Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Presidential-Secretariat.jpg

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்

புதிய இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு…

  • ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்
  • மஹிந்தானந்த அளுக்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர்
  • துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
  • ரோஹித்த அபேகுணவர்த்தன – மின்வலு இராஜாங்க அமைச்சர்
  • தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  • லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்தும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  • கெஹலிய ரம்புக்வெல – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
  • அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  • திலங்க சுமதிபால – தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர்
  • மொஹான் பிரியதர்ஷன – சட்ட சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர்
  • விஜித பேருகொட – மகளிர் சிறுவர் மற்றும் இராஜாங்க அமைச்சர்
  • ரொசான் ரணசிங்க – மகாவளி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  • ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக ஜானக வாக்கும்பர நியமனம்
  • கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக விதுர விக்கிரமநாயக்க நியமனம்
  • அபிவிருத்தி வங்கிகள் கடன்திட்டங்கள் இராஜாங்க அமைச்சராக சேகான் சேமசிங்க நியமனம்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ் இனம்

  • கருத்துக்கள உறவுகள்

1-1/2 நாட்டுக்கு சேவை செய்ய 1-3/4 அமைச்சர்கள்..😢 கூடுதலா  அவையளின்ர பி.ஏ , வாகனசாரதி + பெற்றோல் செலவுகள்  .. வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை

  •  
இலங்கை

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சி செய்யும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமே கையளித்தது.

இதற்கமைய, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தேதிக்கு பின்னரே கிடைக்கும் என்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை உருவாக்க கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் தேதி நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 16 பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த 22ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டது.

முஸ்லிகள்

இந்த புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால், முஸ்லிம்கள் எவரும் இல்லை

அதனைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டனர்.

இலங்கை

இன்றைய தினம் வழங்கப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பொறுப்புக்களில் தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ எவரும் நியமிக்கப்படவில்லை.

இராஜாங்க அமைச்சர்கள்

01. சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

02. வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர்

03. காமினி லொக்குகே - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

04. மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

05. எஸ்.பி.திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

06. டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

07. மஹிந்த சமரசிங்க - பொதுநிர்வாகம் மற்றம் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

08. சி.பி.ரத்நாயக்க - ரயில்வே சேவை இராஜாங்க அமைச்சர்

09. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர்

10. சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

11. அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தகம், பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர்

12. சுசில் பிரேமஜயந்த - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்

13. மஹிந்தானந்த அளுத்கமகே - மின்சக்தி இராஜாங்க அமைச்சர்

14. துமிந்த திஸாநாயக்க - இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

15. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர்

16. பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

17. தயாசிறி ஜயசேகர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

18. லசந்த அலகியவன்ன - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர்

19. ரோஹித அபேகுணவர்தன - எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

20. கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

21. அருந்திக்க பெர்ணான்டோ - சுற்றுலா ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

22. திலங்க சுமத்திபால - தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர்

23. மொஹான் டி சில்வா - மனித உரிமைகள், சட்ட சீர்த்திருத்த இராஜாங்க அமைச்சர்

24. விஜித பேருகொட - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

25. ரொஷான் ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

26. ஜானக வகும்புர - ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சர்

27. விதுர விக்மரநாயக்க - விவசாய இராஜாங்க அமைச்சர்

28. ஷெஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்

29. கனக ஹேரத் - துறைமுகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

30. திலும் அமுணுகம - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

31. லொஹான் ரத்வத்தே - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

32. விமலவீர திஸாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்

33. ஜயந்த சமரவீர - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்

34. சனத் நிஷாந்த பெரேரா - கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

35. தாரக பாலசூரிய - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

01. நிமல் லங்ஸா - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

02. காஞ்சன விஜேசேகர - கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர்

03. இந்திக்க அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர்

22ஆம் தேதி வழங்கப்பட்ட அமைச்சு பொறுப்புக்கள்

01. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை, நகர அபிவிருத்தி, நிர்;பாசனம், வீட்டு வசதி மற்றும் புத்த சாசனம் அமைச்சர்.

02. நிமல் சிறிபால டி சில்வா - நீதிமன்றம், மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்

03. ஆறுமுகன் தொண்டமான் - சமூகு வலுவூட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

04. தினேஷ் குணவர்தன - வெளிநாட்டு தொடர்புகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு, திறன் அபிவிருத்தி அமைச்சர்

05. பவித்ரா வன்னியாராச்சி - மகளிர், சிறுவர் விவகாரம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், சுதேச மருத்துவ அமைச்சர்

06. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்

07. பந்துல குணவர்தன - தகவல், தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புதிய உற்பத்திகள் அபிவிருத்தி அமைச்சர்

08. ஜனக்க பண்டார தென்னக்கோன் - அரச நிர்வாக, உள்விவகாரம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்

09. சமல் ராஜபக்ஷ - விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்

10. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - வீதி, பெருந்தெருக்கல், துறைமுகம் மற்றும் கடற்சார் விவகார அமைச்சர்

11. டளஸ் அழகபெரும - கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

12. விமல் வீரவங்ச - சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முமைத்துவ அமைச்சர்

13. மஹிந்த அமரவீர - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி , மின்வலு அமைச்சர்

14. எஸ்.எம்.சந்திரசேன - காணி, காணி மறுசீரமைப்பு, சுற்றாடல், வன ஜீவராசிகள் அமைச்சர்

15. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாய அமைச்சர்

16. பிரசன்ன ரணதுங்க - சுற்றுலாத்துறை, விமான சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

குறிப்பாக முஸ்லிம்கள் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50574694

19 hours ago, பிழம்பு said:

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை

பாராளுமன்ற தேர்தலின் பின் முஸ்லிம்களை நியமிக்க கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.