Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இதற்கான பதிலை “இல்லை” என்று ஆக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!

நீங்கள் உண்மையாகத்தான் கூறுகிறீர்களா ?

  • Replies 162
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அக்காச்சி,

1. இலங்கையில் ஏன் தமிழர்கள் போராட தொடங்கினர்? தம் நிலத்தை தாமே ஆள வேண்டும். குறிப்பாக தமிழர் நிலங்களில் குடியேற்றங்கள் மூலம் தமிழர் சிறுபான்மையாக்கப் படுவதை தடுக்க வேண்டும். 

2. ஆயுதப் போரின் முன் குடியேற்றம் அசுர கதியில் நடந்த்தா? ஆம்

3. போரின் போது மந்தமடைந்ததா? ஆம்

4. போரின் பின் அதி தீவிரம் அடைந்துளதா? ஆம்

5. 2009 க்கு முன் தமிழர் தம் பேரம் பேசு வலுவை தக்க முறையில் அரசியலில் பாவிக்காமல் விட்டதும், ஈற்றில் பேரம் பேசும் நிலையை முற்றாக இழந்ததுமே, இன்று போரின் பின் தமிழர் நிலங்கள் கேட்பாரன்றி பறி போக காரணமா? ஆம்.

6. தமிழ்கள் பேரம் பேசும் நிலையை இழந்தமைக்கு, இன்று நிலங்கள் பறிபோவற்கு கருணா பிரிவும் காரணங்களில் ஒன்றா? ஆம்

7. திருமலை ஏற்கனவே பறிபோன மாவட்டம். அடுத்து பறிபோகப்போகும் மாவட்டங்களை, பறிபோகும் வாய்ப்பு அடிப்படையில் வரிசைப்படுத்துக? மட்டு-அப்மாறை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்.

8. கேள்விகள்6, 7க்கான பதில்களை உற்று நோக்கின், கருணா பிரிவால் மொத்த தமிழ இனமும் பாதிப்படைந்தாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டு-அம்பாறை தமிழ் மக்களின் நீண்டகால இருப்பு அல்லவா? ஆம்.

நான் உங்களிடம் இவ்வாவு கேள்விகள் எல்லாம் கேட்கப் போறேல்ல...ஒரே ஒரு கேள்வி தான் ;
கருணா ,புலிகளில் இருந்து பிரியாமல் இருந்திருந்தால், புலிகளின்  ஆயுதப் போராட்டம் இன்னும் தொடர்ந்திருக்குமா?

பலவந்தப்படுத்தி,எதையும் கொஞ்ச காலம் தான் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...நான் சொன்னது ஆயுதப் போராட்டத்தை  பற்றி மட்டும் தான் 

பி;கு ; உங்களுக்கு இந்த திரியில் இனி மேல் பதில் எழுதுவதில்லை என்று இருந்தேன்...திரும்ப ,திரும்ப என்னை இழுப்பதால் தொடர்ந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கருணா பிரிவு புலிகளுக்கு ஏற்பட்ட மிகபெரிய பின்னடைவு என்பது மறுப்பதற்கில்லை. உண்மையை சொல்லப்போனால் - ஜெயசிக்குறு சமயமே, ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வந்து கைகொடுத்திராவிடின் புலிகள் மரபுவழி போர் முறையை கைவிட்டு, கரந்தடி முறைமைக்கு மாறும்படி அல்லது   மரபுவழியில் போராடி அழியும்படி (2006-09 இல நடந்தது போல) ஆகியிருக்கும். ஆகவே கருணா பிரிவால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. 

ஆனாலும் இந்த பிரிவின் பின்னும் புலிகளுக்கு அதன் தாக்கங்களை மட்டுப்படுத்த, உத்திகளை மாற்றி அமைக்க, வேணுமெண்டால் பிளான் A ஆகிய மரபுவழிப்போர் சரிவராத போது, பிளான் B ஆகிய கரந்தடி முறைக்கு மாற, 2005 தேர்தலில் நிதானித்து முடிவெடுக்க என பலவாய்புகள் இருந்தன. கருணா பிரிவின் பின்னரான இந்த முடிவுகளை புலிகள் சரியாக எடுத்திருந்தால் - கருணா பிரிவும், மாத்தையா சம்பவம் போல, ஒரு கணிசமான தாக்கத்தை செலுத்திய ஆனா பாரிய தாக்கத்தை கொடுக்காத சம்பவமாக போயிருக்கும்.

