Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புழுத்தறிவு என்பது யாதெனில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புழுத்தறிவு என்பது யாதெனில்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

புழுத்தறிவு என்பது யாதெனில்

அடிப்படை அறிவு என்பதே இல்லாமல் இருக்கும் போது பகுத்தறிவு புழுத்தறிவு போலத்தான் தென்படும் அண்ணை.

கேபி, கருணா தனித்தமிழீழக் கொள்கையை பிழையாக வழிநடத்தினார்கள் நடத்துகிறார்கள் என்பதற்காக பிரபாகரனை, தமிழ்தேசியக் கொள்கையை எப்படி விமர்சிக்க முடியாதோ, அப்படித்தான் திமுக, தற்போதைய திக வை வைத்து, பகுத்தறிவுக் கொள்கையை விமர்சிக்க முடியாது.

தவிரவும் நீங்கள் தந்துள்ள காணொளியில், தனியே கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறன. பதில்களை தக்க ஒருவரிடம் கேட்டுப் போட்டால் அது ஊடக நேர்மை.

சும்மா பேஸ்புக்கில், யூடியூப்பில் வாற கஞ்சல்களை எல்லாம் வைத்து ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை, தமிழ்நாட்டை நல்வழிப்படுத்திய வழியை எடைபோட முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டதைக்கொட்டுவது என் கடமை. பொறுக்குவதும் புரள்வதும் தாண்டிச்செல்வதும் உங்கள் தலைகளில் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புழுத்தறிவைப் பற்றி யாழ் களம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அலசி ஆராய்ந்து விட்டது. இப்போது அவை கேள்விகளாக கறுப்புகளை துளைக்க ஆரம்பித்துவிட்டன.

எனிக் கறுப்புகளின் வேடம் தானே கலையும். 😂

இராமசாமியிசம் பேசிக் கொண்டே.. சாதிக் காப்பையும்.. பெண் பாதுகாப்பின்மையயையும் வளர்த்ததே.. இராமசாமிய வாரிசுகளாக தம்மை இனங்காட்டிக்கொண்ட திராவிடக் கும்பல்கள் தான். அவற்றால்.. இன்று அழிந்தது தமிழகம் மட்டுமல்ல.. ஈழத்தமிழினமும் தான். 

தேங்கிய குட்டையாக  மக்களின் அறிவை வைத்திருக்க விரும்புவதே புழுத்தறிவு எனப்படும். அப்படி தேங்கிய குட்டையாக மூடதனங்களை புழுத்தறிவை  பேண விரும்புபர்களே பெரியாரையும் பகுத்தறிவையும்  திட்டுபவர்கள்.  தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.  பெரியார் தன்னை என்றும் முன்னிலை படுத்தியதில்லை.  உனது அறிவு எல்லாவற்றையும் விட உயர்ந்த‍து. அதை சிற‍ப்பாக பாவித்து  நான் முன்னேற வேண்டும் என்று மட்டுமே அவர் கூறினார். தான் கூறுவதை கூட அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உனது அறிவை உபயோகித்து யோசித்து உனக்கு சரிஎன பட்டால் மட்டும் ஏற்றுகொள் என்று தைரியமாக கூறியவர் அவர். 

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவை பெரியார் என்றுமே பெரியாரிசம் என்றோ, திராவிடம் என்றோ அழைக்கவில்லை. திராவிடம் என்பது மெதராஸ் மாநிலமாக இருந்த போது, அந்த மாநிலத்தில் வசித்த, தெலுங்கர், மலையாளி, துலு, தமிழருக்கும் சேர்ந்த கூட்டு அரசியல். அதற்கான தேவை மொழிவாரி மாநில பிரிவினையின் போதே அற்று விட்டது.

பகுத்தறிவுவாதம் என்பது உலகில் எல்லா மனிதருக்குமான பொது அரசியல். இதற்க்கான தேவை எப்போதும் இருக்கும். எங்கேயும்.

10 வருடத்தில் திருமாவை இதே யாழில் புகழ்ந்த நல்லவாய்கள் எல்லாம் இப்போ நாற வாய்கள் ஆனதையும் நாமும் கண்டுள்ளோம் 😂.

இன்றைக்கு சீமான் போன்ற போலித் தமிழ் தேசிய மழை ஈசல்களுக்காகவும், மோடி மகிந்தவுக்கு சொல்லி  எமக்கு விடிவு தருவார் என்ற நப்பாசைக்காகவும் சிலருக்கு பெரியாரைத் திட்டி தீர்க்க வேண்டி இருக்கிறது.

இன்னும் 10 வருடத்தில் சீமானையும் இப்படி எழுதும் போது உண்மை விளங்கும் 😂.

