Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் செய்தியாளர் யாழில் சுட்டுக்கொலை

Featured Replies

சிறீலங்கா அரச புலனாய்வுப் படையினரால் யாழில் உதயன் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றது

  • தொடங்கியவர்

Young journalist shot dead in Jaffna

[TamilNet, Sunday, 29 April 2007, 08:42 GMT]

Selvarajah Rajivarman, 25, a young journalist working at Jaffna's Uthayan newspaper was shot and killed Sunday by gunmen riding in a motorbike at Naavalar Road, Rasaavin Thoaddam junction around 10:00 a.m. The journalist was on duty collecting news in Jaffna town, according to the Uthayan officials. Mr. Rajivarman was a talented and energic newsreporter who was also attending an external degree course at Jaffna Univeristy according to North Sri Lanka Journalists Association (NSLJA).

Rajiwarman was working as a staff reporter and was on training since he had joined the daily 6 months ago.

He had earlier worked as staff reporter at Jaffna Thinakkural and previously in Namathu Eezhanaadu.

Rajiwarman is from Aavarangkaal East, Puththoor in Valikaamam.

Jaffna police has handed over the body of the victim to Jaffna hospital.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். உதயன் நாளேட்டின் செய்தியாளர் சுட்டுப்படுகொலை

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 16:05 ஈழம்] [க.திருக்குமார்]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் இளம் உடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் (வயது 25) இன்று முற்பகல் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

யாழ். நகரப்பகுதியில் அவர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, நாவலர் வீதியில் உள்ள இராசாவின் தோட்டம் சந்தியில், இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக உதயன் நாளேட்டின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரஜிவர்மன் மிகவும் திறமை மிக்க ஊடகவியலாளர் என்றும், யாழ். பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதாகவும், வட இலங்கை ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவர் ஒரு ஊடகவியல் அதிகாரியும் ஆவார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவர் இணைந்ததில் இருந்து பயிற்சியாளராக உள்ளார். முன்னர் அவர் தினக்குரலிலும், அதற்கு முன்னர் நமது ஈழநாடு ஆகிய நாளேடுகளிலும் அவர் பணி புரிந்தார்.

ரஜிவர்மன் வலிகாமம் புத்தூர் ஆவரங்கால் கிழக்குப் பகுதியை வசிப்பிடமாக கொண்டவர். காவல்துறையினரால் அவரது சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

uthayan

சிங்கள அரசின் இயலாத்தன்மையின் வெளிப்பாடு ஒரு துடிப்புமிக்க இளம் பத்திரிகையாளரை நாம் இழந்துவிடோம். இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவன். இவருக்கு எமது அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

'' உதயன் செய்தியாளர் யாழில் சுட்டுக்கொலை "

வெறிபிடித்த நாய்களினால் சுட்டுக்கொள்ளப்பட்ட துணிகரங்கொண்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் அவர்கட்கும், அண்ணாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கையின் வடக்கே மேலும் ஒரு செய்தியாளர் கொலை

யாழ் குடாநாட்டில் 25 வயதான செய்தியாளர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது தலையிலும் நெஞ்சிலும் சுடப்பட்ட செல்வராஜா ரஜிவர்மன் உதயன் செய்தித்தாளின் அலுவலகச் செய்தியாளர்.

இந்தச் சம்பவம் குறித்து இராணுவ தரப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்து தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும், ஆயினும் அவர் செய்தியாளர் என்பது பற்றி தங்களுக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலையைக் கண்டித்துள்ள கொழும்பில் உள்ள சுதந்திர ஊடக அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் யாழ் அலுவலகத்திலிருந்து சுமார் 500 மீறறர் தொலைவிலும், இராணுவ நிலையொன்றிலிருந்து சுமார் 200 யார் தொலைவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒருவருடத்தில் யாழ்ப்பாணத்தில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு இன்றைய சம்பவம் தொடர்பாக திறந்த விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என் அறிக்கையொன்றில் கோரியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தமிழோசையிடம் பேசிய உதயன் செய்தித்தாளின் நிர்வாகப் பணிப்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் உதயன் பத்திரிக்கையும் அதன் ஊழியர்களும் தொடாநந்து தாக்கப்பட்டு வருவதாகவும், தமது ஊழியர்களின் கொலைகள் குறித்து அரசின் அனைத்து தரப்பிலும் முறையீடு செய்தும்; இது வரை எதுவும் நடக்கவில்லை என்றும் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/

  • கருத்துக்கள உறவுகள்

Tamil journalist shot dead in northern Sri Lanka

AP

JAFFNA, Sri Lanka (AP) - Unidentified gunmen shot and killed a newspaper reporter in Sri Lanka's troubled northern Jaffna peninsula on Sunday.

