Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடுவில் பெரும் தாக்குதல். 40 இராணுவம் பலி ??

Featured Replies

40ற்கு மேற்பட்ட இராணுவம் பலியென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

10 SLA soldiers killed, 25 wounded in Madu

[TamilNet, Wednesday, 25 April 2007, 12:38 GMT]

Ten Sri Lanka Army soldiers were killed and more than 25 wounded in a explosion in Madu DS Division in Mannar Wednesday evening, according to initial reports. 25 wounded soldiers were admitted at Anurdhapura hospital, medical sources said.

Further details are not available at the moment.

Sri Lanka Army had stepped up artillery shelling towards Liberation Tigers of Tamileelam controlled area Wednesday morning.

எந்தச்செய்தித்தளத்தில் இருந்துகிடைத்தது என்பதை நீங்கள்குறிப்பிடவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[TamilNet, Wednesday, 25 April 2007, 12:38 GMT]

என்று தந்திருக்கின்றாரே!

  • தொடங்கியவர்

தாங்கள் 21 புலிகளைக் கொன்றதாகவும், தங்களில் 2பேர் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவிக்கின்றது.

Sri Lanka says kills 21 rebels in fighting in north

COLOMBO, April 25 (Reuters) - Sri Lankan troops killed at least 21 Tamil Tiger rebels in a string of gunfights and mortar duels in the north of the island on Wednesday, a military spokesman said.

Two government troops were killed in the fighting that erupted in the districts of Mannar and Vavuniya, and dozens were wounded on both sides, the military said.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE), fighting for independence in the north and east of the island, could not be reached for a comment.

Government forces attacked Tiger mortar and gun positions that had been intensified fire on forward lines in recent days, said Lieutenant Colonel Upali Rajapakse, of the national security media centre.

"The Tigers got 15 killed in one place. At another place, five were killed, and at another one was killed," he said, adding the military had gleaned the figures from rebel radio communications. Some 26 were injured, he said.

On the government side, two soldiers were killed in the fighting and 12-15 were injured, he said.

Since 1983 the war in Sri Lanka has killed some 68,000 people, including more than 4,000 in the past 16 months. The intensified violence has left a 2002 ceasefire in tatters.

http://www.alertnet.org/thenews/newsdesk/PEK63899.htm

10 SLA soldiers killed, 25 wounded in Madu

[TamilNet, Wednesday, 25 April 2007, 12:38 GMT]

Ten Sri Lanka Army soldiers were killed and more than 25 wounded in a explosion in Madu DS Division in Mannar Wednesday evening, according to initial reports. 25 wounded soldiers were admitted at Anurdhapura hospital, medical sources said.

Further details are not available at the moment.

Sri Lanka Army had stepped up artillery shelling towards Liberation Tigers of Tamileelam controlled area Wednesday morning.

  • தொடங்கியவர்

மடுப்பகுதியில் குண்டு வெடிப்பு: 10 படையினர் பலி! 25 படையினர் காயம்

மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 10 சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு மேலும் 25 படையினர் காயமடைந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நன்றி: பதிவு

மன்னாரில் முன்னகர்வை மேற்கொண்ட இராணுவத்தினருடன் புலிகள் மோதல்: 12 இராணுவத்தினர் பலி.

மன்னாரில் முன்னகர்வை மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இன்று மாலை மோதல் ஏற்பட்டது. இதில் 12-க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் கட்டையடம்பன் பகுதியில் இன்று புதன்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

மடு நோக்கிய முன்னகர்வை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டபோது இம் மோதல் ஏற்பட்டுள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் - வவுனியா வீதியில் உள்ள கட்டையடம்பனுக்கும் அனுராதபுரம் மருத்துவமனைக்கும் இடையில் தொடர்ந்து சிறிலங்கா வான்படை படைக்காவி உலங்குவானூர்திகள் பறந்தவண்ணமுள்ளன.

அநுராதபுரம் மருத்துவமனைக்கு அதிகளவில் இராணுவத்தினர் சடலங்களும் காயமடைந்த இராணுவத்தினரும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது அநுராதபுரம் மருத்துவமனைக்கு 12 சடலங்களும் 40 வரையான காயமடைந்த இராணுவத்தினரும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவத் தரப்புக்கு மேலதிகமான இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

-Puthinam-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனவாரம் மகிந்த போப்பாண்டவரைச் சந்தித்த நேரம் சொன்னாராம். எத்தனை தமிழ்மக்களைக் கொன்றாவது, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தை மீட்டு சிங்கள மக்களுக்கு வழிபட விடுவன் என்னு. அதைத் தான் செய்துகிட்டிருக்கார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சகல இணையத்தளங்களிலும் உறுதிப்படுத்ப்பட்ட செய்திகள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka, rebels claim many killed in fierce battles

Wed Apr 25, 2007 9:06 PM IST

Printer Friendly

Top News

Bangladesh says ex-PM Hasina free to return home

Tribals protest refinery plans in Orissa

Indian fans back Sri Lanka for World Cup win

Sri Lanka, rebels claim many killed in fierce battles

Rights groups chide Pakistan over media freedom

MORE

By John Ruwitch

COLOMBO (Reuters) - Sri Lanka's military said troops killed 21 Tamil Tiger rebels in gunbattles and mortar barrages in the north of the island on Wednesday, citing intercepts of rebel radio communications.