அதுவரை பெரியாரை சம்பந்தமே இல்லாமல் திட்டிக் கொண்டிருங்கள்....உங்கள் கோயில் விதானங்களில் மோகன்தாஸ் காந்திக்கு மட்டும் இல்லை, ரஜீவ் காந்திக்கும் சிலை ஏற்றுவார்கள் 🤦‍♂️

1 hour ago, goshan_che said:

போலித் தேசீய வாதிகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் அவர்கள் போலி என்பதையும் உண்மையான தமிழ்த்தேசீயவாதிகள் யார் என்ன காரணத்தால் அவர்கள் உண்மைத் தமிழ்த்தேசீயவாதிகள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அப்போது மக்கள் உண்மையின் பக்கம் செல்வார்கள். இது உங்கள் கருத்துக்கான எதிர்க் கருத்தல்ல மாறாக இது பிழை என்று வரையறுக்கும் போது சரி எது என்பதையும் முன்வையுங்கள் என்ற வேண்டுகோளேயாகும். 

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடக்குமுறைக்கு எதிரான கொள்கைகளும் போராட்டங்களும்  எந்தெந்த காரணிகளால் ஒடுக்கப்படுகின்றார்களோ அதற்கு எதிராக  தோன்றிக்கொண்டே இருக்கின்றது. பெரியாரின் காலத்திற்கு முன்னரான காலத்தில் வருணாசிரம தர்மம் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் என்னுமொரு பரிணாமம் தான் பெரியாரின் முயற்சிகள். இன்று பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வந்த திராவிட அரசியல் கட்சிகள் மிகப்பெரும் சுரண்டலில் ஈடுபட்டு புதியதொரு ஒடுக்குமுறையை செய்யும் போது அதற்கெதிராக போராட்டங்கள் தொடரத்தான் செய்யும்.  விமர்சனங்கள் மாற்றுக் கருத்துக்கள் எழுவது இயல்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சண்டமாருதன் said:

போலித் தேசீய வாதிகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது ஏன் அவர்கள் போலி என்பதையும் உண்மையான தமிழ்த்தேசீயவாதிகள் யார் என்ன காரணத்தால் அவர்கள் உண்மைத் தமிழ்த்தேசீயவாதிகள் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அப்போது மக்கள் உண்மையின் பக்கம் செல்வார்கள். இது உங்கள் கருத்துக்கான எதிர்க் கருத்தல்ல மாறாக இது பிழை என்று வரையறுக்கும் போது சரி எது என்பதையும் முன்வையுங்கள் என்ற வேண்டுகோளேயாகும். 

நியாயமான கோரிக்கைதான். ஆனால் 2009 ற்கு பின்னர் அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

ஒரு சிலர் தேறுவார்கள் போல் தென்பட்டார்கள் -ஆனால் காலம் அவர்களையும் காட்டிக் கொடுத்து விட்டது.

#யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

பகுத்தறிவை பெரியார் என்றுமே பெரியாரிசம் என்றோ, திராவிடம் என்றோ அழைக்கவில்லை. திராவிடம் என்பது மெதராஸ் மாநிலமாக இருந்த போது, அந்த மாநிலத்தில் வசித்த, தெலுங்கர், மலையாளி, துலு, தமிழருக்கும் சேர்ந்த கூட்டு அரசியல். அதற்கான தேவை மொழிவாரி மாநில பிரிவினையின் போதே அற்று விட்டது.

பகுத்தறிவுவாதம் என்பது உலகில் எல்லா மனிதருக்குமான பொது அரசியல். இதற்க்கான தேவை எப்போதும் இருக்கும். எங்கேயும்.

10 வருடத்தில் திருமாவை இதே யாழில் புகழ்ந்த நல்லவாய்கள் எல்லாம் இப்போ நாற வாய்கள் ஆனதையும் நாமும் கண்டுள்ளோம் 😂.

இன்றைக்கு சீமான் போன்ற போலித் தமிழ் தேசிய மழை ஈசல்களுக்காகவும், மோடி மகிந்தவுக்கு சொல்லி  எமக்கு விடிவு தருவார் என்ற நப்பாசைக்காகவும் சிலருக்கு பெரியாரைத் திட்டி தீர்க்க வேண்டி இருக்கிறது.

இன்னும் 10 வருடத்தில் சீமானையும் இப்படி எழுதும் போது உண்மை விளங்கும் 😂.