Selvaraja Rajivarman, 24, was working for the Jaffna-based Tamil language Uthayan newspaper, which is considered neutral but has good access to information from Tamil Tiger rebels fighting a separatist war with the government.

It was immediately unknown who killed Rajivarman or the motive, but it comes amid a growing number of unsolved killings and abductions reported from Jaffna, the heartland of Sri Lanka's 3.1 million ethnic minority Tamils.

The Defense Ministry information center said that it is unaware of the incident.

The rebels have fought the government since 1983 to create an independent homeland for Tamils who have faced discrimination by the majority Sinhalese-dominated state. More than 69,000 people have been killed.

http://news.aol.com/topnews/articles/_a/ta...429053009990002

உதயன்' அலுவலகச் செய்தியாளர்

யாழ். நகரில் நேற்று சுட்டுக்கொலை

குடாநாட்டு ஊடகத்துறை மீதான கொடூரங்கள் நீடிப்பு

யாழ்ப்பாணம், ஏப். 30

யாழ்ப்பாணம் "உதயன்' பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் செல்வராஜா ரஜிவர்மன் (வயது 25) நேற்று யாழ். நகரப்பகுதியில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புத்தூர் கிழக்கு, ஆவரங்காலைச் சேர்ந்த ரஜிவர்மன் நேற்று முன்தினம் இரவு "உதயன்' ஆசிரிய பீடத்தில் தமது பணியை முடித்துக்கொண்டு நேற்றுக் காலையில் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். நேற்று மதியம் ஆசிரிய பீடப் பணிக்குத் திரும்பவேண்டிய அவர் திரும்பவில்லை.

காலை 10 மணியளவில் யாழ். ஸ்ரான்லி வீதியில் இராசாவின் தோட்ட வீதியிலிருந்து சுமார் ஐம்பது யார் தூரத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது இனந்தெரியாதோரால் சுடப்பட்டார். அவ்விடத்திலேயே அவர் மரணமானார்.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ். மேலதிக நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவன் பூர்வாங்க மரண விசாரணைகளை நடத்தினார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் "உதயன்' பத்திரிகைக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நீடித்தவண்ணமுள்ளன.

ஆறு, ஏழுபேர் கொண்ட முகமூடி தரித்த ஆயுததாரிகள் கும்பல் ஒன்று முன்னிரவு வேளை "உதயன்' அலுவலகத்துக்குள் புகுந்து தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரை அந்த இடத்திலேயே படுகொலை செய்து, மற்றும் பலரைக் காயப்படுத்தி, அலுவலக உபகரணங்களை நாசப்படுத்திய கொடூரம் இடம்பெற்று நாளை மறுதினம் ஓராண்டு பூர்த்தியாகவிருக்கையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் சமயத்தில் அந்தத் தாக்குதல் இடம்பெற்றது. அதன்பின்னர் "உதயன்' பத்திரிகை விநியோகஸ்தில் ஈடுபட்டிருந்த அலுவலக சாரதி "பாஸ்கரன்' உதயனின் வாகனத்துக்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

உதயனின் பத்திரிகைத்தாள் களஞ்சியம் ஆயுததாரிகள் குழுவால் தீ வைத்து எரிக்கப்பட்டதால் நிறுவனத்துக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டிருந்தது.

கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக பத்திரிகையை அச்சிடுவதற்கான தாளை கொழும்பிலிருந்து தருவிக்க முடியாமல் அந்தரித்த உதயன் நிறுவனத்துக்கு தற்போதுதான் சொற்ப அளவு பத்திரிகைத்தாள் எடுத்துவர அனுமதி கிட்டியது.

அந்தப் பின்னணியில் உதயனின் மற்றொரு பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

செய்தியாளர் அமரர் ரஜிவர்மன் "நமது ஈழநாடு' பத்திரிகையில் சில வருடங்கள் செய்தியாளராகப் பணியாற்றியவர். அந்தப் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் முன்னாள் நாõளுமன்ற உறுப்பினருமான சிவமகராஜா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து,அந்தப் பத்திரிகை மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து சொற்ப காலம் தினக்குரலிலும் அதன் பின்பு சாகும்வரை "உதயன்' நிறுவனத்திலும் ரஜிவர்மன் பணியாற்றி வந்தார்.

