Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண-பேச்சு-வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுத் தமிழில் நானறிந்த சில:

1. ஒசில், ஒயில் எனும் சொல்லின் மருஉ.  நேரடி அர்த்தம் -அழகு. ஆனால் புழக்கத்தில் அழகு இன்மையை குறிக்கவே பயன்படும்.

“அவவும் அவவிண்ட ஒசிலும்”

2. மனே- மகனே என்பதின் திரிபு. யாழில் இதுவே “மோனே”.

3. “மதிக்கல்ல” - “என்னை மதிக்கல்ல” மட்டக்களப்பில் இதன் அர்த்தம் என்னை அடையாளம் காணவில்லை. யாழில் இதன் அர்த்தம் “என்னை மரியாதையாக நடத்தவில்லை”.

4. **ப்பாய் (** இல் ஓ எனும் எழுத்தைப் போடவும்) - யாழில் கோதாரி - “என்னா **ப்பாய்டா இது”.

  • கருத்துக்கள உறவுகள்

3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.

வடிவாக (அழகாக) சாப்பிடுங்கோ என்பதன் அர்த்தம் அதுவல்ல.

சாப்புடுவதில் ஒரு மேனரிசம், ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். 

பெரிய சத்தம் இட்டு, உறிஞ்சி, உதடுகள், கன்னங்கள், வாயெல்லாம் உணவுப்பருக்கைகள் பட்டிருக்க, ஆவேசமாக, பக்கத்தில் இருப்பவர் அருவருக்க தக்க வண்ணம் சாப்பிடாமல், அழகாக, டீசெண்டாக, சாப்பிடுங்கோ என்பதே அதன் அர்த்தம்.

ஆசியாவில், ஐரோப்பியர்களினால், முதல் முதலாய் அக்கிரமிக்கப்ப பட்ட யாழ்ப்பாண தமிழர்கள், இந்த மேனரிசம் குறித்து சொல்லிக் கொடுக்கப் பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் விருந்தினருக்கு மேலே உள்ள விளக்கமே கொடுக்கப்பட்டிருக்கும் என்பதும் 'விருந்தோம்பலின்' பண்பு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இல்லையே “வடிவாச் சாபிடுங்கோ” என்பதன் அர்த்தம் “திருப்தியாக” என்பதே.

சாப்பிட வந்த விருந்தினரை, அருவருக்கிற மாரி சாப்பிடாதேங்கோ என்பது, விருந்தோம்பல் இல்லையே?

”சோதனையை வடிவாச் செய்தனியே?” இங்கே வடிவாக என்பதன் பொருள் சரியாக, அல்லது திருப்தியாக.

“இந்த வாளியை வடிவாப் பிடியடா தம்பி” இங்கேயும் வடிவாய் என்பது சரியாய் என்றே அர்த்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
 
26 minutes ago, goshan_che said:

சிங்கத்தார்,

நான் சொன்னதிலயும் என்ன பிழை கண்டீர் காணும்? அதுவும் சரிதானே? :grin:

இதென்ன சில்லெடுப்பா கிடக்குத்தப்பா (இதுவம் யாழ்ப்பாண தமிழ் தான்)

வடிவாய் சோதனை செய்யாட்டிலும், வடிவாய் வாளியை பிடிக்காட்டிலும், கதை கந்தல் தான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாக என்பதன் ஆங்கில இணையான சொல் Don't (No) Mess up என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பெரிய சத்தம் இட்டு, உறிஞ்சி, உதடுகள், கன்னங்கள், வாயெல்லாம் உணவுப்பருக்கைகள் பட்டிருக்க, ஆவேசமாக, பக்கத்தில் இருப்பவர் அருவருக்க தக்க வண்ணம் சாப்பிடாமல், அழகாக, டீசெண்டாக, சாப்பிடுங்கோ என்பதே அதன் அர்த்தம். 

ரத்தின சுருக்கமாக  'கலீசி'  மாதிரி சாப்பிடாதிங்க ..👌 எனலாம் .. அருமை தோழர் தொடருங்கள்..👍

  • கருத்துக்கள உறவுகள்
 
20 hours ago, Sasi_varnam said:

இது போல கீழே உள்ள சொற்களும் நான் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் கற்றுக்கொண்ட சொல்லாடல்கள்.

பேந்து - பிறகு 
சவம் - கேவலம் 
சவத்தை -  கேவலத்தை 
பனி பிடிச்சிட்டுது - 
சரக்கு - 
விசர் - 
விசுக்கோத்து - 
வாச்சுது - சேர்ந்தது 
வலசு -  
சோடாமூடி - 
அடிசரக்கு - விபச்சாரி 
கம்பி - தன்னின சேர்க்கை 
சிங்கன் - 
மாதா - ஏமாற்று பேர்வழி
பேய்க்காய் - கெட்டிக்காரன்
வம்பில பிறந்தது - ?

விண்ணானம் - 
வெள்ளி பார்க்குது - 

😁

என்னப்பா, எல்லாத்தையும் பொசுக்கென்று  சொல்லிப்போட்டியள்....

