Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபயவிற்கு இந்திய பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவிற்கு இந்திய பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து

(நா.தனுஜா)

நாட்டின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பதுடன், பிராந்தியத்தின் சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

modi.jpg

நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்து, ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் குறித்த டுவிட்டர் பதிவில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோதத்தாபய ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்கள். எமது இரு நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் இடையில் காணப்படும் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். அத்தோடு எமது பிராந்தியத்தின் அமைதி, சுபீட்சம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளோம்.

அதேபோன்று சீரான தேர்தலொன்றை வெற்றிகரமான நடத்தி முடித்திருப்பதையிட்டு இலங்கை மக்களனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

https://www.virakesari.lk/article/69134

  • கருத்துக்கள உறவுகள்

H ராஜா போல் இவரது நிர்வாகி (admin) தான் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பாரோ   ????  

2 hours ago, கிருபன் said:

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து

விரைவில கோத்தா இந்தியாவுக்கு வந்தே உங்கட பிச்சை பாத்திரங்களை நிரப்ப இருக்கிறாராம். இதுக்கு ஸ்பொன்சர்ஸ் சீனாகாரர் தான்.

வெளிப்படையாக கோத்தா அண்ட் கோ இந்தியாவை பகைக்க மாட்டார்கள். மோடிதான் கூட்டமைப்பை சஜித் தரப்பிற்கு ஆதரவு தர கூறி இருக்கும். இப்பொழுது மாற்று வழியை தேடுவார்கள். சுப்பிராமணிய ஜி அதற்கு உதவுவார்.  

ஆனால், சீனாவுடன் ஆத்மீக உறவை கொண்டு நடப்பார்கள் இந்தியாவுடன் ஆன்மீக உறவுகள் தொடரும். இரண்டிற்கும் இடையே அமெரிக்க நலன்கள். ட்ரம்பிற்கு கோத்தா அண்ட் கோ வின் 'ஆளுமை' திறமை விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும். 
 

  • கருத்துக்கள உறவுகள்

But the two candidates also promised something different on the international stage. Mr Rajapaksa said he planned to "restore relations" with Sri Lanka's top lender, China, if he wins the election. This may have been controversial in some circles, due to concerns over the size of Sri Lankan debt to the Asian superpower.

Mr Premadasa, meanwhile, was seen as leaning more towards India and the US.

பிபிசி வெளிப்படையாக இப்படிச் சொல்கிறது. ஹிந்தியா புலிகள் இல்லாத பயனை எனித்தான் திறமையாக அனுபவிக்கப் போகிறார்கள். ஹிந்தியாவின் பயமே.. வாழ்த்தாக அவசர அவசரமாக வந்து சேர்ந்துள்ளது.

இதுவரை எந்த மேற்கு நாடும் இவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. 

https://www.bbc.co.uk/news/world-asia-50449677

7 minutes ago, nedukkalapoovan said:

இதுவரை எந்த மேற்கு நாடும் இவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. 

ஆசியாவின் வல்லரசான சீனாவின் கைகள் ஓங்குவதால் ஆசியாவின் பிச்சைக்கார நாடுகளான மாலைதீவும் இந்தியாவும் முண்டியடிச்சு வாழ்த்து சொல்லிருக்கீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.