But the Tigers denied they had suffered any casualties, and said 10 government soldiers were killed and about 50 wounded in a fierce, five-hour battle near the coastal town of Mannar.

Over the past 16 months, Sri Lanka has slipped deeper into a civil war that has claimed more than 68,000 lives since 1983 -- including more than 4,000 since late 2005. The intensified violence has left a 2002 ceasefire in tatters.

Government forces targeted Tiger mortar and gun positions that had been attacking forward lines in recent days, said Lieutenant-Colonel Upali Rajapakse, of the national security media centre.

"The Tigers got 15 killed in one place. At another place, five were killed, and at another one was killed," he said, adding the military had gleaned the figures from rebel radio communications. About 26 rebels were injured, he said.

On the government side, two soldiers were killed and up to 15 were wounded, Rajapakse said.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE), who are fighting for independence in the north and east of the island, said they repulsed the attack.

"Sri Lankan troopers tried to advance into our area and were confronted by our troopers. The Sri Lankan troopers retreated to their original position with heavy casualties," rebel spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from rebel-controlled territory.

"Around 10 were killed in action and around 50 wounded on the government side. Our side has no casualties."

There was no way to independently verify the claims.

Casualty figures quoted by hospital workers in the town of Anuradhapura, southeast of the fighting, suggested the battles were intense and that the death toll could rise.

At the government-run Anuradhapura Hospital, 44 wounded government soldiers were admitted during the day and about half were in "serious" condition, a health worker said on condition of anonymity.

Nearby, the army hospital in Anuradhapura admitted 10 wounded soldiers, another worker said.

The fighting on Wednesday comes a day after the Tigers staged their second ever aerial attack, dropping bombs on a military position in the north, killing six soldiers.

The military said anti-aircraft fire thwarted the air raid, which was meant to attack the Palaly air strip, which is the only place the government can fly supplies to the Jaffna peninsula.

http://in.today.reuters.com/news/newsArtic...ia-295635-3.xml

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை ஓவரிலையாம் 40?? :):lol: (சாறி பழக்கதோசத்தில.... :blink: )

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 25-04-2007 19:27 மணி தமிழீழம் [மோகன்]

இரணை இலுப்பங்குள முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 11 படையினர் பலி! 50 படையினர் படுகாயம்

இரணை இலுப்பங்குளப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் முன்னேற்ற முயற்சி ஈடுபட்டபோது போராளிகள் பரிச்சங்குளப் பகுதியில் படையினரின் முன்னேற்ற முயற்சியை வழிமறித்து களமாடி படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்தாக இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

5 மணிநேரம் இடம்பெற்ற கடும் மோதலையடுத்து பலத்த இழப்புக்களுடன் படையினர் முன்னேற்ற முயற்சியை இடைநடுவே கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவினை வழங்கின.

இன்றை மோதலில் படைத்தரப்பில் 11 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 50 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றை மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய மோதலில் கொல்லப்ட்ட படையினரின் சடலங்களும் காயமடைந்த படைவீரர்களும் அநுராதபுர மருத்துவ மனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது....

மடுவின் கிழக்குப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் வலிந்த எறிகணைத் தாக்குதலைத் தொடுத்ததையடுத்தே படையினரும் பதில் எறிகணைத் தாக்குதலை தொடுத்தார்கள் என்றும் இதனையடுத்து இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

இன்றைய மோதலில் தமது தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டு மேலும் 23 படையினர் காயமடைந்தாகவும் தெரிவித்த பிரசாத் சமரசிங்க

விடுதலைப் புலிகள் தரப்பில் 21 பேர் கொல்லப்பட்டு 28 பேர் காயமடைந்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

(2 ஆம் இணைப்பு) மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 இராணுவத்தினர் பலி

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியடித்தனர். இதில் சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் இரணை இலுப்பைக்குளத்திலிருந்து வலயன்கட்டு நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய நகர்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறிலங்கா இராணுவத் தரப்பினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுபடுத்தப்பட்டுள்ளன.

மன்னார் இரணை இலுப்பைக்குளத்திலிருந்து இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பில் கனரக கவச வாகனங்கள் சகிதம் வலயன்கட்டு, முள்ளிக்குளம் பகுதிகளை நோக்கிய முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இராணுவத்தினருக்கு ஆதரவாக மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொண்ட நகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பரிசங்குளத்தில் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.

இராணுவத்தினருக்கு எதிராக பரிசங்குளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் இராணுவத்தினருக்கு கடும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் நகர்வு நடவடிக்கை பிற்பகல் 2 மணிக்கு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைவிட்டு இரணை இலுப்பைக்குளத்திற்கு சிறிலங்கா இராணுவம் பின்வாங்கியது.

