Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுக்குச் சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுக்குச் சந்தேகம்

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதாகத் தெரிவிப்பு
 
 
main photo
 
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் எனக் கூறப்படும், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்படவில்லை. உயிரோடு இருப்பதாக இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியபோது கொல்லப்பட்டதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஏலவே உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதும் ஸஹ்ரான் ஹாசீம் உயிரிழந்து விட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், ஸஹ்ரான் ஹாசீம் உயிரிழக்கவில்லையென இலங்கைப் புலனாய்வுத் துறை தற்போது கூறுகின்றது. 
 
ஸஹ்ரான் ஹாசீம் உயிரோடு இருப்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் ஸஹ்ரான் ஹாசீம் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலுக்குச் சென்றிருந்தார்.

 

ஆனால், ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைதாரியாகச் செயற்பட்டு குண்டைவெடிக்க வைக்கவில்லை. மாறாக குண்டை பொருத்திவிட்டு தப்பித்துச் சென்றிருக்க வேண்டும்.

அல்லது நேரக்கணிப்பு குண்டைப் பொருத்தி வெடிக்கவைத்திருக்கலாம், அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவி மூலம் குண்டை வெடிக்கச் செய்து விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாமென இலங்கைப் புலனாய்வுத்துறை பல வகையான சந்தேகங்களை தற்போது வெளியிட ஆரம்பித்துள்ளது.

குண்டுவெடிப்பில் சிதறிய உடல் பாகங்களுடன் செய்யப்பட்ட மரபணுப் பரிசோதனையில் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்படவில்லை.

அத்துடன் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் படத்துக்கும், ஸஹ்ரான் ஹாசீமின் படத்துக்கும் இடையே வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

இதனால் மீண்டும் வேறு உடல் பாகங்களுடன் மரபணுப் பரிசோதனை ஒன்றைச் செய்யவுள்ளதாக இலங்கைப் புலனாய்வுத் துறை கூறுகின்றது

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பை ஸ்தாபித்த ஸஹ்ரான் ஹாசீம் ஐ.எஸ். இஸ்லாமியவாதிகளின் ஆதரவுடன் தலைமறைவாகச் செயற்பட்டு வேறு தாக்குதல்களை இலங்கையில் நடத்தக் கூடுமெனவும் இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=941&fbclid=IwAR2t-PoNpCozHvQD5UB-8LcN6wRpyfVAi2ibw_sZhen3cW6qPLvcmKbYjDY

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி நான்  ஏற்கனவே ஒரு வாரத்தின் முன்னர் (28.04.19) இட்ட பதிவு:

தாக்குதல்குழுவின் முக்கிய தலைவர்  பந்தாவுக்கு தானும் வேறு ஒரு இடத்தில் அதே சமயத்தில் தாக்குதல் நடத்த போவதாக சாக்கு சொல்லி மற்றவர்களுடன் அல்லாவுக்கு உறுதிமொழி  கொடுத்து புறப்பட்டபின் சேர்ந்து வந்த அடிநிலை சீடர்கள் திட்டமிட்டபடி தாக்குதலில் இறந்துவிட குறித்த தலைவர் மட்டும் தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுவழியால் சென்று தப்பித்து இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல் ஒன்று சொல்கிறது.

 

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இன்னும் இருப்பதாக சிங்கள அரசும் செய்தி கசிய விட்டு இருக்கலாம் 

51 minutes ago, ரதி said:

அவர் இன்னும் இருப்பதாக சிங்கள அரசும் செய்தி கசிய விட்டு இருக்கலாம் 

ஏனென்றால் அவர் அப்படி உயிருடன் இருப்பதையே சிங்களம் விரும்புகின்றது. அப்படி அவர் கொல்லப்பட்டு இருப்பின் அவ் இயக்கத்தின் தலைவர் என ஒருவரை அவர்கள் முன்னிறுத்துவர். அந்த தலைவருக்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்கி மிகப்பெரும் 'பயங்கரவாதி' ஆக்கி விட்டு தம் திட்டங்களை நிறைவேற்றுவர்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

ஏனென்றால் அவர் அப்படி உயிருடன் இருப்பதையே சிங்களம் விரும்புகின்றது. அப்படி அவர் கொல்லப்பட்டு இருப்பின் அவ் இயக்கத்தின் தலைவர் என ஒருவரை அவர்கள் முன்னிறுத்துவர். அந்த தலைவருக்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்கி மிகப்பெரும் 'பயங்கரவாதி' ஆக்கி விட்டு தம் திட்டங்களை நிறைவேற்றுவர்

அதைத் தான் நானும் சொல்கிறேன்...அரசும் அவர் இருப்பதாய் நம்ப வைக்கப் பார்க்குது 
 

இங்கே பயங்கரவாதிகள் இலங்கை அரசாங்கமும் அவர்கள் வளர்த்த இந்த அமைப்பும் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.