நொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு

election-commision-300x200.jpg

சிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நொவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதன்போதே, நொவம்பர் 15ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், அதிபர் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களிடம் தெரிவித்துள்ளது.

எனினும், நொவம்பர் 15ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/09/18/news/40082