Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தம்

[வியாழக்கிழமை, 3 மே 2007, 16:24 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை ஏற்றுக்கொண்டு, இராணுவச் செலவீனங்களைக் குறைக்கும் வரை பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரக பேச்சாளர் கூறியதாவது:

அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் நிராகரித்த நிலையில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தபடுகிறது.

சிறிலங்காவுக்கு 2005 ஆம் ஆண்டு 41 மில்லியன் பவுண்ட்ஸ் (81.6 மில்லியன் டொலர்) கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான 6 மில்லியன் பவுண்ட்சில் 3 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதர தொகையானது எமது நிபந்தனைகளுக்கு முகம் கொடுக்கப்படும் நிலையில்தான் வழங்கப்படும் என்றார் அவர்.

puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறங்கிக்கொண்டிருந்த சர்வதேசம் துயில்எழும்பிக்கொண்டிருக்க

நல்ல செய்தி. மற்ற நாடுகளும் இதற்கு முன்வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இனி புலிகளை அழுத்தமுடியாது

அழுத்த எதுவுமே இல்லை

நல்ல செய்தி

இப்பொழுதாவது எடுத்தார்களே இந்த முடிவை

எப்பபோ செய்திருந்தால் எத்தனையோ உயிர்னளைக்காப்பாற்றியிருக்

Gypfs; kPJ kl;Lk; eltbf;ifay;y rk;ge;jg;gl;l jug;G midtu; kPJk; jhd; vd;W Nfhbl;Ls;sJ.,ij itj;J ru;tNjrk; epahakhdJ vd;W fdT fhzKbahJ nghWj;jpUe;Jghu;g;Nghk;.

இது என்ன அறிக்கை மட்டுந்தானா அல்லது உண்மையில் நடைமுறைப் படுத்தப்படுமா.

ஒப்புக்கொள்ளப்பட்ட உதவிகள் தடையின்றி வழங்கப்படும் என்று விரைவில் மாற்று அறிக்கையும் விடுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Gypfs; kPJ kl;Lk; eltbf;ifay;y rk;ge;jg;gl;l jug;G midtu; kPJk; jhd; vd;W Nfhbl;Ls;sJ.,ij itj;J ru;tNjrk; epahakhdJ vd;W fdT fhzKbahJ nghWj;jpUe;Jghu;g;Nghk;.

:D:(

நீங்க என்ன சைனா மொழியிலா பேசுரிங்க.

சும்மா வேடிக்கை காட்டுராணுங்க. ஒரு வேளை அவங்கள்ட்ட வெடி வாங்களன்னு இப்படி நாடகம் நடத்தளாம்.

:D

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு"

Edited by வெங்கட்

:D:D

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அரிவு"

வாழ்த்துகள்! கமோன் சிறீ லங்கா!

pugwave3.gif

(2 ஆம் இணைப்பு) அறிவித்தபடி சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்தியது பிரித்தானியா.

சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை ஏற்றுக்கொண்டு, இராணுவச் செலவீனங்களைக் குறைக்கும் வரை பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.

கொழும்பில் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரக பேச்சாளர் கூறியதாவது:

அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் நிராகரித்த நிலையில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தபடுகிறது.

சிறிலங்காவுக்கு 2005 ஆம் ஆண்டு 41 மில்லியன் பவுண்ட்ஸ் (81.6 மில்லியன் டொலர்) கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான 6 மில்லியன் பவுண்ட்சில் 3 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதர தொகையானது எமது நிபந்தனைகளுக்கு முகம் கொடுக்கப்படும் நிலையில்தான் வழங்கப்படும் என்றார் அவர்.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் இந்த நிதி உதவி நிறுத்தம் தொடர்பான எச்சரிக்கையை பிரித்தானிய அரசு விடுத்திருந்தது.

பெப்ரவரி மாதத்தில் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களிலேயே பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது பிரித்தானியா நாடாளுமன்றத்தில் பல மணிநேரம் தமிழர் துயரம் குறித்த விவாதம் நடைபெற்ற நிலையிலும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரித்தானியா அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் சிறிலங்காவுக்கான நிதி உதவி நிறுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் அரசபயங்கரவாதம் பற்றி என்னும் உணர வைக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய அரசின் இந்த முடிவானது விடுதலைப் புலிகளின் மௌனத்திற்கு கிடைத்த பரிசாகும்.