இராணுவத்தினர் கைவிட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முறியடிக்கப்பட்ட இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

இரணை இலுப்பைக்குளத்திலிருந்து அநுராதபுரம் மருத்துவமனைக்கு இன்று மாலை வரை இராணுவத்தினரின் சடலங்களும் காயமடைந்த இராணுவத்தினரும் உலங்கு வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

அநுராதபுரம் மருத்துவமனையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழைய இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

அநுராதபுரம் மருத்துவமனையில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் 12 பேரின் சடலங்கள் உள்ளதாகவும், 40-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கொழும்பில் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பாரியதானது என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

- புதினம்

மடுப் பிரதேசத்தில் படையினர் முன்னேற முயற்சி;

தடுத்து முறியடித்ததாக புலிகள் தரப்பில் தெரிவிப்பு

பலியானோர் குறித்து முரணான தகவல்கள்

மன்னார்,ஏப்ரல் 26

மன்னார் கிழக்கில், மடுப் பிரதேசத்தில் நேற்று இராணுவத்தினர் முன்னேறும் படை நகர்வில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் இராணுவத்தினர் எமது முன்னரங்கப் பகுதிகளிலிருந்து முன்னேறி விடுதலைப் புலிகளை அவர்களின் நிலைகளிலிருந்து அகற்றி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

ஆனால், படையினரின் வலிந்த முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

இந்த மோதல் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை 5 மணிநேரம் நடைபெற்றதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மோதல்கள் அதிகாலை, காலை, பிற்பகல் என்று மூன்று தடவைகள் இடம்பெற்றதாக தேசிய ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்தது.

மோதல்களில் 11 படையினர் பலியானதாகவும் 50 பேர் வரை காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தரப்பில் 21பேர் கொல்லப்பட்டதாகவும் 28 பேர் காயமடைந்ததாகவும் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இராணுவத் தரப்பு

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று நடந்த மூன்று வெவ்வேறு மோதல் சம்பவங்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 21 பேர் கொல் லப்பட்டதாக தேசிய ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்தது.

இராணுவத் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.

இச் சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாவது:

துருப்புக்கள் மடுப் பகுதியில் மட்டுமல்லாது மற்றும் பிற பிரதேசங்களிலும் தமது முன்னரங்க காவல் நிலைகளில் இருந்து முன்னேறி, விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றன.

விடுதலைப் புலிகள் படையினரை நோக்கி மோட்டார் தாக்குதலை நடத்தினர். நேற்றைய மோதல்களில் 21 புலிகளின் சடலங்களை மீட்டுள்ளோம் என்றார்.

விடுதலைப்புலிகள் தரப்பு

இன்று காலை 9 மணியளவில் படையினர் விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட போது போராளிகள் பனிச்சங்குளப் பகுதியில் படையினரின் முன்னேற்ற முயற் சியை வழிமறித்துத் தாக்கியதில் படை யினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்ததாக இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

5மணி நேரம் இடம்பெற்ற கடும் மோத லையடுத்து பலத்த இழப்புகளுடன் படை யினர் முன்னேற்ற முயற்சியை இடைநடுவே கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடு தலைப்புலிகளின் பீரங்கிப் படையணி கள், ஆட்லரி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவை வழங்கின என்றும் இராணு வப் பேச்சாளர் சொன்னார். இன்றைய மோத லில் விடுதலைப்புலிகள் தரப்பில் எதுவித உயிரிழப்புளும் இடம்பெறவில்லை என வும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள் ளார். (அ1)

உதயன்

இரணை இலுப்பங்குள முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 11 படையினர் பலி! 50 படையினர் படுகாயம்

இரணை இலுப்பங்குளப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் முன்னேற்ற முயற்சி ஈடுபட்டபோது போராளிகள் பரிச்சங்குளப் பகுதியில் படையினரின் முன்னேற்ற முயற்சியை வழிமறித்து களமாடி படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்தாக இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

5 மணிநேரம் இடம்பெற்ற கடும் மோதலையடுத்து பலத்த இழப்புக்களுடன் படையினர் முன்னேற்ற முயற்சியை இடைநடுவே கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவினை வழங்கின.

இன்றை மோதலில் படைத்தரப்பில் 11 படையினர் கொல்லப்பட்டும் மேலும் 50 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றை மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய மோதலில் கொல்லப்ட்ட படையினரின் சடலங்களும் காயமடைந்த படைவீரர்களும் அநுராதபுர மருத்துவ மனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது....

மடுவின் கிழக்குப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் வலிந்த எறிகணைத் தாக்குதலைத் தொடுத்ததையடுத்தே படையினரும் பதில் எறிகணைத் தாக்குதலை தொடுத்தார்கள் என்றும் இதனையடுத்து இவ்விரு தரப்பினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும் சமரசிங்க தெரிவித்தார்

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.