Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க?

Featured Replies

புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க?

விடுதலைப் புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென தமிழக பொலிஸ் ஆணையாளர் கூறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எதையோ மூடி மறைக்க யாரையோ காப்பாற்ற பொலிஸ் ஆணையாளரை பயன்படுத்துவது அவரின் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருமெனவும் கூறியுள்ளார்.

குமரி மாவட்ட மீனவர்களை விடுதலைப் புலிகளே சுட்டதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டைக் கண்டித்தே இவ்வாறு தெரிவித்த பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது;

தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணாமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் பொலிஸின் வேலையாகும். குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழக பொலிஸ் ஆணையாளர் குற்றம் சாட்டுபவராகவும் அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களவர்கள் தான் என்பதை உயிர்தப்பிப் பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்கு மூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் 13 ஆம் திகதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்

Edited by வானவில்

மானாமதுரை: விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கடல் எல்ைலையைக் கடந்ததால்தான் தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் சிறை பிடித்தனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

தமிழக மீனவர்களை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ெகான்றில்லை. 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது இலங்கை கடற்படைதான்.

விடுதலைப் புலிகள் மீது பழி போட இலங்கை கடற்படைதான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார் சிவாஜி லிங்கம்.

thatstamiloneindia

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

அப்போ அந்த 12 மீனவரும் இறக்கவில்லையா?

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிலையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,

விடுதலைப் புலிகள் குறித்து சொல்வதற்கு எதுவும் புதிதாக இல்லை. புலிகள் தொடர்பாக நான் கூறி வரும் கருத்துகளை தான் இப்போதும் கூறியுள்ளேன்.

பிரதமரை நான் சந்தித்த போது நான் கூறிய கருத்துகளை தான் அறிக்கையாக வெளியிட்டேன். இந்தியாவில் நாங்கள் எந்த வன்முறையில் ஈடுபட்டதில்லை, வன்முறையை ஆதரித்ததுமில்லை.

இலங்கை வெறியர்கள் தமிழர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்து வருகின்றனர். இதனால் ஈழத்தில் தமிழர்கள் துன்பப்படுகின்றனர்.

அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். தமிழர்களும், அவர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை தான் நான் கூறியுள்ளேன்.

என்னுடைய இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், திமுக அரசு காங்கிரஸை ஆயுதமாக பயன்படுத்தி என்னை கைது செய்ய துடிக்கிறது என்றார் வைகோ.

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளை தொடர்ந்து ஆதரிப்பேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிலையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,

விடுதலைப் புலிகள் குறித்து சொல்வதற்கு எதுவும் புதிதாக இல்லை. புலிகள் தொடர்பாக நான் கூறி வரும் கருத்துகளை தான் இப்போதும் கூறியுள்ளேன்.

பிரதமரை நான் சந்தித்த போது நான் கூறிய கருத்துகளை தான் அறிக்கையாக வெளியிட்டேன். இந்தியாவில் நாங்கள் எந்த வன்முறையில் ஈடுபட்டதில்லை, வன்முறையை ஆதரித்ததுமில்லை.

இலங்கை வெறியர்கள் தமிழர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்து வருகின்றனர். இதனால் ஈழத்தில் தமிழர்கள் துன்பப்படுகின்றனர்.

அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். தமிழர்களும், அவர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை தான் நான் கூறியுள்ளேன்.

என்னுடைய இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், திமுக அரசு காங்கிரஸை ஆயுதமாக பயன்படுத்தி என்னை கைது செய்ய துடிக்கிறது என்றார் வைகோ.

'புலிகள்': வைகோ மீது நடவடிக்கை கோரி கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

ஏப்ரல் 30, 2007

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தெரிவித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வற்புறுத்தினார்.

முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,

மதிமுக பொதுசெயலாளர் வைகோ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வரிடம் பேசினேன்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளிப்போம் என்பது கண்டிக்கதக்க ஒன்றாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரிடம் வற்புறுத்தியுள்ளேன்.

வைகோ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து யோசனை செய்து முடிவு எடுப்பதாக முதல்வர் கூறினார். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு யார் ஆதரவு தந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள் மீது எல்லோருக்கும் அக்கறை இருக்கிறது.

விடுதலைப் புலிகள் கடத்தி சிறை வைத்திருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டேன்.

முதல்வரின் சட்டமன்ற பொன்விழா பொதுக் கூட்டம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்து கொள்வது குறித்தும் பேசினோம் என்றார்.

thatstamiloneindia

தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்திருக்கமாட்டார்கள் என்கிறார் மீனவர் சங்கத் தலைவர்

கடற்புலிகள்

தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தோ அல்லது கடத்தியோ இருக்கமாட்டார்கள் என்று தமிழக மீன் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பீட்டர் தாஸ் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறைத் தலைவர் டி. முகர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார்.

இவை குறித்துக் கேட்கப்பட்டபோதே பீட்டர் தாஸ் இவ்வாறு பதிலளித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், உலக அளவில் எந்தவொரு தமிழருக்கும் எதிராக விடுதலைப்புலிகள் இவ்வாறு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கைத் தமிழர்களோ கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

ஆயினும் ஒருவேளை விடுதலைப்புலிகளால் மீனவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அவர்களைப் பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BBC tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்

30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத

Edited by காவடி

புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க?

விடுதலைப் புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென தமிழக பொலிஸ் ஆணையாளர் கூறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எதையோ மூடி மறைக்க யாரையோ காப்பாற்ற பொலிஸ் ஆணையாளரை பயன்படுத்துவது அவரின் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருமெனவும் கூறியுள்ளார்.

குமரி மாவட்ட மீனவர்களை விடுதலைப் புலிகளே சுட்டதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டைக் கண்டித்தே இவ்வாறு தெரிவித்த பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது;

தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணாமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் பொலிஸின் வேலையாகும். குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழக பொலிஸ் ஆணையாளர் குற்றம் சாட்டுபவராகவும் அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களவர்கள் தான் என்பதை உயிர்தப்பிப் பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்கு மூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் 13 ஆம் திகதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்

தமிழக மீனவர்களை யாரோ கொலை செய்து போட்டார்கள்.... அது இலங்கை படைகள்தான் எண்டு தமிழக மீனவ சங்கங்கள் போராட்டம் நடத்துகிண்றன.. இந்த சமயத்தில் இலங்கைக்கு வேண்டிய உதவிகளை செய்து அரவணைத்து வைத்து இருக்க வேணும் எண்டு இந்தியா முடிவு எடுத்து இருக்கு இந்த வேளையிலை இலங்கை படைகள்தான் கொலையை செய்தார்கள் எண்டு இந்திய காவல்துறை சொல்லுமோ..??

