Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம்.

Featured Replies

ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம்.

இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது.

தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும்.

இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வேண்டும் என்றும் இனப்பிரச்சனையில் தொடர்புடைய குழுக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் பொதுநலவாய நாடுகளின் (கொமன்வெல்த்) செயலாளர் டொன் மிகின்னொன்னவுக்கு இக்குழு அழைப்பு விடுக்க உள்ளது.

அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவராக உள்ள கெய்த் வாஜ் இது தொடர்பில் கூறுகையில், இலங்கையில் அமைதி வழித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஈடுபாட்டை இது வெளிப்படுத்துகிறது என்றார்.

"2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய சுற்றுப் பேச்சுக்களை நாடாளுமன்றக் குழு உருவாக்கும்" என்று நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் பிரதி தூதுவர் வியாழன் வன்னி பயணம்

* மே 7 இல் ஹான்ஸ் பிரட்ஸ்கார் செல்கிறார்

இலங்கைக்கான பிரிட்டிஷ் துணைத் தூதுவர் லெஸ்லி கிரேக் நாளை மறுதினம் வியாழக்கிழமை வன்னியில் விடுதலைப் புலிகளைச் சந்திக்கவுள்ளார்.

துணைத் தூதுவர் தலைமையில் செல்லும் தூதரக குழுவினர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன், பிரிட்டனில் கடனட்டை மோசடியில் ஈடுபடுபவர்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருப்பதாக பி.பி.சி. தொலைக்காட்சியில் வெளியான செய்தி குறித்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவிப்பார்களெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் எதிர்வரும் 7 ஆம் திகதியே வன்னி செல்லவுள்ளார். இன்று அவர் வன்னிக்குச் செல்லமாட்டாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

- தினக்குரல்

இலங்கை அரசு - விடுதலைப் புலிகள் - நோர்வே அரசு முத்தரப்பினரின் உச்சிமாநாடு விரைவில் லண்டனில் பிரிட்டிஷ் அனைத்துக் கட்சிக் குழுவின் ஆதரவில் நடத்துவதற்கு ஏற்பாடு

லண்டன்,மே 2

இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் உச்சி மாநாடு ஒன்று விரைவில் இங்கு நடைபெற உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதற்கான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிக்குழு உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெய்த் வாஸ் தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (அ.க.நா.கு) நேற்றுக் கூடி இந்த முக்கிய முடிவை மேற்கொண்டது.

இங்கைத் தமிழர்களுக்கு நீதியுடனும் கௌரவத்துடனுமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கென பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று நேற்று உருவாக்கப்பட்டது. மேற்படி குழு நேற்று அதன் தலைவரும் முன்னாள் வெளிவிவகார காமன் வெல்த் அமைச்சருமான தற்போதைய தொழிற் கட்சி எம்.பியுமான கெய்த் வாஸ் தலைமையில் முதன்முறையாகக் கூடி மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தது.

இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், நோர்வே அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகளை லண்டனுக்கு அழைத்து உச்சி மாநாடு நடத்துவது என்பதே அந்த முடிவுகளில் முதலாவதாகும்.

*காமன் வெல்த்தின் செயலாளர் நாயகம் டொனால்ட் மக்கினொனை அழைத்து இலங்கை இனப்பிரச்சினையின் தற்போதைய நிலை, இப்போதைய தடங்கல் நிலையை நீக்குவது என்பன குறித்து முத்தரப்புப் பிரதிநிதிகளுடனும் கலந்து ஆராய்வது.

* மோதல்களால் மக்கள் பாதிக்கப்பட்ட, அதிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அ.க.நா.குழு விஜயம் செய்து நிலைமையை நேரில் கண்ட றிவது.

ஆகிய ஏனைய இரண்டு முடிவுகளும் அனைத்துக் கட்சிக் குழுவில் நேற்றைய முதலாவது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அனைத்துக் கட்சிக்குழு ஒன்று தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றென அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சிக் குழுவின் உதவித் தலைவராக சைமன் உறியுக் (எம்.பி), பிர தித் தலைவராக பேர்ன் பேர்ட்ஸ்ரோ (எம்.பி), செயலாளராக அன்ரூ பெல்லிங்கும் பணிபுரிவர். முக்கியமான முதற்படி

ஈழத் தமிழர் நலன் கருதி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பது இலங்கைப் பிரச் சினைக்கு சமாதான வழியில் நீதியான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு உள்ள அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு முக்கியமான முதற்படியாகும்.