உதயன்

f_131m_2042849.jpg

சுட்டுக் கொல்லப்பட்ட ரஜிவர்மன்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் படுகொலைக்கு கடும் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் செல்வராஜா ரஜீவர்மன் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கம் இது குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் செல்வராஜா ரஜீவர்மன் படுகொலை செய்யப்பட்டது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் இதனைக் கண்டிப்பதுடன், இலங்கையில் தற்போது காணப்படும் வன்முறை, சகிப்புத்தன்மையற்ற நிலை மற்றும் அச்சுறுத்தலை இது பிரதிபலிப்பதாக கருதுகின்றது.

யாழ்ப்பாணம் கடந்த 11 வருடகாலமாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், கடுமையான காவலரண்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடா நாட்டின் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சகல தரப்பிடமிருந்தும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஒரு வருட காலப் பகுதியில் யாழ்.குடா நாட்டில் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணைகள் இடம்பெறாததுடன் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வருவதை இந்த கொலை புலப்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

இதேவேளை, உதயன் பத்திரிகையின் செய்தியாளர் செல்வராஜா ரஜீவர்மன் (வயது - 25) யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புமிக்க பிரதேசத்தில் இந்தச் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறுபட்ட அழுத்தங்கள், அச்சங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஊடகவியலாளர் சிவராம் கடத்திச் செல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகிய தினத்தில் யாழ்ப்பாணத்தில் செல்வராஜா ரஜீவர்மன் என்ற செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, திட்டமிடப்பட்ட கொலை நடவடிக்கை என்றே ஒன்றியம் கருதுகின்றது.

ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, அச்சுறுத்தப்படுவது தொடர்பாக பல தடவை, ஊடகத்துறை அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஒன்றியம் எடுத்துக் கூறியபோதும் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது கவலையளிக்கின்றது.

ஊடகவியலாளர்களை குறிப்பாக, தமிழ் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்பதையே செல்வராஜா ரஜீவர்மன் மீதான படுகொலை கோடிட்டுக் காட்டுகின்றது. உதயன் பத்திரிகை நிறுவனம் பலதடவைகள் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் மீண்டும் ஒரு கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பது தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆகவே, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஒன்றியம் அரசாங்கத்திடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினக்குரல்

யாழ்ப்பாணம் "உதயன்' பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் செல்வராஜா ரஜிவர்மனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

sympathywreath2infoyp6.gif

  • கருத்துக்கள உறவுகள்

ரஜிவர்மன் படுகொலையானது துயரமான இழப்பு: புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர்

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:56 ஈழம்] [செ.விசுவநாதன்]

யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தியாளர் ரஜிவர்மன் படுகொலை செய்யப்பட்டமையானது துயரமான இழப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா இராணுவ வன்முறைகளை எதிர்த்து எழுதுகிற ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அழிக்கும் நிகழ்வின் மற்றொரு சம்பவமாக யாழ். நாளிதழின் செய்தியாளர் ரஜிவர்மன் கடந்த ஏப்ரல் 29 ஆம் நாள் யாழில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உதயன் நாளிதழ் பலமுறை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக்குழுவினரின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்

அமரரான பத்திரிகையாளருக்கு நேற்று

பெரும் எண்ணிக்கையானோர் அஞ்சலி

யாழ்ப்பாணம்,மே 1

யாழ்.இராசாவின் தோட்டப்பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் சுட்டுக்கொல் லப்பட்ட "உதயன்' அலுவலகச் செய்தியா ளர் எஸ்.ரஜிவர்மனின் இறுதிக்கிரியைகள் ஆவரங்காலில் நேற்று இடம்பெற் றன.

பூதவுடல் யாழ். ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு அவரது சொந்த இடமான ஆவரங்காலுக்கு நேற்று நண்பகல் எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது வீட்டில் நடைபெற்ற இறுதிக்கிரியையின் போது ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், பிரமுகர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

அஞ்சலியுரைகளை அடுத்து அவரது பூதவுடல் குடும்ப மயானத்தில் நேற்று மாலை 5மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.