ஒருவேளை இந்திய அரசாங்கம் மீனவர்களை கொண்றது இலங்கை படைகள் எண்று சொல்லி இருந்தால் மீனவர் போராட்டம் இன்னும் அதிகமாகி இருக்கும்... இப்ப புலிகள் தான் செய்தார்கள் எண்று சொன்னதின் மூலம் இந்தியாவின் இலங்கை மீதான நிலைப்பாடும் பாதுகாக்கப்பட்டது ... மீனவர் போராட்டங்களும் முடக்கப்பட்டு இருக்கிறது....

இது அப்பட்டமான கருணாநிதி அவர்களின் அப்பட்டமான குள்ளநரித்தனம்.....!

நன்கு திட்டமிட்டுதான் பரப்புரை நடக்கின்றது. முதலில் ஆயுதங்களுடன் பிடிபட்ட சிங்களவர்கள் தமிழர்கள் ஆனார்கள். பின்ர் அந்த தமிழர்கள் விடுதலைப்புலிகள் ஆனார்கள். இன்னும் என்னென்ன கூறுவார்களோ தெரியாது. கலைஞரும் தனது பொறுப்பை தட்டிக்கழிக்க அதிர்ச்சி கிதிர்ச்சி என்று அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார்.

மரியா படகின் மர்மம்

(கலைஞன்)

*ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்

தமிழக மீனவர்கள் மீது தொடரும் இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் போலவே குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற மரியா படகின் மர்மமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த வாரம் தமிழக ஊடகங்களில் வெளியான மரியா படகு சிறைப்பிடிப்பு குமரி மீனவர்களைக் கொன்ற 12 சிங்களவர்கள் கைது என்ற செய்திகளால் தமிழகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இச் செய்திகள் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து தமிழக மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. தமது சக பாடிகளைக் கொன்ற அந்த 12 சிங்களவர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது தான் அந்தப் 12 பேரில் 6 பேர் அப்பாவி ஈழத் தமிழ் மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேரும் அவர்களைக் காப்பாற்றிய இந்திய மீனவர்களென்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மரியா படகுடன் 12 சிங்களவர்கள் கைது ஆயுதங்களும் மீட்பு என்ற செய்தி தொடர்பில் உண்மையில் நடந்ததென்ன எனப் பார்ப்போம்.

கடந்த 11 ஆம் திகதி தூத்துக்குடி கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பலான நாயகிதேவியில் கப்டன் தீபக் யாதவ் தலைமையில் கடற்படையினர் தீவிர கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 2 மணியளவில் கப்பலின் ராடாரில் கன்னியாகுமரியிலிருந்து தென் கிழக்கே 40 கிலோ மீற்றர் தூரத்தில் படகுகள் நிற்பது தெரிந்தது.

உடனடியாக அந்தப் படகுகளை நோக்கி ரோந்துக் கப்பல் விரைந்த போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த மர்மப் படகுகளை இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் சுற்றி வளைத்த போது அந்தப் படகொன்றில் மரியா என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், சில வாரங்களுக்கு முன்பு குமரி மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு திடீரென ஒரு படகில் சிலர் சிவிலுடையில் வந்து சுட்டதில் 5 குமரி மீனவர்கள் பலியானார்கள். அவ்வாறு சுட்ட படகில் மரியா எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த காரணத்தினாலேயே மரியா என்ற படகையும் அதில் இருந்த 12 பேரையும் கடற்படை கைது செய்ததுடன் குமரி மீனவர்களை சுட்டுக் கொன்ற சிங்களவர்கள் கைது என்ற செய்தி வெளியாகியது.

மரியா படகையும் அதிலிருந்தவர்களையும் கைது செய்த கடலோர காவல் படையினர் அவர்களை தமிழக கியூ பிரிவு பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர். இவர்களிடம் பொலிஸ் அத்தியட்சர் ஜோன் நிக்கல்சன் கியூ பிரிவு பொலிஸ் அத்தியட்சர் அசோக்குமார் ஆகியோர் விடிய விடிய விசாரணைகளை நடத்தினர்.

அப்போது தான் கைதான 12 மீனவர்களில் 6 பேர் இலங்கையில் வன்னி, மன்னார் , யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களான அருள்தாசன் (21 வயது), ரொபின் (23 வயது), அருள்(19 வயது), செல்வகுமார் (19 வயது), பனிபாஸ் (28 வயது) , ரவிக்குமார் (24 வயது) எனத் தெரிய வந்தது.

அதேவேளை, ஏனைய 6 மீனவர்களும் குமரி மாவட்டம் மேல முட்டத்தை சேர்ந்த சகாயலிங்கம் (26 வயது), அந்தோனி (38 வயது), சபின் சுதாகர், முத்தப்பன் , முத்தப்பன் நெல்சன் (34 வயது) சார்லின் (25 வயது) என்பவர்களாவர்.

இலங்கை மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் தாங்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டு வந்ததாகவும் ஆறு நாட்கள் கடந்த நிலையில் தங்கள் படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டதால் கடல் நீரோட்டத்தில் சிக்கி இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாகவும் தம்மை கண்ட இந்திய மீனவர்கள் காப்பாற்றி படகில் ஏற்றிய போதே கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.

இலங்கை மீனவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட பொலிஸார் மீன்பிடிக்க வந்தது உண்மையென்றால் நீங்கள் பிடித்த மீன்கள் எங்கேயெனக் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர்களோ நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டது. நாங்கள் எம்மைக் காப்பாற்றுமாறு சைகை செய்து கொண்டிருந்தோம். யாருமே எமக்கு உதவவில்லை. அதனால் பிடிபட்ட மீன்கள் படகில் இருந்தால் அழுகிப்போய்விடும் என்பதால் அவற்றைக் கடலுக்குள்ளேயே தூக்கி எறிந்து விட்டோம் என்றனர்.