ஆனால் - இதை விட மோசமான “கையிறு கொடுப்புகள்” 2009 மே வரை புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஒபாமா தலையிடுவார், நோர்வே தலையிடும், இந்தியாவில் ஆட்சி மாறும், இப்படி ஒரு பகுதியாலும்.

மேலே ரஞ்சித் கூறியதை போல ஆயுத கப்பல்கள் வரவை தடுத்ததிலும்.

அண்ணை -இறங்குங்கோ இதுதான் இறுதி யுத்தம் என்றவகையிலும்,

விடுதலை புலிகளை மிக மோசமாக வழிநடத்தி (வேணுமென்றே), அவர்களை பிளான் B யை பற்றி சிந்திக்கவும் விடாமல், வழிச்சு துடைக்கும் படி ஆக்கியதில் இந்த மறைகரங்களின் பங்கு அபரிமிதமானது.

இவர்களுடன் ஒப்பிடும் போது கருணா பிரிவால் ஏற்பட்டது அதிகமில்லை.

யார் இந்த மறைகரங்கள் - கேபி வெளியால் தெரிபவர். ஏனையவர்கள் ? நீங்கள் சந்தேகிப்பவர்கள் சிலரை யோசித்துப் பாருங்கள் - நான் யோசித்துப்பார்த்ததில்- எல்லாரும் யாழ்ப்பாணத்தவர்கள்.

இப்போ சொல்லுங்கள் - போராட்டத்தின் தோல்வியில் யாரின் பங்களிப்பு மிகையானது?

பிரதேச, சாதி, இனவாதத்தால் பாதிக்கப்படுகிறேன் என்று பொய்யாக பாசாங்கு செய்பவர்கள் உளர். உண்மையே.

இதை இங்கே playing the race card என்பர். ஒரு வெள்ளையினமல்லாதவர், தன்னில் உள்ள பிழையை மறைக்க- குற்றம் சாட்டுபவர் தன்னை இனரீதியாக ஒதுக்கிறார் என்று பொய்க்கூச்சல் போடுவது.

அதற்க்காக பிரதேச, சாதி, இனவாதமே இல்லை என்றாகி விடாது

நான் கூறியது அதுவல்ல சே .

இதனை எத்தகைய சூழலில் தூக்கிப்பிடித்து பிரச்சனை ஆக்குகிறார்கள் என்பதும் அதன் காரணமாக சமூகத்திற்கு ஏற்படும் மீளமுடியாத, அழிவு / தாக்கம் / சேதம் என்ன என்பதுதான் நான் கூறவந்தது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் உண்மையாகத்தான் கூறுகிறீர்களா ?

கருணா அம்மானின் அண்மைய சூறாவளிப் பிரச்சாரங்களும், ஜெயானந்த மூர்த்தி, அமல் (வியாழேந்திரன்) போன்ற முன்னைய தேசியவாதிகள் அவருக்கு அணுக்கமாக இருப்பதும், அம்மான் வெளிப்படையாகவே முஸ்லிம்களின் காணிபிடிப்புக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதும், இப்போதும் புலிகளின் தளபதியாக இருந்த பெருமைகளைப் பறைசாற்றுவதும், மகிந்தவுடன் இருக்கும் நெருக்கத்தை பிரச்சாரம் செய்வதும் அம்மான் களமுனையில் முன்னே நின்று கட்டளைத்தளபதிக்குரிய உற்சாகத்துடன் செயற்படுவதுபோல இருக்கின்றது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

நான் உங்களிடம் இவ்வாவு கேள்விகள் எல்லாம் கேட்கப் போறேல்ல...ஒரே ஒரு கேள்வி தான் ;
கருணா ,புலிகளில் இருந்து பிரியாமல் இருந்திருந்தால், புலிகளின்  ஆயுதப் போராட்டம் இன்னும் தொடர்ந்திருக்குமா?