இருந்தாலும் இந்த மேற்க்கத்தேய நாடுகளை சற்று சந்தேகத்துடன் தான் அணுகவேண்டும்.

இவங்கள் ஏதோ சூழ்ச்சி செய்கிற மாதிரித்தான் எனக்குத் தோன்றுகின்றது.

எதற்க்கும் பொறுத்திருந்து பார்ப்போம்

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாங்கள் வாக்குரிமை மூலம் ஒவ்வொரு நாடுகளிலும் பாரளுமன்ற உறுப்பினர்கள்

மூலம் பராளுமன்றங்களுக்கு (பிரித்தானிய பாராளுமன்றம் போன்று) விவாதங்களுக்கு கொண்டு வர பாடுபடவேண்டும்...

அல்லது வெளினாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல் போகும்....

எனவே தன்னம்பிகையுடன் செயல்படுங்கள்...

BLUEBIRD கூறிய கருத்து:

புலிகள் மீது மட்டும் நடவடிக்கையல்ல சம்பந்தப்பட்ட தரப்பு அனைவர் மீதும் தான் என்று கோடிட்டுள்ளது.இதை வைத்து சர்வதேசம் நியாயமானது என்று கனவு காணமுடியாது பொறுத்திருந்துபார்ப்போம்.

கெஞ்சினால் பிச்சை கிடைக்கும்.

வீரத்தை காட்டினால் பயம்,நட்பு,அன்பு கலந்த மரியாதை கிடைக்கும்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு எதிராக போராட அரசு முடிவு

சிறிலங்காவிற்கான நிதியை பிரித்தானியா அரசாங்கம் நிறுத்துவதற்கு எடுத்த முடிவை கண்டித்து வீதிகளில் இறங்கிப் போராட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 6 உறுப்பினர்களும் பங்கெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று தமது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க அரசு முடிவு செய்யவில்லை என தோட்டத்துறை அமைச்சர் டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

-புதினம்

வோய் ஒவ் அமெரிக்காவில் வந்த செய்தி

Britain Suspends Aid Package to Sri Lanka

By Anjana Pasricha

New Dellhi

03 May 2007

Britain has suspended aid payments to Sri Lanka, because of concerns about the country's human rights record and intensifying violence. As Anjana Pasricha reports from New Delhi, the suspension comes a year and a half after new fighting erupted between the Sri Lanka government and Tamil Tiger rebels.

A spokesman for the British High Commission in Colombo says Britain is withholding financial assistance to Sri Lanka until the government meets what he called "agreed human rights and defense spending conditions."

Britain was due to give Colombo $5.9 million this year as part of a debt relief package. Only half has been handed over so far.

British officials say the remaining money will be given if a series of conditions are met. These include what a statement called "no unjustified increases in military spending and no instigations of hostility."

In recent months, rights groups such as Amnesty International and Human Rights Watch have criticized both the Sri Lankan government and Tamil Tiger rebels for a worsening human rights situation. They noted numerous cases of political killings, tortures, abductions and disappearances since the two sides resumed fighting.

The aid suspension was announced as a group of British diplomats postponed a visit to the rebel-held city of Killinochchi on Thursday. They were due to meet rebel leaders in a bid to revive the peace process, but the government asked them to delay the visit, apparently for security reasons.

The head of Colombo's Center for Policy Alternatives, Paikiasothy Saravanamuttu, says the government does not appear to be in a mood for efforts to revive the peace process.

"It does seem diplomatic efforts are not coming to anything at all because I think the two parties are firmly committed to prosecuting military offensives against each other and looking to effect a balance of power on the ground, but at the same time there has been renewed efforts by countries to revive the diplomatic pressure and the peace process," Saravanamuttu says.

The Sri Lankan government also recently barred the Norwegian ambassador from traveling to Killinochi to talk to the rebels. Norway helped broker the now-defunct 2002 truce, and has continued to serve as a mediator.

