Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக காணாமற்போனோர் தினம்

Featured Replies

உலக காணாமற்போனோர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற்போனோர் நாள் நிகழ்வும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை முன்கொண்டு செல்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தகாலத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற வௌவேறு கலவரங்களின் போதும் அதிக எண்ணிக்கையானவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன தங்களின் உறவினர்களுக்கு என்னானது என்பது குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

http://www.hirunews.lk/tamil/223233/உலக-காணாமற்போனோர்-தினம்

   
   

 

  • தொடங்கியவர்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 11 பà¯à®°à¯, பà¯à®©à¯à®©à®à¯à®ªà¯à®ªà®µà®°à¯à®à®³à¯, à®à®°à¯

  • கருத்துக்கள உறவுகள்

காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று ! வடக்கு, கிழக்கில் இரு பாரிய ஆர்ப்­பாட்­டங்கள்  !

(நா.தனுஜா)

சர்­வ­தேச வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் தினத்தை முன்­னிட்டு இன்­றைய தினம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் உற­வு­களின் சங்­கத்­தினால் இரு பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்கும் அதே­வேளை, கொழும்பில் காணா­மல்­போனோர் பற்­றிய அலு­வ­ல­கத்­தினால் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களை நினை­வு­கூரும் நிகழ்­வொன்றும் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

missing.jpg

சர்­வ­தேச வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் தினத்தை முன்­னிட்டு கொழும்­பி­லுள்ள காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தில் இன்­றைய தினம் பிற்­பகல் 1.30 மணி தொடக்கம் 4 மணி­வரை ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிகழ்வில் கலந்­து­கொண்டு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை அவர்­க­ளது உற­வி­னர்கள் நினை­வு­கூர முடியும். உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­க­ளினால் இம்­முறை விரி­வான விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­ய­வில்லை என்று காணா­மல்­போனோர் பற்­றிய அலு­வ­ல­கத்தின் தவி­சாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தெரி­வித்தார்.

அதே­வேளை மூன்று தசாப்­த­கால யுத்­தத்தில் குறிப்­பாக, இறு­திப்­போரின் போது வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட தமது உற­வு­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்ற உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்தி கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­த­வர்­களால் 2017 ஜன­வரி மாதம் வவு­னி­யாவில் உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்று ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன், அவர்­க­ளு­டைய கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் உறு­தி­ய­ளித்­த­மையைத் தொடர்ந்து அப்­போ­ராட்டம் முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் அதன் பின்­னரும் எவ்­வித முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டாத நிலையில், 2017 பெப்­ர­வரி 20 ஆம் திகதி கிளி­நொச்­சியில் காகா­ணமல் ஆக்­கப்­பட்­டோரின் குடும்­பத்­தினர் ஆர்ப்­பாட்­ட­மொன்றை ஆரம்­பித்­தனர். அப்­போ­ராட்­டத்தில் திரு­கோ­ண­மலை, முல்­லைத்­தீவு, மரு­தங்­கேணி மற்றும் வவு­னியா ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­னரும் இணைந்­து­கொண்­டனர்.

மேற்­படி போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் போரின் போதும் போரின் பின்­னரும் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள் மற்றும் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­வர்கள், அனைத்து இர­க­சியத் தடுப்பு முகாம்கள், அத்­த­கைய இர­க­சியத் தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளையும் வெளி­யி­டு­மாறு அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தினர். போராட்டம் சுமார் 900 நாட்­களைக் கடந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லும்­கூட, அக்­கோ­ரிக்­கை­களை நிறை­வேற்­ற­வ­தற்கு அர­சாங்கம் தவ­றி­யி­ருக்­கி­றது. அதே­வேளை இப்­போ­ராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து தற்­போ­து­வரை காணா­ம­லாக்­கப்­பட்ட தமது சொந்­தங்­க­ளுக்கு என்ன நேர்ந்­தது என்ற உண்­மையை அறிந்­து­கொள்­ளா­ம­லேயே போராட்­டத்தில் ஈடு­பட்ட 38 பெற்­றோர்கள் மர­ண­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணியில் சர்­வ­தேச வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் தின­மான இன்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணிக்கு  சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்தை முழு­மை­யாகத் திருப்பும் நோக்கில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் உற­வு­களின் சங்­கத்­தினால் வடக்கில் ஓமந்தை சோதனைச் சாவ­டிக்கு அண்­மை­யிலும், கிழக்கில் கல்முனையிலும் இரு பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இப்போராட்டத்தில் எவ்வித அரசியல், கட்சி பேதங்களுமின்றி அனைவரையும் கலந்துகொண்டு தமக்கு ஆதரவளிக்கும்படி அழைப்பு விடுத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், இப்போராட்டத்தின் பின்னரேனும் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை கண்டறிவதற்கான அழுத்தம் சர்வதேசத்தினால் வழங்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