பலவந்தப்படுத்தி,எதையும் கொஞ்ச காலம் தான் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்...நான் சொன்னது ஆயுதப் போராட்டத்தை  பற்றி மட்டும் தான் 

பி;கு ; உங்களுக்கு இந்த திரியில் இனி மேல் பதில் எழுதுவதில்லை என்று இருந்தேன்...திரும்ப ,திரும்ப என்னை இழுப்பதால் தொடர்ந்தேன் 

1. இருக்கும், இருக்காது என்று சொல்ல நான் என்ன காண்டம் பாக்கிற ஆளா😂. ஆனால் மேலே ஏலவே எழுதியுள்ளேன் - கருணா பிரிந்தாலும், இல்லாவிட்டாலும் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டே இருக்கும். அதற்கு அவர்களுக்கு கருணாவை விட பெரிய, பெரிய ஆப்புகள் எல்லாம் ஏனையோரால் சொருகபட்டன என்பதும், சில பெரிய ஆப்புகளில் அவர்கள் தாமாகவே போய் உட்கார்ந்தார்கள் என்பதும் காரணமாகிறது.

2. புலிகள் உலக நாடுகளின், இந்தியாவின் நிலைப்பாட்டை சரிவரப் புரிந்து, ஆயுதப்போராட்டம் அது பயணிக்கும் தூரம் முழு அளவுக்கும் வந்து விட்டது என்ற உண்மையை தரிசித்து, IRA 1998இல் எடுத்த முடிவு போல ஒரு முடிவை எடுத்து, 2005 தேர்தலில் சரியான முடிவை எடுத்திருந்தால், போராட்டம் தொடராவிடினும், போராடும் ராணுவச் சமநிலையை பேணி இருக்க முடியும்.

3. இல்லை போராடுவது என்று முடிவெடுத்தாலும் - மரபுவழி போராட்டம் சரிவராது என புரிந்து, கரந்தடிக்கு மாறி இருந்தாலும் இன்று வரை ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்திருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் அண்மைய சூறாவளிப் பிரச்சாரங்களும், ஜெயானந்த மூர்த்தி, அமல் (வியாழேந்திரன்) போன்ற முன்னைய தேசியவாதிகள் அவருக்கு அணுக்கமாக இருப்பதும், அம்மான் வெளிப்படையாகவே முஸ்லிம்களின் காணிபிடிப்புக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதும், இப்போதும் புலிகளின் தளபதியாக இருந்த பெருமைகளைப் பறைசாற்றுவதும், மகிந்தவுடன் இருக்கும் நெருக்கத்தை பிரச்சாரம் செய்வதும் அம்மான் களமுனையில் முன்னே நின்று கட்டளைத்தளபதிக்குரிய உற்சாகத்துடன் செயற்படுவதுபோல இருக்கின்றது. 😀

கருணா திறமையான களநிலை செயற்பாட்டாளர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

அவருக்கென ஒரு தனி வசீகரமும், ஆளுமையும், தலைமைதுவப் பண்பும் உள்ளது என்பதும் மறுக்கவியலாதது.

அதை விட கருணாவின் இன்னொரு சிறப்பம்சம் அவரின் தலைமை மீதான விசுவாசம்.

என்னடா இப்படி சொல்கிறேனே என எண்ண வேண்டாம். பிரியும் வரை பிரபாவின் விசுவாசமான தளபதிகளில் முதன்மையானவர். பிரிந்து மகிந்தவிடம் சேர்ந்த பின் மகிந்த ஆட்சியில் இல்லாதபோது, மேர்வின் சில்வா, வெல்கம, விஜிதமுனி சொய்சா, சஜின் வாஸ் என்று பல மகிந்த விசுவாசிகள் குத்துக்கரணம் அடித்த போதும் கருணா அசையவில்லை.

இவை அனைத்தும் கருணாவை இன்று கிழக்கில் ஒரு சக்தியாக வைத்திருக்கிறன. ஆனால் மக்கள் ஆதரவு இல்லாவிடில் இவை எதுவும் நிலைக்காது என்பது அவருக்கும் தெரியும், அதனால்தான் முஸ்லீம்களை எதிரியாக கட்டமைத்து முழு வீச்சாக களத்தில் இறங்கியுள்ளார். 

