Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2020]

Featured Replies

வணக்கம்,

2020 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

நன்றி.

  • Replies 65
  • Views 15.7k
  • Created
  • Last Reply

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! எனும் திரியில் இறுதியாக பதிந்த திரிக்கு அவசியமற்ற அரட்டைத்தனமான கருத்துகள் நீக்கப்பட்டன.

அத்துடன் யாழ் மாநகர சபை தொடர்பான திரியில் எழுதப்பட்ட ஒரு கருத்தும் நீக்கப்பட்டது.

திரிக்கு திரி ஒரே விடயத்தை காவுவதை தவிர்க்கவும்

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! திரி தொடர்ந்து அரட்டைத் திரியாக போய்க் கொண்டு இருப்பதால் பூட்டப்படுகின்றது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து "* *மைக்ரோவேவ் ஓவன்களையும்" அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது. எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

'தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு' என்ற திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். நன்றி.

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தலைப்பில் இருந்து 3 கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொடர்பில் புத்த பெருமான் கூறிவிட்டார்

தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

  • 1 month later...

கடந்த சில தினங்களாக மூலம் குறிப்பிடப்படாமலும், எதேச்சையாகவும், கபட நோக்கங்களுக்காகவும் ஊர் புதினம் பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் செய்திகள் மற்றும் பதில்கள் இடப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான போக்கு சமூகத்துக்கு கேடு விளைவிப்பதோடு கள விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை புரிந்து கொள்ளவும்.

இவ்வாறு ஒட்டப்படும் பதிவுகள் எந்த விளக்கமும் இன்றி நீக்கப்படும் என்பதுடன் இவ்வாறு செயற்படுகின்றவர்களது கருத்துகள் மட்டுறுத்துநர் பார்வைக்கும் உட்படுத்தப்படும்.

யாழை ஆரோக்கியமான உரையாடல்களுக்கான தளமாக தொடர்ந்து பேணுவதை விரும்பும் ஆதரிக்கும் உறவுகள், இவ்வாறான திரிகளை / பதில்களை எமக்கு ரிப்போர்ட் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

  • தொடங்கியவர்

சீனாவில் விழுந்த விண்கற்களில் இருந்தே கொரானோ உருவானது.! எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. உலக நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா பற்றிய புனைவுச் செய்திகளையும், பரபரப்புத் தகவல்களையும் இணைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத தனிநபர் சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதிகளைக் கவனத்தில் கொண்டு சீண்டல்கள் இல்லாத ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள்.

'சி.வியின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது' என்ற தலைப்பிலிருந்து தனிப்பட்ட அவதூறுக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

சுவிஸிலிருந்து யாழ் வந்த தலைமை போதகருக்கு கொரோனா! வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை தேடும் பொலிஸார் எனும் திரியில் தலைப்பின் திசையைத் திருப்பும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்படுகின்றது.

 

  • தொடங்கியவர்

"கொரோனா" சிரிப்புகள் திரியில் இருந்து சில பதிவுகள் வேறு பொருத்தமான திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.  சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

இலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம் : கொரோனா அச்சத்தின் உச்சம்...! எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. எல்லா திரிகளிலும் தொடர்ந்து ஒரே விடயத்தைக் காவிக்கொண்டு திரிவதையும், பொறுப்பற்ற ரீதியில் சீண்டும் கருத்துக்கள் வைப்பதையும் தவிர்க்கவேண்டும்.

'கரோனாவை பார்த்து பயப்பட வேண்டாம்! இதான் தீர்வு! ஆசான்ஜி-ன் பளார் பேட்டி' - எனும் அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத திரி அகற்றப்பட்டது.

இன்றைய தீவிரமான நிலையிலும் இவ்வாறான சமூக நலனுக்கு எதிரான அறிவியலுக்கு எதிரான பதிவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

நன்றி

  • தொடங்கியவர்

முகப்புத்தகம், ட்ற்விற்றர், யூரியூப் போன்ற சமூக வலைதங்களில் இருந்து இணைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான போலியான பதிவுகள், காணொளிகள் உள்ளடங்கலாக,  பல நீக்கப்பட்டுவருகின்றன.

பதிவுகளை இணைப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்  சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும். பதிவுகளை இணைக்க முன்னர் அவை நம்பகத்தன்மையானதா என்று தேடற்பொறிகள் மூலம் தேடிப்பார்த்து சந்தேகம் இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

மேலும், போலியான பதிவுகளையும், கள விதிகளை மீறும் பதிவுகளையும் முறைப்பாட்டு முறை மூலம் அறியத் தருவதன் மூலம் நிர்வாகம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உதவவேண்டும். 

மட்டுறுத்தினர்களும், நிர்வாகமும் பார்த்துக்கொள்ளட்டும் என்று பொறுப்பற்ற வகையில் போலியான பதிவுகளை தொடர்ந்தும் இணைப்பவர்கள் மீது நெகிழ்வுப்ப்போக்கு காட்டப்படாமல் உடனடியாகவே மட்டுறுத்தினர் பார்வைக்குள் விடப்படுவார்கள்.

 

  • தொடங்கியவர்

இதை நம்பலாமா ??? எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் பகுதியில் அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட  COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் பதியப்படவேண்டும். 

பதிவுகளை இணைப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்  சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும். பதிவுகளை இணைக்க முன்னர் அவை நம்பகத்தன்மையானதா என்று தேடற்பொறிகள் மூலம் தேடிப்பார்த்து சந்தேகம் இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த கொரோனா பற்றிய முன் கணிப்பு செய்த சிறுவனது  வீடியோ தொடர்பான திரி எம்மால் நீக்கப்பட்டுள்ளது. இதே வீடியோ இதற்கும் முன்பும் யாழில் சில தடவைகள் இணைக்கப்பட்டு எம்மால் நீக்கப்பட்டது என்பதையும் அறியத் தருகின்றோம்.

போதுமான அளவுக்கு உரையாடியமையாலும் திரி தொடர்ந்து தலைப்புக்கு மாற்றாகச் செல்வதாலும் 'வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!' திரி பூட்டப்பட்டது.

  • தொடங்கியவர்

மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களையே எதிர்பார்க்கின்றோம். மதப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் தவிர்க்கப்படல்வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும் எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் கருத்தாடற் பண்பற்ற கருத்துக்களை நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

கள உறுப்பினர் ஒருவர் மீதான அண்மைய நடவடிக்கை பற்றிய பூரண விளக்கமில்லாமல் தொடங்கப்பட்ட தலைப்பு ஒன்று நாற்சந்தி பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

களவிதிகளை மதிக்காமல் கருத்துக்களைப் பதிபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், திண்ணை வசதியை துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு திண்ணையில் தடை விதிக்கப்படும் என்பதையும் கள உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் எச்சரிக்கை வழங்கப்பட்ட உறுப்பினர் தனிமடலில் அல்லது முறைப்பாட்டு முறை மூலம் மேலதிக விளக்கத்தைக் கோரலாம். 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட காணொளிப்பதிவும் அதன் மீதான அவதூறான கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

சமூகச் சாளரம் பகுதியில் உள்ள சிந்தனைக்கு சில படங்கள்.... எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் பிரிக்கப்பட்டு அரசியல் அலசல் பகுதியில் வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும் எனும் புதிய திரியில் இணைக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.