இந்த 6 இலங்கை மீனவர்களைக் காப்பாற்றிய 6 இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் படகு பழுதடைந்ததெனவும் அவர்களை தாம் காப்பாற்றிய போதே கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினர்.

ஆனாலும், கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இளம் வயதினராக இருந்ததால் சிலவேளைகளில் குமரிமாவட்ட மீனவர்களின் கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்குமோ எனச் சந்தேகப்பட்ட பொலிஸார் அந்த சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ள விரும்பினர்.

இதனால், `மரியா' என்ற படகில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து தப்பிய ஜிரோபி துைறயைச் சேர்ந்த ஜெரின் அருளானந்ததாஸ், லூயிஸ் ஆகியோரை அழைத்து வந்து அவர்களுக்கு மரியா படகை காட்டியதுடன் கைது செய்யப்பட்டிருந்த 6 மீனவர்களையும் காட்டி இந்த மரியா என்ற படகில் வந்த இவர்களா உங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எனக் கேட்டனர். ஆனால், உயிர் தப்பிய மீனவர்களோ படகு அந்த மரியா இல்லையெனக் கூறியதுடன் 6 இலங்கை மீனவர்களையும் தாங்கள் இதுவரை பார்த்ததில்லையெனவும் கூறினர். இதன் பிறகே பொலிஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இலங்கை மீனவர்களிடம் விசாரணை நடத்திய தூத்துக்குடி பொலிஸ் அத்தியட்சர் ஜோன் நிக்கல்சன் கூறும் போது பிடிபட்ட படகில் மரியா என்ற பெயர் இருந்ததால் தான் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், விசாரணையில், மரியா படகில் வந்தவர்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு படகு நின்றுவிட்டதால் அப்போது அங்கு வந்த இந்திய மீனவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அவர்களும் மரியா படகில் இருந்தவர்களைக் காப்பாற்றிய நேரத்தில்தான் கடற்படையினர் இவர்களைக் கைது செய்து எம்மிடம் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் நாம் நடத்திய விசாரணையின்போது குமரி மீனவர்கள் படுகொலைக்கும் இந்த 6 இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து எந்த ஆயுதமோ வெடி பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.

இவர்கள் 6 பேரையும் இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைத்துள்ளோம். இவர்களைக் காப்பாற்றிய 6 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து விட்டோம். கடல் கொள்ளையர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்துவோர் என்று இவர்கள் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மீனவர் கூட்டமைப்பின் தலைவர் அன்ரன் கோமஸ் கூறுகையில்;

மரியா படகில் வந்தவர்கள் இலங்கை மீனவர்கள் என்று தெரிந்த பின்னரும் அவர்களை காப்பாற்றி தமது படகில் எமது மீனவர்கள் ஏற்றியுள்ளனர். ஆனால், மனிதாபிமானமே இல்லாத இலங்கைக் கடற்படையினர் எமது மீனவர்களிடம் எதுவுமே விசாரிக்காமல் சுட்டுக் கொன்று விடுகின்றனர். எமது மீனவர்களின் மனிதாபிமானம் இலங்கை கடற்படைக்கு என்றைக்கு வருகிறதோ அன்றுதான் இந்தப் பிரச்சினை தீரும் என்கிறார்.

கைது செய்யப்பட்ட ஆறு இலங்கைத் தமிழ் மீனவர்களும் அப்பாவிகளெனவும் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையெனவும் விசாரணைகளை மேற்கொண்ட தூத்துக்குடி பொலிஸ் அத்தியட்சர் ஜோன் நிக்கல்சன் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை அரசு வழக்கம் போலவே விடுதலைப்புலிகள் மீது பழியை போட முயற்சிக்கின்றது.

கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க, இந்திய கடற்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள, இந்திய மீனவர்களை விடுதலைப்புலிகளே சுட்டுக் கொன்று வருவதாக தெரிவித்துள்ளதாகவும் அது குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த மீனவர்களின் தகவலினால் இலங்கை கடற்படை மீது கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமது கடற்படைக்கு வெள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வரும் தமது கடற்படையினரை மனித நேயமிக்கவர்களென காட்டிக் கொள்ள இலங்கையரசும் அதன் கடற்படையும் பெரு முயற்சி செய்து வந்தாலும், இந்திய மீனவர் படுகொலையில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு என்னவென்பதில் தமிழக மீனவர்கள் மிகவும் தெளிவுடன் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.

http://www.thinakkural.com/

oldnews post by iraivan

மரியா படகுகள் இரு வேறு,இதை ஏற்கனவே அடயாளம் காட்டபட்டு விட்டது.தமிழர்கள் வெளிநாடுகளின் துனையுடன் அரசமைக்கப்போகிறார்கள்.எங்கள

இன்று பிபிசியில் தாஇழக மீனவ சங்க தலைவர் இதை புலிகள் நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்கின்றார் ஆனால் அன்பழகன் அவரை விடாமல் அப்போ முதல்வர் சொல்லிரதும் பொலிஸ் சொல்லுறதும் பொய்யா என கேட்கின்றார் அதுக்கு அவர் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் ஆனால் கருணா கோஸ்டி செய்திருக்கலாம் என்கின்றார்.ஆக எவ்வளவு புரீந்ந்தூணர்வு பாருங்கள் தம் முதல்வர் சொல்லியும் பொலிஸ் தலைவர் சொல்லியும் நம்பாமல் புலிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அந்த அப்பாவி உறவுகளுக்கு நிச்சயம் புலிகள் தீங்கிழைத்து இருகமாட்டார்கள்

ஆனால் சிவாஜி லிங்கம் எண்ட அவசர குடுக்கை லுசுதனாம அறிக்கை விட்டு இந்த சம்பவத்துக்கு புலிகள் தொடர்பு என்றபடி கதையை மாத்த வச்சிட்டுது

