Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர்: 'அப்பாவி மக்கள் மீது கொத்து குண்டுகள்' - பாகிஸ்தான், இந்தியா இடையே அதிகரிக்கும் மோதல்

Featured Replies

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் உள்ள அப்பாவி குடிமக்கள் மீது இந்தியா கொத்து எறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா குரேஷி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

போர் வெறியால் இந்தியா பிராந்திய அமைதியை மட்டும் சீர்குலைக்கவில்லை, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் செய்கிறது என்று அவர் இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் சூழலை உன்னிப்பாக கவனிக்குமாறு சர்வதேச நாடுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

india pakistan

 

'இந்திய எல்லைக்குள் தீவிரவாத ஊடுருவல்'

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயல்வதாகவும், அதற்கு ஏதுவாக இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறியுள்ள இந்திய ராணுவம், இத்தகைய சூழல்களில் பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் பாகிஸ்தானின் ராணுவ இலக்குகள் மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகள் மீது மட்டுமே இலக்கு வைத்து நடத்தப்படுகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 36 மணி நேரத்தில் இந்திய கேரன் செக்டர் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான 'பார்டர் ஏக்ஷன் டீம்' செயல்படுத்திய முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தரப்பில் இருந்து தங்களுக்கு செய்தி கிடைத்துள்ளதாக சனிக்கிழமை இரவு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் ஐந்து முதல் ஏழு பாகிஸ்தான் படையினர் அல்லது தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே அந்த உடல்கள் கிடப்பதாகவும், கடுமையான சண்டையின் காரணமாக அவற்றை மீட்க இயலவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் உடல்கள் இருப்பதாக கூறப்படுவது வெறும் பிரசாரம் என்றும் இத்தகைய அப்பட்டமான பொய்களும் அரங்கேற்றப்படும் நாடகங்களும் இந்திய ஆளுகையின்கீழ் இருக்கும் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்கள் அதிகரிப்பதில் இருந்து சர்வதேச கவனத்தைத் திசை திருப்பும், தவறான தகவல்களைப் பரப்பும்முயற்சி என்று பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜென்ரல் ஆசிஃப் கஃப்ரூர் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை எந்த ஆயுதத்தாலும் ஒடுக்க முடியாது. ஒவ்வொரு பாகிஸ்தானியின் ரத்தத்திலும் காஷ்மீர் உள்ளது; காஷ்மீர் மக்கள் தாங்களாக ஈடுபடும் சுதந்திரப் போராட்டம் வெல்லும்," என்றும் மேஜர் ஜென்ரல் ஆசிஃப் கஃப்ரூர் தெரிவித்துள்ளார்.

எல்லையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் பாதுகாப்பு குழுக்களுக்கு துப்பாக்கி பயன்பாட்டு உரிமையை செயல்படுத்துமாறு பாகிஸ்தான் ஆளுகையின்கீழ் இருக்கும் காஷ்மீர் பிராந்தியத்தின் ஆளுநர் பாகிஸ்தான் காவல் படைக் குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.போராட்டம் வெல்லும்," என்றும் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் படைகள் குவிக்கப்படுவது ஏன் - ஆளுநர் விளக்கம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில், என்ன நடந்தாலும் ரகசியமாக நடக்காது, என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மலிக் கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், புரளிகளைப் பரப்ப வேண்டிய தேவை எதுவும் இல்லை. சிலர் அரசியல் சட்டப்பிரிவு 35-ஏ, 370 ஆகியவை ரத்து செய்யப்படும் என்கின்றனர், சிலர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்கின்றனர்; திங்கள் அல்லது செவ்வாய் வரை பொறுத்திருங்கள், எதுவாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ பற்றியோ, ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இது பற்றி தம்மிடம் இதுவரை எதையும் விவாதிக்கவில்லை என்றும் சத்யபால் மலிக் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் காஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவப் படையினர் இறக்கப்பட்டனர். பின்னர் மேலும் 25,000 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநில ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அந்த மாநிலத்தில் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை வெள்ளியன்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

வெளியேறும் பயணிகள்; பதற்றத்தில் உள்ளூர் மக்கள்

அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு நேற்று வெள்ளிக்கிழமை முதல் விடுதிகளை சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். அத்தியாவசித் தேவைக்கான பொருட்களையும் உள்ளூர் மக்கள் சேகரித்து வருகின்றனர்.

ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கான டிக்கெட்டுகளை கட்டணம் எதுவும் இன்றி ரத்து செய்ய பல விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ஆகஸ்ட் 15 வரை பல விமானங்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கூட்டணி அரசில் இருந்து 2018இல் பாஜக விலகியபின் அங்கு ஆளுநர் ஆட்சி அமலானது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் பிடி அங்கு அதிகமாக உள்ளது.

https://www.bbc.com/tamil/global-49219907

 

 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானும் இந்தியாவும் நேரடியாக சண்டை பிடிக்கலாமே. எதற்காக ஏதுமறியா அப்பாவி காஸ்மீர் மக்களின் மேல் உங்களின் படைபலத்தை காட்டுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: கொத்து குண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வளவு ஆபத்தானவை?

cluster munitionsபடத்தின் காப்புரிமைREUTERS

காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் கொத்து எறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உள்பட இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது.

இது சர்வதேச சட்டங்களுக்கும் பிராந்திய அமைதிக்கும் எதிரானது என்று பாகிஸ்தான் கூறுகிறது.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயல்வதாவும், தங்கள் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறும் இந்தியா, இந்தச் சூழ்நிலைகளில் பதில் தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது.

காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாலும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த மாநில அரசு கூறியுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இந்தப் பதற்றத்துக்கு மத்தியில், எல்லைப் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உண்டாகியுள்ள மோதல் மேலும் காஷ்மீர் மக்களின் அச்சத்தைத் தீவிரமாக்கும் வகையில் உள்ளது.

கொத்து எறி குண்டு என்றால் என்ன?

ஒரு பெரிய குண்டின் உள் பல சிறிய குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளவையே கொத்து எறி குண்டுகள் ஆகும்.

தாக்கும் இலக்கை நோக்கி ஒரு குண்டுதான் எறியப்படும் என்றாலும், அந்தப் பெரிய குண்டு வெடித்தபின், அதிலிருந்து வெளியாகும் பல சிறிய குண்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே இலக்கின் பல இடங்களைத் தாக்கும் தன்மை உடையவை இந்தக் குண்டுகள்.

cluster bomb

ஆட்களைத் தாக்கக் கூடியவை, டாங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்களைத் தாக்கக் கூடியவை, கண்ணி வெடிகளைப் போன்று மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டு பின்னர் வெடிக்கும் தன்மையுடையவை என இந்தக் கொத்துக் குண்டுகளிலும் பல வகைகள் உள்ளன.

இந்த குண்டுகளை விமானங்களில் இருந்தும் வீச முடியும்; தரையில் இருந்தும் இலக்கை நோக்கி ஏவவும் முடியும்.

சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது?

அந்த சிறிய குண்டுகள் சிதறும் வேகத்தால், சில நேரங்களில் தாக்குதல் இலக்குக்கு வெளியில் சென்று அருகில் இருக்கும் பகுதிகளையும் இவை தாக்குகின்றன.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இது போன்ற சூழல்களின்போதே இலக்கு வைக்கப்படாத பொதுமக்களும் இவற்றால் தாக்கப்பட்டு உயிரிழக்கவும் காயமடையவும் நேர்கிறது.

பெரிய குண்டு வெடித்தபின் அதிலிருந்து வெளியாகும் சிறிய குண்டுகள் வெடிக்காமல் மண்ணுக்குள்ளேயே புதைந்து, பிற்காலங்களில் வெடித்து சேதத்தை உண்டாக்கவும் வாய்ப்புண்டு.

கொத்து எறி குண்டுகளுக்குள் ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த முடியும்.

மேற்கண்ட காரணங்களால் கொத்து எறி குண்டுகளை போரின்போதோ, தாக்குதலின்போதோ பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

cluster bombsபடத்தின் காப்புரிமைREUTERS Image captionவெடிக்காத கொத்து குண்டுகள் ராணுவப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் பொது மக்களுக்கு பெரும் அச்சறுத்தலாக உள்ளன. (கோப்புப்படம்)

இதற்காக 2008ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி 'கன்வென்ஷன் ஆஃப் க்ளஸ்டர் ம்யுனிஷன்ஸ்' (Convention on Cluster Munitions) எனப்படும் சர்வதேச உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கொத்து குண்டுகளை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, பயன்படுத்துவது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்லினில் நடந்த இந்த கொத்து எறி குண்டுகள் தொடர்பான சர்வதேச ராஜீயப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனினும், இதுவரை 106 நாடுகள் இதை அமலாக்கியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுத வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பிற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

https://www.bbc.com/tamil/global-49224403

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.