அதுவரை பெரியாரை சம்பந்தமே இல்லாமல் திட்டிக் கொண்டிருங்கள்....உங்கள் கோயில் விதானங்களில் மோகன்தாஸ் காந்திக்கு மட்டும் இல்லை, ரஜீவ் காந்திக்கும் சிலை ஏற்றுவார்கள் 🤦‍♂️

சீமானை இன்று ஏற்றுக்கொண்டு முழுதான ஆதரவை நான் கொடுத்து வருகிறேன் 
காரணம் கேரளா ஆந்திரா கன்னடா வில் தமிழனை இரண்டாம் பிரஜையாகவே காலம்தோறும் வைத்து 
இருக்கிறார்கள். இங்குதான் போலி திராவிடம் பேசி தமிழை தொலைத்தார்கள். இனி தமிழையும் மண்ணையும் 
தமிழ்த்தேசியம் ஒன்றுதான் காக்கும்.
இந்தி திணிப்பு இல்லை...... இல்லை என்ரூ சொல்லிக்கொண்டே திணிப்பு கடந்த 50 வருடமாக 
மும்மொழி கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி அல்லாத மாநிலங்களில் நடக்கிறது. ஹிந்தி மாநிலங்களில் 
உள்ளவருக்கு ஹிந்தியே எழுத வாசிக்க தெரியாது .... அங்கு மும்மொழியும் இல்லை சொந்த மொழியும் இல்லை.
கிரேக்க மொழி   லத்தீன் மொழி  கீப்ரு போன்ற மொழிகள் அழிந்துபோயின ... அதன் முன்தோன்றிய தமிழ் மொழியாக அல்லாது வாழ்வாக இருந்த ஒரு காரணத்தால் மட்டுமே வாழ்கிறது. இப்போதைய உலகமயமாதல் அதுக்கும் ஆப்பு வைக்க வழி சமைத்து  கொடுக்கிறது ........ இனி போராடினால் மட்டுமே தமிழ் வாழும்.
அதுக்காக சீமான் போராடுகிறான்  .. எமது ஆதரவு என்றும் உண்டு.

பத்து வருடம் கழித்து சீமான் மாறலாம் ............
அதுக்காக இன்றே உங்களை போல இன்றே சாத்திரம் பார்த்து தூற்றுவதும் இல்லை 
அன்று தூற்றுவதுக்கு பின் நிற்க போவதும் இல்லை.
எமது ஆதரவு என்பது கொள்கை நிலை சார்ந்தது  
சீமான் என்ற தனிமனிதன் சார்ந்ததல்ல. 

சீமான் மாறினால் தூற்றித்தான் எழுதுவோம் அதன் பொருள் நாம் மாறுகிறோம் என்பதல்ல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 11:27 PM, goshan_che said:

உங்களுடைய கருத்துடன் முரண்பாடில்லை  சகோ

ஆனால்  எங்கே  முரண்படுகின்றோம்  என்றால்

தமிழ் தேசியத்தை  நீங்கள்  சீமானுக்குள்  குறுக்கி  பார்க்கின்றீர்கள்

தமிழ்த்தேசியத்தின்  வீச்சும் காலமும் மிக மிக  அதிகம்

அதன்  பாதையில்

நான் சீமானை  ஒரு  துரும்பாக  மட்டுமே  நினைக்கின்றேன்

தலைவர்  கூட 

தமிழீழப்போராட்டத்தில்  தான் ஒரு  துரும்பு  என்று மட்டுமே சொல்லி  வந்தார்

என்பதையும்  கவனிக்கணும் சகோ. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 8:12 PM, tulpen said:

தேங்கிய குட்டையாக  மக்களின் அறிவை வைத்திருக்க விரும்புவதே புழுத்தறிவு எனப்படும். அப்படி தேங்கிய குட்டையாக மூடதனங்களை புழுத்தறிவை  பேண விரும்புபர்களே பெரியாரையும் பகுத்தறிவையும்  திட்டுபவர்கள்.  தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.  பெரியார் தன்னை என்றும் முன்னிலை படுத்தியதில்லை.  உனது அறிவு எல்லாவற்றையும் விட உயர்ந்த‍து. அதை சிற‍ப்பாக பாவித்து  நான் முன்னேற வேண்டும் என்று மட்டுமே அவர் கூறினார். தான் கூறுவதை கூட அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உனது அறிவை உபயோகித்து யோசித்து உனக்கு சரிஎன பட்டால் மட்டும் ஏற்றுகொள் என்று தைரியமாக கூறியவர் அவர். 

தெருவில் பூரி  விற்கும் லாயக்குள்ளவனுக்கும் பதில் சொல்ல

அறிவுயீவிகள்  அல்லது பகுத்தறிவாளர்  என்று  தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்களால் 

முடியாதிருப்பதை  என்னவென்பது  சகோ...?

அறிவற்றவன்  எதையும் கேட்பான்

அறிவுள்ளவன்  அல்லது எதையும் பகுத்தறிந்தவனின்  பதிலாக  உங்கள்  பதில்  கூட  இல்லையே??

நான்  இப்படித்தான்

நீ  அதை ஏற்றுக்கொள்ளணும்  என்பது தான்  பகுத்தறிவா??

