Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

 

இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசை முன்னோடியாக எடுத்துகொண்டு, நாங்கள் நிறைய இரத்தத்தை தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் என்றே பிரபாகரனும் போராடுவதற்கு வந்தாரெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கியமையினாலேயே ஈழப் போராட்டம் தோற்றம் பெற்றது. நாங்கள் பூர்வீக குடிகளாவர். நான் கூட இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமான அறிவிக்க வேண்டுமென்று கூறினேன். அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

குறித்த செயற்பாட்டுக்கு முன்னர் இராமர் பாலம் எதற்காக கட்டப்பட்டது என்பதை மக்கள்தான் கூற வேண்டும். அதாவது இராவணனை அழிப்பதற்காக இலங்கைக்கு செல்லவே குறித்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் மன்னனான இராவணன் இலங்கையை ஆட்சி செய்ததன் ஊடாக இலங்கை தமிழர்களுக்கு உரித்துடையதென்பது உறுதியாகின்றது.

எமது பரம்பரையினர் ஆண்ட நாடுதான் இலங்கை. பண்டார வன்னியன் ஆண்ட காரணத்தினாலேயே வன்னிகாடு என்ற பெயர் கூட இன்னும் காணப்படுகின்றது.

பண்டார வன்னியனுக்கு சிலை வைத்து அவனை போற்றினார் எமது தலைவர். ஆனால் அச்சிலையை உடைத்து பெரும்பான்மையினர் தரைமட்டமாக்கினர்.

ஆனால் விழுந்த சிலை எழாது என்று கூற முடியாது. தமிழர் பிரதேசத்துக்கு வாழ்வாதாரத்துக்கு வந்த பெரும்பான்மையினர் அதனை கைப்பற்றவே முனைகின்றனர்.

தமிழ் மக்களை இரண்டாம் குடிகளாகவே இலங்கையிலுள்ள பெரும்பான்மையினர் நடத்த முனைகின்றனர். இந்தியாவிலும்  இரண்டாம் தர குடியினராக கூட தமிழ் மக்களை கருதுவதில்லை. இந்திய பேராதிக்கம் தமிழர்களை இந்திய குடிகளாக கூட மதிப்பதில்லை.

அடிமையாக வாழ்வதனைக் காட்டிலும் உரிமை சாவு மேலானதென கருதிய தலைவைர் பிரபாகரனை பயங்கரவாதி, தீவிரவாதி, பிரிவினைவாதி என உலகத்திலுள்ள ஏனைய புரட்சியாளர்களை கூறியதை போன்றே இந்த உலகம் கூறியது.

ஆகையால் இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசம் என அறிவிக்க வேண்டும்.

இதேவேளை, மக்களுக்கு தீங்கு செய்பவர்கள் ஆட்சியிலிருந்து வீழ்த்தப்பட்டு மக்கள் அதிகாரத்தை பெறும் காலம் விரைவில் வரும்” என சீமான் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையை-தமிழர்-தேசம்-என/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால போய் விளையாடுங்க இரண்டு பேரும்

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம்......இயற்கையின் உருவாக்கம்!

கம்பன் அதை வைத்துக் காவியம் படைத்தான்!

வேறு புனிதம் எதும் அதற்குக் கிடையாது...!

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியர்களைப் பொறுத்த வரை இராமன் அவர்களின் புராண ஹீரோ. அவன் இலங்கை வேந்தனான சிவ பக்தனான.. இராவணனை வீழ்த்தியதை.. ஹிந்தியர்கள் அதுவும் ஹிந்துக்கள்.. இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில்.. இராமர் பாலம் எனப்படும் இயற்கையில் அமைந்த கல் + மணல்.. கடற்திட்டுத் தொடரை... ஹிந்திய தேசிய சொத்தாக்குவதன் மூலம்.. தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான தொப்பிள் கொடி தொடர்பான உள்ள புவியியல் நிலத்தை ஹிந்தியர்கள் குறிப்பாக.. பா ஜ க இந்து மதவாதிகள் தமதாக்க நினைக்கின்றனர்.

இராமர் பாலம் எனப்படும்.. தமிழக.. ஈழ புவியியல் சொத்து.. ஹிந்தியர்களுக்கு உரிய ஒன்றாகவே முடியாது.

அதன் அடிப்படையில்.. சீமான் முன் வைக்கும் இந்தக் கோரிக்கை என்பது.. ஹிந்தியர்கள் எந்தப் புராண அடிப்படையில்... இதனை தமதென்று சொந்தம் கொண்டாட விளைகின்றனரோ அதே அடிப்படையில்.. ஈழத்தை தமிழர் தேசம் என்று சொல்லவும் முடியும் என்பதே இந்த வேண்டுகோளின் பின்னணியில் இருக்கும் தார்மீகம்.

இந்த ஹிந்திய தேச அறிவிப்பு என்பதை.. எம்மவர்கள் வழமை போல... எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். இதன் பின்னால்... உள்ள.. ஹிந்திய ஹிந்துத்துவ.. மேலாதிக்க விரிவாக்கம் என்பது தமிழர் புவியியல் பூர்வீகத்தை கபளீகரம் செய்து.. தமிழர்களை இன்னும் இன்னும்.. நிலமற்றவர்களாக்கப் போகிறது என்ற விளக்கம் இல்லாமல்.. சீமான் அரசியலாக சிலர் இதனைக் காட்ட முனைகின்றனர்.

உண்மையில்.. இது சீமானின் தமிழ் இனத்துக்கான அபாயக் குரலே ஆகும்.

=======================

உண்மையில்.. இராமன்.. ஹிந்திய ஆரியனா.. சீதை தமிழ் பெண்ணா..

பிபிசியில்.. இதைப் பற்றி இந்தியக் கடவுள்களின் நிறம் சார் வடிவமைப்புக்கள் என்ற தொனிப்பொருளில்... சென்னை ஆய்வாளர்கள் நடத்திய ஒரு வித்தியாசமான.. வெளிப்படைகளை காண்பிக்கும்.. ஆக்கம் ஒன்று..அண்மையில் வெளிவந்திருந்தது. அதை இங்கு இணைக்கப்படுவது சாலப் பொருந்தும்..

Goddess Sita with her sons

இது சீதையும்.. பிள்ளைகளும். சீதைய வெள்ளையாக ஆரிய அடையாளமாகக் கண்டவர்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம்.

Goddess Lakshmi

இலக்சுமியை வெள்ளையாகக் கண்டவர்களுக்கு தமிழிச்சியாகக் காண்பது.. அதிர்ச்சியாக இருக்கலாம். 

Lord Shiva

சீமான் சொல்லும் எங்க பாட்டன் சிவன்.

Goddess Durga

சீமான் சொல்லும் எங்க அப்பத்தா காளி.

எங்க அப்பத்தா காளியை மட்டும் கறுப்பாக பயங்கரமாகக் காட்டிவிட்டு.. மிச்சக் கடவுள் எனப்படும் சமூகத்தை காத்தவர்களை.. சிவப்பாக்கி விட்டார்கள்.. ஹிந்திய ஹிந்து ஆரியர்கள் என்பதே உண்மை. 

Baby Krishna

இது எங்க அத்தை பய கண்ணன். 

A calendar image of Hindu god Krishna with his consort Radha

அதே கண்ணனை.. ஹிந்திய ஆரியக் கூட்டம் இப்படி ஆக்கிவிட்டது. 

https://www.bbc.co.uk/news/world-asia-india-42637998

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.