Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலி முகத்திடலில் பெரும் அளவில் திரண்ட சஜித் ஆதரவாளர்கள்!

Featured Replies

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது.

ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/66620

ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போதும் இடமளிக்காது, என் தந்தையை போலவே நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பேன்: சஜித்

நாட்டில் மீண்டும் ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு குடும்ப அரசியலுக்கு நாம் வழிகொடுக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சகோதரத்துவத்துடன் நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அழுத்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, மதவாதம்,ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு ஆட்சியை மீண்டும் ஒரு முறை நாட்டில் இடம்பெற நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. ரணசிங்க பிரேமதாச ஒரு போதும் மக்களிடையே  ஜாதி பேதம் பார்ப்பதில்லை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கி செலவதே அவரின் ஆசை,அவர் நாட்டிற்கு செய்த அபிவிருத்திகளை போல் தொடர்ந்தும் நாட்டிற்கு நான் அபிவிருத்திகளை செய்வேன்.

அத்தோடு, கோவில்கள்,பள்ளிகள் தேவாலயங்கள் என்பவற்றை உடைத்து பௌத்த மத தலங்கள் அமைப்பது பௌத்த மதத்திற்கு அவர்கள் செய்யும் முன்னேற்றம் என கருதுகின்றனர். மக்கள் எவரும் முட்டாள்கள் அல்ல நாட்டின் நிலைமையை அறிந்தவர்கள் மீண்டும் ஒரு கருப்பு ஜூலையை விரும்ப மாட்டார்கள்.

மோசடி அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு முறை வழி செய்யாமல் நல்லாட்சிக்கு வழி  செய்ய ஐ.தே.கவுடன் இணையுங்கள் என்றும் இதன் போது அவர் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/66615

  • தொடங்கியவர்

’முடியாது என்ற வார்த்தை எமது அகராதியில் இல்லை’

“ஜனாதிபதியான பின்னர் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் மக்களுக்கு சேவை செய்வேன்” என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம்  கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (10) பிற்பகல் ஆரம்பமாகியது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், “இதுவரை நடைபெற்றிருக்காதவகையில், பாரிய அபிவித்தி யுகமொன்றை ஆரம்பித்து வைத்து, அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் உருவாக்கும் புதிய இலங்கைக்குள் எந்த வகையிலும், திருட்டு, மோசடி, ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது. அரச சொத்துகளில் கைவைக்கப்பட மாட்டாது.

யாராவது நாட்டு சொத்துகளை கொள்ளையடிக்க எதிர்பார்த்திருந்தால், அவ்வாறானவர்கள் அரசாங்கத்தை அமைப்பதைவிட தற்போது வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றோம்.

எமது வரபிரசாதங்கள் தொடர்பில் நாங்கள் நினைப்பதில்லை. இல்லை, முடியாது என்ற வார்த்தைகளை எமது அகராதில் இருந்து அகற்றிவிடுவோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடியாது-என்ற-வார்த்தை-எமது-அகராதியில்-இல்லை/150-239829

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/caption_story/NDF-inaugural-rally/110-175949#.XZ8toFfu2jI.link

 

A A A
 

image_88830104f5.jpg

The inaugural election rally organized by the New Democratic Front (NDF) was launched at the Galle Face with the participation of UNP MPs and supporters.

image_f9370d1216.jpgimage_013945b604.jpgimage_461f3c2dbb.jpg

image_9549ab1d20.jpg

  • தொடங்கியவர்

‘சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது’

மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று காலி முகத்திடலில் நடைபெற்ற, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கோட்டா ஜனாதிபதியானால் பிரதமராக மஹிந்தவும் அமைச்ரவையில் பசில், நாமல் என குடும்ப ஆட்சி மீண்டும் வந்து விடும்.

எனவே வறிய மக்களின் வேதனைகளின் புரிந்துகொண்டு அவர்களின் வேதனைகளை போக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸவே என்றார்.

அத்துடன் நுவரெலியாவில்  அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவுடன் நாம் வெற்றிபெறுவோம் என்றும் துன்பபடும் மக்களின் வாக்கு பலத்துடன் சஜித்தை நாட்டின் தலைவராக்குவோம்' என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜித்தின்-வெற்றி-உறுதியாகிவிட்டது/175-239831

தேசிய பாதுகாப்பின் பொறுப்பு சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும் என இன்றைய கூட்டத்தில் சஜித் கூறியுள்ளார்.

மேலும் சில படங்கள்.

EGg6TlnXUAAJeF9?format=jpg&name=medium

EGg6UOxXUAAgm_-?format=jpg&name=medium

EGg6U88XUAEjK7e?format=jpg&name=medium

  • தொடங்கியவர்
28 minutes ago, Lara said:

தேசிய பாதுகாப்பின் பொறுப்பு சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும் என இன்றைய கூட்டத்தில் சஜித் கூறியுள்ளார்.

