Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபாவளி பிறந்த கதை

Featured Replies

2 minutes ago, மாங்குயில் said:

உலகில் உள்ள எந்த இன, மத மக்களும், வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைக்கவில்லை.

மக்கள் எதை விரும்புகிறார்களோ, அவைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்தி பழகிக்கொள்கிறார்கள்.

மேலைத்தேய  மக்களோ, கீழைத்தேய மக்களோ வாழ்க்கையை உணர்ந்துதான் வாழ்கிறார்கள்.

Meditation, Yoga போன்றவற்றை இலங்கை, இந்தியாவில் உள்ள இந்து மக்களே அதை பின்பற்றுவதில்லை.

மேலைத்தேய மக்கள்,  Meditation, Yoga இன்மையால்,  வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைத்து விட்டார்கள் என்று சுருக்கிக்கொள்வது, நகைப்பிற்கு இடமானது.  

ஒருவரது அல்லது ஒரு மதத்தின், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளை மேலைத்தேய மக்கள் பின்பற்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டவர்கள் என்று சொல்வது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

நான் கண்ட, படித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளேன். 

அதைத் தெளிவாக வாசிக்காமல் எனது கருத்தை மறுக்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ எழுதுகிறீர்கள். உங்கள் விதண்டாவாதத்தை முன்னர் ஒரு திரியில் அவதானித்துள்ளேன். எனவே உங்கள் கருத்தை நான் கருத்தெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, மல்லிகை வாசம் said:

25 minutes ago, மல்லிகை வாசம் said:

நமது கடின உழைப்பு, சில குறிப்பிட்ட துறைகளில் எம்மவர்களின் வேலைத் திறன் போன்றவற்றைக் கூறலாம்.

வெள்ளையனுக்கு, ஆசிய நாட்டினரை எப்படியெல்லாம் பிழிந்து வேலை எடுக்கலாம் என்று கற்று அனுபவ ரீதியாக  தேர்ந்தவர்கள்.

கடின உழைப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை.

1 minute ago, மல்லிகை வாசம் said:

நான் கண்ட, படித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளேன். 

அதைத் தெளிவாக வாசிக்காமல் எனது கருத்தை மறுக்க வேண்டும் என்பதற்காகவே ஏதோ எழுதுகிறீர்கள். உங்கள் விதண்டாவாதத்தை முன்னர் ஒரு திரியில் அவதானித்துள்ளேன். எனவே உங்கள் கருத்தை நான் கருத்தெடுக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். நன்றி

நீங்கள் எழுவது பெரும்பாலும் எனக்கு விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது. 

அந்தப் புத்தகத்தில் இப்படி இருக்கிறது, இந்தப் புத்தகத்தில் இப்படியெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறீர்களேயொழிய, என்ன இருக்கிறது என்று ஒருபோதும் சொன்னதில்லை.

உங்களது எல்லா எழுத்துக்களிலும், அதே இராகம், அதே பல்லவிதான். 

புதிதாக ஒன்றுமில்லை.

8 minutes ago, மாங்குயில் said:

அந்தப் புத்தகத்தில் இப்படி இருக்கிறது, இந்தப் புத்தகத்தில் இப்படியெல்லாம் இருக்கிறது என்று சொல்கிறீர்களேயொழிய, என்ன இருக்கிறது என்று ஒருபோதும் சொன்னதில்லை.

சுருக்கமாகச் சொல்லிவிட்டு, புத்தகத்தின் பெயர் சொன்னால் போதுமானது. இங்கு வகுப்பெடுக்க எனக்கு நேரமில்லை. அறிவுத் தேடல் உண்மையில் இருந்தால் போய் வாசிக்கலாம். தவிரவும், அந்தப் பதிலை உங்களுக்கு எழுதவில்லை. தெளிவாக quote பண்ணி எழுதியுள்ளேன் உரியவருக்கு. 

உங்களுக்கு அப் புத்தகம் பயன்படாவிட்டாலும் ஏனையோருக்குப் பயன்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

உங்களின் புத்தகம் யாருக்கும் பயனளிக்காது. 

புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் ஒன்றுமே அறியாமல், அதை மேற்கோள் காட்டிப் பேசுவது பயனற்றது. 

13 minutes ago, மாங்குயில் said:

உங்களது எல்லா எழுத்துக்களிலும், அதே இராகம், அதே பல்லவிதான். 

புதிதாக ஒன்றுமில்லை.

இங்கே எனது மத நம்பிக்கை பற்றி விமர்சிப்பவர்கள் ஒரே பாட்டைப் பாடினால் அதே ராகத்தில், அதே பல்லவியில் தான் பாட முடியும். 