ஆனாலும் - நீங்கள் கூறியது போல 7ம் கேள்விக்கான பதிலை, டக்ளஸ், கருணா, ஏன் கோட்டாவால் கூட இல்லை என ஆக்க முடியாது.

பெளத்த-சிங்கள மனோநிலைக்கு கோரப்பசி. அவை இல்லாது போகும்வரை தமிழர் நிலங்களை விழுங்கியே ஆகவேண்டும். எந்த தமிழ் சிங்கள தலைவர் இந்த பசிக்கு குறுக்கே வந்தாலும் அவர்களையும் மென்று துப்பி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் அண்மைய சூறாவளிப் பிரச்சாரங்களும், ஜெயானந்த மூர்த்தி, அமல் (வியாழேந்திரன்) போன்ற முன்னைய தேசியவாதிகள் அவருக்கு அணுக்கமாக இருப்பதும், அம்மான் வெளிப்படையாகவே முஸ்லிம்களின் காணிபிடிப்புக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதும், இப்போதும் புலிகளின் தளபதியாக இருந்த பெருமைகளைப் பறைசாற்றுவதும், மகிந்தவுடன் இருக்கும் நெருக்கத்தை பிரச்சாரம் செய்வதும் அம்மான் களமுனையில் முன்னே நின்று கட்டளைத்தளபதிக்குரிய உற்சாகத்துடன் செயற்படுவதுபோல இருக்கின்றது. 😀

நான் கிழக்கு மாகாணத்தின் இறுதி நிலைமை எப்படி இருக்கும் என்பதிலிருந்து பேசுகிறேன். இன்னொரு பத்து அல்லது பதினைந்து வருடங்களில் கிழக்குமாகாணத்திற்கான போட்டி என்பது முசுலிம்களுக்கும் சிங்களத்திற்குமானதாகவே இருக்கும்.

தற்போதைய நிலைமையில் முரளீதரன், சந்திரகாந்தன் போன்றோர் ஈசல்கள் போல காணாமல் போய்விடுவார்கள்.  

இறுதியில் எங்களுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமேயில்லை. 

கிழக்கு மாகாணத் தமிழர் இப்போதே சிங்களத்துடன் ஐக்கியமாவதற்குரிய வழிகளை தேடுவதே சாலச்சிறந்தது.

வட மாகாணத் தமிழருக்கு கொஞ்சம் அதிக காலம் எடுக்கும் வேறொன்றும் இல்லை.

புலம் பெயர்ந் தமிழர் தங்கள் அடயாளத்தை தங்களை அறியாமலே ஒரு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் தொலைத்து நிற்பர். 

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கசப்பான உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

கசப்பான உண்மை!

150 வருடம் முன்பு ரியூனியன் தீவுகளில் குடியேறிய தமிழர்கள் 
இப்போதும் தமிழர்களாக இருக்கிறார்கள்

இந்த தொழில்நுட்ப காலத்தில் இத்ததனை தகவல் பரிமாற்ற 
வசதி இருக்கும்போது அவ்வளவு எளிதாக அது இருக்கும் என்று நான் எண்ணவில்லை.  

கொஞ்சபேர்கள் தடம் புரளுவார்கள் ... அதனால் அது மாறிவிடாது.

மட்டுதமிழர்களை நாம் பொருளாதார ரிதியாக முன்னேற்றினால் 
மட்டு நிலைமையும் மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

அவர்களின் பெயர்களில் மட்டுமே தமிழ் தங்கியுள்ளது பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

அவர்களின் பெயர்களில் மட்டுமே தமிழ் தங்கியுள்ளது பாஸ் .

நான் அறிந்த மட்டிலும் கூட இப்படித்தான். பெயரில் தமிழ், சடங்குகளில் இந்து சமயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கரீபியன் தீவுகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகர தமிழர்கள், தென்னாபிரிகாவின் டர்பன் நகரில் உள்ளோர் பலரின் நிலையும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நான் அறிந்த மட்டிலும் கூட இப்படித்தான். பெயரில் தமிழ், சடங்குகளில் இந்து சமயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கரீபியன் தீவுகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகர தமிழர்கள், தென்னாபிரிகாவின் டர்பன் நகரில் உள்ளோர் பலரின் நிலையும் இதுதான்.

