Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 நான் பார்த்த மற்றும் எனக்கு பிடித்திருந்த படங்கள்

Featured Replies

இந்த ஆண்டின  இறுதியில் பார்த்த படம் சாம்பியன்..

1) சாம்பியன் - வட சென்னையிலிருந்து இந்திய உதைப்பந்தாட்ட அணியில் விளையாடிய ஒருவரின் கதை பெரிய பட்ஜெட் படம் இல்லை போல ஆனாலும் நல்ல ஒரு படமாக இருந்தது

2)கென்னடி கிளப்- சசிக்குமாரின் படம் என தெரிந்தும் விளையாட்டு பற்றிய படம் என்பதால் துணிந்து பார்க்க தொடங்கினேன்..ஏமாற்றவில்லை..

 

3)அக்சன்..(விசால் + சுந்தர்சி), ஆம்பள.. மற்றும் விசாலின் வேறு சில படங்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்ல ரகம் 

4) பிகில்- அட்லீ+ விஜய் படம் எனக்கு  பிடித்திருந்தது  

5)அழியாத கோலங்கள் -2.. 

6) கைதி- 

7) நம்மவீட்டு பிள்ளை - சிவகார்த்திகேயனின் சில சொதப்பல்களுக்கு பிறகு வந்த குடும்ப படம் பிடித்திருந்தது..

😎 ஹீரோ - இரும்பு திரைக்கு பிறகு மித்திரன் சிவகார்த்திகேயனுடன் பிடித்திருந்தது பார்க்கலாம் ( எதிர்பார்ப்பு இல்லாமல் தொடங்குங்க) 

9)பயில்வான் நேரம் இருந்தால் மட்டும் பாருங்க சுதீப் நடித்திருக்கும் படம் ஓகே ரகம் 

10)-காப்பான்-  ஓகே ரகம் 

12) சிவப்பு மஞ்சள் பச்சை- அக்கா தம்பி சென்டிமேன்டை வைச்சு இயக்குனர் சசி எடுத்திருந்த படம் ,படமும் பிடித்திருந்தது அந்த அக்கா வேடத்தில் நடித்தவரையும் பிடித்திருந்தது😁😁

13) மகாமுனி-ஆர்யா இருவேடங்களில் நடித்திருந்த படம் இந்த வருடம் வந்தவற்றில் சிறந்த படங்களில் ஒன்று (என் வரையில் )

14) கடாரம் கொண்டான்.. ஜஸ்ட் ஓகே

15)  K13வெவ்வேறான கிளைமாக்ஸ் கொண்ட படம்  பார்க்கலாம்

16) Mr.Local- சிவகார்த்திகேயனின் கரியரில்மோசமான படம் நயன்தார கதை கேட்டு தான் நடிக்க ஒப்பு கொள்வார் என்பார்கள் இதில் எப்படி ஒப்பு கொண்டாரோ தெரியல 

17)கேம் ஓவர் - தப்ஸி நடித்திருந்த விமர்சகர்களால் பெரிதாக பாராட்டப்பட்ட படம். பிடித்திருந்தது...ஓவர்ரேட்டட் ஓ என சிந்திக்க வைத்தது.. 

18) ராட்சசி - பார்க்கலாம் 

19) கொலைகாரன் - சந்தர்பம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள் 

20)  நெஞ்சமுன்டு நேர்மை உண்டு ஓடு ராஜா- டைம் கிடைத்தாலும் பார்க்காதீர்கள் 

21)இ.ஃக்லூ- 

22)மன்ஸ்டர் - குழந்தைகளுக்கான படம் என்பார்கள் நம்பிவிடாதீர்கள்.. 

23) கீ- இரும்பு திரை போல அதற்கு முன் வந்திருந்தால் ஓடியிருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்

24)அக்னி தேவி- ஏன்டா பார்க்க தொடங்கினோம் என்றிருந்தது

25)கனா - நல்ல படம் 

26)தடம் - இவ்வருடம் வந்தவற்றில் இன்னொரு சிறந்த த்ரில்லர்

27) பேட்ட - ரஜினி ரசிகர்கள் கொண்டாடிய படம் பழைய ரஜினி ய பார்க்க முடிந்தது

28) விசுவாசம் - அப்பா மகள் என குடும்ப சென்டிமேன்ட் உடன் வந்து கலக்கிய படம். 