 

https://www.virakesari.lk/article/63685

 

  • தொடங்கியவர்

ஓமந்தையில்

காணாமல்  ஆக்கப்பட்ட வடக்கு மாகாண  உறவுகளால் இன்று  ஓமந்தையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்

image_0425c32bcd.jpg

image_91d02f2ca3.jpg

 

image_1cf08df247.jpg

image_6e45bf5bf7.jpg

image_97eb015aa2.jpg

image_e30c6b8f6f.jpg

image_d10a961088.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஓமந்தையில்/46-237587

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. 

 

vauniya.jpg


வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சென்றனர். 

 

DSC_1834_3.jpg

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல்போன உறவினர்களை ஒப்படைக்குமாறும் அரசு நீதியைத் தர வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பினர். 

 

DSC_1824_2.jpg


இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ச. சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

 

DSC_1833_2.jpg

DSC_1821_2.jpg

DSC_1817_3.jpg

DSC_1812_3.jpg

DSC_1825_2.jpg

DSC_1886_1.jpg

DSC_1885_1.jpg

DSC_1874_2.jpg

DSC_1873_2.jpg

DSC_1871_2.jpg

DSC_1870_2.jpg

DSC_1868_2.jpg

DSC_1865_2.jpg

 

DSC_1862_1.jpg

DSC_1857_1.jpg

DSC_1856_1.jpg

DSC_1843_3.jpg

 

 

DSC_1825_2.jpg

https://www.virakesari.lk/article/63697

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா,கனடா,பிரித்தானியா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா, ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது

NEW YORK, USA, August 29, 2019 /EINPresswire.com/ -- 

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக புலம்பெயர் தமிழர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துகலக நாளான ஓகஸ்ற் 30 அன்று அணிதிரள தயாராகி வருகின்றனர்.

இந்நாளையொட்டி தமிழர் தாயகத்திலும் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்போராட்டங்களை புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்து வருகின்றது.

அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுவது மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இடம்பெறுகின்றது.

1: France 
Trocadéro (துறோக்கட்றோ) மனித உரிமைச் சதுக்கத்தில் மாலை 16 மணி முதல் 18:30 மணி வரை

2: Canada
11am to 4 pm : Dundas Square. toronto
18h pm to 9h pm
Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5  

3: UK
12h30 pm to 4h pm
North Terrace, Trafalgar Square, Lonodon 

4: Germany 
Herzog Christoph Denkmal platz
Stuttgart Stadmitte

5: USA
10h am to 12 am
National Press Club
Floor 13 , Murrow Room, 529 14th NW. Washington Dc 20045

6: Australia - Sydney 
7 am to 9 am
sydney main railway station

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஓகஸ்ற் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் :  http://youarenotforgotten.org/

http://www.naathamnews.com/aug-30-tamil-diaspora/

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter

https://www.einpresswire.com/article/494952684/

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா தினங்களை பிரகடனப்படுத்தி விட்டு.. அரச பயங்கரவாதத்தையும் அரச மற்றும் அரச இராணுவ இயந்திரத்தின் போர்க்குற்றவாளிகளையும் இனப்படுகொலையாளர்களையும் காணாமல் போகடிப்போரையும் காப்பாற்றிக் கொண்டிருக்காமல்..

காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் சார்ப்பில்.. அவர்களின் உறவுகள் தமது முறைப்பாடுகளை.. தமக்கான நீதிகளை பெற.. சர்வதேசப் பொறிமுறை ஒன்று நிறுவப்படுவதோடு.. அரசுகள்.. அரசப் பொறிமுறைகளுக்கு வெளியில்.. சர்வதேச நடுநிலை நீதி நியாயச் செயற்பாடுகளின் கீழ் அந்தப் பொறிமுறை முறைப்பாடுகளை பெறவும் குற்றவாளிகளை விசாரிக்கவும் தண்டிக்கவும் செய்யும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உருவாக்கப்படுவதே அவசியமாகும். 

