Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி நபர் / குடும்ப வரவு செலவு திட்டமிடலும் வெற்றியும்

Featured Replies

பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல்.

இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது.

எளிமையான சூத்திரம் 50-25-25
 50% உழைப்பதில் ஐம்பது வீதத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பது ( உணவு, உடை, உறையுள், மருத்துவ காப்புறுதி, கல்வி .... ) 

25%  உழைப்பதில் இருபத்தி ஐந்து  வீதத்தை விரும்பும்  தேவைகளுக்கு செலவழிப்பது  ( புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் .... ) 

25% உழைப்பதில் இருபத்தி ஐந்து  வீதத்தை சேமிப்பது. ஒரு அவசர தேவை தொடக்கம் ஒரு வளமான வாழ்க்கைக்கு சேமிப்பு அத்திவாசியம். அதனால் தான் ஒப்பீட்டளவில் உலகத்தமிழினம் செழித்து உள்ளது. 

பொறுப்புத்துறப்பு : இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி இதற்கு நானோ இல்லை காளமோ பொறுப்பல்ல  !
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

நல்ல விடயம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டிலாவது பணத்தை பொருத்தமான முறையில் பயன்படுத்தி மகிழ்வாக வாழ அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த 50-25-25 இதற்கு முன்னரும் வேறு எங்கோ படித்த தகவல். ஆனால், பலரும் கேட்க கூடிய சில கேள்விகள்:

  1. அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பதிலேயே 80 வீதமான உழைப்பும் முடிந்து போனவர்கள் எப்படி இந்த விதியை பின்பற்றுவது? அவர்கள் 80-10-10 என்று பின்பற்றலாமா?
  2. புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் போன்றவற்றில் எவற்றுக்கும் மேற்படி 10 வீதம் காணாமல் போனால் என்ன செய்வது? கடனட்டையில் வாங்கி, பின்னர் கடனும் வட்டியும் கட்டலாமா? கடன் வாங்காமல், வீடோ, வாகனமோ, தொலைக்காட்சியோ, தொலைபேசியோ வாங்க முடியாதே?
  3. மீதமான சேமிக்கும் பணத்தை எங்கே சேமிப்பது? ஒரு பேழையில் போட்டு ஒழித்து வைப்பதா? வங்கியில் நீண்டகால சேமிப்பு கணக்கில் வைப்பது நல்லதா? பங்கு சந்தையில் ஆப்பிளிலும், கூகிளிலும் முதலிடுவது சிறந்ததா? அல்லது ஊருக்குள் வட்டிக்கு கொடுக்கலாமா? சீட்டுப்பிடிப்பது நல்லதா?

  • தொடங்கியவர்
10 minutes ago, கற்பகதரு said:

உங்களின் வருமானத்தை கூட்டும் வழியை காண்பதே சிறந்த அறிவுரையாக இருக்கும். அதற்கு பல வழிகள் இருக்கலாம். உங்களுக்கு சாதகமான வழியை தேர்ந்தெடுக்கலாம்.

- பகுதி நேர கல்வி 
- மாதம் மாதம் வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீடுகள்   ( ie: REIT ) 

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா? 6 வழிகள் இதோ!

சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா? 6 வழிகள் இதோ!படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு திண்டாடுவதையும், அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருப்பதையும் அனுபவித்திருக்கிறோம்.

இவ்வாறு அல்லல்படும் உணர்வுகளை குறைத்து கொள்ள நீங்கள் பெரியவை எதையும் செய்ய வேண்டாம். கீழ்காணும் வழிமுறையை சற்று பின்பற்றி பாருங்கள். நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்கள் செலவை விபரங்களை அவ்வப்போது சோதியுங்கள்

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை வங்கி கணக்கின் வரவு செலவு அறிக்கை (ஸ்டேட்மண்ட்) தெளிவாக சுட்டிக்காட்டும்.

சேமிப்பு

இதனை அவ்வப்போது சோதித்து பார்த்தால், சில ஆச்சரியமூட்டும் கருத்துக்களை பெறலாம்.