அ.க.நா.குழுவின் முயற்சி, இரு தரப்பு களும் 2002 ஆம் ஆண்டின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்துச் செயற்பட்டு ஆக்க பூர்வமான புதிய சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரிதும் உதவுமென நான் நம்புகின்றேன் என்று அனைத்துக் கட்சிக் குழு வின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான கெய்த் வாஸ் கருத்துத் தெரிவித்தார். (அ)

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலே வி.புலிகளை பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து எடுக்கவேண்டும் கனம் பிரிட்டன் நாட்டவர்களே.அதற்கு பின்பு தான் என்ன பேச்சுவார்த்தை என்று புலிகள் சிந்திப்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசை சிங்கள அரசுடன் இணைத்தது பிரித்தானியா. தமிழர்களின் நிலங்களில் கொள்ளை அடித்ததுடன், எலும்புத்துண்டுகளை வீசி மதத்தையும் பரவச்செய்ததுடன், இப்பொழுது புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தடைக்கு மூல காரணமாக இருந்ததும் பிரித்தானியா தான். நோர்வே அரசினால் மேற்கோள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்தை நடைமுறை படுத்துவதற்கு , சிங்கள அரசுக்கு பாரிய அழுத்தம் ஒன்றையும் குடுக்காமல், மீண்டும் பிரச்சனைக்கு தீர்வு என்று வெளிக்கிடுவது காலத்தை இழுக்கும் செயலா?. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் சிங்கள அரசை பலமாக்கும் செயலா?. பிரச்சனைக்கு உணமையில் தீர்வுகான விருப்பம் இருந்தால் நோர்வேயினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்பாடுகளான இடைக்கால நிர்வாகம், ஒட்டுக்குழுக்களிளை தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்ற சிங்கள அரசுக்கு நெருக்குதல் குடுக்கலாம்தானே.

இவங்கள் கள்ளர் ஏதோ சதி செய்யப் போகிறாங்கள். அமெரிக்க உலக பொலிஸ் ஏதாவது செய்ய இந்த பிரிட்டனுடன் சேர்ந்து நாடகம் போடுறாங்கள்.

நோர்வேயை விலத்தி விட்டு பலம் பிரயோகிக்க கூடிய வல்லமை உள்ளவங்கள் தமிழருக்கு ஏதாவது எலும்புத்துண்டு போட்டு புலிளை முடக்க முய்ற்சிப்பார்கள்.

உலகத்துக்கே நாமம் போடடவங்களாச்சே

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவிற்கான பிரித்தானிய துணை உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக சிறீலங்காவிற்கான பிரித்தானிய துணை உயர் ஸ்தானிகர் மிஸ்.லெஸ்லி (Ms. Leslie Craig) கிரெக் கிளிநொச்சிக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை உயர் ஸ்தானிகர் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வனையும் மற்றும் உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பதிவு

இது ஒரு இடியப்ப சிக்கல் தாங்கள் தடை எடுக்கமாடீனமாம் ஆனால் பேசுவீனமாம்.பிரித்தானியாவின

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பலமடைகின்ற சந்தர்ப்பங்களில் தான் வெளியுலகம் சமாதானம் பற்றியும், தமிழரின் நெருக்கடி பற்றியும் சிந்திக்கின்றது என்பது புலனாகின்றது. எனவே இறுதி யுத்தம் சமகாலத்தில் குறைந்த கால அடிப்படையில் வைத்து வெற்றி பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால், ஒவ்வொரு வெற்றிக்கும் கால இடவெளி எடுத்தோம் என்றால் இடையில் புகுந்து வெளியுலகம் தமிழனுக்கு உதவாத தீர்வைக் கட்டி விட முயலும்.

எனவே சின்னச் சின்ன விட்டுக் கொடுப்புக்களுக்கு வருந்தாமல், ஒட்டுமொத்த வெற்றியை விரைவில் பெறுவதற்கான வழி பற்றியே நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு

இருதரப்புகளுடனும் பேச பிரிட்டன் தயார்!

நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம்

லண்டன்,மே 3இலங்கையின் நிலைவரம் தொடர்பாக இனப்பிரச்சினைத் தீர் வுக்கு உதவுவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் ஒன்று இடம்பெற்றது.

பிரிட்டனின் ஆளும் தொழிற்கட்சி, கன்ஸர்வேட்டிவ் கட்சி உட் பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று உரையாற்றியிருக்கின்றனர்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஒரு சமமான அணுகுமுறையை கைக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை வெளிக்காட்ட விடு தலைப் புலிகளை அங்கீகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்திய போதிலும் அதற்கு பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து மனித உரிமைமீறல்கள் இடம்பெறுகின் றமைக்கு இலங்கை அரசு மீதும் பிரிட்டன் நாடாளுமன்றம் வன்மையான அதிருப் தியை வெளியிட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் இந்த விவாதத்தில் உரையாற் றும்போது இலங்கைப் பிரச்சினை தொடர்பான தமது அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தினார்.

""இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கையிலேயே விடுதலைப் புலிகளை சந்திக்க பிரிட்டிஷ் அரசு தயாராக இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு இந்த விடயத்தில் ஒரு முழுமையான சமநிலையை கடைப்பிடிக்கிறது. விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இருதரப்புகளுடனும் நாம் தொடர்பில் இருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

""இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு கிடையாது என்று பிரிட்டிஷ் அரசு நம்புகிறது. ஓர் உடன்பாடு குறித்த நம்பகத்தன்மை மிக்க கட்டமைப்பு தேவை. அனைத்து இலங்கையர்களும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

""இலங்கையில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவதற்காக முடிந்தவரையில் பங்களிப்பு வழங்க பிரிட்டன் தயாராகவே இருக்கிறது. என்றும் அவர் கூறினார்.

