Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகிலனை தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது...ஆந்திர காவல்துறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகிலனை தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது...ஆந்திர காவல்துறை!

திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு அழைத்து வரப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு முகிலன் அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின் முகிலன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/social-activist-mukhilan-handed-over-cbcit-police 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொது நலன் கருதி... மக்களுக்காக  குரல் கொடுப்பவர்களை, கைது செய்வது கண்டிக்கப் படவேண்டும்.
முகிலன், நந்தினி... போன்றவர்களை... உடனே விடுதலை  செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விà®à¯ வà¯à®³à®¿ வரà¯à®®à®¾?

உயிருடன் மீண்ட முகிலன்.. யார் பிடியில் இத்தனை காலம் இருந்தார்.. விடை தெரியாத கேள்விகள்!

முகிலன் எங்கே, உயிரோடுதான் இருக்கிறாரா என்ற 6 மாத கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. என்றாலும் முகிலன் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுகின்றன.

தொடர்ச்சியாக ஸ்டெர்லைட், மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலை எதிர்ப்பு போராட்டம், என பொதுமக்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி கார்பரேட் கம்பெனிக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை முன் நடத்தியவர் முகிலன்.

இதன்காரணமாக, குண்டர் சட்டம் உள்ளிட்ட பல கேஸ்கள் இவர் மீது போடப்பட்டாலும் சரி, சிறைக்கு பலமுறை அனுப்பினாலும் சரி, போலீஸ் தடியடிகளுக்கு ஆளானாலும் சரி, மக்களுக்கு ஆதரவான இவர் குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருந்தது. அதனால்தான் இவர் காணாமல் போன தினத்திலிருந்தே இவருக்கு ஆதரவான குரலை மக்கள் எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

à®à®¨à¯à®¤à¯à®à®®à¯

ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக எவ்வாறு போலீசார் திட்டமிட்டு வன்முறை செய்தது என்பதை அம்பலப்படுத்திய தினம்தான் இவர் மாயமானார். அதனால், முகிலனை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்ற கேள்விகளும் எழுந்தன. அன்று எழுந்த சந்தேகம்தான் இன்றும் எழுந்துள்ளது.

நà¯à®à®¿à®¨à¯à®¤à¯ பà¯à®© à®®à¯à®à®¿à®²à®©à¯

மழமழ முகத்தில் பார்த்து பழக்கப்பட்ட முகிலன், தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாமல் முற்றிலும் மாறுபட்டிருந்த பின்னணி என்னவென்று தெரியவில்லை. மிகவும் நொடிந்து போன நிலையில் முகிலன் வெளி உலகத்திற்கு திரும்பியுள்ளது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மனà¯à®µà®¿ பà¯à®à¯à®à¯à®à®¿

முகிலன் மன்னார்குடி ரயிலில் ஆந்திரா வந்ததாக அம்மாநில ரயில்வே போலீஸார் கூறுகின்றனர். தண்டவாளத்தில் குதிப்பது போல நின்று கொண்டிருந்த முகிலனை மீட்டதாக ஆந்திர போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் வைத்து பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம், முகிலனின் மனைவி பூங்கொடிக்கு தகவல் கொடுத்ததாக தகவல் நேற்று வெளியானது. இதனையடுத்து ஆந்திர போலீஸை தொடர்பு கொண்டு தமிழக போலீஸார் கைதானது முகிலன் தான் என்பதை உறுதி செய்து அழைத்து வந்துள்ளனர்.

à®à®à®¤à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à®¾à®°à®¾?

எனவே முகிலன் மீட்கப்பட்டதில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான முகிலன் இத்தனை நாட்களாக எங்கிருந்தார், எதற்காக அவர் மன்னார்குடி ரயிலில் திருப்பதி செல்ல வேண்டும், தாடியுடன் மிக மெலிந்த உடலோடு அவர் இருக்க காரணம் என்ன, அவர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானாரா, அப்படியானால் அவரைக் கடத்தி வைத்திருந்தது யார் என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

மனநலம௠பாதிபà¯à®ªà¯?

மனநலம் பாதிப்பு? அதேபோல, காட்பாடி ரயில் நிலையத்தில் போலீசாரின் கடும் கெடுபிடிக்கு மத்தியில் பேட்டியளித்த முகிலன், "என்னை கடத்திட்டு போறாங்க.. என்னை போலீசார் மனநலம் பாதிக்கப்பட வைத்துவிட்டனர்" என்று குற்றஞ்சாட்டுகிறார். முகிலனின் இந்த 2 வரிகள் மனதை போட்டு பிசைகின்றன. மன நலம் பாதிக்கப்படும் அளவுக்கு என்ன மாதிரியான சித்திரவதைகளுக்கு அவர் ஆட்பட்டார் என்ற கேள்வியும் எழுகிறது.

விடை வெளி வருமா? முகிலன் உயிருடன் மீண்டுள்ளார் என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.. ஆனால் இத்தனை மாதம் எங்கிருந்தார். யார் பிடியில் இருந்தார் என்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது. விடைகள் வெளியே வருமா என்பதுதான் ஆயிரம் டாலர் கேள்வி. நீதிமன்றத்தின் மீதுதான் அத்தனை பேரின் நம்பிக்கைப் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/activist-mukilan-haned-over-to-tamilnadu-police-356257.html

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழீழத்திற்காக தீக்குளித்தவர்களை 'கடன்தொல்லை","காதல் தோல்வி", "குடும்ப தகராறு" எண்டு போலீசைவிட்டு சொல்ல சொன்னவர் கருநா ..