அதை பெரியாரே  மறுத்திருக்கும் போது

அவர் வழியை  நீங்கள்  பின்பற்றுவதாக  எப்படி  எடுத்துக்கொள்ளமுடியும்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

சீமானை இன்று ஏற்றுக்கொண்டு முழுதான ஆதரவை நான் கொடுத்து வருகிறேன் 
காரணம் கேரளா ஆந்திரா கன்னடா வில் தமிழனை இரண்டாம் பிரஜையாகவே காலம்தோறும் வைத்து 
இருக்கிறார்கள். இங்குதான் போலி திராவிடம் பேசி தமிழை தொலைத்தார்கள். இனி தமிழையும் மண்ணையும் 
தமிழ்த்தேசியம் ஒன்றுதான் காக்கும்.
இந்தி திணிப்பு இல்லை...... இல்லை என்ரூ சொல்லிக்கொண்டே திணிப்பு கடந்த 50 வருடமாக 
மும்மொழி கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி அல்லாத மாநிலங்களில் நடக்கிறது. ஹிந்தி மாநிலங்களில் 
உள்ளவருக்கு ஹிந்தியே எழுத வாசிக்க தெரியாது .... அங்கு மும்மொழியும் இல்லை சொந்த மொழியும் இல்லை.
கிரேக்க மொழி   லத்தீன் மொழி  கீப்ரு போன்ற மொழிகள் அழிந்துபோயின ... அதன் முன்தோன்றிய தமிழ் மொழியாக அல்லாது வாழ்வாக இருந்த ஒரு காரணத்தால் மட்டுமே வாழ்கிறது. இப்போதைய உலகமயமாதல் அதுக்கும் ஆப்பு வைக்க வழி சமைத்து  கொடுக்கிறது ........ இனி போராடினால் மட்டுமே தமிழ் வாழும்.
அதுக்காக சீமான் போராடுகிறான்  .. எமது ஆதரவு என்றும் உண்டு.

பத்து வருடம் கழித்து சீமான் மாறலாம் ............
அதுக்காக இன்றே உங்களை போல இன்றே சாத்திரம் பார்த்து தூற்றுவதும் இல்லை 
அன்று தூற்றுவதுக்கு பின் நிற்க போவதும் இல்லை.
எமது ஆதரவு என்பது கொள்கை நிலை சார்ந்தது  
சீமான் என்ற தனிமனிதன் சார்ந்ததல்ல. 

சீமான் மாறினால் தூற்றித்தான் எழுதுவோம் அதன் பொருள் நாம் மாறுகிறோம் என்பதல்ல 

1. சீமான் போலித் தேசியவாதி என்பது மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்வதல்ல. சீமானின் தகிடுதத்தோம், முன்னுக்கு பின் முரண்பாடான நிலைப்பாடு, இவற்றை வைத்துத்தான் கணிக்கிரேன். இல்லை, ஏமாறுவதுதான் எங்கள் குலவழக்கம். நெருப்பு சுடும் வரை, அது சுடும் என ஏற்க மாட்டோம் என்றால் - அது உங்கள் விதி.

2. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழன அடிவாங்குவதற்க்கு திராவிடக் கொள்கை காரணமா? அல்லது கையாலாகாத தமிழ்நாட்டு கட்சிகள் காரணமா? தமிழ்நாட்டின் தலைவராக, ஆட்சி அதிகாரத்தில் ஒரு போதும் அமராத பெரியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? திமுக, திக, அதிமுக எல்லாமே பெயரளவில் மட்டுமே பகுத்தறிவு கட்சிகள். ஈழம் என்ற பதம் இருக்கிறது என்பதற்க்காக ஈபிடிபி யை எப்படி ஈழப் போராளிகள் என்று ஏற்க முடியாதோ அப்படித்தான் இவர்களையும் பகுத்தறிவுவாதிகள் என ஏற்க முடியாது.

3. அண்ணாதுரை-எடப்பாடி வரையானோரை சீமான் விமர்சிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பெரியாரை, பகுத்தறிவு கொள்கையை கேள்வி கேட்கும் போதுதான் பிரச்சனை வருகிறது. இந்த 50 வருடத்துக்கு முந்தி செத்த கிழவனோடுதானா சீமான் இன்னும் அரசியல் செய்ய வேண்டும்?