இவ்வாறான காத்திரமான செயற்பாடுகளே.. காணாமற்போகடிப்பதையும்.. மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து உலக அரங்கில் அரசுகளால் மேற்கொள்ளப்படுவதையும் கூடிய அளவுக்கு தடுக்க வாய்ப்பளிக்கும். 

  • தொடங்கியவர்

கவனயீர்ப்புப் போராட்டம்

-செந்தூரன் பிரதீபன்

image_7fb513331b.jpg

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆடியபாதம் வீதியில் திறந்து வைக்கப்பட்ட காணாமல் போனவர்களைப் பற்றி கண்டறியும் அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரால் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது, உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லை. உள்ளக விசாரணை நிராகரிக்கின்றோம்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் வெறும் கண்துடைப்பே காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அரசை பதில் கூறு, வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், நீக்கு நீக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கவனயீர்ப்புப்-போராட்டம்/71-237572

  • தொடங்கியவர்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்

சகா

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரில்,  காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்  கோடீஸ்வரன்,  மாநகரசபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

image_0f77e74825.jpg

image_58bd6a2a11.jpg

 

 

 

http://www.tamilmirror.lk/அம்பாறை/காணாமலாக்கப்பட்டோரின்-உறவுகள்-கல்முனையில்-ஆர்ப்பாட்டம்/74-237583

  • தொடங்கியவர்

மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

image_723d3cc059.jpg

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமான இன்று வெள்ளிக்கிழமை (30) மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆராம்பமானது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் உரிய தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் விடுவிக்க கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வளர்கள், மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வன்னி/மன்னாரில்-கவனயீர்ப்புப்-போராட்டம்/72-237586

  • தொடங்கியவர்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?

ரஞ்சன் அருண் பிரசாத், யூ.எல். மப்றூக்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கேட்டு பேராட்டம்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.

இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?

வடக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், இன்று வரை காணாமல் போனோர் தொடர்பான எந்தவித தகவல்களும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/sri-lanka-49523448

 

 

 

 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு

இலங்கையில் காணாமல் போனோரை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

காணாமல் போனோரையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் தேடி கண்டுபிடித்தல் மற்றும் அவர்கள் காணாமல் போனதற்கான சூழ்நிலையை கண்டறிதல் ஆகியன இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில், குறித்த அலுவலகம் திறக்கப்பட்டு, வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பகுதியிலும் ஓர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரை கண்டறிவதற்கான பல முயற்சிகள் இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்கு நீதி கோரி கல்முனை, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்தனர்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?

அந்த வகையில், அம்பாறை மாவட்டம் கல்முனையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும், காணாமல் போனோருக்கு நீதி கோரும் அமைப்புகளும் ஒன்றிணைந்து இன்று கவன ஈர்ப்பு பேரணியொன்றில் ஈடுபட்டனர்,

அதிகளவானவானோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், காணாமல்போனவர்களின் படங்களை, அவர்களின் உறவினர்கள் ஏந்தியிருந்ததோடு, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளையடுத்து ஆரம்பமான இந்தப் பபேரணி, கல்முனை உப பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

இந்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் ஆகியோரிடம், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பின் பெயரில் இந்த மகஜர் எழுதப்பட்டிருந்தது.

இலங்கை ராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுவினரும் தமது உறவுகளை கடத்தியும் கைது செய்தும் காணாமல் ஆக்கியதாக குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்திடம் நீதி கோரி மகஜர்களைக் கையளித்து, பல போராட்டங்களை தாம் முன்னெடுத்துள்ள போதும், அதற்கு அரசாங்கம் செவி சாய்ப்பதாக இல்லை என்று, போராட்டத்தில் கலந்து கொண்டோர் இதன்போது தெரிவித்தனர்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?

மேலும், தமது குரல் சர்வதேசத்துக்குக் கேட்கவில்லையா எனவும் பேரணியில் ஈடுபட்டோர் கேள்வியெழுப்பினர்.

இதன்போது வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினுடைய அமைப்பின் பிரதிநிதி ஊடகங்களிடம் பேசுகையில்; "நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கு முன்னர், எங்கள் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொண்டு, எங்களுடைய உறவுகளை மீட்டுத்தருவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேவேளை, இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகளும் நடத்தப்பட வெண்டும். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால், நாங்களும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவோம்" என்று கூறினார்.

இந்தப் பேரணில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.

 

 

குற்றவாளிகள் சட்டத்திற்கு முன்நிறுத்தப்பட வேண்டும்

இவ்வாறான நிலையில், அதி தீவிர அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியில் பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே இந்த பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கின்றார்.