The Tigers are fighting for a Tamil homeland in the north and east of Sri Lanka. The 2002 truce had raised hopes for an end to the quarter-century conflict, but more than 4,500 people have been killed in the last year and a half.

http://www.voanews.com/english/2007-05-03-voa23.cfm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு செலவினத்தைக் குறைத்து

மனித உரிமைகளைப் பேணும் வரை

பிரிட்டனின் நிதி உதவி முடக்கம்! கொழும்பு, மே 4

இலங்கை அரசாங்கம் தனது பாதுகாப்புச் செலவினத்தைக் குறைக்கும் வரையும், மனித உரிமைகளைப் பேணும் வரையும் அதற்கு வழங்கும் நிதி உதவியை முடக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

மேற்படி இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே நிதி உதவி வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்கண்ட இரண்டு விடயங்களிலும் இலங்கை அரசுக்கு பிரிட்டன் நிபந்தனை விதித்து அவை எந்த விதத்திலும் நிறைவு செய்ய வேண்டும் என்று பிரித்துக் கூறியுள் ளது.

இந்த வருடத்திற்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட நிதி உதவியில் அரைப் பங்கு ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக வழங்கப்பட்டுவிட்டது.

மிகுதி அரைப் பங்கும், அளவுக்கு அதிகமான பாதுகாப்புச் செலவினம் குறைக்கப்பட வேண்டும், மனித உரிமைகளைப் பேணுவதில் உருப்படியான பலன் தரும் வகையில் செயற்பட வேண்டும், மோதல்களைத் தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் குறித்து இலங்கை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மிகுதிப் பணம் எமது எதிர்பார்ப்புகள் செயலளவில் நிறைவேற்றப்பட்ட பின்னரே வழங்கப்படும் என்றும் பிரிட்டிஷ் தூத ரக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பிரிட்டன் இலங்கைக்கு வழங்காது முடக்கியிருக்கும் தொகை சுமார் 300 மில்லியன்கள் ரூபாவாகும்.

நாடாளுமன்றில் அறிவிப்பு

இதேவேளை

இலங்கைக்கான நிதி உதவி முடக்கப்பட்டிருக்கும் தகவலை பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான துணை அமைச்சர் ஹேரத் தோமஸ் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

""எங்கள் கவலை குறித்து இலங்கை அர சுக்கு தெளிவான சமிக்ஞை செய்தி ஒன்றை அனுப்ப முடிவு செய்தோம். இலங்கை அர சுடன் பேச்சுகள் நடந்து, திருப்தி நிலை ஏற்பட்ட பின்னரே முடக்கப்பட்ட எஞ்சிய உதவிகள் விடுவிக்கப்படும்.

""அந்தப் பேச்சுகள் நிச்சயமாக இலங்கையின் மனித உரிமைகள் பேணப்படுதல் சம்பந்தமான விடயங்களை முக்கியமாக உள்ளடக்கி இருக்கும்'' என்றார் அவர்.

இலங்கை அரசு

போட்ட முட்டுக்கட்டை

இதற்கிடையில்

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயரின் இலங்கைக்கான விசேட தூதுவர் போல் மேர்பி அடங்கலான இராஜதந்திரிகள் குழு ஒன்று புலிகளை பேச்சு மேசைக்கு மீண்டும் இழுத்து வரும் முயற்சியாக கிளிநொச்சி செல்ல எத்தனித்தது என்றும்

இலங்கை அரசு அதற்கு நேற்று முட்டுக் கட்டை போட்டுவிட்டது என்றும்

செய்தி ஏஜென்ஸிகள் தகவல் வெளியிட்டன.

யுத்தம் இடம்பெறும் இச்சமயத்தில் அங்கு செல்வது பாதுகாப்பானதல்ல என்று இராஜதந்திரிகளிடம் கொழும்பு கூறிவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது.

நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரின் வழமையான கிளிநொச்சி விஜயத்தையும் கொழும்பு அரசு கடந்த வாரம் தடுத்துவிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. (அசி)

நன்றி உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒதுக்கப்பட்ட நிதி உதவி

எந்தத்தடங்களும் இன்றி

வெகு விரைவில் சென்றடையும்

Edited by suthaharan

ஒதுக்கப்பட்ட நிதி உதவி

எந்தத்தடங்களும் இன்றி

வெகு விரைவில் சென்றடையும்

யாருக்கு??? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.