தமிழகத்தில் பிகர், யாழ்ப்பாணத்தில் சரக்கு... சிங்களத்தில் (B ) ப்படு - (படு அல்ல)

சோடாமூடி - விபச்சாரி 

வம்பில பிறந்தது - தகப்பன் என்று சொல்லப்படுபவர் தகப்பன் அல்ல.. (தாயின் நடத்தை குறித்தது)

மாதாமுடி - ஏமாத்து பேர்வழி என்பதிலும் பார்க்க, அலெர்ட் ஆனா ஆள் (ஏமாத்த முடியாது) என்பதும் சரி.

விண்ணானம் - விடுப்பு கேட்பவர்கள், கேட்டதை அடுத்தவர்களுக்குவிலாவரியாக சொல்பவர்கள் . 

வலசு -  ஏதோ ஒன்று குறைவானவர்கள் என பொருள் படும். மாற்று திறனாளிகள் அல்ல. எதாவது அசட்டு வேலைகளை செய்பவர்கள்.

சிங்கன் - எல்லாத்திலும் பெரும் விண்ணன் (கடும் கெட்டிக்காரன்) - நம்ம கோசன்
 
  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு ---- இரு வீடுகளின் வேலியில் இருக்கும் துவாரம்......!

அவனோட என்ன குசு குசு என்று கதைத்தனி =  ரகசியம் பேசுதல்.....!

கொத்தான் எங்க துலைக்கே = எங்க போகிறாய் (நண்பர்களுக்குள் உரையாடல்)....!

செவிட்ட பொத்தி தருவன்= காதில் ங்கொய் சத்தம் வர கன்னத்தைப் பொத்தி அடித்தல்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில யாழ்ப்பாணச் சொற்கள்.

1. அமசடக்கி -  தமிழ்நாட்டில் கல்லுளிமங்கன்

2. அட்டாதுட்டி- அதிகம் குழப்படி செய்யும் பிள்ளை

3. அரிச்சுப் பொரிச்சு- சிறுகச் சிறுகச் சேமித்தல்

7 hours ago, Nathamuni said:

சிங்கத்தார்,

நான் சொன்னதிலயும் என்ன பிழை கண்டீர் காணும்? அதுவும் சரிதானே? :grin:

இதென்ன சில்லெடுப்பா கிடக்குத்தப்பா (இதுவம் யாழ்ப்பாண தமிழ் தான்)

வடிவாய் சோதனை செய்யாட்டிலும், வடிவாய் வாளியை பிடிக்காட்டிலும், கதை கந்தல் தான்.

நீங்கள் சொல்லும் வடிவா விற்கு அர்த்தம் “ஒழுங்காக” எனும் பொருளில் சரியானதே.

” கொட்டாம ஒழுங்கா சாப்பிடு” = “கொட்டாம வடிவாச் சாப்பிடு”.

ஆனால் மேலே சொன்ன விருந்தினர் உதாரணத்தில் “வடிவாச் சாபிடுங்கோ” என்பது “ போதுமானளவு எடுத்து திருப்தியா சாப்பிடுங்கோ” என்றே அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிலி 
பொருக்கி 
சீளம்பாய் 
அம்மாவான 
விளங்கேல்ல 
புண்ணாக்கு 
நெடுகிலும் 
பெட்டையள் 
டக்கெண்டு 
காணும் 
விடாய்  (மாதவிடாய் ???)
பண்ணாடை 
சுவாத்தியம் 
புக்கை 
எடுபட்டவன் 
போக்கிலி                                                                                                                                                                          
அவையள் /இவையள் 
உங்கண்ட /எங்கண்ட 
தொலைக்கோ 
போட்டு வாறன் 
வாருமன் /போமன் /இருமன் 
சுழட்டுறான் 
வீழ்தீட்டன் 
மடக்கிட்டான் 
சொறி சேட்டை                                                                                                                                                                
கழிசடை  
காவாலி
புறுபுறுக்குறான்                                                                                                                                      
கொதியன்                                                                                                                                                       
கெதியா

பெரிய எண்ணம் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

1. விறுத்தம் - “அவற்ற சமையலிண்ட விறுத்தத்துக்கு கூலிய கூட்டி வேற தரட்டாம்”.

2. முசுப்பாத்தி- ஜோக்

3. முசுப்பாத்திக் கட்டை - ஜோக்கர்

4. A9- கொழும்பில் இருந்த வந்த பெட்டை

5. செம்மறி - புத்தி மங்கிய மனிதன் - “ அவன் ஒரு செம்மறி, சொல்ற ஒண்டும் விளங்காது.

6. 90 - வயோதிப ஆண்

7. எடுத்தல் - தூக்கல், “பிள்ளையை நான் எடுக்கிறன் நீங்கள் bagஐ எடுங்கோ”.

8. எளிய - வறுமைப்பட்ட என்ற கருத்தில் அன்றி தகாத என்ற அர்த்ததில் வரும். “பாத்தியே அவன் செஞ்ச எளிய வேலைய?”

9. வடுவா - மோசமான பேர்வழி. “எளிய வடுவா” “வடுவா ராஸ்கோல்”. இது தெலுங்கு வடுகர் மீதான இழிவிழிப்பாயும் இருக்கலாம்.