ஆனால் புலிகளின் அறிக்கைபடியும் அந்த மீனவ சங்க தலைவரின் கூற்றுப்படியும் புலிகளுக்கும் தமிழக மீனவ சமூகத்ஹ்துக்கும் இடையே ஆன பிணைப்பு தெட்ட தெளிவாகி இருக்குது 80களில் தொடக்கம் இன்றுவரை எமக்கு ஆதரவாக இருக்கும் எம்முறவுகளுக்கு நாம் கொலைகளையோ ஆட்கடத்தலையோ பரிசாக கொடுக்கபோவது இல்லை

12 சிங்களவர் என்ற செதியை தற்ஸ்தமிழில் இருந்துஇங்கு ஒட்டிவிட்டு நான் சோன்னது இன்னும் 2 கிழமைகளில் தமீழராவர் அத்தனை சிங்களவர் விடுதலையாகுவர் என.இன்று சிங்களவர் விடுதலையாகி மண்டப முகாமில் அல்லது ஏதாவது ஒரு அகதி முகாமில் கைது செய்யப்பட்ட எம்முறவுகள் 6 பேர் அது சரி 12 பேர் எண்டாங்கல் அது எப்படி 6 ஆகினது.அந்த கொடுமையை அனுபவிக்கும் அல்ல்லது பிறர் செய்த குற்றாதுக்காக வாழ்கையை தொலைத்திருக்கும் அந்த அப்பாவிகள் பற்றிஎன்ன சொல்லுவது

இன்ரைய பிபிசி செய்திபடி புலிகளாஇ குற்றவாளியாக்க அன்பழகன் எப்படி றோ சொன்னமாட்திரி குட்ட்டையை குழப்பினாலும் முக்குடைந்து போனதே நிஜம்

  • தொடங்கியவர்

அட நான்கு கோடி தமிழர்கள் இருந்தும் தமிழகத்தில் ஒரு தலைமை பொலிஸ் அதிகாரியாக வர ஒரு தமிழனே இல்லையா?அடுத்த மானிலத்தான் வந்து தான் தமிழனை ஆள வேணுமா?

மன்னிக்க வேண்டும் 4 கோடி இல்லை ஆறரைக்கோடி தமிழர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

மானாமதுரை: விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கடல் எல்ைலையைக் கடந்ததால்தான் தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் சிறை பிடித்தனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.

தமிழக மீனவர்களை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ெகான்றில்லை. 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது இலங்கை கடற்படைதான்.

விடுதலைப் புலிகள் மீது பழி போட இலங்கை கடற்படைதான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார் சிவாஜி லிங்கம்.

thatstamiloneindia

செய்திகளைத் திரிப்பது மிகவும் தவறான செய்கையாகும்.

உங்களின் வியாபார உக்திக்காக ஏன் பிழையான செய்திகளைக் கொடுக்கின்றீர்கள்? இதனால் எவ்வளவு தூரம் நாம் பாதிக்கப்படுகின்றோம் என்று தெரியுமா?

சிவாஜி லிங்கம் அப்படிச் சொல்லவில்லை. புலிகள் யாரையும் பிடித்து வைத்திருக்கவில்லை. அவ்வாறு யாராவது பிடித்து வைத்திருந்தால் அவர்களை விடுவிக்க உதவுவேன் என்றே சொல்லியிருந்தார்.(http://www.bbc.co.uk/tamil/2115.ram)

இது பற்றிய விளக்கங்களை பிபிசிக்கு வழங்கியிருக்கின்றார். இவ்வாறு திரிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டணத்தையும் அவர் வழங்கியிருக்கின்றார்.

பிழையான கருத்தோட்டங்களை உங்களின் இஸ்டத்துக்கு எழுதி, தவறான கண்ணோட்டங்களை விடுதலைப் போராட்டம் மீது வழங்காதீர்கள். இது பல லட்சம் தமிழீழ மக்களின் உண்மையைக் கொச்சைப்படுத்துகின்றது.

இது பற்றிய மறுப்பறிக்கையைப் புலிகள் வழங்கியியுள்ளனர். எச் சந்தர்ப்பத்திலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவையில்லை. முன்பு அவர்கள் எமக்காக, கஸ்டப்பட்டதையோ, செய்த உதவிகளையோ தமிழீழ மக்கள் எல்லோரும் நன்றியோடு நினைவு கூருகின்றோம்.

இப்போது கூடக் கடலில் அந்தரித்து நிற்கின்ற தமிழ் மக்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்ற மீனவர்களை என்றைக்குமே நன்றிக்குரியவர்கள். அவர்களுக்கு புலிகளும் சரி, தமிழ்மக்களும் சரி நன்றிக்கடன் பட்டுள்ளார்களே தவிர, இப்படி ஏதும் செய்யமாட்டார்கள்.

தமிழீழப் போராட்டத்தை கேவலப்படுத்தி மற்றவர்களோடு, பிரச்சனைப்பட வைக்கின்ற சதிச் செயலை இலங்கையரசும், அவர்களுக்குத் துணை போகின்றவர்களும் செய்து வருகின்றனர்.இச் சமயத்தில் தமிழக மக்கள் அந்த உண்மைகளைப் புரிந்து, அவர்களின் சதிக்கள் மாட்டுப்படக் கூடாது

கன்னியகுமரி மீனவர் சங்கத்தலைவர் உண்மைகளைப் புரிந்து, பிபிசியில் விளக்கமளித்ததற்கு மிக்க நன்றிகள்.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில்

புலிகள் சம்பந்தப்படவில்லை என அறிவிப்பு

கிளிநொச்சி, மே 1

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போன மைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது:

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலி களுக்கும் தொடர்பு இருப்பதாக வெளி வருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என் பதை தெளிவுபடுத்த விரும்புகின் றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர் களுடைய விடுதலைப் போராட்டத் திற்கும் எதிரான சக்திகளால் திட்ட மிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்க ளைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங் களை கட்டவிழ்த்துவிட்டு இன அழிப் பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமி ழக மீனவர்களை அவ்வப்போது கட லில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக் களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற் கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர் கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்க ளிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர் களுக்கு மறைத்து அரசியல் இலா பம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வரு கின்றனர். அவர்களை அச்சுறுத்து வதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன் முறைகளில் இருந்தும் பல சந்தர்ப் பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின் றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத் திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற் பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற் படையால் இதுவரையும் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமி டப்பட்டு சிங்கள இராணுவத்தின ராலேயே மேற்கொள்ளப்பட்டிருக் கின்றது. மேலும் அதற்கு விடுத லைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.