உங்களுடைய பண அட்டையை (டெபிட்/ கிரடிட் கார்டு) தேய்த்து கொண்டு விரும்பியதை இன்று வாங்கி கொள்ளலாம். ஆனால், மொத்த செலவை பார்க்கும்போதுதான், எவ்வாறு ஒரு பெருந்தொகை செலவழிக்கப்பட்டுள்ளதை உணருவோம்.

இந்த செலவுகளில் எவற்றை குறைத்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்வதற்கு இது நம்மை தூண்டும்.

உங்கள் சம்பளம் செலவு செய்யப்படும் விபரங்களை, துல்லியமாக அறிந்து செலவு செய்வீர்கள்.

தேனீர், காபி குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்

தினமும் வேலை செய்கிற நீங்கள் மதியத்திற்கு முன்னும், பின்னும் தேனீர், காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கலாம்.

தேனீர், காபிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு நாள் செலவாக இருந்தால், பெரிய தொகையாக இருக்காது. ஆனால், அதுவே தினமும் வாடிக்கை என்றால், ஒரு மாதத்தில் பெரிதொரு தொகை அதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும்.

எனவே, மதிய உணவு எடுத்து செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்கில் தேனீர் அல்லது காபி எடுத்து சென்றால் அதிக தொகையை சேமிக்கலாம்.

மின்சாரம், தண்ணீர், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்தும்போது, சிக்கனமாக இருந்து கொள்வது அவற்றுக்கும் நாம் கொடுக்கும் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

குறைந்த செலவில் நல்ல சேவை வழங்குநரை நாடுங்கள்

நம்முடைய அன்றாட வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய பல சேவை வழங்குநர்களின் சேவைகளை பயன்படுத்தி கொண்டிருப்போம்.

மலிவாக விலையில் தரமான பொருட்களை விற்கின்ற கடைகளை தேடி கண்டுபிடியுங்கள். இணையம், செல்பேசி சேவை நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

உண்டியல்படத்தின் காப்புரிமைJUSTIN SULLIVAN/GETTY IMAGES

ஏற்கெனவே நீங்கள் சேவை பெற்று வருகின்றவர் மேலதிக சிறந்த சேவையை குறைந்த செலவில் வங்குவார்களா என்று பேசி பார்த்துவிட்டு, மாற்று வழிகளை தேடிக் கொள்ளலாம். சோம்பி திரியாமல், பல வழிமுறைகளில் இவற்றை ஆராய்ந்து அறிவது நல்ல பயனை கொடுக்கும்.

வீட்டு சினிமா

நவீன காலத்தில் பொழுதுபோக்கிற்காக பெருவணிக வளாகங்களிலுள்ள திரையங்கம் செல்வது என்பது ஒரே நாளில் அதிக தொகை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது.

அந்த திரைப்படத்தின் குறுந்தகடுகளை வாங்கி, வீட்டிலேயே பார்த்து மகிழ்வது உங்கள் பணப்பையை பதம் பார்க்காது. விருது பெற்ற திரைப்படங்களின் குந்தகடுகளை மிகவும் குறைவான விலையில் நீங்கள் பெற முடியும்.

நீங்களே செய்ய முயலுங்கள், சரி செய்யுங்கள்

நம்முடைய பொருட்களில் சிறிய பழுது ஏற்பட்டால் போதும், புதியவை வாங்க எண்ணும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், கிழிந்த துணியை தைத்து, வீட்டு வேலைகளில் செய்ய முடிகிறவற்றை சற்று முயற்சித்துதான் பாருங்களேன். மாத முடிவில் பெரும் சேமிப்பு உங்கள் வசமாகியிருக்கும்.

தெரியாதவற்றை செய்து கொள்ளும் வழிமுறையை இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிந்து அவற்றை நீங்களே செய்ய தொடங்குங்கள். இயன்ற வரை சரி செய்து மீண்டும் பயன்படுத்த முயலுங்கள்.

பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சாப்பாட்டை திட்டமிடுங்கள்

தற்போதைய சூழ்நிலையில், மாதம் இரண்டு, மூன்று முறை ஹோட்டல் ஏறிவிட்டால் போதும், உங்கள் பணப்பை காலியாகிவிடும் நிலைதான் உள்ளது.

