில்லை.

பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் இல்லை, அவர்களை முஸ்லிமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற கருத்திற்கும் சில சிங்களவர்கள், பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இஸ்லாமிய மதத்தை உடையவர்களாக தானே உள்ளார்கள், பின்னர் எப்படி அவர்களை முஸ்லிம் இல்லை என்கிறீர்கள் என கேள்வி கேட்டு சமூக வலைத்தளங்களில் சண்டை பிடிப்பதை பார்த்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லாரா, தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று சொல்லுமாம் என்பது நினைவுக்கு வந்து தொலைக்கிறது

3 minutes ago, nunavilan said:

லாரா, தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று சொல்லுமாம் என்பது நினைவுக்கு வந்து தொலைக்கிறது

உண்மை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை சண்முகாவில்  ஆசிரியை மூடிய ஹபாயாவுடன் வந்த போது  பாடசாலை நிர்வாகம் அதை தடை செய்தது .முற்றாக மூடிவர வேண்டாம் என சொல்ல . அதைக்கண்டித்து திருகோணமலையில் பாடசாலைக்கும் சேலைக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது அப்போது சேலை ஆபாச உடையென பலர் கூச்சலிட்டனர் பேனர்கள் கட்டினர் , காட்டினர் தற்போது அரசே தடை செய்து விட்டது 

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கி பி பி சி இப்ப தன்னுடைய தேவைக்கு விடுதலைப் புலிகளைச் சாட்சிக்கு அழைக்குது அதற்காக தானகவே ஒரு பேட்டியை உருவாக்குது.இப்போதெல்லாம் பி பி சியின் தமிழ் செய்திகள் பகுதி இந்தியாவுக்கு மாற்றப்பட்டுவிட்டது காரணம் அங்கு மலிவாகக்கிடைக்கும் பத்திரிகையாளர்களைவைத்தே செய்திப்பிரிவை நிர்வகிக்கலாம் தவிர பி பி சி தமிழின் செய்திக்கு இப்போது இந்தியத்தமிழர்தான் பொறுப்பாக இருக்கிறார் முள்ளிவாய்கால் காலத்திலும் அவர்கள்தான் இருந்தார்கள் அனால் என்ன அவர்கள் அனைவரும் இந்திய உளவுப்பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டார்கள். அவர்கள் கூறும் தொனியில்தான் ஊளையிடவேண்டும்.எந்தச் செய்தியை எப்போது சொல்லவேண்டும் என அவர்கள்தான் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கேக்க ஒரு நாளும் பாடசாலைகள் இப்படி பூட்டி இருக்கேல்ல...இப்ப இவர்களால் பாடசாலைகள் கூட நடத்தேழாமல் இருக்குது என்று சிங்களவர்களும்,தமிழர்களும் சொல்லினம் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை எந்த யாழ்ப்பாண முஸ்லீமும் யாழ்ப்பாண வெளியேற்றம் பற்றி இதய சுத்தியோடு பேசியதில்லை.

எல்லாருமே.. ஏதோ புலிகள் வலிந்து துரத்தியது போன்ற ஒரு தோற்றத்தையே காட்ட விளைகின்றனர். 

கிழக்கில்.. சிங்கள ஆட்சியாளர்கள்.. பிரேமதாச.. ரஞ்சன் விஜரத்தின கூட்டணிக்கு வால்பிடித்துக் கொண்டு.. தாங்கள் நடத்திய தமிழர் விரோத தாக்குதல்கள்.. வடக்கில் நிகழ்த்திய காட்டிக்கொடுப்புக்கள்.. விமானத்தாக்குதல்களுக்கு வழிகாட்டுதல்கள்.. பள்ளிவாசல்களில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தமை..  முஸ்லீம்கள் யாழ் சிவன்பண்ணை வீதியை போராளி.. யாழ் கோட்டை சமரின் பின் கூட.. உயிர்காப்புப் பணி நிமித்தம் பாவிக்க விடாமல் தென்னங்குற்றிகளை போட்டுத் தடைகளைப் போட்டமை..தமிழ் மக்களின் வீடுகளை தட்டி அடாத்தாக வீடுகளில் அறைகள் தரும்படி வெருட்டியமை.. யாழ் வண்ணை சிவாலயச் சூழலில் மாட்டிறைச்சிக் கழிவுகளை எச்சரிக்கைகள் மத்தியிலும் மத விரோத எண்ணத்தில் கொட்டி வந்தமை.. கட்டாய மதமாற்றங்களுக்கு தமிழ் பெண்பிள்ளைகளை காதலிக்கிறம் என்ற போர்வையில் கடத்தி மதமாற்றியமை..  இப்படி இன்னோரென்ன நெருக்கடிகளை போர் நெருக்கடிக்கு மேலதிகமாக இவர்கள் வழங்கினர்.

இதே முஸ்லீம்களை தமிழ் மக்கள் தங்கள் சகோதர்களாக.. ஹிந்தியப் படைகளின் கெடுபிடிகளில் இருந்து காக்க.. தீவகம் சாட்டிக்கு இடம்பெயரக் கேட்டு அங்கு அவர்களை பராமரித்துப் பாதுக்காத்தமையை முற்றாக மறந்து நன்றி கெட்ட தனமாக.. 1990 இல் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து துன்புறுத்தி..துரத்தி அடித்து.. சிங்கள அரசினதும் அதன் உளவுக் கூலிகளான மொசாட்டின் நீண்ட கால இனப்பிரிவுகளை தூண்டும் நோக்கங்களுக்குக்காகவும்..... துணை போய் வடக்குக் கிழக்கில் செயற்பட்டத்தை.. ஏன் வெளிப்படையாக ஏற்க மறுக்கிறார்கள். 

Image result for à®à®²à®à¯à®à¯ à®®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯

அதுபோக.. ஏதோ இலங்கை வாழ் முஸ்லீம் பெண்களின் உடையாக.. புர்க்காவும்.. நிகாப்பும் விளங்கியது கணக்காக கதை அளக்கிறார்கள்.

உண்மையில் இந்த ஆடைகள் மத அடையாளங்களே அல்ல. மத்திய கிழக்கின் சூழலில் அங்கு வீசும்..அனல்.. மணல் காற்றில் இருந்து முகம்... கண் இவற்றையும் உடலையும் பாதுக்காக்க உருவாக்கப்பட்ட ஆடைகளே.

அதுக்கும் இலங்கை முஸ்லீம்களின் ஆடைக்கும் எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை. மதத் தொடர்பும் இல்லை.

எப்போது மத்திய கிழக்கு தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மத வெறிக்கு இலங்கை முஸ்லீம்கள் உள்ளாக நினைத்தார்களோ அதன் பின்னர் புகுத்தப்பட்டவையே.. அரபி மொழியும்.. பேரீச்சம் மரங்களும்.. புர்க்காவும் நிகாப்களும். அதுக்கு முன்னர்

இதுதான் இவர்களின் தோற்றம்...

Image result for à®à®²à®à¯à®à¯ à®®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®à¯

இந்த உண்மையைக் கூடப் பேச வக்கற்ற யாழ் முஸ்லீம்கள் என்போர்.. உண்மையில் தமது சமூத்தையே உண்மைகளை மறைத்து சீரழித்து வருகின்றனர். தவறாக வழி நடத்தி இனக்குரோதங்களுக்குள் தம்மை நிறுத்தி.. அதில் இலாபமீட்ட முனைகின்றனர்.

இந்த நிலை எவருக்குமே நல்லதன்று. குறிப்பாக முஸ்லீம்களுக்கும்.. தமிழ் மக்களுக்கும். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.