இவ்வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்ட தாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் இதுவரைக் கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆயினும் எமது பிராந்தியத் தலை வர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற் கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழகக் காவல்துறை இது தொடர் பாக எமது அமைப்புடன் தொடர்பு கொண்டதாகவும், பேச்சுவார்த்தை கள் இடம்பெறுவதாகவும் வெளி வருகின்ற செய்திகள் யாவுமே உண் மைக்குப் புறம்பானவையாகும். இது வரையில் தமிழகக் காவல்துறைக் கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்பட வில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என்று உள்ளது.

உதயன்

தமிழக ஆணையாளர் ஒரு தமிழர் இல்லை அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கும் புலணாய்வுத்துறைக்கும் தொடர்பு இருக்கலாம். இது கலைஞருக்கு கூட தெரிந்தாலும் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர் எதை அறிக்கையாக கொடுக்கிறாரோ அதையே முதல்வரும் சொல்ல வேண்டியதுதானே.................

தமிழரின் உறவுகளை குலைக்க நினக்கும் காவல் ஆனையாளரை மாற்றி வேறு இடத்திற்கு அனுப்புவதற்கு

டாக்டர் ராமதாஸ் , வைகோ திருமாளவன் போன்றோர் தமிழக அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்

Edited by நேசன்

தமிழக மக்கள் உண்மையை அறிவார்கள் என்று கூறியிருந்தேன்........ முகர்ஜியின் கருத்துக்கு தமிழகத்தில் மக்களிடயே பலத்த எதிர்ப்பே காணப்படுகிறது..... அவரும் அமைதியாகி விட்டார்..

பொதுவாகவே தமிழகத்தில் உயர் பதவிகளில் தமிழர்கள் நியமிக்கப்படுவதில்லை.... காவல் துறை,உள்துறை,போன்ற முக்கிய துறைகளில் எல்லாம் எப்போதாவது தான் தமிழர்கள் நியமிக்கப்படுவர்...அதிலும் தமிழகத்தை சேர்ந்த ஆனால் தாய்மொழி தமிழ் அல்லாத பிறமொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

பிற மா நிலங்களில் உயர் பதவிகளில் தமிழர்கள் சிலர் இருப்பார்கள்.... இந்தியாவின் இந்தி பேசும் உத்தரபிரதேசத்தில் காவல்துறைத்தலைவர் தமிழர்...... இது போல் இன்னும் சில மா நிலங்களில் தமிழர்கள் உயர் பதவிகளில் உண்டு ஆனால் இவர்கள் பெரும்பாலும் இன உணர்வு இல்லாதவர்களாகவே இருப்பர் தமிழக பார்ப்பனர்களும் பல உயர் பதவிகளில் வடக்கே உள்ளனர்.... இந்தியாவில் பிராந்தியவாதம் தலைதூக்காமல் விழிப்போடு இருப்பார்கள்...அதிலும் தமிழகம் என்றால் இரட்டிப்பு விழிப்பு

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ,போன்ற அதிகாரிகள் எந்த மா நிலத்தில் முதலில் நியமிக்க படுகின்றனரோ அங்கேயே தான் கடைசி வரை பணியாற்ற வேண்டும்........... வேறு மா நிலங்களுக்கு மாற்றல் பெற முடியாது மா நில அரசு இவர்களை மாற்றவும் முடியாது.... மத்திய அரசு விரும்பினால் இவர்களை மத்திய அரசுப்பணிக்கு வேண்டுமானால் அழைக்கலாம்

மா நில அரசுக்கு இவர்களை பிடிக்காவிட்டால் பதவி கொடுக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானால் வைக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்ஸ்தமிழ் நடிகைகளின் அந்தரங்கங்களைப்பற்றித்தான் எழுத லாயக்கு. தட்ஸ்தமிழின் பின்ணோட்டங்கள் அருவருக்கத்தக்கது. அப்படியான ஒரு களத்தின் செய்திகளை இங்கே பதித்து யாழின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இதே ஆணையார் சூழ்ச்சி மிக்க கருத்து ஒன்றை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகளிடம் 12 மீனவர்கள் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று விடுதலைப்புலிகள் மீனவர்களுக்குச் சொன்னதாகவும் அறிவித்திருந்தார். இது புலிகளைச் சதி வலையில் மாட்ட வைக்கின்ற சூழ்ச்சியாகும்.

விடுதலைப் புலிகளிடம் இல்லாத மீனவர்களை எவ்வாறு புலிகளால் விடுவிக்க முடியும்?? ஆனால் மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், தமிழகத்தில் புலிகள் குறித்தான கோபம் ஏற்படும். இதைத் தங்களின் சாதகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முகர்சி சிந்திக்கின்றார்.

புலிகளிடம் இல்லாத மீனவர்களைப் புலிகளால் ஒரு போதுமே விடுவிக்க முடியாது. அதனால் தன் திட்டம் எடுபடலாம் என யோசிக்கின்றார் போல. இப்படித் திடமாகப் புலிகள் மீது பழியைப் போடுகின்றபோது, சிந்திக்க வேண்டியது என்னவென்றால், இவர்களை இலங்கையரசோ, இந்தியக் கடற்படையோ சிறைப்பிடித்திருக்கலாம். அல்லது கொலை செய்திருக்கலாம் என்று.

எது எப்படியிருந்தாலும், அத் காணாமல் போன தமிழக உறவுகள் மீண்டு வரவேண்டும். அந்த உறவுகளுக்காகப் பிரார்த்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

முகர்ஜி இன்றும் தமிழக மக்களை குழப்ப இவ்வாறு பொய் பேசுகிறது.