10. வெளுவை, வெளுத்துப் போடுவன் -துணி துவைத்தல் என்ற அர்த்தமன்றி, ஆளை அடித்தல் என்று பொருள்படும்.

11. பாடை - தமிழகத்தில் இழவு - “ இப்ப என்ன பாடைக்கு இதை இஞ்ச கொண்டு வந்தனீ?

12 - அறுவான், துலைவான் - மோசமானவன்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
 
1 hour ago, Sasi_varnam said:

சுழட்டுறான் 
வீழ்தீட்டன் 
மடக்கிட்டான் 

சுழட்டுறான் - சைட் அடித்தல் (தமிழகத்தில்) 

வீழ்தீட்டான் & மடக்கிட்டான் - கரெக்ட் பண்ணியாச்சு (தமிழகத்தில்) 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் போலவே.....பல பிற மொழிச்சொற்களும்....எமது.....அழ்கு தமிழில் கலந்து....எமது மொழியை வளமூட்டுகின்றன!

அவை...என்ன மொழியில் இருந்து கடன் வாங்கப் பட்டன என்று யாராவது....கூறுங்களேன்!

இந்தச் சொற்கள்....மட்டக்கிளப்புத் தமிழில்....இருக்குதோ எண்டும் அறிய ஆவல்!

அலவாங்கு

அலுமாரி

கக்கூசு

அப்புக்காக்து

பிரக்கராசி

வீறு

கம்மார்ஸு

ஆடித்தன்

விறுசு

விசுக்கோத்து

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

இதைப் போலவே.....பல பிற மொழிச்சொற்களும்....எமது.....அழ்கு தமிழில் கலந்து....எமது மொழியை வளமூட்டுகின்றன!

அவை...என்ன மொழியில் இருந்து கடன் வாங்கப் பட்டன என்று யாராவது....கூறுங்களேன்!

இந்தச் சொற்கள்....மட்டக்கிளப்புத் தமிழில்....இருக்குதோ எண்டும் அறிய ஆவல்!

அலவாங்கு - 

அலுமாரி

கக்கூசு

அப்புக்காக்து

பிரக்கராசி

வீறு

கம்மார்ஸு

ஆடித்தன்

விறுசு

விசுக்கோத்து

அலவாங்கு - போர்த்துகீசு

அலுமாரி -போர்த்துகீசு

கக்கூசு -போர்த்துகீசு

அப்புக்காக்து - ஆங்கிலம் Advocate

பிரக்கராசி - ஆங்கிலம் Proctor

வீறு

கம்மார்ஸு - commerce - கையோட கம்மார்சு - உடனடிப் பலன் -ஆங்கிலம்

ஆடித்தன்

விறுசு

விசுக்கோத்து - biscuit - ஆங்கிலம்.  

தமிழ இலக்கணம் இவற்றை திசை சொற்கள் என வகுக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொத்துக்கரி (டச்சு ) 
ஆஸ்பத்திரி 
கந்தோர் 
லாச்சி (டச்சு)
அருதாப்பில் (டச்சு)  
சப்பாத்து (போர்த்துகீசு)
பெரக்கதொரு - (வக்கீல்)
ஒசக்க (முஸ்லீம்)
பணிய (முஸ்லீம்)
ஜாதீ  (முஸ்லீம்)
(B )போக்கு 
கான் 
சட்டி /முட்டி
பொஸ்தகம் 
பெருநாள் (முஸ்லீம்)
மொடக்கு 
தலையிடி (யாழ்ப்பாணம்) /  தலைவலி (மலையகம்/இந்தியா)
மாடு இடிக்கும் (யாழ்ப்பாணம் ) / மாடு முட்டும் (மலையகம் /இந்தியா)
போட்டு வாறன் (யாழ்ப்பாணம்) / போயிட்டு வாரேன்  (மலையகம் /இந்தியா)
பெய்த்து வாரேன் (முஸ்லீம்)
சொல்லி (தமிழ் ) / செல்லி (முஸ்லீம்)
பொட்ட சான்ஸ் (முஸ்லீம்) - அதிஸ்டவசம் 
ஊருபளாய் (முஸ்லீம்) - வெட்டிப்பேச்சு / கிசுகிசு 
கிச்சி கொளுத்துறான்  (முஸ்லீம்) - கூச்சம் காட்டுறான் 
ஹராங்குட்டி (முஸ்லீம்) - கேவலம்கெட்டது 
ஜுவால் (முஸ்லீம்) - கோபம்
குருட்டான் வாக்கில (முஸ்லீம்) - எதிர்பாராவிதம் 
தாய்புள்ள (முஸ்லீம்) - சொந்தங்கள் 
மொந்து பாரு (முஸ்லீம்) - முகர்ந்து பார் 
ஆணம் (முஸ்லீம்) - குழம்பு 
கந்தூரி (முஸ்லீம்) - விருந்து
ஆத்தள் (முஸ்லீம் / சிங்களம்) - 
அம்பானாக்கி (முஸ்லீம்/ சிங்களம்) - முறையாக  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.