அப்படியானால் மகேஷ் சேனநாயக்காவிற்கு  ( ஏதாவது ஒரு நாட்டிற்கு தூதுவராக ? ) ?

16 minutes ago, ampanai said:

அப்படியானால் மகேஷ் சேனநாயக்காவிற்கு  ( ஏதாவது ஒரு நாட்டிற்கு தூதுவராக ? ) ?

மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் இறுதிப்பட்டியலில் 6 ஆவதாக அவர் பெயர் உள்ளது.

https://yarl.com/forum3/topic/232721-போட்டிக்-களத்தில்-உள்ள-35-வேட்பாளர்கள்-–-விலகிய-6-பேர்-விபரங்கள்/

எனவே அவருக்கு வேறு ஏதும் பதவிகள் வழங்கப்படுமா இல்லையா என்பதை தேர்தல் முடிந்த பின் தான் தெரிந்து கொள்ள முடியும். 😀

  • தொடங்கியவர்
19 minutes ago, Lara said:

மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் இறுதிப்பட்டியலில் 6 ஆவதாக அவர் பெயர் உள்ளது.

இவர் (மகேஷ்) நிறுத்தப்பட்டதன் நோக்கம் கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்கா (ஐ.தே.க. வினால்?) ? ஏனெனில், இருவரும் தம்மை நாட்டின் பாதுகாவலர்கள் என மக்களுக்கு கூறுகின்றனர். 

  • தொடங்கியவர்

"ஊழல் வாதிகளை கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயல்வோர் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும்" 

(நா.தனுஜா)

தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் பிரேமதாச இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான பொறுப்பை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கைகளிலேயே ஒப்படைப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனாநயக  முன்னணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.

புதிய சிந்தனை கொண்ட சர்வதேசத்தை வெற்றிகொள்ளக்கூடிய ஜனநாயகமும் சகல மக்களின் நலன்சார்ந்த  அரசாங்கத்தை  உருவாக்கும் எமது பயணத்தில் இந்த நாட்டு  மக்களின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்த நாடு மக்கள் புதிய பயணம் ஒன்றினை உருவாக்க பங்களிப்பு வழங்கும் வேளையில் இந்த நாட்டில் பாகுபாடின்றி  இந்த நாட்டில் சகல மக்களுக்கும் செய்நன்றியை வெளிப்படுத்துவேன். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது மக்களின் ஒட்டுமொத்த குரலுமாக நாம் வெற்றி பெறுவோம். இந்த புதிய யுகத்தில் புதிதாக சிந்திக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். உலகுடன் போட்டியிட்டு முதல்தர நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான புதிய சிந்தனை, புதிய தொழிநுட்பம், புதிய இலக்குகளுடன் நாம் முன்னோக்கி செல்லும் நாட்டினை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை பலப்படுத்தும் நாடாகவும், உற்பத்திகளை உருவாக்கும் நாடாகவும், ஏற்றுமது, இறக்குமதிகளை கொண்டு குறிப்பாக ஏற்றுமதியில் அதிக அக்கறை செலுத்தும் நாடாகவும், நாட்டுக்கு வளர்ச்சியை  உருவாக்கி சரியான இடத்தை மக்களுக்கு கொடுக்கும் நாடாகவும் , சகல  துறையுடனும் போட்டியிடும் விவசாய, மீனவ, நடுத்தர தொழிலாளர்களை  பலப்படுத்தும் நாட்டினை நாம் உருவாக்குவோம். 

எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஒரு குடும்பத்தின் தீர்மனத்தை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. இந்த நாட்டுக்காக சிந்திக்கும் எமது இளம் சமூகம், நாட்டுக்காக வேலைசெய்யும் தொழிலாளர், பெண்கள் என அனைவரையும்  சிந்தித்து அவர்களையே  இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்க வேண்டும். அதை விருத்து ஒரு குடும்பம் மட்டுமே இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்கக்கூடாது. 

இதுவரை காலமாக நாட்டில் இடம்பெறாத அபிவிருத்தியை எனது ஆட்சியில் செய்து முடிக்கவே நான் விரும்புகின்றேன். அதற்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்து வருகின்றேன். நாம் உருவாக்கும் புதிய இலங்கையில் ஊழல், மோசடிகள், குற்றங்கள் இருக்காது. அரச சொத்துக்களை சூறையாட இடமளிக்க மாட்டோம். 

தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். அதை விடுத்து ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை என்ற கோசத்தை எமது ஆட்சியில் நாம் இல்லாது செய்வோம். மக்கள் எம்மை ஆட்சிக்கு கொண்டுவருவதே அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுகொடுபோம் என்ற நம்பிக்கையில் தான். அவ்வாறு இருக்கையில் உங்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தலைமைத்துவத்தை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார். 

https://www.virakesari.lk/article/66639

2 hours ago, ampanai said:

இவர் (மகேஷ்) நிறுத்தப்பட்டதன் நோக்கம் கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்கா (ஐ.தே.க. வினால்?) ? ஏனெனில், இருவரும் தம்மை நாட்டின் பாதுகாவலர்கள் என மக்களுக்கு கூறுகின்றனர். 

2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றி பெற்று மகிந்த அரசு அமைந்ததும் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். பின் மகேஷ் சேனநாயக்கவும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார்.

மைத்திரி-ரணில் அரசு ஆட்சியமைத்ததும் இவர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். இவ்வருடம் ஓகஸ்ட் 18 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றவர். 

அடுத்த மாதம் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். எனவே கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்காக தான் களமிறங்குகிறார் என நினைக்கிறேன்.

சஜித் சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய கூறும் காரணம் இது.

EGhHFyvWkAAIUFS?format=jpg&name=large

Edited by Lara

  • தொடங்கியவர்
4 minutes ago, Lara said:

2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றி பெற்று மகிந்த அரசு அமைந்ததும் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். பின் மகேஷ் சேனநாயக்கவும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார்.

மைத்திரி-ரணில் அரசு ஆட்சியமைத்ததும் இவர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். இவ்வருடம் ஓகஸ்ட் 18 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றவர். 

அடுத்த மாதம் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். எனவே கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்காக தான் களமிறங்குகிறார் என நினைக்கிறேன்.

சஜித் சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய கூறும் காரணம் இது

நன்றிகள் லாரா.

ஆக, ஒரு பக்கம் கோத்தா மறு பக்கம் சரத் (சஜித்) .

கோத்தாவை ஆதரிக்காவிட்டால், சரத்தை ஆதரித்த மாதிரி முடியும். இரு பக்கமும் போர்க்குற்றவாளிகள் 😞  

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா சிங்கப்பூர் சென்று விட்டதாக செய்தி உள்ளது. உண்மை, பொய் தெரியாது.

அண்ணலும், இந்த நேரத்தி கோத்தா சிங்கப்பூர் செல்வதென்பது, முன்பே திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்க்காதது.


அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டம் எதிர்பார்த்த அளவு அலை மொதவில்லை என்றும், சஜித்தின் காலிமுகத்திடல் ஜனத்திரள்  அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டத்தை விட அதிகம் என்றும் சிங்களர்வார்கள் சொல்கிறார்கள்.  உண்மை, பொய் தெரியாது.

7 minutes ago, Kadancha said:

கோத்தா சிங்கப்பூர் சென்று விட்டதாக செய்தி உள்ளது. உண்மை, பொய் தெரியாது.

அண்ணலும், இந்த நேரத்தி கோத்தா சிங்கப்பூர் செல்வதென்பது, முன்பே திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்க்காதது.

செய்தி உண்மை.

கோத்தா 9 - 12 வரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு என முன்கூட்டியே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார்.

நேற்று கூட்டத்தில் கலந்து கொண்டதால் இன்று சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

22 minutes ago, Kadancha said:

அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டம் எதிர்பார்த்த அளவு அலை மொதவில்லை என்றும், சஜித்தின் காலிமுகத்திடல் ஜனத்திரள்  அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டத்தை விட அதிகம் என்றும் சிங்களர்வார்கள் சொல்கிறார்கள்.  உண்மை, பொய் தெரியாது.

சஜித்தின் கூட்டம் அலைமோதியது என்பது உண்மை. ஆனால் இக்கூட்டத்திற்கு ஐதேக பல திட்டமிடல்களை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஆனால் இக்கூட்டத்திற்கு ஐதேக பல திட்டமிடல்களை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

வேறு இடங்களில் இருந்து இலவசமாக பஸ் இல் அழைத்து வந்தார்கள் unp.

15 minutes ago, Kadancha said:

வேறு இடங்களில் இருந்து இலவசமாக பஸ் இல் அழைத்து வந்தார்கள் unp.

நன்றி. அவ்வாறு தான் நானும் கருதினேன்.

12 மணியளவில் 3000 பஸ்கள் வந்து சேர்ந்ததாம்.

ரவி கருணாநாயக்க கொழும்பிலிருந்து மட்டும் 30000 பேரை அழைத்து வந்தாராம்.

என்பது போன்ற செய்திகளை வாசித்தேன்.

Edited by Lara

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.