மீனவர்களை கடத்தியது புலிகள் தான்: கடற்புலிகளின் வாக்குமூலம் உள்ளது-டிஜிபி

ென்னை: 12 தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் தான் கடத்தினர் என்பதற்கு ஆதாரமாக, கடல் புலிகளின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளோம் என தமிழக காவல்துறை டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

12 தமிழக மீனவர்களை கடத்தவில்லை எனவும், 5 மீனவர்களை சுட்டு கொல்லவில்லை எனவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி முகர்ஜியிடம் கேட்டபோது,

12 தமிழக மீனவர்களை கடத்தியது, 5 மீனவர்களை சுட்டுக் கொல்லப்பட்டது ஆகியவை குறித்து பிடிபட்ட விடுதலைப் புலிகளின் கடல் புலி பிரிவினர் பற்றியும் கியூ பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதனை வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.

சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடல் வழியாக அன்னிய சக்திகள் ஊடுருவலை தவிர்க்க 12 கடலோர மாவட்ட காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரோந்து பணியும் நடந்து வருகிறது.

சோதனை சாவடிகளில் இருக்கும் காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களையும் கண்காணிக்கும்படி உளவுப் பிரிவு காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/02/dgp.html

  • தொடங்கியவர்

காணாமற்போன 12 தமிழக மீனவர்களும்

இலங்கையில் பாதுகாப்பாக உள்ளனர்

தமிழக பொலிஸ் மா அதிபர் நேற்று தகவல்

சென்னை, மே 3

கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி தொடக் கம் காணாமற்போயிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் இலங்கையில் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

தமிழக பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஜி.பி.) டி.முகர்ஜி நேற்று இதனைத் தெரிவித்தார்.

காணாமற்போன மீனவர்கள் விடுத லைப் புலிகளால் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்று முன்னர் தமிழகத்தில் பரவலாக சந் தேகம் கிளப்பப்பட்டிருந்தது. அதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் டி.ஜி.பி. முகர்ஜி அறிக்கை ஒன்றை விடுத்திருந் தார்.இந்த விடயம் தமிழக சட்ட சபையில் எழுப்பப்பட்டு முதல்வர் கருணாநிதி பதி லும் அளித்திருந்தார்.

மீனவர் கடத்தல் தொடர்பான குற்றச் சாட்டை மறுத்து விடுதலைப் புலிகளின் தலைமை அறிக்கை ஒன்றையும் வெளியிட் டிருந்தது.

இது தொடர்பாக தமிழகத் தலைவர் களும் கண்டித்து அறிக்கைகளை வெளியிட் டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.முகர்ஜி மீனவர் தொடர்பாக மீண்டும் நேற்றுத் தகவல் வெளியிட்டுள் ளார்.

காணாமற்போன 12 மீனவர்களும் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அந் நாட்டு மீனவர்கள் மூலம் தகவல்கள் கிடைத் துள்ளன.

இவர்களை விரைவில் மீட்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். (அ1)

உதயன்

மாற்றப்பட வேண்டிய "இந்திராணி"!

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றிய விவாதம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் காவல்துறை ஆணையாளர் முகர்ஜி தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தல் மற்றும் படுகொலை சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கை பல மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 11 பேரும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மீனவருமாக மொத்தம் 12 பேர் கடந்த 04.03.07 அன்று கடலுக்கு சென்றவர்கள் இன்று வரை திரும்பி வரவில்லை. பின்பு 29.03.07 அன்று கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் "மரியா" என்னும் படகில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் "மரியா" என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு படகில் வந்தவர்களை இந்திய கடலோரக் காவற்படை கைது செய்தது. ஆரம்பத்தில் மீனவர்களை கொலை செய்த சிங்களவர்கள் ஆயுதங்களுடன் கைது என்று தமிழ்நாட்டின் காவல்துறை அறிவித்தது. பின்பு அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என்றது. பின்பு அவர்கள் சிங்களவர்கள் அல்ல, ஈழத்தை சேர்ந்த தமிழ் மீனவர்கள் என்றது.

கைது செய்யப்பட்ட உண்மைக் குற்றவாளிகளான சிங்களவர்களை காப்பாற்றிய இந்தியப் புலனாய்வுத்துறை, பதிலுக்கு 6 தமிழர்களை கைது செய்து கதையை மாற்றி எழுதியது. 6 தமிழர்களும் கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இந்தப் பிரிவு தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் அவதூறுகளை பரப்புவதையே தன்னுடைய பணியாகக் கொண்டு செயற்படுகின்ற ஒரு பிரிவு. கியூ பிரிவு பொலிஸ் சித்திரவதைகளுக்கு பெயர் போன ஒரு பிரிவாக கருதப்படுகிறது.

கியூ பிரிவு பொலிஸாரின் "விசாரணையின்" மூலம் இந்த 6 தமிழ் மீனவர்களும் தம்மை கடற்புலிகள் என்று "வாக்குமூலம்" கொடுக்க வைக்கப்பட்டார்கள். அவர்களுடைய வாக்குமூலம் வீடியோவிலும் பதியப்பட்டது. கடற்புலிகள் தமது படகுத் தேவைக்காக 12 தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களுடைய படகுகளுடன் கடத்தினார்கள் என்றும், ஆயுதக் கடத்தலுக்கு இடைஞ்சலாக வந்த 5 மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்றும் கதை புனையப்பட்டது.

இந்தக் கதையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக 5 மீனவர்களையும் சுட்டுக் கொன்ற கடற்புலிகளின் பொறுப்பாளர் விடுதலைப்புலிகளின் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என்ற இன்னொரு கதையும் இணைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்வதை தடுப்பதற்கு இந்தியப் புலனாய்வுத்துறை தொடர்ச்சியாக செய்து வரும் முயற்சிகளில் ஒன்றாக இந்த சதி முயற்சி நடந்தது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்புவதன் மூலம் கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல்களையும் கொடுக்க முடியும் என்று இந்திய, சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர்.

தமிழீழம் இந்தியாவிற்கு நேசக் கரத்தை நீட்டியபடி இருக்க, இந்திய அரசு தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றதே என்கின்ற வேதனை தமிழ் மக்கள் பலரிடம் உண்டு. ஆனால் இதில் இந்திய அரசை குற்றம் சாட்டுவது எவ்வளவு தூரத்திற்கு சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இந்திய அரசு சுயமாக இயங்கக்கூடிய நிலையில் இருக்கிறதா என்கின்ற கேள்வி எழுகிறது.