4. இங்கேதான் சீமான் யாரின் B டீம் என்ற கேள்வி எழுகிறது. ஹிந்துவா தமிழ்நாட்டில் காலூன்றாமல் இதுவரை காத்து நிற்பது பகுத்தறிவுவாதமும், பெரியாருமே. ஆக ஹிந்துவா காலூன்ற, பெரியாரை அகற்ற வேண்டும். அதுக்கு ஒரே வழி? பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பது. பெரியாரை ஏற்று, அல்லது பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் அழகாக சீமானால் தமிழ் தேசிய அரசியல் செய்ய முடியும். அரை மலையாளி விஜையை தம்பியாக ஏற்கும் சீமானால் ஏன் பெரியாரை ஏற்க இயலவில்லை? ஏனென்றால் -அவருக்கு கொடுக்கப் பட்ட கொந்திராத்து அப்படி. ஹிந்துதுவாவின் நேரடி ஏஜெண்ட் ரஜனி, மறைமுக ஏஜெண்ட் சீமான். 

3 hours ago, விசுகு said:

உங்களுடைய கருத்துடன் முரண்பாடில்லை  சகோ

ஆனால்  எங்கே  முரண்படுகின்றோம்  என்றால்

தமிழ் தேசியத்தை  நீங்கள்  சீமானுக்குள்  குறுக்கி  பார்க்கின்றீர்கள்

தமிழ்த்தேசியத்தின்  வீச்சும் காலமும் மிக மிக  அதிகம்

அதன்  பாதையில்

நான் சீமானை  ஒரு  துரும்பாக  மட்டுமே  நினைக்கின்றேன்

தலைவர்  கூட 

தமிழீழப்போராட்டத்தில்  தான் ஒரு  துரும்பு  என்று மட்டுமே சொல்லி  வந்தார்

என்பதையும்  கவனிக்கணும் சகோ. 

இதிலும் முரண்பாடில்லை.

தமிழ் தேசியத்தின் வீச்சு நீண்டது, அதில் தன்னடக்கமாக பிரபா தன்னை துரும்பு என்றாலும், அவர் துரும்பல்ல, தூண்.

ஆனால் சீமான் தூணுமில்லை, துரும்புமில்லை, உள்ளே இருந்து அரிக்கும் துரு.

இந்த குருவுக்கு நீங்கள் வெள்ளையடித்து இரும்பு என்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இதிலும் முரண்பாடில்லை.

தமிழ் தேசியத்தின் வீச்சு நீண்டது, அதில் தன்னடக்கமாக பிரபா தன்னை துரும்பு என்றாலும், அவர் துரும்பல்ல, தூண்.

ஆனால் சீமான் தூணுமில்லை, துரும்புமில்லை, உள்ளே இருந்து அரிக்கும் துரு.

இந்த குருவுக்கு நீங்கள் வெள்ளையடித்து இரும்பு என்கிறீர்கள்.

இன்றைய எம் அவலநிலையில்

நட்டாற்றில் கிடப்பவனுக்கு  கிடைக்கும்  ஒரு துரும்பு சீமான்  அவ்வளவு  தான்

தமிழகத்தின் பட்டி  தொட்டியெங்கும் எம்மை கொண்டு செல்ல  யாராவது தேவை

இன்று  அதை சீமான்  செய்கிறார்

ஓரளவு சென்றடைந்தும்  உள்ளது

இன்று  திராவிட கட்சிகளுக்கு  பெரும் தலைவலியாக  தமிழ்த்தேசியம் வந்திருக்கிறது

எனவே இதை இன்று  செய்தவர்  சீமான்

அடுத்த அடுத்த காலங்களை காலம்  தான் தீர்மானிக்கும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எங்களை கொண்டு சேர்கிறார? அல்லது ஆமை ஓடு கதை சொல்லி தன்னை கொண்டு சேர்கிறாரா? 

சீமான் பெரியாரை நீக்கி வெற்றிடத்தையே உருவாக்குகிறார். அதில் சுலபமாக ஹிந்துவா பூர.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சீமான் எங்களை கொண்டு சேர்கிறார? அல்லது ஆமை ஓடு கதை சொல்லி தன்னை கொண்டு சேர்கிறாரா? 

சீமான் பெரியாரை நீக்கி வெற்றிடத்தையே உருவாக்குகிறார். அதில் சுலபமாக ஹிந்துவா பூர.

நான் அறிய சீமான் பெரியாரின் சீடர்தான்

அவர் எதிர்ப்பது  திராவிடத்தையே  தவிர பெரியாரை  அல்லவே

1 hour ago, விசுகு said:

தெருவில் பூரி  விற்கும் லாயக்குள்ளவனுக்கும் பதில் சொல்ல

அறிவுயீவிகள்  அல்லது பகுத்தறிவாளர்  என்று  தம்மை  தாமே  சொல்லிக்கொள்பவர்களால் 

முடியாதிருப்பதை  என்னவென்பது  சகோ...?

அறிவற்றவன்  எதையும் கேட்பான்

அறிவுள்ளவன்  அல்லது எதையும் பகுத்தறிந்தவனின்  பதிலாக  உங்கள்  பதில்  கூட  இல்லையே??