அவர்களுக்கெல்லாம் அவை சொந்த நிலங்கள் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அவர்களுக்கெல்லாம் அவை சொந்த நிலங்கள் அல்ல

எங்களுக்கெல்லாம் உங்கள் விருப்பத்துடன் சேர்ந்து பயணிக்கத்தான் ஆசை விசுகு. ஆனால் யதார்த்தம் என்கின்ற ஒன்று இருப்பதை மறுக்க முடியாதல்லவா ?

தமிழகத்தால் மட்டும்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

ஆனால் எங்களைவிட அவர்கள் வேகமாக அடையாளத்தை இழப்பதாக தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

எங்களுக்கெல்லாம் உங்கள் விருப்பத்துடன் சேர்ந்து பயணிக்கத்தான் ஆசை விசுகு. ஆனால் யதார்த்தம் என்கின்ற ஒன்று இருப்பதை மறுக்க முடியாதல்லவா ?

தமிழகத்தால் மட்டும்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

ஆனால் எங்களைவிட அவர்கள் வேகமாக அடையாளத்தை இழப்பதாக தோன்றுகிறது.

இது பற்றி கனக்க எழுதலாம் சகோ. அவரவரால் முடிந்ததை அவரவர் செய்தால் போதும். எனக்கு எவர் மீதும் கோபமோ  மரியாதைக்குறைவோ கிடையாது.  காலம் எனக்குத் தந்த கடமையை நான் செய்வேன் செய்து விட்டே போவேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

1. இருக்கும், இருக்காது என்று சொல்ல நான் என்ன காண்டம் பாக்கிற ஆளா😂. ஆனால் மேலே ஏலவே எழுதியுள்ளேன் - கருணா பிரிந்தாலும், இல்லாவிட்டாலும் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டே இருக்கும். அதற்கு அவர்களுக்கு கருணாவை விட பெரிய, பெரிய ஆப்புகள் எல்லாம் ஏனையோரால் சொருகபட்டன என்பதும், சில பெரிய ஆப்புகளில் அவர்கள் தாமாகவே போய் உட்கார்ந்தார்கள் என்பதும் காரணமாகிறது.

2. புலிகள் உலக நாடுகளின், இந்தியாவின் நிலைப்பாட்டை சரிவரப் புரிந்து, ஆயுதப்போராட்டம் அது பயணிக்கும் தூரம் முழு அளவுக்கும் வந்து விட்டது என்ற உண்மையை தரிசித்து, IRA 1998இல் எடுத்த முடிவு போல ஒரு முடிவை எடுத்து, 2005 தேர்தலில் சரியான முடிவை எடுத்திருந்தால், போராட்டம் தொடராவிடினும், போராடும் ராணுவச் சமநிலையை பேணி இருக்க முடியும்.

3. இல்லை போராடுவது என்று முடிவெடுத்தாலும் - மரபுவழி போராட்டம் சரிவராது என புரிந்து, கரந்தடிக்கு மாறி இருந்தாலும் இன்று வரை ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்திருக்க கூடும்.

பிறகு எதற்கு இன்னமும் கருணாவை நொந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை ..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

3 hours ago, Maruthankerny said:

சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

பிறகு எதற்கு இன்னமும் கருணாவை நொந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை ..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

அக்கா,

எங்கள் கவலைகளை, இயலாமைகளை அதனால் ஏற்படும் கோபமும் பதட்டமும் இன்னமும் உங்களுக்கு விளங்கவில்லையா ? 

ஆச்சரியமாக இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

நன்றி

மிகவும் தவறான நம்பிக்கை சகோதரி. பிரச்சினைக்கு இன்னொரு பிரச்சினை தீர்வாகாது. இவை இவர்களது தம்மை மட்டும் முன்னிறுத்தும் சுயநல அரசியலே தவிர ஒருகாலத்தில் தமிழர்கள் இசுலாமியர்கள் சிங்களவர்கள் என்று எவரது ஆதரவும் அற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலை மட்டுமே எஞ்சும்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

அக்கா,

எங்கள் கவலைகளை, இயலாமைகளை அதனால் ஏற்படும் கோபமும் பதட்டமும் இன்னமும் உங்களுக்கு விளங்கவில்லையா ? 

