Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் -முஸ்லிம் மக்கள் பலமான சக்தியாக ஒன்றிணைய வேண்டும்: கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் -முஸ்லிம் மக்கள் பலமான சக்தியாக ஒன்றிணைய வேண்டும்: கஜேந்திரகுமார்

Jun 07, 20190

 
 

தமிழ் -முஸ்லிம் மக்கள் பலமான சக்தியாக ஒன்றிணைய வேண்டும்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென்றும் சிங்கள பௌத்த தேசியவாதமே இரு தரப்புக் கும் பொதுவான எதிரி எனவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,

2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த பின்னர் பொருளாதார மட்டத்தில் பலமாக வளர்ந்த முஸ்லிம் மக்கள் மீது குறிவைக்கப்படும் என்பதை நாங்கள் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம். அதனை இன்றைய சம்பவங்கள் மிக தெளிவாக அடிக்கோடிட்டு காட்டியிருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் விரிசல்கள் உள்ளது. கோபங்கள் உள்ளது. அவை தீர்க்கப்படவேண்டியவையும், தீர்க்ககூடியவையும் கூட.

வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்தும், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் எம்மை பிரித்தாழும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்ககூடாது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிலும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். ஆனாலும் கூட தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை. இதனை முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைவர்களும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் உரிமைசார் போராட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்திடம் காட்டிக் கொடுத்தார்கள்.

இன்று அதே சிங்கள பௌத்த தேசியவாதம் முஸ்லிம் மக்கள் மீது கைவைக்கும் நிலையில் முஸ்லிம் தலைவர்களிடம் மனமாற்றம் நிச்சயமாக தேவை. இந்த விடயத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களை தாங்கே சுயவிமர்சனங்களுக்கு உள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான ஐக்கியத்தை உருவாக்க முடியும். என்று தெரிவித்தார் .

 

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-முஸ்லிம்-மக்கள்-பல/

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன தூண்டில் போட்டாலும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதம் உங்களிடம் சிக்காது.

தயவுசெய்து.. அவர்களை தமிழர்களின் பிரச்சனைக்குள் இழுத்து.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதம் போன்றது என்ற ஒரு எண்ணக் கருவை உருவாக்காமல்.. தவிர்க்கப் பாருங்கள்.

கடந்த காலங்களில் சிறுபான்மை தமிழினம்.. உரிமைக்காகப் போராடிய போது முஸ்லிம்கள்... முஸ்லிம் அரசியல்வாதிகள்... பெரும்பான்மை பலமான இனத்துடன்.. இணைந்து தமிழர்களின் அழிவை ஆதரித்தார்கள்.. அல்லது அந்த அழிவுக்கு கூட்டு உடந்தையாக இருந்தார்கள்.. அல்லது  மெளனமாகக் கடந்து போனார்கள்.. என்பதே பிரதானமான கடந்த கால வரலாறு.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக.. எதையும் செய்வார்கள். அவர்களை நம்பி தமிழ் மக்களை நிர்க்கதியாக்கும் வேலையை தமிழ் அரசியல்வாதிகள் செய்ய வேண்டாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் 2002 இல் பிரபா - ஹக்கீம் உடன்படிக்கையின் பிரகாரம் எவ்வளவோ நல்ல முயற்சிகளை இந்த சமூகங்களை இணைக்க மேற்கொண்டார்கள். அத்தனையும்.. முஸ்லீம் சுயநல மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல் வியாதிகளால் நாசமாக்கப்பட்டது..! அதில் சுயநலனும்.. அதன் சார்ந்த பொரும்பான்மை இனத்துக்கு வால்பிடிக்கும் குணமும் இவர்களிடம் மிகுந்து இருந்ததால். 

மீண்டும் எம்மவர்கள் இலவு காத்த கிளியாக வேண்டாம். 

Edited by nedukkalapoovan

59 minutes ago, nedukkalapoovan said:

 

தயவுசெய்து.. அவர்களை தமிழர்களின் பிரச்சனைக்குள் இழுத்து.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதம் போன்றது என்ற ஒரு எண்ணக் கருவை உருவாக்காமல்.. தவிர்க்கப் பாருங்கள்

இறுதியில் இது தான் நடக்கும் 😟😟😟😟

முஸ்லிம்கள் மீதான வன்முறை கண்டிக்கபட வேண்டியது; தடுக்க வேண்டியது; ஆனால்  அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டிய விடயமே.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களின் பிரச்சனை வேறு .....சகல முஸ்லீம் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளார்கள் இதுவே அவர்களை காட்டி கொடுக்கின்றது  அவர்களுக்கு நாடு முக்கியமில்லை மதம் தான் முக்கியம் என்று அவர்கள் சார்ந்த தேசியகட்சிகளின் (ஐ.தே.க,சுதந்திரகட்சி) தலமைகளின் அனுமதிக்கு காத்திருக்காமல் முஸ்லீகள் என்ற மத அடையாளத்திற்க்காக ராஜினாமா செய்துள்ளார்கள் ....இவர்கள் தனியாக முஸ்லீம் மக்களுக்கு மட்டும் அமைச்சர்கள் அல்ல ,நாட்டின் ஏனைய சமுகங்களினதும் அமைச்சர்கள்....இனிவரும் காலங்களில் இவர்களை நம்பி எப்படி அமைச்சு பதவிகளை கொடுப்பது.....சிங்கள சகோதரஜாக்கள் சிந்திக்க வேண்டும்....

முஸ்லீம்களின் பிரச்சனையை அவர்களே தீர்த்துகொள்வார்கள்,அவர்களை அவர்கள் பாட்டிலவிடுவது தான் நல்லம் .....முஸ்லீம் சிறுபான்மை சிங்கள பெரும்பான்மையுடன் நன்றாகவே இரண்டரக் கலந்து விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சோனகர்களை பொறுத்தவரை மதம் தான் முக்கியம், ஆகவே இந்த சந்தர்ப்பத்தை தமிழர் பயன்படுத்த வேண்டும்......

2 hours ago, கிருபன் said:

தமிழ் -முஸ்லிம் மக்கள் பலமான சக்தியாக ஒன்றிணைய வேண்டும்: கஜேந்திரகுமார்

கஜேந்திரகுமாருக்கும் கடைசில விசர் வியாதி தொத்திப்போச்சு!

விக்கியர் முதல்ல தப்புத்தாளத்தை பாட, அதை பாத்து சம்பந்தன் தானும் அதே தப்புத்தாளத்தை தொடர, அட முஸ்லிம்களெல்லாம் சம்பந்தனுக்கும் விக்கிக்கும் தான் வாக்குகளை அள்ளி அள்ளி போடப்போறாங்கள் என்டு பதறிப் போய் இப்ப கஜேந்திரகுமாரும் அறிக்கை விட்டுட்டார்!

தெருவுல ஒன்டு குழைச்சா மற்றதுக்கும் இருப்புக்கொள்ளாதே, அதை மாதிரிதான் விக்கியார், சம்பந்தர், கஜேந்திரர் அரசியல் நகருது.

தமிழ் மக்களை பற்றி உண்மையான அக்கறையோ, வரலாற்றில இருந்து கற்றுக்கொள்ளும் முதிர்ச்சியோ பக்குவமோ இவர்கள் எவரிட்டையும் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.