பி.பி.சி தமிழுக்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49523448

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. என்ற அமைப்பு.... காணாமல் போனோர் விடயத்தில் மட்டுமல்லாமல்,
பல விடயங்களில்....  "கும்பகர்ண தூக்கம்" மாதிரி... நடித்துக் கொண்டு இருப்பதால்....
இந்த அமைப்பே... உலகத்துக்கு தேவையற்ற அமைப்பு.
அதனை...  கலைத்து விடுவதே... சிறந்த வழி. 

  • தொடங்கியவர்

 

 

பழைய பதிவு, ஆனால் நிரந்தர உண்மைகளை கொண்டது 

 

  • தொடங்கியவர்

காணமல் போதல் கொடுமை என்றால் 

அதைவிடக் கொடுமையானது அவர்களை தேடி அலைவது.

அந்த கொடுமையை பத்து ஆண்டுகளாக எமது உறவுகள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த கொடுமையை அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுபவிக்கப் போகின்றார்கள்?

இந்த தேடுதலில் தங்கள் உறவுகள் குறித்து ஒரு ஓற்றைச் சொல்லைக்கூட அறியாமல் மாண்டுபோகிறார்களே அவர்களின் வலியை எப்படி உரைப்பது?

இவர்கள் குறித்து அக்கறை அற்று இருக்கும் இந்த அரசை நொந்து கொள்வதா? அல்லது

இந்த அரசை தட்டிக் கேட்காமல் இருக்கும் எமது தலைவர்களை நொந்துகொள்வதா? அல்லது

நல்லூர் திருவிழாவுக்கு ஆயிரக் கணக்கில் கூடும் மக்கள் அதன் அருகில் இருக்கும் இந்த காணாமல் போன உறவுகளுக்காக கூடாததையிட்டு நொந்து கொள்வதா?

ஆனாலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் தேடும் முயற்சியை கைவிடவில்லை. தங்கள் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் கைவிடவில்லை.

குறிப்பு - இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.

மூலம் : முகநூல் 

 
  • தொடங்கியவர்

காணாமல் போன அண்ணன்

Image may contain: 1 person

ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக்
கொண்டு செல்லும்பொழுது
வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில்
அண்ணன் எங்கே என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப்
பார்க்கும்போதும்
அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன்
விளையாடச் செல்லும்போதும்
அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்வில்லை

யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும்
கொண்டாட்டநாட்கள் வரும்போதும்
அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தூங்கி எழும்பும்போதும்
பள்ளிக்கூடம்செல்லும்போதும்
அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

வருடங்கள் பல ஓடிய பின்னரும்
யாரைப் பார்த்தாலும்
எங்காவது அண்ணாவைக் கண்டீர்களா?
என்பதைத் தவிர
அவள் வேறெதையும் கேட்கவில்லை.

-தீபச்செல்வன்

http://www.vanakkamlondon.com/theepachelvan-poem-30-08-2019/?fbclid=IwAR0T2jcVhUMyD8KPSjW0y7NEigpaYusTHpGT_d2F2D9lH8im4-I_FUXVN6M

 

 

  • தொடங்கியவர்
19 hours ago, தமிழ் சிறி said:

ஐ.நா. என்ற அமைப்பு.... காணாமல் போனோர் விடயத்தில் மட்டுமல்லாமல்,
பல விடயங்களில்....  "கும்பகர்ண தூக்கம்" மாதிரி... நடித்துக் கொண்டு இருப்பதால்....
இந்த அமைப்பே... உலகத்துக்கு தேவையற்ற அமைப்பு.
அதனை...  கலைத்து விடுவதே... சிறந்த வழி. 

அடுத்த பாதை திறக்கும் வரை இருக்கும் பாதையில் மீண்டும் மீண்டும், சில மாற்று தந்திரோபாயங்களை மாற்றி, பயணிக்கும் வழி மட்டுமே எமக்கு உள்ளது.

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, பà¯à®©à¯à®©à®à¯à®ªà¯à®ªà®µà®°à¯à®à®³à¯, à®à®°à¯

#JusticeForTamilsGenocideInSrilanka
#InternationalIndependentInvestigation
#UNReferendumForTamilEelam


தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி
16.09.2019 (திங்கள்கிழமை)14:00- 18:00 மணி
UNO-Geneva ஈகைப்போராளி முருகதாசன் திடல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.