புராணக் கதைகளில் "இந்திரன்" என்கின்ற பாத்திரம் உண்டு. தேவர்களுக்கு எல்லாம் அரசனாக தேவலோகத்தில் வீற்றிருப்பவன் இந்திரன். ஆனால் இந்த இந்திரப் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. அதை அடிக்கடி யாராவது கைப்பற்றி விடுவார்கள். அசுரர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் போர் புரிந்து இந்திரனை துரத்தி விட்டு இந்திரப் பதவியை அடைவார்கள். வேறு சிலர் கடும் தவம் செய்து இந்திரப் பதவியை பெற்று விடுவார்கள். ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடைய முடியும் என்று வேதங்கள் சொல்லுகின்றன.

இப்படி இந்திரப் பதவியை பலர் கைப்பற்றி பலர் இந்திரனாக ஆகி இருக்கிறார்கள். ஆனால் இந்திராணி என்று அழைக்கப்படும் இந்திரனின் மனைவி மாறுவதில்லை. இந்திராணி என்பது ஒருவர்தான். யார் இந்திரனாக வந்தாலும், அவருக்கும் மனைவியாக மாறி இந்திராணி என்னும் பதவியில் தொடர்ந்து இருப்பார்.

இந்திரன்கள் மாறுவது போல் இந்தியாவில் பல அரசுகள் மாறி இருக்கின்றன. ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றிய கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. புதிய சிந்தனைகளோடு வந்த இந்திரன்களும் முன்னையவர்கள் போன்றே செயற்பட்டார்கள். அதற்கு காரணம் மாறாத இந்திராணியாக இருக்கின்ற இந்தியாவின் புலனாய்வுத்துறை. சக்திமிக்க இந்த இந்திராணியை மீறி எதுவும் நடந்துவிட முடியாத வண்ணம், அதனுடைய கரங்கள் அனைத்து இடத்திலும் படர்ந்துள்ளன.

உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் தங்கள் தாய்நாட்டிற்காக பாடுபடுபவை. தமது நாடு வலிமை மிக்க நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்படுபவை. எதிரி நாடுகளிடம் இருந்து தமது நாட்டை பாதுகாத்து நிற்பவை.

ஆனால் தன்னுடைய நாட்டில் தமது பார்ப்பன சாதியினர் தொடர்ந்து அதிகார மையத்தில் இருக்க வேண்டும் என்கின்ற சிந்தனையை மட்டும் கொண்டு செயற்படுகின்ற ஒரு புலனாய்வுத் துறையை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்திய புலனாய்வுத்துறையாகிய "றோ" அமைப்பை ஆராய்கின்ற போது அதனுடைய அதிகாரத்தில் இருப்பவர்கள் பார்ப்பனர்களாகவும், அதனுடைய செயற்பாடுகள் அனைத்தும் பார்ப்பனியம் சார்ந்ததாக இருப்பதை காணலாம்.

இந்தியாவில் பார்ப்பனியம் தோற்கடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக "றோ" இருக்கிறது. தன்னுடைய நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்கு எதிராக உலகில் செயற்படுகின்ற ஒரே ஒரு புலனாய்வுத்துறை இந்த "றோ" அமைப்பாகத்தான் இருக்க முடியும்.

பார்ப்பனியத்திற்கு பொருந்தாத எதையும் "றோ" அனுமதித்தில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்தின் கூறுகள் பார்ப்பனியத்திற்கு பொருந்தாதவை. ஆகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிரான நிலையை "றோ" எடுத்திருக்கிறது. எத்தனை இந்திரன்கள் வந்தாலும், இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாதவாறு "றோ" பார்த்துக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞரும் தன்னுடைய அரசியல் நலன்களுக்காக சில வேளைகளில் "றோ"வின் செயற்பாடுகளுக்கு துணை போய்விடுவதுதான் இதில் மேலும் வேதனை தரும் விடயம். இம்முறையும் கலைஞர் அவ்வாறு நடந்து கொண்டாரோ என்ற சந்தேகம் சிலர் மத்தியில் எழுந்துள்ளது.

வான்புலிகளின் தாக்குதலினால் பெரும் பூரிப்படைந்திருந்த வைகோ விடுதலைப்புலிகளை பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளிவந்த அதே நாள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டி முகர்ஜியின் அறிக்கையும் வெளிவந்தது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இப்படி ஒரு அறிக்கையை முகர்ஜி வெளியிட்டிருக்க முடியாது என்பதால், வைகோவின் அறிக்கைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு கலைஞர் இதை அனுமதித்தாரா என்ற கேள்வி எழுகிறது.

விடுதலைப்புலிகள் மறுப்பு அறிக்கை வெளியிட்ட பிற்பாடு, சில தரப்பினரால் ஒரு செய்தி உலாவவிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க விரும்புவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற சில தலைவர்கள் மீனவர்களை விட வேண்டாம் என்றும், அவர்களை விடுவித்தால் விடுதலைப்புலிகள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாகி விடும் என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆலோசனை சொல்லி உள்ளார்கள் என்பதே அந்தச் செய்தி.

வைகோ இலக்கு வைக்கப்படுகிறார் என்பது இந்த இடத்தில் மேலும் தெளிவாகிறது.

இப்படி றோவும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் தமது சொந்த நலன்களுக்காக விடுதலைப்புலிகள் மீது ஏற்படுத்த முயன்ற களங்கத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பவில்லை. மீனவர் சங்கத் தலைவர் கூட விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு செய்தியை சுட்டிக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும். இதுவும் தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திதான். ஓரிரு மாதங்களுக்கு முன்பு கடற்புலிகளின் படகு ஒன்றை இந்தியக் கடலோர காவற்படையினர் கைப்பற்றினர். அதில் இருந்த கடற்புலிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நடத்திய விசாரணையில் அவர்கள் கடற்கரும்புலிகள் என்றும், அந்தப் படகு வெடிகுண்டு நிரம்பிய படகு என்றும் தெரிய வந்தது. அந்தப் படகு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று கைதான கடற்புலிகளின் உதவியோடு வெடிக்க வைக்கப்பட்டது.