29) சர்வம் தாள மயம் - ராஜிவ் மேனன் நீண்ட்நாளுக்கு பிறகு தமிழில் இயக்கிய படம் 

30) கண்ணே கலைமானே- சீனு ராமசாமியின் படம் ஆனால் தர்மதுரையிலிருந்த ஏதோ ஒன்று இதில் மிஸ்ஸிங் 

இவை 2019 ல் நான் பார்த்த தமிழ் படங்கள். நீங்கள் பார்த்தவற்றையும்  பகிர்ந்து கொள்ளுங்கள் 

(நான் 2019 ல் பார்த்த வேற்று மொழி படங்கள் இன்னொரு திரியில் நேரம் கிடைத்தால் )

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

29 படங்கள் அதுவும் டிசம்பர் இறுதியில்... சாப்பாடு எப்போ? நித்திரை எப்போ? மற்றக் காரியங்கள் எப்போ? தலை சுத்துது ஐயா.Bildergebnis für %e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81

  • தொடங்கியவர்
58 minutes ago, Paanch said:

29 படங்கள் அதுவும் டிசம்பர் இறுதியில்... சாப்பாடு எப்போ? நித்திரை எப்போ? மற்றக் காரியங்கள் எப்போ? தலை சுத்துது ஐயா.Bildergebnis für %e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81

தப்பு என் மேல டிசம்பர் இறுதியில் பார்த்தது சாம்பியன் மற்றது எல்லாம் அவ்வப்போது பார்த்தவைகளே 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ரெண்டே படம்தான் பிடித்திருந்தது..!

  1. கைதி
  2. தடம்

இவ் வருடத்தில் வந்தவற்றில் எனக்கு பிடித்த 10 படங்கள்

1. அசுரன்: மிக மிக பிடித்த படம். தியேட்டரில் ஒரு தடவையும் டிவிடியில் 3 தடவைகளுமாக 4 தரம் பார்த்த படம்

2. Game Over (தமிழ் படம்) - பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீடியோ கேம் ஒன்றில் இருக்க கூடிய 3 விதமான முடிவுகளுனூடாக சொல்லப்பட்ட அருமையான படம். கொஞ்சம் கவனம் சிதறினால் படத்தின் கதையோட்டத்தினை தவற விட்டு விடுவோம்.

3. தடம்: ஒரு திரில்லர் படத்துக்கான அத்தனை திருப்பங்களையும் கொண்ட படம். கச்சிதமான திரைக்கதை.

4. ஜீவீ: புத்திசாலித்தனமான ஒரு த்ரில்லர். ஒருவருக்கு வாழ்வில் நிகழ்ந்த ஒன்று சில காலங்களின் பின் இன்னொருவருக்கும் அப்படியே நடக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்பதை ஒட்டி வந்த படம்.

5. நேர் கொண்ட பார்வை: பிங்க் படத்தினை பார்க்காததால் அதன் தமிழ் ஆக்கமான இப் படம் எனக்கு பிடித்து இருக்கு. தமிழ் சூழலில் இப்படி ஒரு பெண்ணியம் சார்ந்த படத்தை அஜித் போன்ற ஒரு வணிக சினிமா நடிகரை நடிக்க வைத்து எடுத்தமைக்காக பாராட்ட வேண்டும்.

6. பேட்ட: விசில் அடிச்சு பார்த்த ரஜனி படம். இத்தனை வயதிலும் இந்தளவுக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் அளவுக்கு நம்பிக்கையும் வருமானத்தையும் கொடுக்க கூடிய நடிகராக ரஜனி இன்றும் இருப்பது ஒரு அதிசயம்.