ஆச்சரியமாக இருக்கிறது .

என்னைப் பொறுத்த வரை கிழக்கு மாகாண மக்கள் தைரியசாலிகள் ,எதையும் ஒரு அளவிற்கு தான் பொறுப்பார்கள் ...தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன் 

18 minutes ago, விசுகு said:

மிகவும் தவறான நம்பிக்கை சகோதரி. பிரச்சினைக்கு இன்னொரு பிரச்சினை தீர்வாகாது. இவை இவர்களது தம்மை மட்டும் முன்னிறுத்தும் சுயநல அரசியலே தவிர ஒருகாலத்தில் தமிழர்கள் இசுலாமியர்கள் சிங்களவர்கள் என்று எவரது ஆதரவும் அற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலை மட்டுமே எஞ்சும்

அண்ணா , எப்பவாவது முஸ்லீம் மக்கள் எங்கட  பக்கம் இருந்தார்களா?...நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் அவர்கள் உங்களோடு ஓட்டப் போவதில்லை...அப்படி உறவாடினால் அது எம்மை அழிப்பதற்கு மட்டும் தான் ...எமது இருப்பை காப்பாற்றிக் கொள்ள சிங்களவனோடு உறவாடுவதில் ஒரு தப்பு ம் இல்லை ...ஒரு அளவுக்கு மேல் சிங்களவன் எதுவுமே தர போறதில்லை ..கொஞ்ச காலத்திற்கு கோத்தா போன்றவர்கள் பதவியில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது ...கருணா கிழக்கில் தமிழரை இல்லாமற் செய்யும் அளவிற்கு சுயநலவாதியோ,துரோகியோ இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

பிறகு எதற்கு இன்னமும் கருணாவை நொந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று புரியவில்லை ..இப்பத்தைய நிலையில் கிழக்கு மக்களை ஓரளவுக்கேனும் காப்பாற்ற கூடிய தகுதி கருணாவுக்கு இருக்குதென்று நான் நம்புகிறேன் 

நன்றி

நான் அவரை இட்டு நோவதில்லை அக்காச்சி.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். நிரந்தர துரோகியும் இல்லை என்பவன் நான்.

சித்தர், சுரேஸ் போல இன்னொமொருவராகவே இவரை நான் பார்கிறேன். அமிருக்கு துரோகி என மரணதண்டனை வழங்கப்பட்டது. அதில் அரும்பொட்டில் தப்பியவர் சிவசிதம்பரம்.

பின்னர் அவர் காலமாகியபோது, கிளிநொச்சியில் வைத்து புலிக் கொடி போர்த்தி பூரண ராணுவ மரியாதை கொடுக்கப்பட்டது.

இப்போ சிவா உயிரோடிருந்தாலும் சம்பந்தன் செய்யும் அரசியலைத்தான் செய்திருப்பார்.

ஆக 1989-2000-2019 இல் மாறி இருப்பது காலமும், பார்வையுமே தவிர வேறேதும் இல்லை.

வடக்கு-கிழக்கு இணைப்பு இனி ஒருபோதும் சாத்தியப்படாது என்பது என் திட்டவட்டமான நம்பிக்கை. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கூட இது பின்னொரு நாளில் சாத்கியமாகலாம் என நம்பியவன் நான்.

ஆனால் இந்த இரு வருடத்தில் யதார்த்தம் உறைத்துள்ளது.

ஆகவே மட்டகளப்பை மையமாக கொண்டு, கிழக்கிலங்கை தமிழர்க்கென என பிரெத்தியேக அரசியல் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். 

முன்னைய நாட்களை போலன்றி இப்போ வடக்கில் இருக்கும் தலைமையும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியில்லை எனும் போது கிழக்கில் ஒரு தலைமை உருவாவதில் தப்பேதும் இல்லை.

கிழக்கின் மக்கள் அந்த தலைமை கருணாதான் என முடிவெடுத்தால். அதுதான் முடிவாக இருக்க முடியும். இல்லை பிள்ளையாந்தான், தம்பிமுத்துதான், அமல்தான் என்றாலும் அப்படியே.