நான்  இப்படித்தான்

நீ  அதை ஏற்றுக்கொள்ளணும்  என்பது தான்  பகுத்தறிவா??

அதை பெரியாரே  மறுத்திருக்கும் போது

அவர் வழியை  நீங்கள்  பின்பற்றுவதாக  எப்படி  எடுத்துக்கொள்ளமுடியும்???

நான் கூற வந்த விடயம் வரலாற்றின் நீண்ட பக்கங்களை நுனிப்புல் மேயும் நபர்களிடம் கற்கக்கூடாது என்பதே ஆனால் நீங்கள் யார்  கேட்ட கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியவில்லை என்று எழுதாமல் பொதுப்படையாக விளங்கிக்கொள்ள முடியாதபடி  எழுதி உள்ளீர்கள். எமக்கு புரியாத விடயங்களை கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த கேள்விகளுக்கு அது எம்  நம்பிக்கை, எம் முன்னோர் காட்டிய வழி என்று மழுப்பாமல்  நியாயமான  அறிவு பூர்வமான ஜதார்த்தமான பதில் சொல்வதே சரியானது. எனது  பதிலில் குறிப்பாக  எது தவறானது என்பதை நீங்கள்  சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள உதவியக இருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. சீமான் போலித் தேசியவாதி என்பது மூக்குச் சாத்திரம் பார்த்துச் சொல்வதல்ல. சீமானின் தகிடுதத்தோம், முன்னுக்கு பின் முரண்பாடான நிலைப்பாடு, இவற்றை வைத்துத்தான் கணிக்கிரேன். இல்லை, ஏமாறுவதுதான் எங்கள் குலவழக்கம். நெருப்பு சுடும் வரை, அது சுடும் என ஏற்க மாட்டோம் என்றால் - அது உங்கள் விதி.

சீமானின் முன்னுக்கு பின் முரண்பாடு என்ன?
சீமான் அரசியலில் இறங்கி இன்று  10 வருடங்களுக்கு மேல் ஆகிறது இந்த தசாப்த காலத்தில் 
உள்ளூர் வெளியூர் அரசியல் நிலைமைகளில் எவ்ளவோ மாற்றம் வந்திருக்கிறது. அவற்றுக்கு ஏற்றால்போல் 
மாறுவதுதான் அரசியலில் வெற்றி கொடுக்கும். 
சீமான் முன்னுக்கு பின் முரண்பாடாக இருந்தால் கூட ........ நீங்கள் முன்னும் தூற்றிக்கொண்டுதான் இருந்தீர்கள் 
முரண்பாட்டுக்கு பின் என்று உங்களுக்கு ஒரு நிலை இல்லை. நீங்கள் காத்திருப்பது எப்போ சீமான் தவறுவான் 
நாங்கள் புத்திசாலிகள் என்று நிரூபித்து விடலாம் என்பதுக்கு. இந்த காத்தருப்பில் 10 வருடத்தை சீரழித்துவிட்டீர்கள்........  இதுதான் பிரபாகரன் விட்டுக்கொடுத்து போயிருந்தால் எப்போதோ இந்தியா விடிவு தந்திருக்கும் என்று 40 வருடம் கழித்தவர்களின் நிலை.இன்று 10 வருடம் புலிகள் இல்லாத காலத்தில் இந்தியா ஈழத்தமிழருக்கு அடிக்கும் ஆப்புகள்தான் மிகவும் அபாயமானது.  

2. கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழன அடிவாங்குவதற்க்கு திராவிடக் கொள்கை காரணமா? அல்லது கையாலாகாத தமிழ்நாட்டு கட்சிகள் காரணமா? தமிழ்நாட்டின் தலைவராக, ஆட்சி அதிகாரத்தில் ஒரு போதும் அமராத பெரியாரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? திமுக, திக, அதிமுக எல்லாமே பெயரளவில் மட்டுமே பகுத்தறிவு கட்சிகள். ஈழம் என்ற பதம் இருக்கிறது என்பதற்க்காக ஈபிடிபி யை எப்படி ஈழப் போராளிகள் என்று ஏற்க முடியாதோ அப்படித்தான் இவர்களையும் பகுத்தறிவுவாதிகள் என ஏற்க முடியாது.

சீமான் எங்கே பெரியாரை இழுக்கிறார்?
பெரியாரின் பெயரில்  மேடைபோட்டு .... பெரியார் மீதும் தமிழன் மீதும் மிளகாய் அரைக்கும் 
அரைவேக்காட்டு அரசியலைத்தான் சீமானும் சரி நாங்களும் சரி எதிர்க்கிறோம். 

