Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடங்கியது கண்டி ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடங்கியது கண்டி ! ஆதரவாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் !

உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது.

61587142_2270188336403583_45585199454150

இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

61673059_992227750983742_279256847293087

இதேவேளை, கண்டி நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

61918917_864069000601383_219155818148475

தற்போது கண்டியிலுள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

61976145_662872937470075_466380598773022

குறிப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து மக்கள் இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளனர்.

62045441_386709351932171_393981096132555

இதேவேளை, இதற்கு ஆதரவாக நீர்கொழும்பு பகுதியிலும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

62102371_2045807902381228_91049063891756

இந்நிலையில் ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து ஆதரவுப் போராட்டத்திலீடுபட்டனர்.

62203076_324235328470311_944429171990331

அத்துடன் வரக்காப்பொவிலும் மக்கள் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

http://www.virakesari.lk/article/57368

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் உப்படி கத்திக்கொண்டிருந்தால் நம்மட சிறிலங்கா மாதவை எப்படி சிங்கப்பூர் சிங்காரியாக மாற்றுவது......😄
.அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய வேலையை மதத்தலைவர்கள் செய்கின்றனர்....
 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மூன்று பேரும் வீட்டுக்கு போகத்தான் வேணும்.

வடக்கு, கிழக்கு இணைந்தால் ரத்த ஆறு ஓடும் என்று தொண்டை கிழிய கத்தியஹிஸ்புல்லா, கிழக்கை தனியே வைத்துக் கொண்டே, ரத்த ஆறு ஓட செய்துள்ளார்.

சவுதிக்காரர்களை கொண்டுவந்ததுக்கு முழு பொறுப்பும், ஹிஸ்புல்லாவும், றிசாட்டும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஓவராக ஆட்டம் போட்டு, இன்று பல் புடுங்கப் படும் பாம்பாக ஒடுக்கப் படுகிறார்கள். பணம், அதிகார மமதை வைத்துக்கொண்டு, தமிழருக்கு எதிராக தான் எய்தவைகளை வெளிப்படையாக வீடியோவில் சொல்லும் திமிர் ஹிஸ்புல்லாவிடம் இருந்தது. மறுபுறம், வில்பத்து காடழித்து, தமது மக்களை குடியேற்றும் தில் றிசாட்டிடம்  இருந்தது.


ஆனாலும், தமிழருக்கான ஒரு தீர்வு வரும் வேளையில், அதை தடுக்க, பிக்குகள் இதனையே, செய்வார்கள், செய்தார்கள்.

தமிழ் பேசும் மக்களாக இணைவதை தவிர வேறு வழி  இல்லை என்பதை, இஸ்லாமிய மக்களும் உணர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தூசணபிக்கரும் எறங்கி இருக்காரு போல‌


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, colomban said:

தூசணபிக்கரும் எறங்கி இருக்காரு போல‌


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

பிக்கு படைப்பிரிவு வெற்றியடைந்து விட்டது....இந்த தடவை சிங்கள அரசியல்வாதிகள் தெளிவாக செயல்பட்டுள்ளார்கள் .....அதாவது அகிம்சை முறையில் சிறுபான்மை முஸ்லீம்களை பழிவாங்கியுள்ளனர்....வழமையாக வீதிகளில் இறங்கி அட்டகாசம் செய்யும் பிக்குகள் இந்த தடவை உண்ணாவிரதாமிருந்து தாங்கள் நல்லவர்கள்  வ்ன்முறைக்கு எதிரானவர்கள் என உலகிற்க்கு காட்டுகிறார்கள்.....என்ன தான் இருந்தாலும் சிங்களவர்கள் .....மொ.....தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய வேலையை மதத்தலைவர்கள் செய்கின்றனர்....

தமிழ் மக்களில் அரசியல் தலைவர்மார் செய்ய வேண்டியதை மக்கள் செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.