கூட்டமைப்பில் இருப்பவர்களை ஏற்றாலும் சரிதான். ஆனால் அவர்கள் உள்ளவர்களிலேயே செயல்திறனற்று தெரிகிறார்கள்.

இவர்களளை விட, தூய உள்ளம் கொண்ட, தேசியத்தின் பாற்பட்ட, முன்னாள் போராளிகள்/அரசியல்வாதிகள் இல்லாத புதிய இளஞர்கள் தலைமையில் ஒரு அரசியல் மட்டகளப்பில் மலரவேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பு. ஆனா அது நடைமுறைச் சாத்தியமா தெரியவில்லை.

ஆனால் யார் வந்தாலும் - அன்றாடம்காய்சி அரசியல்தான் செய்யமுடியும் என்பதும் உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

படித்த கொஞ்ச பேர் சேவை என்று இப்போது மட்டுவில் இருந்து இறங்கியுள்ளார்கள்...ஆனால் அவர்களும் அரசியல்வாதிகளாய் போனால் என்ன செய்வார்கள் என்பது தற்போதைக்கு சொல்ல முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை கிழக்கு மாகாண மக்கள் தைரியசாலிகள் ,எதையும் ஒரு அளவிற்கு தான் பொறுப்பார்கள் ...தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றே நான் நினைக்கிறேன் 

அண்ணா , எப்பவாவது முஸ்லீம் மக்கள் எங்கட  பக்கம் இருந்தார்களா?...நீங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் அவர்கள் உங்களோடு ஓட்டப் போவதில்லை...அப்படி உறவாடினால் அது எம்மை அழிப்பதற்கு மட்டும் தான் ...எமது இருப்பை காப்பாற்றிக் கொள்ள சிங்களவனோடு உறவாடுவதில் ஒரு தப்பு ம் இல்லை ...ஒரு அளவுக்கு மேல் சிங்களவன் எதுவுமே தர போறதில்லை ..கொஞ்ச காலத்திற்கு கோத்தா போன்றவர்கள் பதவியில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது ...கருணா கிழக்கில் தமிழரை இல்லாமற் செய்யும் அளவிற்கு சுயநலவாதியோ,துரோகியோ இல்லை 

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

1 minute ago, Kapithan said:

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்கள் வாக்கில் நேர்மையை எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அதாவது,

வட மாகாணத்தார் கிழக்கு மாகாணத்தாரைப் பற்றி கவலைப் படாதீர்கள் என்கிறீர்கள். அப்படித்தானே. ?

உங்கள் வாக்கில் நேர்மையை எதிர்பார்க்கிறேன்.

வடக்கு மக்களால் கிழக்கு மக்களது நிலையை புரிந்து கொள்ள முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

வடக்கு மக்களால் கிழக்கு மக்களது நிலையை புரிந்து கொள்ள முடியாது 

ஆதலால் ஒதுங்கியிருங்கள் என்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் அறிந்த மட்டிலும் கூட இப்படித்தான். பெயரில் தமிழ், சடங்குகளில் இந்து சமயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கரீபியன் தீவுகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகர தமிழர்கள், தென்னாபிரிகாவின் டர்பன் நகரில் உள்ளோர் பலரின் நிலையும் இதுதான்.

இந்த வார்த்தைதான் 
நாம் ஆய்ந்து பார்க்க வேண்டியது.

நீங்கள் தமிழ் தெரியாது ..... இலங்கை தெரியாது ....... சேலை தெரியாது 
என்று மினி ஸ்கேர்ட் போர்த்துக்கொண்டு சிகரடடையும் ஊதிக்கொண்டு சொல்லலாம் 

எத்தனை பிரிட்டிஸ்காரர்கள் உங்களை நீங்கள் பிரிடிஷ் காரன்/ காரி என்று ஏற்றுக்கொள்வார்கள்? 

அங்குதான் அகமும்/புறமும் மோதும் அப்போதான் நீரை சத்தாக்கி 
எமை உயரமான மரமாக்கிய வேரை அறிவு தேடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.