அவர்கள் தங்கள் பாட்டை சரியான முறையில் மாற்றட்டும், நான் என் பாட்டில் போய்விடுகிறேன். 

Just now, மாங்குயில் said:

உங்களின் புத்தகம் யாருக்கும் பயனளிக்காது. 

புத்தகத்தில் உள்ள உள்ளடக்கம் ஒன்றுமே அறியாமல், அதை மேற்கோள் காட்டிப் பேசுவது பயனற்றது. 

அது எனது புத்தகமும் இல்லை.

தவிரவும் மற்றவர்களுக்குப் பயனளிக்காது என்று நீங்கள் முடிவெடுக்கும் உரிமையை அவர்கள் உங்களுக்குத் தரவில்லை. எனவே உங்களுக்காக மட்டும் பேசப் பழகுங்கள். 

இப்படிப்பட்ட பதில்களை எழுதி உங்களின் தரத்தைப் பொது வெளியில் தாழ்த்திக் கொள்கிறீர்களே. சரி, அது உங்கள் இஷ்டம். 

உங்களுக்குப் பதில் எழுதுவதைவிட காய்ந்த புல்லுக்கு நீர் ஊற்றுவதே சிறந்தது. 

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

இங்கே எனது மத நம்பிக்கை பற்றி விமர்சிப்பவர்கள் ஒரே பாட்டைப் பாடினால் அதே ராகத்தில், அதே பல்லவியில் தான் பாட முடியும். 

அவர்கள் தங்கள் பாட்டை சரியான முறையில் மாற்றட்டும், நான் என் பாட்டில் போய்விடுகிறேன். 

உங்கள் நம்பிக்கையே பிழையானது என்றுதான், பெரும்பாலான தமிழர்கள் நாத்திகத்திற்கும், கிறிஸ்தவர்களாகவும் மாறி விட்டார்கள்.  மாறிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதைத் தடுத்து நிறுத்த விரும்பினால்,  இந்து மதம் என்றால் என்ன, அது எதைச்  சொல்கிறது என்று இந்து மத  கிரந்தங்களின்  மூலம் நிரூபிக்காது, அந்த புத்தகத்தை பார், இந்த புத்தகத்தைப் பார் என்று வெறுமனே கரைவதினால், மக்கள் இந்து மதத்தின்மீது பற்றில்லாமல், வேறு மதங்களை நாடிச் செல்வர். 

இதுதான் நடக்கிறது.   நீங்கள் பந்தி பந்தியாக எழுதும் எதுவும் மக்களை சென்றடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:
15 minutes ago, மல்லிகை வாசம் said:

மேலை நாட்டு self-help புத்தகங்களை வாசித்த போது எவ்வளவு தூரம் அவர்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தொலைத்திருப்பர் என்று புரிந்தது (உதாரணமாக The 7 Habits of Highly Effective People என்ற புத்தகம்).

இது மேற்குலகில் எழுதப்பட்ட புத்தகம் என்று நினைக்கிறேன்.

இதை வாசித்த, வாசிக்கும், வாசிக்கப்போகும் மேற்குலகு மக்கள், அனைவரும் தாம் வாழ்க்கையின் அர்த்தத்தை   தொலைத்துவிட்டவர்கள் என்று கவலைப்படுபவர்களா?

மேற்படி புத்தகத்தை எழுதியவனே,   தான் வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்துவிட்டவன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

நீங்களோ தன்னிச்சையாக தனது சுய கருத்தைக் கூறி, நீங்களே சுய திருப்தி அடைகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மாங்குயில் said:

இந்த வீடியோவில் இருப்பவர்கள், கழிசடைகளா?

இல்லை உழைப்போரின் உழைப்பைச் சுறண்டி வாழ்பவர்கள். இந்த வீடியோவிலேயே அதனை வெளிப்படுத்துகிறார்கள். கழிசடைகளை விடவும் கீழானவர்கள் எனக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

உள்ளுக்குள் பலா  சுளை இருப்பின் நீங்கள் சொல்ல வரும் இந்த உவமானம் பொருத்தமாக இருக்கலாம் 
ஆனால் .. அங்கு தும்புகூட இல்லை ... இதுக்குள் சுளைக்கு எங்கு போறது?

அதுதான் அடுத்தவன் மதம் மாறி போகிறான் ...
அவனையும் விடுகிறார்கள் இல்லை பிடித்து இழுக்கிறராகிறார்கள். 
இது என்ன கேவலம் என்றுதான் புரியுதில்லை ....

கேட்டா எல்லாம் இருக்கு இருக்கு என்கிறார்கள் ...
எடுத்து விடுங்கோ என்றால் ...........
அடுத்தவனின் புறணி பாடுதலுடன்தான் வருவார்கள். 