பெரியாரின் பெயரால் மேடை போடுபவர்களால்தான் இந்த நிலைமை வந்தது என்பதை 
நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள் ........... இதைத்தான் சீமானும் சொல்கிறார். உங்களைப்போலவே நாங்களும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறோம் 

3. அண்ணாதுரை-எடப்பாடி வரையானோரை சீமான் விமர்சிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பெரியாரை, பகுத்தறிவு கொள்கையை கேள்வி கேட்கும் போதுதான் பிரச்சனை வருகிறது. இந்த 50 வருடத்துக்கு முந்தி செத்த கிழவனோடுதானா சீமான் இன்னும் அரசியல் செய்ய வேண்டும்?

பகுத்தறிவு கொள்கை   பெரியாரை சீமான் கேள்வி கேட்பது இல்லை 
10 வருடத்தை வீணடித்த நீங்கள்  ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்ல ஒன்று வேண்டும் என்று 
பற்றிப்பிடிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். 

4. இங்கேதான் சீமான் யாரின் B டீம் என்ற கேள்வி எழுகிறது. ஹிந்துவா தமிழ்நாட்டில் காலூன்றாமல் இதுவரை காத்து நிற்பது பகுத்தறிவுவாதமும், பெரியாருமே. ஆக ஹிந்துவா காலூன்ற, பெரியாரை அகற்ற வேண்டும். அதுக்கு ஒரே வழி? பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பது. பெரியாரை ஏற்று, அல்லது பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசாமல் அழகாக சீமானால் தமிழ் தேசிய அரசியல் செய்ய முடியும். அரை மலையாளி விஜையை தம்பியாக ஏற்கும் சீமானால் ஏன் பெரியாரை ஏற்க இயலவில்லை? ஏனென்றால் -அவருக்கு கொடுக்கப் பட்ட கொந்திராத்து அப்படி. ஹிந்துதுவாவின் நேரடி ஏஜெண்ட் ரஜனி, மறைமுக ஏஜெண்ட் சீமான். 

இந்துவா என்பது வெறும் மூடர்களுக்கானது 
இந்து மதம் என்பதே ஒரு சாக்கடை  அறிவில்லாதா ஒரு மூடர்கள் வாழும் இடங்களில் 
இது படரும் ......... கல்வியறிவில் மக்கள் முன்னேறும்போது அது விலகும். தென் இந்தியாவை பொறுத்தவரை 
ஒன்று கல்வியறிவு மற்றது பொருளாதார முன்னேற்றம் இவைதான் இந்துவாவை காலூன்றாமல் வைத்து இருக்கிறது. பெரியாரின் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இதுக்கு பலமாக அமைந்தது என்பதை யார் மறுக்கிறான்? பெரியாரின் பெயரில் மேடைபோடும் தி மு கதான் கடந்த 60 வருடமாக  சாதி கட்சிகளை உள்வாங்கி வளர்க்கிறது என்ற முரண்பாட்டைதான் சீமான் வெளிக்கொண்டு வருகிறார் பேசிக்கொண்டு இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடை சட்டம் மூலம் ஈழ போராட்ட செய்திகளை 
ஈழத்துடன் ஆனா தொடர்புகளை கிந்தியா மழுங்கடித்து வந்தது 

இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் புலிக்கொடியையும் பிரபாகரனையும் 
கொண்டு சேர்த்த பெருமை சீமானை மட்டுமே சாரும் இந்த நன்றி கடன் எனக்கு எப்போதும் இருக்கும். 

இன்று கூகிள் முகநூல் யூடுப் போன்றவை திட்டமிட்டு எமது போராட்ட வரலாறை அழித்து வருகிறது 
கடந்த 40 வருடத்தை நீங்கள் புலிகள் புறணி பாடி கழித்தீர்கள் ...... மிகுதி 10 வருடம் சீமான் புறணி பாடி கழித்தீர்கள். ஆதலால் போராட்டத்துக்கு யார் முண்டு கொடுக்கிறான் என்பதையும் .... யார் யார் நேரிடை மறைமுக எதிரி என்பதையும் அரியமாட்டீர்கள். இன்று இணையத்தில் எமது போராட்ட வரலாறுகளை  புலிகளின் வரலாறுகளை எழுதி காத்து வருபவர்கள் 90% தமிழகத்து இளைஞர்கள்தான் இவர்கள் யாவரும் சீமானின் உந்துதலில் உதித்தவர்கள்.
கடந்த 10 வருட ஈழ எழுத்துக்கள் 90 வீதமானவை விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று சொந்த வாழ்வுக்கு 
புலிவாந்தி எடுத்தவர்கள்தான் (சமகாலத்தில் நடந்தது என்பதை நினைவில் கொள்க). இராணுவ பிடி ஈழத்தில் கொஞ்சம் கொஞ்சம் தளர வீதிக்கு போனால் இனி மக்களே கல் எடுத்து எறிவார்கள் என்பதால் இப்போ கொஞ்சம்  அடங்கிவிட்டார்கள். 