"முகிலனை நாய் கடித்துள்ளது.. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.. சிபிசிஐடி போலீஸார் தகவல்"

https://tamil.oneindia.com/news/chennai/cbcid-police-are-investigating-from-mukilan-356266.html

இப்போ விசர் நாய் முகிலனை கடித்து போட்டது என்பது எடுப்ஸ் கொம்பனி.. முடிவா என்ன சொல்ல வாறியள் ..? பைத்தியமாகி போட்டார் என்டா..? ஓகே.. எல்லா ஆட்சியாளரும் ஒரே மாதிரியாக இருக்கினம்..👍

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளில் 'லாக்-அப்பில் இருக்கும்போது வயரைக் கடித்தார்' என செய்தி வராமல் இருந்தால் புண்ணியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எங்கோ பேஸ்புக்கில் வாசித்த நினைவு.

இப்படியான இன்னொரு சமூக போராளியை வேண்டும் எண்டே ரேபீஸ் தொற்றுள்ள நாயை கொண்டு கடிக்க விட்டார்கள் என்று. 

ரேபீஸ் தொற்று கண்டவர்கள் மிக கொடூரமான முறையில் மரணத்தை தழுவுவர்.

முகிலனுக்கும் இப்படி செய்துள்ளார்களா?

https://www.nhs.uk/conditions/rabies/ 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என்னை கடத்திட்டு போறாங்க.. என்னை போலீசார் மனநலம் பாதிக்கப்பட வைத்துவிட்டனர்" என்று குற்றஞ்சாட்டுகிறார்

வேறு எதனை  காவல்துறை, இந்திய உளவுத்துறை ,கிந்திய அரசிடம் எதிரபார்க்க முடியும?
காஸ்மீர்  மக்களை எப்படி கொடுமை படுத்துவார்கள் என கற்பனை பண்ண முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாய௠à®à®à®¿à®¤à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯

முகிலனை நாய் கடித்துள்ளது.. சிபிசிஐடி விசாரணையின்போது தகவல்.. மருத்துவ சிகிச்சை

: முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையின்போது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு மாயமான, சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வேலூர் அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது.

அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாà®à¯à®à¯à®®à¯à®²à®®à¯

நாய் கடித்துள்ளது: ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது காலில் நாய் கடித்துவிட்டதாகவும் இதை பற்றி போலீசாரிடம் முகிலன் தெரிவித்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளார்கள்.

நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும் சரியாக சாப்பிடாததால்தான், உடல் பலவீனமாக இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி மற்றும் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. முகிலனின் வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. இத்தனை நாள் எங்கே இருந்தார், யாரிடம் இருந்தார் உள்ளட்ட கேள்விகளை போலீசார் முகிலனிடம் கேட்டனர்.

முகிலன் பலவீனமாக இருப்பதாக வந்த மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் ஒப்படைக்கவுள்ளது சிபிசிஐடி போலீஸார். முகிலனும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cbcid-police-are-investigating-from-mukilan-356266.html

  • கருத்துக்கள உறவுகள்

Mugilan kidnapped and gone under torture, says his wife Poongodi

முகிலனை கடத்தி அடைத்து வைத்து துன்புறுத்தினர்.. நேரில் சந்தித்த பிறகு மனைவி பூங்கொடி பரபரப்பு பேட்டி

முகிலன் கடத்தி வைக்கப்பட்டு அடைத்து துன்புறுத்தப்பட்டதாக அவரது மனைவி பூங்கொடி குற்றம்சாட்டியுள்ளார்.

சமூக செயல்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரயிலில், புறப்பட்டார். அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என்பது புரியாத புதிராக இருந்தது.

இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் நேற்று அவர் ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதை அறிந்து, சிபிசிஐடி போலீசார் அவர்களை தொடர்புகொண்டு முகிலனை தங்கள் காவல் கட்டுப்பாட்டுக்கு எடுத்துள்ளனர்.

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை முதல், முகிலனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது முகிலன் மனைவி பூங்கொடி அவரை சந்தித்து பேசினார்.

இதன்பிறகு நிருபர்களிடம் பூங்கொடி கூறியதாவது: அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை.

தான் துன்புறுத்தப்பட்டதாக என்னிடம் தெரிவித்தார். தான், கடத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை.

கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது. இவ்வாறு பூங்கொடி தெரிவித்தா.ர் முன்னதாக, கரூரைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், முகிலன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக, நாளை கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/mugilan-kidnapped-and-gone-under-torture-says-his-wife-poongodi-356307.html

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் திடீர் நெஞ்சு வலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதி

நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது நெஞ்சுவலிப்பதாக முகிலன் கூறியதால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நீதிபதி ரோஸ்லின் உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார்.

கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸடைர்லைட் ஆலை, எட்டு வழிச்சாலை,ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டங்களுககு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன் (52)/ தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி கூறியிருந்தார். அதன் பிறகு ஐந்து மாதங்களாக அவரை காணவில்லை.

அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்ளும் முகிலனை கண்டுபிடித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணையை விரிவு படுத்தும் வகையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்ட்டது. கடந்த 5 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் அவரை தேடிவந்தனர்.

இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட முகிலன் தமிழக காவல்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து வேலூரில் மருத்துவ பரிசோதனை செய்த போலீசார் அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

திடீர் நெஞ்சுவலி:  பின்னர், முகிலனை ராயபுத்தில் உள்ள எழும்பூர் குற்றவியல் பெருநகர இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில், நள்ளிரவு ஒரு மணியளவில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது தமக்கு நெஞ்சு வலி என முகிலன் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இன்று காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பிடத்தை கூற மறுப்பு:  இதனிடையே முகிலன் கைது குறித்து சிபிசிஐடி வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக முகிலனை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன நாட்களில் தாம் எங்கிருந்தேன் என கூற முகிலன் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tn-activist-mugilan-admitted-to-hospital-over-heart-attack-356318.html

 

Image may contain: 2 people, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.