****

Edited by நியானி
மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன

  • தொடங்கியவர்

*****

 இந்து கோவில்களில் பார்பனர்கள் பக்தர்களுக்கு காதில்  பூ வைக்க கொடுப்பது, “ஏமாளிகளா உங்களை எல்லாம் பகவான காட்டி  எப்படி எல்லாம்  ஏமாதிற்றம்  பார்தீர்களா” என்று மறைமுகமாக கூறும் தத்துவமோ? 

Edited by நியானி
மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன

3 hours ago, tulpen said:

இந்து கோவில்களில் பார்பனர்கள் பக்தர்களுக்கு காதில்  பூ வைக்க கொடுப்பது, “ஏமாளிகளா உங்களை எல்லாம் பகவான காட்டி  எப்படி எல்லாம்  ஏமாதிற்றம்  பார்தீர்களா” என்று மறைமுகமாக கூறும் தத்துவமோ? 

இவ்வாறு பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் நாத்திகர்கள் எம் மதம் மீது வெறுப்பை வளர்க்கும் நோக்கில் உருவாக்கும் புதுப்புதுத் 'தத்துவங்கள்' தான் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கிறன. உங்கள் இந்தக் கருத்தே இதற்கு நல்ல சான்றாக அமைகிறது.

யார் காதில் நீங்கள் எல்லாம் பூ சுற்ற நினைக்கிறீர்கள்? 🤣

  • தொடங்கியவர்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

அட நான் நினைத்தேன் பூமியை இரணியாட்சகன்  எப்படி கடலுக்குள் ஒழித்தான்? கடல் எங்கே இருந்தது?   திரேதாயுகம்  என்று  கூப்பட்ட யுகத்தில் பூமாதேவிக்கு பிறந்த நரகாசுரன் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வந்ததாக கூறப்பட்ட துவாரபர யுகத்தில் வதம் செய்யப்பட்டது எப்படி?  என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லப்போகின்றீர்கள்  என்று. 

பணவீக்கம் எப்படி உருவாகிறது என்று கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் கூறவேண்டுமேயன்றி  நான்  வின்சர் தியேட்டரில் படம் பார்தேன். றீகல் தியேட்டரில் செக்கன்ட ஷோ பார்தேன்  என்று ஏதோவெல்லாம்  பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இறுதி வரியில்  ஆகவே பணவீக்கமானது  இப்படித்தான் உருவாகிறது என்று எழுதக்கூடாது. 

10 minutes ago, tulpen said:

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இந்து மதத்தின் மீது சேறு பூசும் நோக்கில் கருத்துக்களை எழுதும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கள் போன்றவர்களுக்கு இல்லை. முன்பு பல திரிகளில் என் போன்றவர்கள் விளக்கம் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்யும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் தர வேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்கும் நாத்திகர்கள் எம் மதம் மீது வெறுப்பை வளர்க்கும் நோக்கில் உருவாக்கும் புதுப்புதுத் 'தத்துவங்கள்' தான் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைக்கிறன. உங்கள் இந்தக் கருத்தே இதற்கு நல்ல சான்றாக அமைகிறது.

யார் காதில் நீங்கள் எல்லாம் பூ சுற்ற நினைக்கிறீர்கள்? 🤣

உங்களிடம் பதில் இல்லாதபோது, பிறரின் காதில் சம்பந்தமில்லாமல் பந்தி பந்தியாக எழுதி, பூச்சுற்றுகிறீர்கள். இதுதான் இங்கு நடக்கிறது.

கிறிஸ்தவம், நாத்திகம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதத்தில் உள்ளவர்கள், உங்களை பூச்சூட்ட வந்தால், உங்கள் மதத்தில் இருக்கும் கொள்கை, கோட்பாட்டை இந்து மதக் கிரந்தங்களில் இருந்தே எடுத்துக் காட்டி பதிலடி கொடுங்கள்.

அப்போது, யாரும் உங்களை நெருங்கமாட்டார்கள்.

ஆனால்,  நீங்கள் ஒருபோதும் இதைச் செய்ய மாட்டீர்கள்.

17 minutes ago, tulpen said:

பணவீக்கம் எப்படி உருவாகிறது என்று கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக பதில் கூறவேண்டுமேயன்றி  நான்  வின்சர் தியேட்டரில் படம் பார்தேன். றீகல் தியேட்டரில் செக்கன்ட ஷோ பார்தேன்  என்று ஏதோவெல்லாம்  பக்கம் பக்கமாக எழுதிவிட்டு இறுதி வரியில்  ஆகவே பணவீக்கமானது  இப்படித்தான் உருவாகிறது என்று எழுதக்கூடாது. 

