Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Niraj David

‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.
முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.
யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம்.
சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களில் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள்;, தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள்.. இவற்றின் நடுவே அன்று நான் பார்த்த அதே தாழ்மையுடன் அந்தக் குயிலின்பன்.
எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன்தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கியபடி சிரித்துக்கொண்டு நிற்கும் குயிலின்பன் பலருக்கு ஒரு நல்ல உதாரணம்.
எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி, குயிலின்பன் போன்ற பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும்;; கரனுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
(யாழ்ப்பாணம் செல்றும் உறவுகள் முடிந்தால் ஒருதரம் கோப்பாயில் உள்ள crafttary தொழிற்சாலைக்கும் சென்று வாருங்கள்: ஒரு போராளியின் ஓர்மத்தைக் கண்ணாரக் கண்டு ரசிக்கலாம்)

70888675_10220790901906285_8603501199687

70655696_10220790899746231_1767587459887

71181934_10220790898466199_8517860123035

70778029_10220790892146041_5307418558001

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
ஆனாலும் ஆங்கிலத்தில் பெயர் வைத்தது கொஞ்சம் நெருடலாக உள்ளது.

ஒருவேளை வெளிநாட்டினரைக் கவரவோ?

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ....பாராட்டுக்கள் குயின்பன் & கரண்.பொதுவாக தென்னிலங்கை பக்கம்தான் இதுபோன்ற கடைகள் இருக்கும்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

பனைக்குள்ளும்...தென்னைக்குள்ளும்...புதைந்திருக்கும்....பாரிய பொருளாதாரத்தின்...ஒரு பகுதியை வெளிக்காட்டியுள்ளீர்கள்...!

அதனை ஏன் ஆதித்தமிழன் 'கற்பகதரு' என்றழைத்தான் என்று இப்போது தான் புரிகின்றது.!

வாழ்த்துக்களும்....பாராட்டுக்களும்..!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்த பொழுது இந்த கைப்பணி வளாகத்திற்கு சென்றிருந்தேன்.. அழகான கைவினைப்பொருட்களை சிரட்டையில் செய்கிறார்கள். இவர்களது விற்பனை நிலையம் நல்லூர் கோவிலின் முன்வீதியிலும் உள்ளது.

இவர்களை ஊக்குவிக்க வேண்டியது எங்களின் கடமையும் ஆகும்.

“வாணிப உலகம்”பகுதியில் இதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் எழுதியிருந்தேன்..

——————————————————————

Crafttary - கைப்பணி வளாகம்..

By பிரபா சிதம்பரநாதன்,  July 24 in வாணிப உலகம்

2-E12-DC39-8-EF4-4-D68-9-C8-F-05-EB96-E9

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

2-E08863-B-AC84-406-B-884-A-569270-B338-

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை கட்டாயம் போவேன். 

இதை முடிந்தளவு வட்ஸாப் இதர செயலிகளிலும் பகிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

70778029_10220790892146041_5307418558001

இந்த படத்தில் நிற்கும் இருவர் அலுவலகத்துக்கு போறவர்கள் போல கை முட்ட சட்டை போட்டு சப்பாத்துடன் நிற்கிறார்கள்.
அது தவறில்லை.ஆனாலும் எப்படி இவர்களால் தாங்க முடியுது?

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு போயிருந்த பொழுது இந்த கைப்பணி வளாகத்திற்கு சென்றிருந்தேன்.. அழகான கைவினைப்பொருட்களை சிரட்டையில் செய்கிறார்கள். இவர்களது விற்பனை நிலையம் நல்லூர் கோவிலின் முன்வீதியிலும் உள்ளது.

இவர்களை ஊக்குவிக்க வேண்டியது எங்களின் கடமையும் ஆகும்.

“வாணிப உலகம்”பகுதியில் இதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம் எழுதியிருந்தேன்..

——————————————————————

Crafttary - கைப்பணி வளாகம்..

By பிரபா சிதம்பரநாதன்,  July 24 in வாணிப உலகம்

2-E12-DC39-8-EF4-4-D68-9-C8-F-05-EB96-E9

உங்கள் இணைப்பையும் முன்னர் பார்த்திருந்தேன்.இணைப்புக்கு நன்றி.

அடுத்த வருடம் பேரப்பிள்ளைகள் புதிதாகப் பிறக்கவில்லை என்றால் போகும் எண்ணம்.போனால் நிச்சயம் போவேன்.

நுணாவுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

அடுத்தமுறை கட்டாயம் போவேன். 

இதை முடிந்தளவு வட்ஸாப் இதர செயலிகளிலும் பகிருங்கள்.

உண்மைதான்.. 

அதே போல கீழே உள்ளவாறு மரத்திலோ இல்லை சிரட்டையிலோ “ அ, ஆ “ எழுத்துக்களுடன் தமிழ் சொற்களையும் சேர்த்து சுட்டிகள் போல செய்து முன்பள்ளி மாணவர்களுக்கு தமிழை கற்றுக்கொடுக்கும் ஒரு வித்தியாசமான வழியாக இருக்கும்.. 

இவர்களிடம் கேட்டால் செய்து தருவார்கள். இதே போல இல்லாவிட்டாலும் கூட, ஓரளவிற்கு இதே போல செய்யக்கூடும்

8-F37-A70-E-B0-C3-4-C14-9360-BFC9-CEB6-D

7-DBAF711-59-A1-4073-94-E7-700-FF91-F278

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

70778029_10220790892146041_5307418558001

இந்த படத்தில் நிற்கும் இருவர் அலுவலகத்துக்கு போறவர்கள் போல கை முட்ட சட்டை போட்டு சப்பாத்துடன் நிற்கிறார்கள்.
அது தவறில்லை.ஆனாலும் எப்படி இவர்களால் தாங்க முடியுது?

உங்கள் இணைப்பையும் முன்னர் பார்த்திருந்தேன்.இணைப்புக்கு நன்றி.

அடுத்த வருடம் பேரப்பிள்ளைகள் புதிதாகப் பிறக்கவில்லை என்றால் போகும் எண்ணம்.போனால் நிச்சயம் போவேன்.

நுணாவுக்கும் நன்றி.

நடுவில் நிற்பவர் ஐபிசி நிராஜ் டேவிட்.

குயிலின்பன் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுபாளர் அல்லவா? கறுப்பு டீ சேர்ட்டில் நிற்பவர் அவராக இருக்க கூடும். முன்பு சீருடையில் படங்கள் கண்டுள்ளேன் இப்போ மட்டுக்கட்ட முடியவில்லை இடது புறம் முழுகைச் சட்டையில் நிற்பவர் யாரெனத் தெரியவில்லை.

நாங்களும் பள்ளிகூடம் போகும் நாளில் முழுக் கழுசான், முழுகைச்சட்டை, சப்பாத்து எல்லாம் போட்டுத்தானே போனோம்?

இப்போ இங்கே பழகிவிட்டு, மீள அங்கே போகும் போதுதான் கஸ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு பழகி இருக்கும். 

ஆனால் நிராஜ் இங்கே இருந்து போனவர்தான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விளக்கத்திற்கு நன்றி கோசான்.

  • 2 weeks later...

விலைதான் ரொம்ப ரொம்ப  அதிகம். வெள்ளைகளுக்கும் விலை அதிகமே.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விலைதான் ரொம்ப ரொம்ப  அதிகம். வெள்ளைகளுக்கும் விலை அதிகமே”

பொருட்கள் தரமாக இருந்தால் ஓரளவிற்கு விலையை கொடுக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதுமட்டுமல்ல, சுரேஷ் அவர்களுடன் கதைத்த பொழுது.. சிரட்டைகளை கூட பணம் கொடுத்தே வாங்கி இந்த கைவினைப்பொருட்களை தயாரிப்பதாக கூறினார்.

அத்துடன்.. வேலை செய்யபவர்களுக்கான் சம்பளம், வங்கிக்கடன், மற்றும் இயந்திரங்களைப் பாராமரிப்பதற்கான செலவுகள் என பல்வேறு செலவுகளையும் சமாளிக்க விலையை கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கலாம்.

அத்தோடு இவர்களை ஊக்குவிக்க வேண்டுமானால் விலையை பார்க்காமல் வாங்குவது ஒன்று. மற்றவர்களுக்கு இவர்களைப்பற்றி விளம்பரம் செய்வது இரண்டாவது. 

லக்சலவின் தரம் இதற்கு இப்பொழுது வரமாட்டாது ஆனால் இது எங்களில் ஒருவரது முயற்சி என்பதால் ஊக்குவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.