இந்த விவாத்தில் உரையாற்றிய கன்ஸர்வேட்டிங் கட்சியின் உறுப்பினர் ஜெவ்ரி கிளிவ்டென் பிறவுண் தெரிவித்தாவது:

இலங்கையில் வன்முறை அதிகரித்து நிலைமை மோசமடைந்தமைக்கு இலங்கை அரசுக்கு பங்கே இல்லை என்று கூறிவிட முடியாது. நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தை இணைக்கும் முக்கியமான வீதியான ஏ9 நெடுஞ்சாலையை அரசு மூடியமை இலங்கையை மேம்படுத்த உதவில்லை. இதுதவிர இலங்கையின் வடக்குகிழக்கு மக்களுக்கு உதவி மிகிவும் அவசியமாக தேவைப்பட்ட நிலையில் சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்ல அரசு அனுமதி தரவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாதது.

சிறுபான்மையினருக்கு இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என்பது தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு நீண்டகால அரசியல் தீர்வு எட்டத் தகுதியுடையதாக இலங்கை அரசு மாறவேண்டுமானால் அனைத்துத் தரப்பினையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் வழிமுறை என்பது மிகமிக அவசியம். தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்பது தெளிவாக்கப்படவேண்டும்.

இனப்பிரசினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு குறித்தும் நான் இங்கு கூறவிரும்புகிறேன். இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பத்தில் இந்திய அரசுக்கு முக்கிய பங்கு இருப்பதாக நான் நம்புகிறேன்.

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள மக்ளிடையே நல்ல ஆதரவு இருப்பது தெளிவு என்றார்.

உதயன்

திருப்பி எங்கட போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற நோக்கந்தான் ஒழிய வேறொன்றுமில்லை.

இது புலிகளிட்ட வாய்க்காது

  • கருத்துக்கள உறவுகள்

மனவருத்தமான விசயம் என்னெண்டால் ஒரு இருவது பேருக்கும் குறைவாகத்தான் ஆட்கள் விவாதத்தில கலந்துகொண்டவை. அதிகம் பேருக்கு நம்மடபிரச்சினையில ஆhவமில்லையெண்டதத்தானே இது காட்டுது. செய்தியில பிழையிருந்தா மன்னிக்கோணும். நான் கடைசிநேரத்திலதான் விவாதத்தைப் பார்த்தனான்.

http://www.tamilcanadian.com/news/index.ph...nts&id=2380

Upto now the IC helped SL gov. to strenghten its military under the name of CO-Chairs which declared themselves at the begining that they are going to help peace process. Now after the new TAF attacks the IC is coming with the new face to rescue the SL gov. For sure LTTE cannot be included because of the ban and also going to end up like co- chairs helping SL gov. If they genuinely want to establish peace in SL first they should lift the ban and recoganise LTTE and Tamil self determination first. Today there was special debate in UK parliment. The minister refused to lift the ban. If they say LTTE is terrorist org. then what do they have to talk. Like SL gov. UK also want to weaken LTTE.

If they genuinely want to establish peace in SL first they should lift the ban and recoganise LTTE and Tamil self determination first

  • தொடங்கியவர்

பிரித்தானிய தூதுக்குழுவின் கிளிநொச்சி பயணத்துக்கும் தடை விதித்தது சிறிலங்கா.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி செல்ல இருந்த இங்கிலாந்து தூதுக்குழுவினரின் பயணத்தையும் சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துளள்ளது.

விடுதலைப் புலிகளிடன் அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த இக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்பயணத்தை ஒத்திவைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதையடுத்து இங்கிலாந்து தூதுக்குழுவினரின் கிளிநொச்சிப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கிளிநொச்சி பயணத்தை தாமதப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக அரசாங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் கடந்த மாதம் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தபோது கடைசி நேரத்தில் இதே காரணத்தைக் கூறி அந்தப் பயணத்தையும் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

-Puthinam-

தமிழ் கனடியன் தளத்தில் சொல்லியமாதிரி புலிகளின் தடையை முதலில் எடுக்கவேண்டும்..

அதன் பின்பே இனி பேச்சு..

தடை செய்த ஒரு அமைப்புடன் எப்படி பேச முடியும், பிரிட்டன் முதலில் தடையை எடுக்கவேண்டும். பின்னர் தான் பேச்சு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்..

முன்னர் போன்று இல்லாமல் பல நிபந்தனைகளை விதிக்கவேண்டும்....

பாதிக்கப்பட்ட இடங்களை வேண்டும் என்றால் போய் பார்க்கட்டும் ஆனால் சுயாதினமாக எவ்விதமான படைகளின் பயமுறுத்தல்கள் இல்லாமல் மக்களை தனியாக சந்தித்து கதைக்கட்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.