எனவே வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சரி, உணவை திட்டமிட்டு கொள்ளுங்கள். சமைத்து எடுத்து செல்வது, குடிநீர் கொண்டு செல்வது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கத்திற்கும் துணைபுரியும்.

இவ்வாறு திட்டமிடுவதால், உணவுக்கு தேவையானதை மட்டுமே வாங்கிவிட்டு, பிற பொருட்களை வாங்காமல் இருந்து விடுவீர்கள்.

https://www.bbc.com/tamil/india-43023166

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

பொதுவாக பாடசாலைகளில் கற்றுத்தராத ஒன்றாகவும் வாழ்க்கையில் மனா உளைச்சலை தரும் ஒன்றாகவும் உள்ளது வரவு - செலவை திட்டமிடல்.

இன்றை சர்வதேச உலக வலைப்பின்னல், சமூக வலைத்தளங்கள் என்பன உலகில் எனக்கும் ஒரு செல்வந்தரை போல வாழ்ந்து காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பும் உறவினர்களால் மற்றும் நண்பர்களால் தரப்படும் அழுத்தமும் எம்மில் பலரையும் எமது எல்லைக்கு அப்பால் சென்று கடனாளிகளாக மாற்றி நிம்மதியற்ற பிரச்சனையான வாழ்க்கைக்கு வழி சமைத்து விடுகின்றது.

👍

வருமானத்தை கூட்டும் வழிகளில் பகுதி நேர கல்வி என்று tution சொல்லி கொடுக்கும் வேலையை தானே சொல்கிறீர்கள். இது இலங்கையிலும் தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களிலும்  பயன் அடையலாம் முதலீடுகள் என்று பெரும்பாலோரை கவர்ந்தது சீட்டுப்பிடிப்பது வட்டிக்கு கொடுப்பது.

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்
On 1/1/2020 at 4:02 PM, கற்பகதரு said:

நல்ல விடயம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இந்த புத்தாண்டிலாவது பணத்தை பொருத்தமான முறையில் பயன்படுத்தி மகிழ்வாக வாழ அனைவருக்கும் வாழ்த்துகள். 

இந்த 50-25-25 இதற்கு முன்னரும் வேறு எங்கோ படித்த தகவல். ஆனால், பலரும் கேட்க கூடிய சில கேள்விகள்:

  1. அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழிப்பதிலேயே 80 வீதமான உழைப்பும் முடிந்து போனவர்கள் எப்படி இந்த விதியை பின்பற்றுவது? அவர்கள் 80-10-10 என்று பின்பற்றலாமா?
  2. புதிய செல் போன், டிசைனர் ஆடை, விரும்பிய உல்லாச பயணம் போன்றவற்றில் எவற்றுக்கும் மேற்படி 10 வீதம் காணாமல் போனால் என்ன செய்வது? கடனட்டையில் வாங்கி, பின்னர் கடனும் வட்டியும் கட்டலாமா? கடன் வாங்காமல், வீடோ, வாகனமோ, தொலைக்காட்சியோ, தொலைபேசியோ வாங்க முடியாதே?
  3. மீதமான சேமிக்கும் பணத்தை எங்கே சேமிப்பது? ஒரு பேழையில் போட்டு ஒழித்து வைப்பதா? வங்கியில் நீண்டகால சேமிப்பு கணக்கில் வைப்பது நல்லதா? பங்கு சந்தையில் ஆப்பிளிலும், கூகிளிலும் முதலிடுவது சிறந்ததா? அல்லது ஊருக்குள் வட்டிக்கு கொடுக்கலாமா? சீட்டுப்பிடிப்பது நல்லதா?

உங்களுக்கு நல்ல 'கிரெடிட்' அதாவது உங்களை நம்பலாம் என வங்கியை நமப வைத்தால் நீங்களும் உங்கள் நாட்டில் உள்ளது போன்று ஒரு  ட்ரம்பாக வரலாம், ஏன் நாளை அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்து தமிழீழம் பெற உதவலாம் 🙂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.