Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The-Kalki-Monastery-Income-Tax-Searching.jpg

கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம்

கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களது கடவுச்சீட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக தேடிய போதும் அது கிடைக்கவில்லை. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதையடுத்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றலாமா என்று வருமானவரி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கல்கி பகவான் அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் உயிருடன் உள்ளார்களா அல்லது இறந்து விட்டார்களா என்று பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கல்கி பகவான் பக்தர்களை சந்திக்கவில்லை என்று தெரிவித்தனர். எனவே கல்கி பகவான், அவரது மனைவி ஆகியோர் எங்கு உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயற்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து ஆச்சிரமங்களை தொடங்கினார்.

கல்கி ஆச்சிரமங்களுக்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும், வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் கல்கி விஜயகுமாரின் மகன் பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கல்கி ஆச்சிரமங்களில் அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ஆம் திகதி சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆச்சிரமங்கள் உட்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

4ஆவது நாளாக நேற்றும் கல்கி ஆச்சிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில் ரூ.43 கோடியே 90 இலட்சம் ரூபாய் பணமும் ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டொலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர கற்கள், மேலும் கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கல்கி பகவான் குழுமம் சார்பில் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கல்கி பகவான் விஜயகுமார் ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வசிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சோதனையின் போது அவர் அங்கு இல்லை. ஆச்சிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆச்சிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் கல்கி பகவான் விஜயகுமாரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் கல்கி விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும் தெரியவில்லை. அவரை பார்த்து 2 ஆண்டுகள் ஆனதாக ஆச்சிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/கல்கி-ஆச்சிரமங்களில்-வரு/

10 வது அவதாரம் தப்பியோட்டமா? 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

கல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், தங்க வைர நகைகள், ரொக்கப்பணம் குறித்து வருமான வரித்துறை அறிவிப்பு

 

அறிவிப்பு

kalki-bagavan-house-companies-raid-income-tax-department-announces-receipts-gold-diamond-jewelery-and-cash-and-cash-bill-worth-rs-409-crore-seized  

கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவுப்பெற்றது. இதுவரை நடத்திய சோதனையில் ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள் , பல கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம், அமெரிக்க டாலர்கள், தங்க வைர நகைகள், ஹவாலா பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட, பணம் குறித்த விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

சித்தூர் அருகே நத்தம் என்னும் இடத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு தியான வகுப்புகள் கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.

முதலீடுகள், பங்குதாரர்கள் குறித்தும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நிறைவுற்றதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

கல்கி சாமியாரின் மகன் வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வருமானவரித்துறை 5 நாள் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், கணக்கில் மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.

ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனங்களின் வட்டி வருவாயான ரூ.90 கோடியை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியார் குடும்பம் வெளிநாடுகளில் சொத்துக்குவித்துள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/521419-kalki-bagavan-house-companies-raid-income-tax-department-announces-receipts-gold-diamond-jewelery-and-cash-and-cash-bill-worth-rs-409-crore-seized-1.html

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

10 வது அவதாரம் தப்பியோட்டமா? 😂😂

புடிச்சி உள்ள போடுங்க சார்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புடிச்சி உள்ள போடுங்க சார்🤣

ஆமா சார்! இப்பிடியான கள்ளர் கும்பல் கம்னாட்டி சனங்களை உள்ள தூக்கி போடணும் சார்tw_glasses:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kalki.jpg

கல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறை சோதனை: 90 கிலோ தங்க நகைகள்44 கோடி இந்திய ரூபாய் பறிமுதல்

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் 800 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, அங்கிருந்து 90 கிலோ தங்க நகைகள்44 கோடி இந்திய ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம்,  சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயற்படுகிறது.

1980 ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் ஆரம்பித்தார். அப்போது அவர் தனது பெயரை கல்கி பகவான் என மாற்றினார். இந்த ஆசிரமத்துக்கு ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.

அதேபோன்று  சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமம் வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கட்டுமானம்,  விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆசிரம நிர்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும்  நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் வருமானவரித் துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில், அந்த ஆசிரமத்தின் மீது கூறப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சித்தூர் வரதய்யபாலத்திலுள்ள அந்த ஆசிரமத்தின் தலைமையிடம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 400 பேர் கடந்த 16ஆம் திகதி ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையில், இதுவரை அந்த ஆசிரமம், 800 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது.

அதேபோல கணக்கில் வராத 44 கோடி இந்தியப் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 28 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள், 5 கோடி இந்தியப் ரூபாய் மதிப்புள்ள வைர நகை, 20 கோடி வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வெல்னஸ் குழுமம் தனது பெயரிலும், பினாமி பெயரிலும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பதும், டுபாய்,  சிங்கப்பூர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 100 கோடி இந்தியப் ரூபாய்  முதலீடு செய்திருப்பதும் வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.  வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக வருமானவரித் துறையினர், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவர் மனைவி ப்ரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வருமான வரித் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சோதனையில் கிடைத்த பணம், நகை, ஆவணங்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிருஷ்ணா, ப்ரீத்தா மற்றும் வெல்னஸ் குழும நிர்வாகிகளுக்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு முன்னிலையாவார்கள் என வருமானவரித் துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://athavannews.com/கல்கி-ஆசிரமத்தில்-வருமான/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தங்க உருண்டை"  சிம்மாசனம் - கல்கி ஆஸ்ரமத்தின் பின்னணி!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கல்கி பகவான் குடும்பத்தினர் மீது அமுலாக்கத்துறை வழக்கு பதிவு

October 25, 2019

kalki3.jpg?resize=800%2C533

 

கல்கி பகவான் ஆசிரமத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வெளிநாட்டு பணம் மற்றும் வெளிநாட்டில் முதலீடு செய்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து கல்கி பகவான் குடும்பத்தினர் மீது அமுலாக்கத் துறை நேரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆந்திராவில் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் உட்பட பல இடங்களில் செயல்பட்டுவரும் கல்கி ஆசிரமத்தின் கிளைகளில் கடந்த வாரம் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையில், 800 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 90 கிலோ தங்கம், கணக்கில் காட்டப்படாத 4,000 ஏக்கர் நிலம், துபாய், ஆபிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஹவாலா மூலம் 100 கோடி ரூபா முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவை மத்திய அமுலாக்கத் துறையின்கீழ் வருவதால் அமுலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம், 1999இன் கீழ் கல்கி குடும்பத்தினர் மீது அமுலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்கி ஆசிரமத்தின் கணக்காளர் உள்ளிட்டோரிடம் அமுலாக்கத் துறை தனது விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #கல்கி  #குடும்பத்தினர் #அமுலாக்கத்துறை #வழக்கு   #ஆசிரமம்

 

 

http://globaltamilnews.net/2019/132299/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.