நீங்கள் தான் இப்படிச் சோடித்து எழுதுவதில் வல்லவர்கள் என்பது நாமெல்லாம் அறிந்ததே. 

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இந்து மதத்தின் மீது சேறு பூசும் நோக்கில் கருத்துக்களை எழுதும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கள் போன்றவர்களுக்கு இல்லை. 

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கே பூச்சியமாக இருக்கிறது. 

பிற மதத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தெளிவான புரிதல் இருக்கும்?

1 minute ago, மாங்குயில் said:

உங்களிடம் பதில் இல்லாதபோது, பிறரின் காதில் சம்பந்தமில்லாமல் பந்தி பந்தியாக எழுதி, பூச்சுற்றுகிறீர்கள். இதுதான் இங்கு நடக்கிறது.

கிறிஸ்தவம், நாத்திகம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதத்தில் உள்ளவர்கள், உங்களை பூச்சூட்ட வந்தால், உங்கள் மதத்தில் இருக்கும் கொள்கை, கோட்பாட்டை இந்து மதக் கிரந்தங்களில் இருந்தே எடுத்துக் காட்டி பதிலடி கொடுங்கள்.

அப்போது, யாரும் உங்களை நெருங்கமாட்டார்கள்.

ஆனால்,  நீங்கள் ஒருபோதும் இதைச் செய்ய மாட்டீர்கள்.

உங்களுக்கான பதில்கள் ஏற்கனவே தரப்பட்டன. அத்துடன் உங்கள் போன்றவர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்கும் உத்தேசமும் எனக்கு இல்லை.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

உங்களுக்கான பதில்கள் ஏற்கனவே தரப்பட்டன. அத்துடன் உங்கள் போன்றவர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்கும் உத்தேசமும் எனக்கு இல்லை.

நன்றி

உங்களின் வழமையான பதில், இதுதான். 

நீங்கள் எதற்கு பதில்  அளித்தீர்கள்?  ஒன்றுமேயில்லை.

அந்தப் புத்தகம் பார், இந்தப் புத்தகம் பார் - இதுதான் உங்களது பதில்.

2 minutes ago, மாங்குயில் said:

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கே பூச்சியமாக இருக்கிறது. 

பிற மதத்தில் உள்ளவர்களுக்கு எப்படி தெளிவான புரிதல் இருக்கும்?

இவை பற்றிய எனக்கு உள்ள அறிவு பற்றி புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். எல்லாவற்றையும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, மல்லிகை வாசம் said:

இவை பற்றிய எனக்கு உள்ள அறிவு பற்றி புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். எல்லாவற்றையும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

நன்றி

பாடமெடுப்பதற்குப் போதுமான அறிவு உங்களிடம் இல்லை.

பாடமெடுத்தால்,  வசமாக மாட்டுவீர்கள் என்ற பயம்.

  • தொடங்கியவர்
34 minutes ago, மல்லிகை வாசம் said:

புராணங்கள், வரலாறுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இந்து மதத்தின் மீது சேறு பூசும் நோக்கில் கருத்துக்களை எழுதும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கள் போன்றவர்களுக்கு இல்லை. முன்பு பல திரிகளில் என் போன்றவர்கள் விளக்கம் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் செய்யும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் தர வேண்டியதில்லை. 

மூட புராணங்களுக்கும் வரலாறுகளுக்கும் வித்தியாசங்கள் நாம் அறிவோம். உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் நான் தருகிறேன். 

காவிரி நதி எங்கிருந்து உருவாகிறது என்பதற்கான விளக்கம் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் மேற்கு தொடர்சசிமலைகளில் உற்பத்தியாகி கர்நாடகம் தமிழ் நாடு வழியாக பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது அறிவியல் விளக்கம்.  

நீங்கள் நம்பும் இந்து புராணத்தின்படி அகத்தியர் காவிரி நதியை தனது கமண்டலத்தில் கொண்டு செல்லும் போது விநாயகர் காகம் வடிவில் வந்து அந்த கமண்டலத்தை தட்டி விட அந்த சின்ன கமண்டலத்தில் உள்ள நீர் வழிந்தோடி காவிரியாக மாறியது என்பது. 

எதை நம்புகின்றீர்கள்? 

(இரண்டாவதை நம்புபவர்களுக்கு அந்த நம்பிக்கை மூடத்தனமானது என்று கூறும் உரிமை எமக்கு உண்டு. அப்போது எமது நம்பிக்கையில் தலையிடுவதாக எம்மீது  குற்றம் சாட்டுகின்றீர்கள்.)

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.