Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பிறெக்சிட்’ | ஜோன்சன் – ஐ.ஒன்றியம் உடன்படலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பிறெக்சிட்’ | ஜோன்சன் – ஐ.ஒன்றியம் உடன்படலாம்?

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜோன்சன் சமரசம்
download-3-4.jpg
பிரித்தானிய பிரதமர் போறிஸ் ஜோன்சன்

பிறெக்சிட் இழுபறி ஒருவாறு முடிவுக்கு வரும்போலிருக்கிறது. அயர்லாந்து எல்லை, சுங்கத் தீர்வை விடயங்களில் முடிவு எட்டமுடியாமல் இதுவரை இழுபறியிலிருந்த பிறெக்சிட் பிரதமர் ஜோன்சனின் பல விட்டுக்கொடுப்புகளின் பின்னர் ஒரு சுமுகமான நிலையை எட்டியிருக்கிறது.

பிரதமர் அலுவலகத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிமிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் வரைவு புதனன்று வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரிஷ் கடலை சுங்க எல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளை முன்னாள் பிரதமர் தெரேசா மே நிராகரித்திருந்தார். “எந்தவொரு பிரித்தானிய பிரதமரும் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என அவர் அப்போது கூறியிருந்தார். தற்போது பிரதமர் ஜோன்சன் இவ் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்கு விட்டுக்கொடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

வட அயர்லாந்து தொடர்ந்தும் பிரித்தாநிய சுங்க எல்லைக்குள் இருக்கவேண்டுமென்பதே பிறெகக்சிட் கடும் போக்காளரது பிடிவாதமாக இருக்கிறது. குறிப்பாக, ஜனநாயக இணைப்புக் கட்சி (Democratic Unionist Party (DUP)) மற்றும் ஐரோப்பிய ஆய்வுக் குழு (European Research Group) ஆகியன இவ்விடயத்தில் சமரசம் செய்ய மறுத்திருந்தன.

கடும்போக்காளரின் ஆலோசனையின்படி, வட அயர்லாந்து சுங்கத் தேவைகளுக்காக பிரித்தானியாவுடனும் இதர அரசியல், பாதுகாப்பு விடயங்களுக்காக அது ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இருக்கலாம் என ஒப்பந்தம் செய்யப்படவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு இணங்க மறுத்ததனால் சுங்க எல்லையை வட அயர்லாந்துக்கு வெளியே, ஐரிஷ் கடலில் இருக்கக்கூடியதாகச் சமரசமொன்றுக்கு ஜோன்சன் இணங்கியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. நாளி (புதன்) பிரதமர் அலுவலகம் இது பற்றிய அறிக்கையொன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://marumoli.com/பிறெக்சிட்-ஜோன்சன்-ஐ-ஒன்/?fbclid=IwAR37K-S8mp6FZNwejtOdZPynO7T1-oxA-XbMvJ68PmmCp_YxcmIAFbGqqy0

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

ஐரிஷ் கடலில் இருக்கக்கூடியதாகச் சமரசமொன்றுக்கு ஜோன்சன் இணங்கியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

இந்த செய்தியை கேட்டவுடன் விழுந்து கிடந்த பவுன்ஸ் பழைய நிலைக்கு வருகிறது கடைசியில் எதோ ஒரு சமரசத்துக்கு வருவினம் ஏனெனில் உலகை ஆள்வது பணம்தானே .

Edited by பெருமாள்

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும்.

பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இதுதொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகிறது.

ஆனால், இது நியாயமான மற்றும் இருதரப்புக்கும் சமமான ஒப்பந்தம் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜீன் கிளாட் ஜங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை பரிந்துரை செய்து அவர், ஐரோப்பிய சபை தலைவர் டொனால்ட் டஸ்கிற்கு எழுதிய கடிதத்தில், "பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால உறவை குறித்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

ஜீன் கிளாட் மற்றும் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் இருவருமே இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கும்படி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-50084210

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு அயர்லாந்து மக்கள் எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு கண்டனம் தெரிவித்து வடக்கு அயர்லாந்து மக்கள் தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தினர்.


ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்த மாத இறுதிக்குள் பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதனால் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாக உள்ள அயர்லாந்து குடியரசு இடையிலான எல்லைப் பிரச்சனை மீண்டும் உருவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் வடக்கு அயர்லாந்தின் வர்த்தகம், தொழில் மற்றும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, வடக்கு Lifford மற்றும் Strabane பகுதி மக்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீப்பந்தங்களுடன் எல்லையோர பாலம் அருகே திரண்ட மக்கள், பிரிட்டன் ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும், இதனால் அங்கு வசிக்கும் பலத்தரப்பட்ட மக்களிடையே மீண்டும் பிளவு ஏற்படும் எனவும் கூறினர்.

https://www.polimernews.com/dnews/85168/ஐரோப்பியஒன்றியத்திலிருந்துபிரிட்டன்-வெளியேறுவதற்குஅயர்லாந்து-மக்கள்எதிர்ப்பு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: one or more people, text and closeup
Tom Pride

How come no UK journalists have bothered to dig this out: @BorisJohnson saying previously he'd EAT his ID if he was ever asked to produce it.
He's just announced in the Queen's speech that ID will have to be produced in order to vote.
Journalists! Do. Your. Frigging. Job.
https://www.telegraph.co.uk/…/Ask-to-see-my-ID-card-and-Ill

மீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிட் ஒப்பந்தம் - போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை எம்பிக்கள் ஆதரித்தாலும், தான் தனது பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து அழுத்தம் கொடுப்பேன் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தனது "சிறந்த" ஒப்பந்தத்தை அடுத்த வாரம் செயல்படுத்த தேவையான சட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிமொழி எடுத்துள்ளார்.

இதுகுறித்த வாக்கெடுப்பின்போது, 322 பேர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு வடிவமைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தனர். தீர்மானத்துக்கு எதிராக 306 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து, போரிஸ் ஜான்சன் அக்டோபர் 31 க்கு மேல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் கேட்க வேண்டி இருக்கும்.

"அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டியது இங்கிலாந்து தான்" என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-50111885

 

 

நாடாளுமன்றம் சனிக்கிழமை அன்று கூடியது ஏன்?

கடந்த 37 ஆண்டுகளில் சனிக்கிழமை அன்று நாடாளுமன்றம் கூடியது, இதுவே முதல் முறை.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது ஒப்பந்தத்துக்கு ஆதரவாக எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்பார்த்தார். ஆனால், விவாதங்களுக்கு பிறகு, தனிப்பட்ட உறுப்பினர் ஒலிவர் லெட்வின் அறிமுகப்படுத்திய தீர்மானத்துக்கு ஆதரவாக எம்பிக்கள் வாக்களித்தனர்.

என்ன நடந்தாலும், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரட்டன் வெளியேறும் என்று அழுத்தமாக கூறி வந்த பிரதமருக்கு இந்தத் தோல்வி ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

பிரதமர் என்ன கூறுகிறார்?

இன்றைய வாக்கெடுப்பு தனக்கு மனவருத்தத்தை அளித்ததாக போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். சிறப்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் அடிப்படையில் அக்டோபர் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது நல்லது என்று தாம் இன்னும் நம்புவதாக அவர் கூறினார்.

"மேலும் இதனை தாமதமாக்க, நான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் விருப்பம் இருக்காது என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதமரின் பிரெக்ஸிட் உக்திக்கான எதிர்ப்பு இது என்றும், பிரெக்ஸிட்டை தாமதப்படுத்த அவர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.