இது தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திகளில் உள்ள விபரங்கள். இதை உண்மை என்று எடுத்துக் கொண்டு பார்ப்போமானால், சில விடயங்கள் தெளிவாகின்றது. தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்ற படகை இந்தியக் கடலோர காவற்படை தடுத்து நிறுத்திய போது, கடற்புலிகளின் கையில் அவர்களின் உயிர் இருந்திருக்கிறது. கடற்புலிகள் நினைத்திருந்தால், படகை வெடிக்க வைத்து அனைவரையும் அழித்திருக்க முடியும்.

ஆனால் கடற்புலிகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அந்த வெடிகுண்டு படகினால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படதவாறு வெடிக்க வைப்பதற்கு உதவி உள்ளார்கள். தங்களை கைது செய்ய வந்தவர்களுடனேயே மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட கடற்புலிகள், அப்பாவி மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள் என்பதை சிந்திக்கக்கூடிய அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதராவாக ஏற்பட்டிருக்கின்ற உணர்வலைகளை குலைப்பதற்கு இந்தியாவின் புலனாய்வுத்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்த நேரத்தில், இலங்கைத்தீவில் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக இராணுவ வலுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்ட வருகிறது.

கடந்த 29.04.07 அன்று கொழும்பில் உள்ள இரண்டு எரிபொருள் குதங்கள் மீது வான்புலிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். சிறிலங்காப் படைகள் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டும், வான்புலிகள் வருவது 20 நிமிடங்களுக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டும், வான்புலிகள் வெற்றிகரமாக இலக்குகளை தாக்கிவிட்டு தளம் திரும்பி உள்ளார்கள். அதுவும் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த இலக்குகளின் மீது, பொதுமக்களுக்கு எந்த சேதமும் வராதவாறு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

வான்புலிகளால் மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியாது என்று சிங்கள அரசு சவால் விட்டிருக்க, வான்புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி விட்டுப் போயுள்ளார்கள். சிங்கள தேசம் அவமானத்தால் கூனிக் குறுகிப் போய் நிற்கிறது. "விடுதலைப்புலகளுக்கு தைரியம் இருந்தால் பகலில் வான் தாக்குதலை நடத்திப் பார்க்கட்டும்" என்று ஒரு சிங்கள அமைச்சார் சவால் விட்டார். விடுதலைப்புலிகள் பதிலுக்கு சவால் விடாது அமைதியாக இருந்து 30.04.7 அன்று பகலில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த சிங்கள வான்படையின் மிக்-27 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.

இவ்வாறு விடுதலைப்புலிகள் நடத்துகின்ற இந்த தீரம் மிக்க சாதனைகள் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை பெருமிதம் அடையச் செய்திருக்கிறது. இந்த நிலையில் "றோ" செய்கின்ற சதி முயற்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. தமிழர்கள் வெற்றி கொள்வதை தடுக்கவும் போவதில்லை.

ஆனால் இந்திய உபகண்டத்தில் வாழும் மக்கள் தங்களை சுற்றி உள்ள ஆபத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பார்ப்பனியம் வாழவும், ஆளவும் வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தமது நாட்டின் புலனாய்வுத்துறை செயற்பட்டு வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாத இந்திராணி போன்று இருக்கின்ற "றோ" என்கின்ற இந்த அமைப்பு மாற்றியமைக்கப்படாது விட்டால், அது இந்தியாவினது எதிர்காலத்தையே நாசமாக்கி விடும்.

- வி.சபேசன்

(http://webeelam.com)

தமிழக முதல்வர் மு. கருணாநிதி

தமிழோசை

தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தடுக்கவே மீனவர் கொலையில் விடுதலைப்புலிகளின் பங்கு குறித்த தகவலைத் தான் வெளியிட்டதாகக் கூறுகிறார் தமிழக முதல்வர்.

தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே, கடந்த மார்ச் மாதம் 29 திகதி கன்னியாகுமரி மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என்று தான் பகிரங்கப்படுத்தியதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த மீனவர்கள் கொலைச் சம்பவமும், கொல்லத்தில் இருந்து சென்ற மீனவர்கள் காணாமல்போன சம்பவமும் இன்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும் போதுதான் கருணாநிதி இவ்வாறு பேசினார்.

இந்த கடத்தப்பட்ட மீனவர்கள் குறித்து தமிழக அரசுக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களையும் தான், இந்திய பிரதமருக்கு அறிவித்ததோடு, இந்த மீனவர்களை இலங்கையின் உள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டிருப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

நவ்ஜோத் சர்ணா

இந்த மீனவர்கள் கடத்தப்பட்ட விடயம் குறித்து தமிழக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணைகளில் சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று கூறியுள்ள, இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரியான நவ்தேஜ் சர்ணா அவர்கள், இந்தப் புலனாய்வும், அது குறித்த சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பின்னர், தாம் அடுத்த கட்டம் குறித்து முடிவு எடுப்போம் என்றும் கூறினார்.

அதேவேளை தமிழக காவல்துறையினரால் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளவர்களில், ஒருவர், இந்த மீனவர்களை, விடுதலைப்புலிகள்தான் கடத்தினார்கள் என்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் வீடியோ பிரதிகளை இந்திய ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே கடத்தப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனரான கார்த்திகேயன் அவர்கள், இந்திய குடிமக்களை எவர் கடத்தினாலும், அவர்கள் மீது சாம,பேத, தான மற்றும் தண்ட முறைகளைப் பயன்படுத்தி இந்தியக் குடிமக்களை மீட்பது இந்திய அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்

BBC Tamil

இவர்களின் சாம பேத தான தண்டங்கள் மூலம் இல்லாத மீனவர்களை எப்படி மீட்பது. முழு இலங்கைப் பிரதேசத்தையும் இந்தியப்படை ஆக்கிரமித்தாலும் இது நடக்கக் கூடிய விடயமாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு ஒப்பனைக்குச் சொல்லப்பட்டுள்ளது போல் தெரிந்தாலும் இதில் இன்னுமொரு விடயமுண்டு. பிரித்தானியத் தலையீடு சிலவேளை இந்தியாவிற்கு எரிச்சலூட்டியிருக்கலாம். ஆகவே குட்டையைக் குழப்பும் வேலையில் இறங்கப் போவதற்கான கருத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.