உலகின் எந்த வடிவிலான அடக்குமுறைக்கும் நான் எதிரானவன் 
அதற்காக குரல் கொடுக்கும் எவனுக்கும் என் ஆதரவு இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நான் கூற வந்த விடயம் வரலாற்றின் நீண்ட பக்கங்களை நுனிப்புல் மேயும் நபர்களிடம் கற்கக்கூடாது என்பதே ஆனால் நீங்கள் யார்  கேட்ட கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியவில்லை என்று எழுதாமல் பொதுப்படையாக விளங்கிக்கொள்ள முடியாதபடி  எழுதி உள்ளீர்கள். எமக்கு புரியாத விடயங்களை கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த கேள்விகளுக்கு அது எம்  நம்பிக்கை, எம் முன்னோர் காட்டிய வழி என்று மழுப்பாமல்  நியாயமான  அறிவு பூர்வமான ஜதார்த்தமான பதில் சொல்வதே சரியானது. எனது  பதிலில் குறிப்பாக  எது தவறானது என்பதை நீங்கள்  சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள உதவியக இருக்கும்  

தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.

எந்த அடிப்படையில் இதை  நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்??

Edited by விசுகு

25 minutes ago, விசுகு said:

தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன் போன்றவர்களின் உளரல்கள் தான் சிலருக்கு வரலாற்று புத்தகம்.

எந்த அடிப்படையில் இதை  நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்??

அவரது இலுமினாட்டி  உளரல்களை கேட்டவன்  என்ற அடிப்படையில் எனது கருத்தை கூறினேன். அவரது பிதற்றல்களை சிலர் உண்மை என்று அப்பாவித்தனமாக நம்புவதாக எனக்கு பட்டதால் அந்த கருத தைக் கூறினேன். 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

அவரது இலுமினாட்டி  உளரல்களை கேட்டவன்  என்ற அடிப்படையில் எனது கருத்தை கூறினேன். அவரது பிதற்றல்களை சிலர் உண்மை என்று அப்பாவித்தனமாக நம்புவதாக எனக்கு பட்டதால் அந்த கருத தைக் கூறினேன். 

மிகத்தவறான

வருந்தத்தக்க கருத்து (தெருவில் பூரி விற்கும் லாயக்கு)

15 minutes ago, விசுகு said:

மிகத்தவறான

வருந்தத்தக்க கருத்து (தெருவில் பூரி விற்கும் லாயக்கு)

அவரது  வெறும் பிதற்றல்களை கேட்டதால்  அவரை கேலி செய்ய கூறப்பட்ட கருத்து. அது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். அது சரி புழுத்தறிவு என்று எதைக் குறிப்பிட்டீர்கள். ஓடும் தெளிவான நதி  போல் அல்லாமல் தேங்கிய குட்டையாக அறிவை வைத்திருக்கும் மூடத்தனங்களைத்தானே. 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

அவரது  வெறும் பிதற்றல்களை கேட்டதால்  அவரை கேலி செய்ய கூறப்பட்ட கருத்து. அது உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். அது சரி புழுத்தறிவு என்று எதைக் குறிப்பிட்டீர்கள். ஓடும் தெளிவான நதி  போல் அல்லாமல் தேங்கிய குட்டையாக அறிவை வைத்திருக்கும் மூடத்தனங்களைத்தானே. 

(புழுத்தறிவு )அது  திரியின் தலைப்பு

பகுத்தறிவும்

மூடத்தனங்களும்

நம்பிக்கைகளும்

காலம்  வயது  அனுபவம் வாழ்வின் தன்மை  சார்ந்து  மாறக்கூடியன

இதை  வரையறுப்பதும்

நான்  சொல்வதே பகுத்தறிவு  என்பது ஒரு  போதும் நிரந்தரம் கிடையாது

அதை  காலம் எனக்கு  கற்றுத்தந்து போல  உங்களுக்கும்  கற்றுத்தரும்

மேலும் ஒரு  தொழிலை  செய்பவருக்கு 

எந்த அறிவும் இருக்காது  என்பதையே  கண்டித்தேன்

எனக்கு  எந்த காயமும் இல்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தெருவில் பூரி விற்கும் லாயக்கு உள்ள  பாரிசாலன்

டீ வித்த மோடிதான் இப்போதைய இந்திய பிரதமர். 

இன்றைய உலகில்  தெருவில் பூரி விற்க தகுதி உடையவனும் 
சமூக நீதி   சமூக பொருளாதார பின்னடைவு  போன்ற அறிவுகள் 
அவனின் பூரி வியாபாரத்த்தில் இருந்து கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் 

மற்றவர்களை காட்டிலும் அவனுடைய தற்போதைய சமூக பார்வை என்பது சரியானதாக இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.