7. சுப்பர் டீலக்ஸ்: 5 மனிதர்களின் கதைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கு வெட்டும் திரைக்கதையுடன் அமைந்த படம். தமிழ் சினிமாவில் ஒரு ஆண் இன்னொரு ஆணை வலுக்கட்டாயப்படுத்தி Oral sex செய்ய வைக்கும் காட்சியில் கூட நடிக்க தயங்காத விஜய் சேதுபதியின் நடிப்பு அருமை.

8. ஒத்த செருப்பு சைஸ் 7: ஒரு ஒரு நடிகர் மட்டும் நடித்த, பாட்டு, கதானாயகி, நகைச்சுவை நடிகர்கள் என்றும் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட திரில்லர். பார்த்திபனின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இப் படம் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை.

9. மொன்ஸ்டர்: மென்மையான கதை. இவ் உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்பதை மென்மையாக அழுத்தி சொல்லும் படம்.

10. ஆதித்திய வர்மா: தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டியின் தமிழாக்கம். ஆரம்பத்திம் மிகையுண்ர்வுக் காட்சிகள் வந்தாலும், பிற்பகுதியில் நன்றாக அமைந்த படம்.

--------------------

பார்க்க ஆரம்பித்து 10 அல்லது 15 நிமிடங்களில் நிறுத்திய படங்கள்:

1. பிகில்
2. கென்னடி கிளப்
3. லோக்கல்
4. எங்கள் வீட்டுப் பிள்ளை

விமர்சனங்கள் நன்றாக வந்தாலும் என்னை ஏமாற்றிய படங்கள்:

1. கைதி
2. இரண்டாம் உலக்ப் போரின் கடைசிக் குண்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் அதிக படங்கள் பார்க்கவில்லை.🤨

தலீவர் ரஜினியின் பேட்ட அகன்ற திரையில் பார்த்தேன். தடம் நல்ல த்ரில்லர் படம். பேரன்பு படமும் பிடித்திருந்தது. பார்த்த மற்றைய படங்கள் நினைவில்கூட இல்லை.

தவறவிட்ட படங்கள் என்றால் அசுரன், நேர்கொண்ட பார்வை, கைதி என்பவற்றைச் சொல்லலாம்.

ஹொலிவூட் படங்கள் அகன்ற திரையில் பார்த்திருந்தேன். தெரிவு செய்து பார்த்த படங்கள்:

Alita: Battle Angel, Avengers: Endgame, Once Upon a Time in Hollywood, Ad Astra, Joker, The Irishman

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் 1917 என்ற ஆங்கிலப்படப் பிரத்தியேக காட்சி பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிய கதை ஒன்றும் இல்லை ஆனால் நடிப்பு, வித்தியாசமான படப்பிடிப்பு, editing என்பன அருமை. மொத்ததில் ஒரு அருமையான படம். தியேட்டரில் பார்க்கவும்.

எனது தெரிவுகள் ( இவை எல்லாம் 2019 இல் வெளிவந்த படங்கள் இல்லை. நான் இவற்றை 2019 இல் தான் பார்த்தேன்.  Andhadhun (2018) Article 18 (2012) Badla ( 2019) Talaash ( 2012) Badlapur (2015), Ittefaq ( 2017), Ugly( 2013), Kahani ( 2012), Pink ( 2016), Te3n ( 2016) Mardaani ( 2014)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போதெல்லாம் படங்களே பார்பதில்லை, ஒரே ஒரு நடிகர் நடிக்கும் நாடகத்தையே திரும்பத்திரும்ப 7 மாதஙகளாகப் பார்த்து வருகிறேன். அந்த நடிகருக்கு இணையான நடிகரென்று இன்று யாரையுமே நான் காணவில்லை. அவருக்கு வயது 7 மாதங்கள்தான். என் மகனுக்கு மணமாகி 19 ஆண்டுகளுக்குப்பின் உதித்து அனைவரையும் தனது நடிப்பாலும், அபிநயத்தாலும், கானக்குரலாலும் கவர்ந்த, அவர்பெயர் அகரன். 🤩  

  • தொடங்கியவர்

கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.